Showing posts with label மன நலம்.. Show all posts
Showing posts with label மன நலம்.. Show all posts
குழந்தைகளுக்கு முக்கியமாகத் தரவேண்டியது அடிமைக் கல்வியா? தலைமைக் கல்வியா?...
அன்பிற்குரிய
ரிஷிகளின் வம்சத்து மக்களே, ஒரு அவசரமான ஆபத்து செய்தி.
நாம் உலக நாடுகளிலிருந்து விஞ்ஞான சாதனங்களையோ, அழகு சாதனப்
பொருட்களையோ வாங்குவது பரவாயில்லை. ஆனால், உலக
நாடுகளிலிருந்து வாழ்க்கைக் கண்ணோட்டங்களை, நடத்தைகளையும்
இறக்குமதி செய்து வருகிறோம். அவற்றில் அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை, உண்மையும் இல்லை.
குழந்தைத்தனமானவைகள்!
உதாரணமாக, 'நான் நல்லா இருக்க மற்றவர்களை
அழித்துதான் ஆகவேண்டும். மற்றவர்களை அழிக்காமல் நான் நல்லா இருக்க முடியாது.
அதனால், நிரூபிக்க முடியாத விதத்தில்
மற்றவர்களை அழிப்பது தவறு கிடையாது. திறமை!' என்ற வாதம்.
முதலில் தொழிலில்
இதை கடைபிடிக்கிறான், பிறகு யாரோ மற்றவர்களிடம், பிறகு உறவுகளிடம்
கடைபிடிக்கிறான். பிறகு குடும்பத்தில் கடைபிடிக்கிறான்.
இது ஒரு உதாரணம்.
இது போன்று பல கருத்துக்கள் நாம் விரும்பாமலேயே நம் சமூகத்தில் திணிக்கப்பட்டு
வருகிறன்றன. இது நமது குடும்பங்களை உறவுகளை பிரித்து, யாரையும் நம்ப முடியாதவர்களாக
ஆக்கி, நடத்தை கெட்டவர்களாகவும் ஆக்கி, தகுதி அற்ற குடும்ப உறுப்பினர்
ஆக்கி, குடும்பத்தை கொடுமை செய்பவராக
ஆக்கி, ஈவு இரக்கம் அற்ற, அறிவு அற்ற கொடூரமான மனிதர்களாக
ஆக்கி, யாருடனும் இணைந்து வாழ
முடியாமல் செய்து, நம் குடும்பங்களை பிரித்து
வருகிறது, அழித்து வருகிறது.
ஆனால் அதே நபர்
தனது நவீன கல்வியால் கம்பெனிகளுக்கு நல்ல வேலைக்காரனாக இருந்து, நல்ல சம்பளம் வாங்குபவராக
இருக்கிறார். அதனால் குடும்பத்திற்குள் இல்லாத, மற்றவர்கள்
பார்த்து வியந்து பாராட்டலாம். ஆனால், இது உண்மையில்
நரக வாழ்க்கையே!
"இந்த
எல்லாவற்றையும் செய்வது, நமது இன்றைய கல்வி
முறையே." இது கம்பெனிக்கு நல்ல
வேலைக்காரனை கொடுக்கும். ஆனால் ஒரு நல்ல குடும்பத்
தலைவனை, குடும்பத் தலைவியை கொடுக்க
முடியாது.
இங்கே நாம்
நினைக்கிறோம்- 'என்ன செய்ய, காலம் மாறிவிட்டது. உலகமே
கெட்டுவிட்டது. இனிமேலெல்லாம் நமது பழைய கண்ணோட்டங்களுடன் வாழமுடியாது.' என்று. அப்படியெல்லாம் இல்லை.
நிச்சயம் வாழ முடியும். நன்றாகவே வாழ முடியும். அப்படி மட்டுமே நன்றாக வாழ
முடியும்! வாழ்ந்து காட்டுகிறோம். வழியைக் காட்டுகிறோம். வாழவைத்தும்
காட்டுகிறோம்!
இந்தக்
காலத்திலும் சரி, எந்தக் காலத்திலும் சரி - இந்த
வாழ்க்கை கஷ்டமானதே இல்லை. உண்மையில் இதுதான் சுலபமானது! இவைகளை உலகில் யாருக்கும்
நாம் நிரூபிக்கத் தயார்!
