Showing posts with label தேச நலன். Show all posts
Showing posts with label தேச நலன். Show all posts

சித்த வைத்தியர் தணிக்காசலம் - கொரோனா சிகிச்சை - அனுமதி

Leave a Comment
சித்த வைத்தியர் தணிக்காசலம் அவர்கள் ஏன் கொரோனா சிகிச்சையில் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை?

மத்திய மாநில அரசுகள், நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி,...
யாரும் கண்டுகொள்ளவில்லையா?
அல்லது வேறு ஏதாவது காரணங்களா?
'கொரோனா நோயை நான் குணப்படுத்தாவிட்டால்,  வைரஸை நான் அழிக்காவிட்டால் என்னை தூக்கில் போடுங்கள் என்று சொல்கிறார் என்றால் அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்?

இருந்தாலும் ஏன் நடக்கவில்லை?
பின்புலம் என்ன?


https://www.youtube.com/watch?v=RAD3nB6tf1g

அழகி ஜோதிகாவுக்கு அறிவையும் அருள்வாய்

4 comments
இவ்வளவு பெரியக் கோவிலை 
வீதிக்கு வீதிக் கட்டிவைத்த 
நம் முன்னோர்கள்
ஒருப் பள்ளிகூடம் கூட கட்டவில்லையே... 
என்று அம்மையார் ஜோதிகா கேட்குது...



இவ்வளவு பெரியக்  கோவிலை 
கட்டியவன் தான் குடியிருக்க 
வீடுகூட கட்டிக்கொள்ளவில்லையே 
என்றுக் கேட்க தோனலையே
உன்னையெல்லாம் என்ன வென்று சொல்வது..

கலைச் சாலையாக
விஞ்ஞானச் சாலையாக
மெய்ஞானச் சாலையாக
மருத்துவச் சாலையாக
நீதிச் சாலையாக
கல்விச் சாலையாக...
பலமுக பயன்பாட்டுச்  சாலைகளாகத்தான் 
அன்று கோவில்களைக் கட்டினார்கள்...

அறிவற்றவர்கள் இன்று  அதனை 
பணச் சாலைகளாக நடத்துகிறார்கள்!!

கல்வி அறிவு இல்லாமலா 
நாம் காகிதத்தில் கூட 
வரைய முடியாததை எல்லாம் 
கல்லில் செதுக்கி வைத்திருக்கிறான்...?

சத்தான உணவு வகைகள் 
இல்லாமலா கற்களை 
தூக்கி கோவில் கட்டியிருப்பான்..?

தரமான மருத்துவம் இல்லாமலா
கற்களை கையாண்டு இருப்பான்..? 

தரமானப் போக்குவரத்து 
இல்லாமலா மிகப் பெரும் பாறைகளை 
வெகுதூரம் கொண்டு சென்றான்..?

இஞ்சினியரிங் இல்லாமலா
பதினெட்டு மாடி கோவிலைக் கட்ட முடியும்?

நிர்வாகத் திறன்  இல்லாமலா 
ஆயிரம் வல்லுணர்களை  திறமைசாலிகளை 
உழைப்பாளிகளை இணைத்து 
கோவில்களை முழுவதுமாக
கட்டிமுடித்திருப்பான்..? 

அத்துனை துறையிலும் வம்சம் 
மேலும் சிறந்து விளங்க உதவியாக 
வரும் தலைமுறை கற்க உதவியாக 
பேரிடர் காலங்களில் அடைக்கலங்களாக 
முன்னோர்கள் கட்டி வைத்த கோவில்களை மதிக்காது...

முன்னோர்களையும், 
அவர்களின் திறமையையும், 
பழக்க வழக்கங்களையும்
மதிக்காது....மிதிப்பதும்

அவர்கள் கட்டிய கோவில்களால் 
நமக்கு என்ன பயன் 
என்று பேசுவதும்தான் பகுத்தறிவென்றால் 
அதுதான் திராவிடத்தின் 
தத்துவமென்றால்... 

