ஜல்லிக்கட்டு - ஹிம்சையா, அதை தடை செய்வது ஹிம்சையா?

Leave a Comment
உலகில் இலவசமாகக் கிடைப்பது அறிவுரை. ஆனால் பேசப்படும் ஒரு அறிவுரை உண்மையில் நன்மை செய்வதுதானா என்பது எப்போதும் கேள்வியே. 



தன்னால் வாழ இயலாத ஒரு நல்ல விஷயத்தை ஒருவன் தகவலாக சொல்லலாம், தவறு இல்லை, வரவேற்கப்பட வேண்டியதே. 

ஆனால், அதை ஒருவன் அர்வுரையாக சொல்ல அவன் முதலில் வாழ்ந்துபார்க்க வேண்டும். 

அப்போதுதான் அதில் உள்ள நெளிவு சுளிவுகள் புரியும். அதில் உள்ள பல பரிமாணங்கள் புரியும். 

அவைகளை புரிந்துகொள்ளாமலேயே ஒரு அறிவுரை சொல்லப்படும்போது அது பயனற்றதாக ஆகும், பிறரால் நகைக்கப்படும். 

அதை ஒருவன் அல்லது ஒரு சமுதாயம் ஏற்றால் அழிவை அடையலாம். 

ஒரு கருத்தின்படி வாழ இயலாத ஒருவன், அந்தக் கருத்தை அறிவுரை சொன்னால் அவன் திருடன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ நன்மைக்காக அழிக்கத் துணிபவன் என்பதையும், இன்று இல்லாவிட்டால் நாளை ஒரு தேவையும் சூழ்நிலையும் வரும்போதுஅழிக்கத் தயங்கமாட்டான் என்பதையும் அறிவுள்ளோர்முன்பே புரிந்து கொள்ளவேண்டும். 

அஹிம்சையைப் பற்றி பேசும் ஒருவன் தான் முதலில் வயிற்றை நிரப்ப அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். 

ஊரைக் கொள்ளை அடித்து சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். பிறகு பேசவேண்டும்.

 அஹிம்சை ஹிம்சைகள் எப்போதும் எல்லைகளை உடையவைகள். 
100% அஹிம்சையாகவும் யாரும் வாழ முடியாது. 100% ஹிம்சையாகவும் யாரும் வாழுவது இல்லை. 

மேலும் எப்போதுமே அடுத்தவர்களுக்காக நல்ல விஷயங்களை கடைபிடிப்பது வளர்ச்சியின் குழந்தைத்தனம்.  

தன் உயர்வுக்காக கடைபிடிப்பதே பக்குவப்பட்ட நிலை. 

உலகில் அஹிம்சை உயிர்களின் நன்மைக்காக என்று மட்டுமே தெரியும். நம் நாட்டில் அதைத் தாண்டி அதை கடைபிடிக்கும் அளவு நான் உயருகிறேன் என்ற உணர்வுடன் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்த நிலை ஒன்று இருப்பதே தெரியாத குழந்தைகள் பக்குவப்பட்டவர்களுக்கு அறிவுரை சொல்வது சிரிக்க வைக்கிறது. 

அதையும் மதித்து, இந்த நாட்டு நீதிமன்றம் பக்குவமானவர்களை அவமதிக்கிறது என்றால்,  இந்த நாட்டின் கல்வி எந்த அளவிற்கு இந்த நாட்டை உயிர்நாடியிலிருந்து பிரித்து அழைத்துச் செல்கிறது என்பதற்கு நிரூபணமாக இருக்கிறது. 

மாதம் மூவாயிரம் வருமானமின்றி அரை பசியையும் தீர்க்க இயலாமல் வாழ்க்கை நடத்துபவனின் வரியை வாங்கி மாதம் முப்பதாயிரம், செய்யாத வேலை நாட்களுக்கும் சம்பளம்,... என வாங்குவதும், வரி கொடுத்தவனின் பண்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு சொல்வதும் ஹிம்சை இல்லை அஹிம்சை என்று யார் ஏற்க முடியும்?

குழந்தை நிலையை விட கீழே யுக்கும் நிலை உண்மையில். அவர் அவர்களும் அவர் அவர்களின் எல்லைகளை அறியவேண்டும். அதற்குள் பணிசெய்யவேண்டும்.

பண்பாடுசம்பத்தப்பட்ட விஷயங்களை சட்டத்தின் கண்ணோட்டாப்படி, சட்டத்தின் பலத்தால் நடத்துவது நல்லது இல்லை. 

பக்குவப்பட்ட கல்வியாளர்களாலும், வாழ்ந்து சோதித்துப் பார்த்த சான்றோர்களாலும் கற்றுத்தரப்பட்டு, பாராட்டப்பட்டு, ஆயிரம் ஆயிரம் காரணங்களுடன் பல தலைமுறைகளாக கடைபிடிக்கப்படும் முக்கியப் பண்புகள் பக்குவம் அற்ற குழந்தைகளாலும், நீதிமன்றங்களாலும் அவமதிக்கப்படுவதும் தடுக்கப்படுவதும் இந்த பாரதத்தின் உயிர்நாடியை அழிக்கும் செயல்கள் என்பதை அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும், கல்வித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும், நாட்டில் சமுதாயத்தில், குடும்பத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும் அவசியம் புரிந்து இருக்கவேண்டும். 

இந்த நாட்டுக்கு உதவி செய்கிறேன் என்ற நினைவில் தொல்லை செய்துவிடக்கூடாது என்ற கவனம் கற்றவர்களுக்கும் தலைவர்களுக்கும் எப்போதும் வேண்டும் என்று தோன்றுகிறது. 

உங்கள் கருத்து என்னவோ? 




     

0 comments:

Post a Comment