பத்தாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பும் உலக நாடுகள் உடையாலும் உள்ளத்தாலும் காட்டுமிராண்டி
நாடுகளாகவே இருந்தன. பாரத மக்கள் நாம் இரண்டிலும் நாகரீகத்தின் உச்சியில் இருந்தோம். விஞ்ஞானத்தில்
உயர்ந்த, ஆடம்பரமான வாழ்க்கையே
வாழ்ந்தோம். சந்தோஷமாகவே ஒற்றுமையாகவே வாழ்ந்தோம். ஆனால்,...
இன்று பல உலக
நாடுகள் நாகரீகமான உடைகளுடனும், குரூரமான
காட்டுமிராண்டி உள்ளத்துடனும் வாழ்வை அமைத்துக்கொண்டு, 'அவர்களைப் போன்று வாழ்வதுதான்
சரி' என்று பேசிக்கொண்டு, நமது சந்ததிகளின் மனதைக்
குழப்பி வருகின்றன. அதற்கு மேலும்...
வெள்ளையன் நம்மை
குழப்பித் திருடுவதற்காக, அதற்கேற்ற கல்வித் திட்டத்தைக்
கொண்டுவந்தான். அதே பாடங்களே விடுதலைக்கும் பிறகும் நமது அரசியல் சாசனத்தால்
அளிக்கப்படுகிறது. இது உண்மையில் துர்பாக்கியம்!
ஆனாலும் இந்தப்
பிரச்சினைகளுக்கு இடையில் இந்தக் கெட்டுப்போன உலகத்திலும் எப்படி வாழ்வது என்பதை, நமது பண்பாட்டு முறையுடன்
போதிக்கும் கல்வித்திட்டம் உள்ளது!
அது 'வம்ச வித்யா' - ரிஷிகுடில்
நடத்துகிறது. இது பெற்றோருக்கான கல்வி. இதைக் கற்றால், பெற்றோர்களே குழந்தைகளுக்கு
இன்னொரு ஆசிரியராக இருந்து, பள்ளிக் கல்வியால் வரும்
குறைகளையும் அறிந்து நீக்கி, நமது பாரம்பரிய
பண்புக்கல்வியையும் கொடுத்துக் காக்க முடியும்.
கவனம்: ஒருவன்
நல்வாழ்க்கை வாழ பணம்தரும் புறஅறிவியல் கல்வி [ அல்லது பணக்கல்வி ], பண்புதரும் அஹஅறிவியல் கல்வி [
அல்லது பண்புக்கல்வி ], பண்புக்கல்வி இரண்டுமே
வேண்டும்.
பள்ளிக்கூடங்கள்
பணக்கல்வியை மட்டுமே தருகின்றன. நற்பண்புகளை அவர்களே நம்புவதும் இல்லை, கடைபிடிப்பதும் இல்லை. நற்பண்புப் பாடங்கள் மனப்பாடம் செய்து எழுத மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
ஏனென்றால் அவைகள்
எல்லாம், அவைகளை சொல்லித்தரும்
ஆசிரியர்கள் அனைவராலும் முழுமனதுடன் ஏற்கப்படவும் இல்லை, கடைபிடிக்கப்படவும்
இல்லை. யாரோ
சில ஆசிரியர்கள் நல்லவர்களாக இருந்தாலும் - அது இந்தக் காரணத்தினால் இல்லை.
அவர்களது
பெற்றோர்களும் உற்றோர்களும் நல்ல பண்புகளை சிறுவயதில் உயர்த்திப் பேசி
வளர்த்ததால்தான். ஏன் இதை சொல்ல முடியும் என்றால், அவர்களிடம் நற்குணம்
இருப்பதால், அதிக மதிப்பெண்ணோ, சம்பள உயர்வோ, பதவி உயர்வோ கிடையாது.
வேண்டுமென்றால் சில நேரங்களில் - அவரது நற்குணங்கள் உயர்
அதிகாரிகளால் பாராட்டப்படுகின்றன அவரிடம் அதிக வேலையை கறப்பதற்காக மட்டும்!
ஆசிரியர்களிடம்
நல்ல ஒழுக்கம் இருக்கவேண்டும் என்று நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது.
ஏனென்றால், அங்கு ஒரு 'நல்ல நீதிபதி' என்றால் அவர் நல்ல ஒழுக்கம்
உள்ளவராக இருக்கவேண்டும் - என்றே அரசியல் சாசனத்தில் எங்கும்
எதிர்பார்க்கப்படவில்லை. அது பற்றிக் கேட்டால்,.... அது அவர்களது
தனிப்பட்ட வாழ்கைப் பிரச்சினைகள்.... என்பதே பதில்!