உன் தத்துவத்தை உன்னோடு 
வைத்துக்கொள் எங்களிடம் காட்டாதே!

உயர்ந்த கோவில்களை என் முன்னோர்கள
தீர்வுகளாகக் கண்டு நாகரீகமாகக் 
கூடி வாழ்ந்த காலத்திலே 

உலகிலே உடையின்றி 
காட்டுமிராண்டிகளாய்
திருடர்களாகத் தானே எல்லோரும் வாழ்ந்தார்கள்? 

நீங்கள்  உடுத்திய ஆடை 
எப்படி உங்கள் மானத்தை காப்பதற்கோ..

அதுபோலதான் 
எம் முன்னோர்கள் கட்டிய கோவில் 
கோடிபேர் கூடி வாழ சூத்திரமான  
அறத்தை போதிக்கவும்,  காப்பதற்கும்...

பாரதிகள் விசித்திரத் தொழில் நுட்பவாதிகள்...  
கற்களை  செதுக்கி
மனித உள்ளங்களை வடிவமைத்தவர்கள்....

கோவில்களில் சிலையை வைத்து
இதயங்களில் இறைவனை வைத்தவர்கள்.... 

அனுப்பியவனை புரிந்து கொண்டு 
வாழ்க்கையை திருவிழாவாக ஆக்கியவர்கள்...

எமது பாட்டன் எனக்கு 
பெரிய வீடைக் கட்டவில்லை 
வேப்ப மரத்தை நட்டு வைத்தான் 

வேப்பமரத்திற்கு பதிலாக 
பெரிய வீடு கட்டியிருக்கலாம்.. 
பெரிய வீடு கட்டியிருந்தால் 
மரத்தைப் போலவே அதுவும் நிழல் தரும், 
நான் வீட்டிற்குள் உருண்டு புரண்டு வாழலாம்.. 
ஆனால் அந்த மரம் தரும் உயிர்காற்றை 
வீடு தராது மகளே...

ஐம்பது கிலோ கல்லை 
நம்மால் தூக்கமுடியாத போது.. 
80 டன் கல்லை 216 அடி உச்சியில் 
வைத்து கட்டிய நம் முன்னோர்களின் 
அறிவை உழைப்பை தியாகத்தை அன்பை
கொச்சைப் படுத்துவது 
ஒரு போதும் ஏற்க முடியாதது.. 

தஞ்சைக் கோவில் எதற்கு 
அதற்கு காணிக்கை எதற்கு 
என்று கேட்டாய்.. 

இருப்பவன் கொண்டுவந்து கொடுக்கவும்....
அதை இல்லாதவனுக்கு வினியோகிக்கவும் 
ஒரு தளமாகத்தான் கோவில் இருந்தது.. 

தெய்வத்தைப் பற்றிய அறிவு இருந்து...
இதை தெய்வத்திற்காக செய்தால் 
அங்கு பிழைகள் நடக்காது... அங்கே... 
கொடுத்தவனின் மனமும் கெடாது. 
பெற்றவனின் மனமும் கோணாது...

ஆனால் இன்று  தெய்வத்தைப் பற்றிய 
எந்த அறிவும் இல்லாமல்...

கோவிலில் வசூல் வேட்டை உண்டியல், 
பண வரிக்கு ஏற்ப சிறப்பு தரிசனம்...
மூடத்தனங்கள்  அனைத்தையும் 
கோவிலுக்குள்  கொண்டு வந்து...

அதை நிர்வாகம் செய்ய 
தெய்வ அறிவு இல்லாத 
'மனப்பாட மடையர்'களை 
அதிகாரிகளாகப் போட்டு பயமுறுத்தி...

கோவில்களை வரி மையங்களாக ஆக்கியது...
பகுத்தறிவில்லாத 
திராவிடக் கொழுந்துகள் தான்.. 