அப்படி என்றால், அந்த தனிப்பட்ட வாழ்க்கையை நன்றாக வைக்க அரசியல் சாசனத்தில் எந்த அக்கறையும்
இல்லை. அதனால், அரசின் செயல்பாடுகள், திட்டங்களில் அதற்கு எந்த
இடமும் இருக்க வாய்ப்பும் இல்லை. சரி, பெற்றோரும் இப்படியே இருந்துவிடலாமா?
எந்த ஒழுக்கமும்
இல்லாத ஒருவர் 'நல்லாசிரியர்' விருது வாங்கமுடியும், கல்வித்துறை அதிகாரியாக இருக்க
முடியும், பாடப் புத்தகத்தையும் எழுத
முடியும்!
நற் பண்புகள் நம்மிடம்
இருந்தாலும், இல்லை என்றாலும் அவர்களுக்கு
கவலையும் இல்லை, அதற்கு மதிப்பெண்ணும் இல்லை, மரியாதையும் இல்லை! நம்
குழந்தைகள் வாழ்ந்தாலும் அழிந்தாலும் - அவர்களுக்கு கவலையும் இல்லை!
அவர்கள் குழந்தைக்கு கொடுப்பது மார்க், அவர்களுக்கு வேண்டியது நமது பணம், அவ்வளவுதான். ஆனால் பெற்றோரும் இப்படியே இருந்துவிடலாமா? நமக்குத் தேவை நம் குழந்தைகளின் நல்வாழ்க்கை. ஒருவனின்
நற்குணத்திற்கு பள்ளியில் மார்க் இல்லை, அரசிடம் மார்க் இல்லை, கம்பெனிகளில்
மார்க் இல்லை, ஏன்
உச்ச நீதி
மன்றத்திடமும் மார்க் இல்லை! நற்குணம் இன்றி, குடும்பத்தை அழிக்கும் ஒருவன்
உச்ச
நீதிபதிவரை எந்த பதவியிலும் இருக்கமுடியும்! ஆனால் நற்குணம் இல்லை என்றால்
ஒருவனது குடும்பமும் உருப்பட முடியாது. அவனும் நிம்மதியாக வாழ்ந்துவிட
முடியாது. அரசுக்கும், கம்பெனிக்கும் இது பரவாயில்லை, பெற்றோருக்கும்,
வாழ்க்கைத் துணையாக வரப்போகும் நபருக்கும், குழந்தையாகப்
பிறக்கப்போகுபவனுக்கும் இது பரவாயில்லையா? ஆக, அரசின் அளவுகோலை மட்டும் வைத்துக்கொண்டு சந்ததிகளுக்கு நல்வாழ்வை நிச்சயம்
தரமுடியாது!!
பணக்கல்வியைக்
கொடுக்க எவ்வளவு சிரமங்களை ஏற்கிறோமோ, அறிவும் விவரமும்
உள்ள பெற்றோர்கள் அதே அளவுக்கு பண்புக்கல்வியையும் கொடுக்க சிரமங்களை ஏற்கத்
தயாராகவேண்டும் - அவர்களே அதற்கு ஆசிரியராகவேண்டும் -உண்மையில் குழந்தைகளின் முழுமையான
நல்வாழ்வில் விருப்பம் இருப்பதால்!
அதற்காக, அக்குறைகளை நீக்கி பூர்த்தி செய்யும்
ஒரு பாதத்திட்டம், 'வம்ச வித்யா'.
12ம் வகுப்பு
முடித்த குழந்தைகளுக்காக.
குழந்தைகளை
வேலைக்கு அனுப்ப திட்டமிடும் பெற்றோர்களின் குழந்தைகள்
சேர்க்கப்படுவதில்லை.
இந்த வம்ச வித்யாவில் பல பாடங்கள் இருக்கின்றன.