கிடைக்கும் ஒட்டுமொத்த உண்டியல் 
பணத்தில் 90%த்தை கொள்ளையடித்ததும் 
அதேத் திராவிடக் கொழுந்துகள் தான்.. 

கோவிலை கட்டியதற்கு பள்ளிக்கூடம் 
கட்டியிருக்கலாம் என்று கேட்கிறாய்...

இப்படி சொல்லித்தான் பல பள்ளிகூடம் 
கட்டப்பட்டது...

ஆனால் இன்று ஒரு LKG மாணவனுக்கு 
கல்விக்கட்டணம்.. மூன்று லக்ஷம்!

பகுத்தறிவு பேசிய அத்துனை 
திருட்டு முட்டாள்களும் கல்வியையும்,
மருத்துவத்தையும் காசுக்கு விற்று 
பகல் இரவுக்  கொள்ளையடிப்பதுதான் மிச்சம்.... 

கோவில் பண்பாடு பெரியோர் மூலம் 
வெள்ளை உள்ளத்தைக் 
கற்றும் பெற்றும் வாழும் 
ஏழைகளைக் கொள்ளையடிக்கும் 
கயவர்களை உற்பத்தி செய்யும் 
பள்ளிகளுடன் கோவில்களை 
ஒப்பிட்டுப் பேசுவது அநாகரீகம் மகளே! 

கோவிலுக்கு வந்ததால்...
எவனும் தற்கொலை செய்துகொள்ளவில்லை
விவாஹரத்து செய்துகொள்ளவில்லை
ஆனால் உள்ளத்தில் வலிமை பிறந்தது....
முழு வாழ்க்கையையும் வாழ உதவியது....
கூடி வாழ சக்தியைத் தந்தது....
குடும்பம் நடத்த புத்தியைத் தந்தது....
புயல்களுக்கிடையில் பிள்ளைகளைக் காக்க
உள்ள வலிமையைத் தந்தது....

கோவிலுக்கு வந்தால் 
விலகும் எண்ணமும் விலகுகிறது...
தற்கொலை எண்ணமும் விலகுகிறது...


ஆனால் 12 ஆண்டுகள் 
பள்ளிக்கூடம் சென்ற குழந்தை 
தற்கொலை செய்துகொள்கிறான்...
கல்லூரியில் கற்றவன் 
ஆண்டுக்கொரு விவாஹரத்து செய்கிறான்
இதெல்லாம் ஒரு கல்வியோ...
அல்லது 'கில்'வியோ...

இனிமேல் எந்தக் கொம்பனாலும் கட்ட முடியாத 
இப்படியான தெய்வீகக் கோவில்களே
பாரதிகளின் உள்ளங்களை வடிவமைத்த மந்திரச் சாலைகள்... 
பாரதிகளின் குடும்பங்களை வடிவமைத்த யந்திரச் சாலைகள்... 
பாரதிகளின் சுக வாழ்வை வடிவமைத்த தந்திரச் சாலைகள்... 
நம் உயர்வுகளின் தனிப்பெரும் தாய் மடிகள்... 
வளர்க கோவில்கள் - வாழ்க பாரதிகள்!!

போகர் யோகம்: மன அழுத்தங்கள் நீங்க, வெற்றி அடைய, ஞானம் அடைய!

Leave a Comment

மடையர் யார்? அறிவாளி யார்? கண்டுபிடிப்பது எப்படி?

Leave a Comment

குழந்தைத் தற்கொலையைத் தடுப்போம்

Leave a Comment
படிக்க இயலாமை என்பது வாழ இயலாமைக்கு அடையாளம் இல்லை. 


படிக்காதவர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளார்கள், பணம் கொடுத்துள்ளார்கள், உயிர் கொடுத்துள்ளார்கள், உழைப்பைக் கொடுத்துள்ளார்கள்,.....

அதனால்...
இந்த நாடு சுதந்திரமாக இருக்கிறது,
அரசு ஊழியர்கள் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள்....