1.. குழந்தை
வளர்ப்புக் கலை
2.. சுலோக போதிநீ
3.. பால பூஜா பத்ததி
4.. பால பகவத் கீதை
5.. சுலப சம்ஸ்க்ருதம்
6.. ஜீவ யாத்ரா ரஹசியம்
7.. ஜெய ஜீவன வித்யா
8.. குடும்ப வித்யா
9.. சம்பிரதாய வித்யா
10.. ஐஸ்வர்ய குண வித்யா
11.. பண்டிகைகளின் பததிகள்
12.. சமையல் கலை
13.. தோட்டக்
கலை
இது ஓராண்டுக் கல்வி. குருகுலத்தில் தங்கிப்
பயிலும் முறை. தகுதி உள்ள நன்கொடை: ரூ ஒருலக்ஷம் மட்டும். தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம்
அளிக்கப்படும்.
நிச்சயமான பேரின்ப இல்லறத்தை
உங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்! மேலும்
விபரங்களுக்கு: +91 88 25 13 14 16
|
குடும்பவித்யா
ரிஷி வேத ஞான யோக பீடம் நடத்தும்
பலன் மிகு வகுப்புகள்...
------------------------------
தொழிலுக்கு அடிமையாக வாழ 20 ஆண்டுகள் கல்வி கற்றோம்...
குடும்பத்திற்கு நிழலாக வாழ என்ன கற்றோம்...
தொழில் வளரலாம், பணம் குவியலாம், புகழ் பரவலாம்...
குடும்பம் வாடினால் வாட்டிவிடும் மனதை...
தீர்வுகளுக்கும்.... சிறந்த... இனிய... ஆனந்த.... இல்லறத்திற்கும்...
ஐஸ்வர்ய மகரிஷியின்
குடும்பவித்யா
வாழ்வியலும் - இல்லறமும் தொழில்நுட்பக் கல்வி
திருமண-முன்-கல்வி மற்றும் திருமண-பின்-கல்வி
இல்லற கவலைகள் 99% நிச்சயமாக போயோ போச்சு...
வெறும் 64 மணி நேரக் கல்வி
உங்கள் வாழ்க்கையை மரணம் வரை
மனக் கவலை தீண்டாது
பாதுகாத்து அழைத்துச் செல்லும்.
இன்றைய கல்வித்திட்டத்தில் இருக்கும் குற்றங்கள்.
காகிதத்தில்
எழுதி கருத்தைப் பதியவைத்தல் இன்று பெரும்பாலும் தேவைப்படாத, மற்றும்
விரும்பப்படாத நிலையாக உள்ளது. ஆனால் பள்ளி கல்லூரிகளில் பதினைந்து ஆண்டுகள்
எழுதும் முறையே பதியவைக்கும் முறையாக உள்ளது.
பணிக்களங்களில்
வேலை செய்யும் பலர், பல ஆண்டுகள் காகிதத்தையோ, பேனாவையோ தொட்டதே இல்லை.
படிப்பு
முடிந்து வெளியில் வந்தால் கீபோர்டை பார்க்காமல் பதிவு செய்யவேண்டிய அவசியம்
பணிக்கலத்திலும் சரி, தனது சொந்த பயன்பாட்டிற்கும் அவசியமாக உள்ளது. ஆனால்
பதினைந்து ஆண்டு கல்வியில் அந்தத் திறமை வளர்க்கப்படுவதே இல்லை.
2.
பதினைந்து
வயது சிறுமியின் மனப் பக்குவமும் உடல் பக்குவமும் சிறுவர்களுக்கு பதினெட்டு
வயதுக்கு முன் அமைவதே இல்லை.
ஆனால்
பள்ளியில் ஒரே பாடத்தை படிக்க வேண்டும். ஒரே தேர்வை எழுத வேண்டும். அதில் தோல்வி
என்றால் வாழ்க்கையை நடத்துவது இயலாது என்ற நிலையையும் இந்த அரசே ஏற்படுத்தி
வருகிறது.
இது
விஞ்ஞானத்திற்கு புறம்பான மூடத்தனமான செயல்.
3.
ஆண்டு
முழுவதும் நிறைய சிரமப்பட்டு நன்றாக படித்த ஒரு பனிரெண்டாம் வகுப்பு சிறுமி தேர்வு
நாள் அன்று தனது மாதசுற்று உடல் உபாதையுள் சிக்கினால் நிச்சயம் அவளது தேர்வுப்
பதிவு பாதிக்கப்படும். ஆனால் வேறு வழி இல்லை. திறமை இருந்தும், சிரமப்பட்டு
உழைத்து இருந்தும், தகுதிகள் இருந்தும் நியாயமான பலன்களை இழக்க வேண்டியதுதான்.