அப்படி இருக்க,
படிக்க இயலாதவனை 
வாழத் தகுதியில்லாதவன் என்ற நிலைக்கு தள்ளுவது நியாயமாக இருக்க முடியாது. 

வம்சம் காப்போம் - பாரதம் காப்போம்!

பாரம்பர்ய விரோத அரசு ஊழியர்கள் & அரசியல்வாதிகள் நாசமாக மந்திரம்

Leave a Comment
'தர்மமோ, அதர்மமோ எனக்கு சம்பளம் கொடுப்பவனின் உத்தரவை நான் செய்வேன்' – என்று வாழ்வது பாப வாழ்க்கை! அரசுப் பதவியாக இருந்தாலும் கூட!
https://www.youtube.com/watch?v=zaIDrvNx2Ys
https://satyavijayi.com/exclusive-video-sadhus-brutally-and-mercilessly-beaten-in-varanasi-by-akhileshs-police/
அதர்மம் செய்வதை, தவிர்க்கவேண்டும். முடியாத காரணங்கள் இருப்பின் அந்த பதவியை தவிர்க்கவேண்டும். அரசுப் பதவியிலாக இருந்தாலும் கூட.
வெள்ளையன் போட்ட துளி சம்பள பிச்சைக்காக, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை அடித்து உதைத்த அன்றைய அரசு ஊழியர் துரோகிகளைப் போல வாழத் துணிவது – மனிதப் பிறவிக்கு அழகு இல்லை.
மனசாட்சிக்கு விரோதமாக வாழும் அடிமை வாழ்வை தவிர்ப்போம்.
இந்த நாட்டுக்கு வெடிகுண்டு வைக்கும் தேச விரோதிகளிடமும், இந்த நாட்டின் பண்பாட்டை அழிக்கும் மதம் மாற்றும் கூட்டங்களிடமும், இந்த நாட்டின் மக்களையும் வளங்களையும் அழிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளிடமும் தங்களது திறமைகளை காட்ட இயலாத காவல்துறை ஊழியர்கள், இறைவனின் பெயரால் எளிய வாழ்வுடன் பண்பாட்டை கடைபிடித்து கற்றுக்கொடுத்து வரும் ஹிந்து துறவிகளை கருணை இன்றி அடித்து வதைப்பது மிகக் கேவலமான பாபகரமான செயல்.
அவர்கள் நல்லவர்களால் சபிக்கப்படவேண்டியவர்கள்.
இதனை தடுக்கவேண்டிய, அல்லது கண்டிக்கவேண்டிய, தண்டிக்கவேண்டிய உயர் அதிகாரிகளும், நீதித்துறை நீதிபதிகளும் இவைகளை வேடிக்கை பார்ப்பதும் மிகக் கேவலமான பாபகரமான செயல்.
அவர்களும் நல்லவர்களால் சபிக்கப்படவேண்டியவர்கள்.
நம் வம்சத்தை மிகச் சிறந்த தியாகத்தால் காத்துவரும் குருநாதர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை வேடிக்கை பார்க்கும் பழக்கம் நமக்கும் நல்லது இல்லை.
நாளை பெற்றோர்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் பிள்ளைகள் வேடிக்கை பார்ப்பார்கள்!
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக கற்ற சான்றோர்களால் ஆசைகனவுகளுடன் தம் சந்ததிகளின் நல்வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டினை காக்கவும், காப்பவர்களை காக்கவும்தான் அரசும் அரசு ஊழியர்களும் இருக்க வேண்டுமே தவிர அழிக்க அல்ல.
அப்படி அழிப்பவர்களாக இருக்கும் அரசு ஊழியர்கள் நாசப்படுத்தப்படவேண்டும் என்று சேனாதிபதி முருகவேல் தெய்வத்தை பிரார்த்திபோம்.
இதுவே உங்கள் பிரார்த்தனையும் என்றால், இதனை பகிர்வதன் மூலம் அதன் பலத்தை அதிகரிக்கச் செய்வோம்!


ॐ अधर्म-अधर्मि-नाशक-सेनाधिपतये षण्मुखाय नमः भारत-पारम्पर्य-धर्म -विरुद्धान्-राजाड़्गान् नाशय नाशय
‘ஓம் அதர்ம- அதர்மி-நாசக-ஸேனாதிபதயே ஷண்முகாய நமஃ பாரத-பாரம்பர்ய-தர்ம-விருத்தான் ராஜாங்கான் நாசய நாசய’
 
இந்த மந்திரத்தை ஸ்ரீ முருகனை நினைத்து முடிந்தவரை அதிகமாக ஜபம் செய்வோம். அது பாரத பாரம்பரியங்களுக்கு எதிராக இருக்கும் அரசியல்வாதிகளையும் எந்த அரசு ஊழியரையும் நாசமாகும், சத்தியம்!
ஜபம் செய்வோம் & பகிருவோம் !
நன்றி.

தர்மர் யுதிஷ்டிரரிடம் யக்ஷனின் 120ஆவது கேள்வி: 'உலகில் அதிசயமானது எது?'?

Leave a Comment

தர்மர் யுதிஷ்டிரரிடம் யக்ஷனின் 120ஆவது கேள்வி:

உலகில் அதிசயமானது எது?

யுதிஷ்டிரரின் பதில்:

தினமுமே கணக்கிலடங்காத ஜீவர்கள் இறந்து யம லோகம் செல்கிறார்கள்.
அதை எல்லாம் பார்த்தும் கூட, இன்னமும் போகாமல் மீதி இருப்பவர்கள், தாங்கள் இங்கே நிலையாகவே வாழப்போவதாக நினைத்துக்கொண்டே வாழ்க்கையை திட்டமிடுகிறார்கள்! இதைவிட உலகில் வேறு அதிசயம் எதுவுமே இல்லை.  


Express Maryaadhaa in Bhaarateeya Way

Leave a Comment
The word Maryaadhaa or [ मर्यादा/ Maryada ] doesn’t mean respect.
Actually respect means admiration, deference, esteem, reverence, veneration, high opinion,…
These kind of attitudes towards individuals never are encouraged to have or welcomed or adorned in Bhaaraeeya life-style; but have been practiced towards Devatas or Lords with the name Bhakti भक्तिः
Maryaadhaa or [ मर्यादा/ Maryada ] actually mean boundary or limit.
Everyone was given right deliberately to have and maintain his own private domain physically, mentally and intellectually from the time of birth itself.
‘Was given right’ means they need not fight, work to get it, instead, everybody else were educated and suggested to give the domain, and not to enter into, physically, mentally and intellectually.
The limit will change according to the personages on both side, and the relationships between them.
The limits can't be written easily, it takes lot of education and understanding, and they were brought down in the name of culture.
As much as we learn and maintain the Maryaadhaa behavior, we let other live peacefully, and we let ourselves to.
The expressions keep on practiced for a length of time, develop some kind of attitude, and way of thinking in the mind, and that constitutes the knowledge of Maryaadhaa in the person.
Some very basic expressions are explained now.
Namaskaar
First, the way to recognizing a confronting person is, ‘The other one is not an enemy, or competitor, or even a well-wisher, but the lord himself is in the form of that person, or throw the person to pay the pleasant or unpleasant experiences to me according to my Punya and Paapa. I welcome the Lord in that form, and I worship too, hence I say, “Namaste [ or Namaskaar ]”’.
And with the mind, “I don’t have any offending ordefendingtools against you. And I wish to show it to you with the bowing hand”.
This Maryaadhaa means that, ‘I see only the Lord here, not you, hence you can be as what you are. And, I even do not want to think about what you are, and what might be your personalities etc.’ 
This is the ultimate mind set of a Jnaaniज्ञानी. Nobody else can be fully alert throughout a meeting with an individual.
In that case why it is instructed to follow?
To make one at least to remember it at least at the beginning, and how much one is able to protect the awareness throughout the meeting, that much the one is considered to be successful, and rooted in the knowledge.
If anyone is failed in any level of the meeting, it is not punished or abused, the same Maryaadhaa is given to him, to take his own time to be able to protect the awareness.
And generally this kind of failures are not pointed out directly, instead many stories were told to recognize. Or sometime it can be pointed out by very intimate person who is caring and loving one.
This Namaskaar is of three manners. One is asking for blessings at a senior one. The second is offering blessingsto a junior one. The third is showing lovely expression to a friendly one.