4. பல
நேரங்களில் பணிக்களங்களில் நினைவாற்றல் தேவைப்படுகிறது. பல நேரங்களில் பணிக்களங்களில்
நினைவாற்றல் இல்லை என்றாலும் சிந்திக்கும் திறமை தேவைப்படுகிறது. ஆனால்
சிந்திக்கும் திறமை உள்ள மாணவன், நினைவாற்றல் குறைந்தவன் தகுதி அற்றவனாக
கல்வித்துறையின் தேர்வு முறை அறிவிக்கிறது. அதனால் அவர்களின் திறமை
அவமதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது. மேலும் அவர்களால் நடக்க
வேண்டிய வளர்ச்சிப்பணிகள் அந்தத் திறமை உள்ளவர்கள் இல்லாமலேயே
நிறைவேற்றப்படுகின்றன. அப் பணிகளின் தரம் நிச்சயமாக குறைவாகவே இருக்கும். தச்சுத்
தொழிலாளியால் ஆகவேண்டிய ஒரு வேலையை கொத்தனாரை வைத்துக்கொண்டு நிறைவேற்றுவது போல.
இது தனது குழந்தைகளுக்கும் தேசத்திற்கும் அரசே செய்யும் மிகப்பெரிய ஒரு துரோகம்.
5. மோட்டார்
வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருப்பது இன்று பெரும்பாலானவர்களுக்கு முக்கியமான ஒன்று
ஆகிவிட்டது. இருபது ஆண்டு பள்ளி கல்லூரிக் கல்வி இந்த அவசியாமான ஒன்றை சொல்லித்
தராது. அவசியம் அற்றவைகளை மட்டுமே சொல்லித்தரும்.
அவசியமானவைகளை
அவன் அதற்குப் பிறகு வேறு எங்கோ ஓடி கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி என்றால்
எதற்குதான் கல்வியோ.
6.
பள்ளி கல்லூரிகளில் தான் படித்தது என்ன என்பது யாருக்குமே நினைவில் இருப்பது
இல்லை. ஏன், ஆசிரியர் பேராசிரியர்களுக்கே நினைவில் இருப்பதில்லை. அப்படி என்றால்
அவைகள் தினசரி வாழ்வில் பயன்படுவதில்லை. அந்தப் பயன் தராத விஷயங்களை பாடங்களாக ஏன்
வைக்கவேண்டும். குழந்தைப் பருவத்தில் ஏன் அவைகளை திணிக்கவேண்டும்? அவைகளைப்
படிக்காவிட்டால் எதற்குமே தகுதி இல்லாதவன் என்று ஏன் முத்திரை குத்தவேண்டும்? அந்த
சான்றிதழை ஏன் அளவுகோலாக ஆக்கவேண்டும். அதனை ஏன் தகுதிச் சான்றிதழ் என்று
அழைக்கவேண்டுமோ?
7. பல
ஆயிரம் தலைமுறைகளாக இந்த நாட்டில் பல துறைக் கல்வி இருந்து வந்துள்ளது. மிகப்
பெரிய சாதனைகள் நடந்துள்ளன. மிகச்சிறந்த கல்வியாளர்கள் தோன்றி உள்ளார்கள். வால்மீகியும்,
வியாசரும், அர்ஜுனரும், காளிதாசரும், ஆர்யபட்டரும், சுசுருதரும், திருவள்ளுவரும், கம்பரும் கற்றுவந்த கல்வியில்
என்ன இருந்தது என்பதுகூட தெரியவில்லை. சொல்லித்தரப்படவில்லை. ஆங்கிலேயன் இங்கே
இருந்துகொண்டு அவனது நாட்டிற்கு கொள்ளையடித்துக்கொண்டு செல்ல, அவனுக்கு உதவ
நமக்குள் கைக்கூலிகளை கண்டுபிடிக்க, உற்பத்தி செய்ய, அவனுக்கு அடிமையாக வாழ்வதை
பெருமையாக நினைக்க, அவனுக்கு கொள்ளையடித்துத் தருவதை உயர்வாக நினைக்க ஒரு
சதிக்கல்வியை ஏற்படுத்தினான். அதே கல்வி முறையும் பாடத் திட்டமும் நாடு
ஸ்வதந்த்ரம் பெற்றும், இன்றும் தொடர்கிறது, இது ஏன் என்று அறிஞர்கள் யாருக்கும்
புரியவே இல்லை.