Asking for blessings
The seeker’s mind is, ‘Oh Lord, I am in a situation given by you, to meet this senior one, who can reassureme, or disturbmephysically, verbally and mentally. I worship you and pray you, to only reassure me and not to disturb me physically, verbally and mentally through this personage.
The senior one is not my enemy, or competitor, or even a well-wisher, but the lord yourself is in the form of that person, or throw the person to pay the pleasant or unpleasant experiences to me according to my Punya and Paapa. I welcome you the Lord in that form, and I worship too, hence I say, “Namaste [ or Namaskaar ]’ to you.”
And, “I don’t have any offending or defending tools against you coming through this personage. And I wish to show it to you, with the bowing hand, and you bless me through this personage as you wish, I surrender you”.







இன்றைய கல்வித்திட்டத்தில் இருக்கும் குற்றங்கள்.

Leave a Comment
1.
காகிதத்தில் எழுதி கருத்தைப் பதியவைத்தல் இன்று பெரும்பாலும் தேவைப்படாத, மற்றும் விரும்பப்படாத நிலையாக உள்ளது. ஆனால் பள்ளி கல்லூரிகளில் பதினைந்து ஆண்டுகள் எழுதும் முறையே பதியவைக்கும் முறையாக உள்ளது.
பணிக்களங்களில் வேலை செய்யும் பலர், பல ஆண்டுகள் காகிதத்தையோ, பேனாவையோ தொட்டதே இல்லை.
படிப்பு முடிந்து வெளியில் வந்தால் கீபோர்டை பார்க்காமல் பதிவு செய்யவேண்டிய அவசியம் பணிக்கலத்திலும் சரி, தனது சொந்த பயன்பாட்டிற்கும் அவசியமாக உள்ளது. ஆனால் பதினைந்து ஆண்டு கல்வியில் அந்தத் திறமை வளர்க்கப்படுவதே இல்லை.
2.
பதினைந்து வயது சிறுமியின் மனப் பக்குவமும் உடல் பக்குவமும் சிறுவர்களுக்கு பதினெட்டு வயதுக்கு முன் அமைவதே இல்லை.
ஆனால் பள்ளியில் ஒரே பாடத்தை படிக்க வேண்டும். ஒரே தேர்வை எழுத வேண்டும். அதில் தோல்வி என்றால் வாழ்க்கையை நடத்துவது இயலாது என்ற நிலையையும் இந்த அரசே ஏற்படுத்தி வருகிறது.
இது விஞ்ஞானத்திற்கு புறம்பான மூடத்தனமான செயல்.
3.
ஆண்டு முழுவதும் நிறைய சிரமப்பட்டு நன்றாக படித்த ஒரு பனிரெண்டாம் வகுப்பு சிறுமி தேர்வு நாள் அன்று தனது மாதசுற்று உடல் உபாதையுள் சிக்கினால் நிச்சயம் அவளது தேர்வுப் பதிவு பாதிக்கப்படும். ஆனால் வேறு வழி இல்லை. திறமை இருந்தும், சிரமப்பட்டு உழைத்து இருந்தும், தகுதிகள் இருந்தும் நியாயமான பலன்களை இழக்க வேண்டியதுதான்.
4. பல நேரங்களில் பணிக்களங்களில் நினைவாற்றல் தேவைப்படுகிறது. பல நேரங்களில் பணிக்களங்களில் நினைவாற்றல் இல்லை என்றாலும் சிந்திக்கும் திறமை தேவைப்படுகிறது. ஆனால் சிந்திக்கும் திறமை உள்ள மாணவன், நினைவாற்றல் குறைந்தவன் தகுதி அற்றவனாக கல்வித்துறையின் தேர்வு முறை அறிவிக்கிறது. அதனால் அவர்களின் திறமை அவமதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது. மேலும் அவர்களால் நடக்க வேண்டிய வளர்ச்சிப்பணிகள் அந்தத் திறமை உள்ளவர்கள் இல்லாமலேயே நிறைவேற்றப்படுகின்றன. அப் பணிகளின் தரம் நிச்சயமாக குறைவாகவே இருக்கும். தச்சுத் தொழிலாளியால் ஆகவேண்டிய ஒரு வேலையை கொத்தனாரை வைத்துக்கொண்டு நிறைவேற்றுவது போல. இது தனது குழந்தைகளுக்கும் தேசத்திற்கும் அரசே செய்யும் மிகப்பெரிய ஒரு துரோகம்.
5. மோட்டார் வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருப்பது இன்று பெரும்பாலானவர்களுக்கு முக்கியமான ஒன்று ஆகிவிட்டது. இருபது ஆண்டு பள்ளி கல்லூரிக் கல்வி இந்த அவசியாமான ஒன்றை சொல்லித் தராது. அவசியம் அற்றவைகளை மட்டுமே சொல்லித்தரும்.
அவசியமானவைகளை அவன் அதற்குப் பிறகு வேறு எங்கோ ஓடி கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி என்றால் எதற்குதான் கல்வியோ.
6. பள்ளி கல்லூரிகளில் தான் படித்தது என்ன என்பது யாருக்குமே நினைவில் இருப்பது இல்லை. ஏன், ஆசிரியர் பேராசிரியர்களுக்கே நினைவில் இருப்பதில்லை. அப்படி என்றால் அவைகள் தினசரி வாழ்வில் பயன்படுவதில்லை. அந்தப் பயன் தராத விஷயங்களை பாடங்களாக ஏன் வைக்கவேண்டும். குழந்தைப் பருவத்தில் ஏன் அவைகளை திணிக்கவேண்டும்? அவைகளைப் படிக்காவிட்டால் எதற்குமே தகுதி இல்லாதவன் என்று ஏன் முத்திரை குத்தவேண்டும்? அந்த சான்றிதழை ஏன் அளவுகோலாக ஆக்கவேண்டும். அதனை ஏன் தகுதிச் சான்றிதழ் என்று அழைக்கவேண்டுமோ?
7. பல ஆயிரம் தலைமுறைகளாக இந்த நாட்டில் பல துறைக் கல்வி இருந்து வந்துள்ளது. மிகப் பெரிய சாதனைகள் நடந்துள்ளன. மிகச்சிறந்த கல்வியாளர்கள் தோன்றி உள்ளார்கள். வால்மீகியும், வியாசரும், அர்ஜுனரும், காளிதாசரும், ஆர்யபட்டரும், சுசுருதரும்,  திருவள்ளுவரும், கம்பரும் கற்றுவந்த கல்வியில் என்ன இருந்தது என்பதுகூட தெரியவில்லை. சொல்லித்தரப்படவில்லை. ஆங்கிலேயன் இங்கே இருந்துகொண்டு அவனது நாட்டிற்கு கொள்ளையடித்துக்கொண்டு செல்ல, அவனுக்கு உதவ நமக்குள் கைக்கூலிகளை கண்டுபிடிக்க, உற்பத்தி செய்ய, அவனுக்கு அடிமையாக வாழ்வதை பெருமையாக நினைக்க, அவனுக்கு கொள்ளையடித்துத் தருவதை உயர்வாக நினைக்க ஒரு சதிக்கல்வியை ஏற்படுத்தினான். அதே கல்வி முறையும் பாடத் திட்டமும் நாடு ஸ்வதந்த்ரம் பெற்றும், இன்றும் தொடர்கிறது, இது ஏன் என்று அறிஞர்கள் யாருக்கும் புரியவே இல்லை.
8. பல பள்ளிகல்லூரிகளில் மாணவர்களுக்கு காலுக்கு ஷூ, இடுப்புக்கு பெல்ட், கழுத்துக்கு டை,... போன்றவைகள் கட்டாயமாக ஆக்கப்பட்டு உள்ளன. அந்தப் பள்ளிகளில் ஏ.சி.யோ காற்றாடியோ எதுவுமே கிடையாது. குழந்தைகள் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை உடலை வேகவைக்கும் அந்த உடைகளுடன் அமர்ந்திருக்கவேண்டும், மேலும் பாடங்களைக் கற்கவேண்டும். ஆனால், ஆசிரியர்கள் இவைகளை அணியவேண்டாம். அவர்கள் ஓய்வு வேளையில் காற்றாடியில் ஓய்வெடுப்பார்கள். தலைமை ஆசிரியர்கள் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். பெற்றோர்களும் கூட வீட்டிலும் பணிக்கலத்திலும் வெயிலின் சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். கல்வித்துறை அதிகாரிகளும் சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். கல்வித்துறை அமைச்சர்களும் சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். இந்த நாட்டிற்கு நன்மையை செய்ய முனைந்து நிற்கும் அறிவிலும் நேர்மையிலும் சிறந்த நீதிபதிகளும்கூட சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். ஆனால் மூன்று வயதிலிருந்து இருபது வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகள் காலுக்கு ஷூ, இடுப்புக்கு பெல்ட், கழுத்துக்கு டை,... போன்றவைகளுடன் ஏ.சி.யோ காற்றாடியோ எதுவுமே இல்லாத பள்ளிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை உடலை வேகவைக்கும் அந்த உடைகளுடன் அமர்ந்திருக்கவேண்டும், மேலும் பாடங்களைக் கற்கவேண்டும்.
வெயிலின் கொடுமை தாங்காமல் சட்டை பித்தான்களை கழட்டி விடுவது , ஷூவை கழட்டி வைப்பது, டையை கழட்டி வைப்பது, பெல்டை கழட்டி வைப்பது,... இவையெல்லாம் அநாகரீகம் என்று பள்ளிகளில் சொல்லித்தரப்படுகின்றன, தடுக்கப்படுகின்றன, கண்டிக்கப்படுகின்றன. தண்டிக்கப்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் மன நிம்மதியை அழித்து, மன அழுத்தங்களை அதிகரிக்கும். ஈவு, இறக்கம் கருணை அற்ற இந்த செயல்களின் வழியாக வளரும் குழந்தைகளும் நாளை வளர்ந்த பிறகு ஈவு, இறக்கம், கருணை போன்றவைகள் அற்றவர்களாகத்தானே இருக்க முடியும்.
நாகரீகம் என்பதெல்லாம் மனிதன் மனதில் வளர்த்துக்கொள்ளும் எண்ணங்களின் முடிவுகளே. தனக்கு தொல்லை செய்யும் விஷயங்களை நாகரீகம் என்று எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்வதும், ஏற்பதும், வளர்ப்பதும், எதிர்பார்ப்பதும் வெறும் மூடத்தனமான செயலே.
அதனால்தான் 'மூடத்தனத்தை நீக்கவேண்டிய, அறிவுப்பூர்வமாக சிந்திக்கப் பழக்கப்படுத்தவேண்டிய கல்விக்கூடங்களே இதுபோன்ற பழக்கங்களை கடைபிடிப்பதும் பச்சிளம் குழந்தைகளிடம் திணிப்பதும், நேர்மையற்றதும், கீழான உள்நோக்கம் உள்ளதும், மிகவும் கொடூரமான செயலாகவும்தான் இருக்க முடியும்' என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.