8. பல
பள்ளிகல்லூரிகளில் மாணவர்களுக்கு காலுக்கு ஷூ, இடுப்புக்கு பெல்ட், கழுத்துக்கு
டை,... போன்றவைகள் கட்டாயமாக ஆக்கப்பட்டு உள்ளன. அந்தப் பள்ளிகளில் ஏ.சி.யோ
காற்றாடியோ எதுவுமே கிடையாது. குழந்தைகள் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை உடலை
வேகவைக்கும் அந்த உடைகளுடன் அமர்ந்திருக்கவேண்டும், மேலும் பாடங்களைக்
கற்கவேண்டும். ஆனால், ஆசிரியர்கள் இவைகளை அணியவேண்டாம். அவர்கள் ஓய்வு வேளையில்
காற்றாடியில் ஓய்வெடுப்பார்கள். தலைமை ஆசிரியர்கள் காற்றாடியிலும் ஏ.சி,யிலும்
இருப்பார்கள். பெற்றோர்களும் கூட வீட்டிலும் பணிக்கலத்திலும் வெயிலின் சூடு
தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். கல்வித்துறை அதிகாரிகளும்
சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். கல்வித்துறை
அமைச்சர்களும் சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். இந்த
நாட்டிற்கு நன்மையை செய்ய முனைந்து நிற்கும் அறிவிலும் நேர்மையிலும் சிறந்த
நீதிபதிகளும்கூட சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். ஆனால்
மூன்று வயதிலிருந்து இருபது வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகள் காலுக்கு ஷூ,
இடுப்புக்கு பெல்ட், கழுத்துக்கு டை,... போன்றவைகளுடன் ஏ.சி.யோ காற்றாடியோ எதுவுமே
இல்லாத பள்ளிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை உடலை வேகவைக்கும் அந்த உடைகளுடன்
அமர்ந்திருக்கவேண்டும், மேலும் பாடங்களைக் கற்கவேண்டும்.
வெயிலின்
கொடுமை தாங்காமல் சட்டை பித்தான்களை கழட்டி விடுவது , ஷூவை கழட்டி வைப்பது, டையை
கழட்டி வைப்பது, பெல்டை கழட்டி வைப்பது,... இவையெல்லாம் அநாகரீகம் என்று
பள்ளிகளில் சொல்லித்தரப்படுகின்றன, தடுக்கப்படுகின்றன, கண்டிக்கப்படுகின்றன.
தண்டிக்கப்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் மன நிம்மதியை அழித்து, மன அழுத்தங்களை
அதிகரிக்கும். ஈவு, இறக்கம் கருணை அற்ற இந்த செயல்களின் வழியாக வளரும்
குழந்தைகளும் நாளை வளர்ந்த பிறகு ஈவு, இறக்கம், கருணை போன்றவைகள்
அற்றவர்களாகத்தானே இருக்க முடியும்.
நாகரீகம்
என்பதெல்லாம் மனிதன் மனதில் வளர்த்துக்கொள்ளும் எண்ணங்களின் முடிவுகளே. தனக்கு
தொல்லை செய்யும் விஷயங்களை நாகரீகம் என்று எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்வதும்,
ஏற்பதும், வளர்ப்பதும், எதிர்பார்ப்பதும் வெறும் மூடத்தனமான செயலே.
அதனால்தான்
'மூடத்தனத்தை நீக்கவேண்டிய, அறிவுப்பூர்வமாக சிந்திக்கப் பழக்கப்படுத்தவேண்டிய
கல்விக்கூடங்களே இதுபோன்ற பழக்கங்களை கடைபிடிப்பதும் பச்சிளம் குழந்தைகளிடம்
திணிப்பதும், நேர்மையற்றதும், கீழான உள்நோக்கம் உள்ளதும், மிகவும் கொடூரமான செயலாகவும்தான்
இருக்க முடியும்' என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
விரதங்களும் - விதிகளும் !
பலவித விரதங்களால் நமக்கு சக்தி கிடைக்குமா
எப்படி?
* மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை
திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட
பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி
அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.
* பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த
ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற
எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை
குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.
* துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர்
எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில்
குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான்
துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன்
நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை
அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை
வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு
கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய
விளையாட்டை புரிந்துகொண்டாள்.
* பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது
எந்த உறுப்பில் தாக்கினாலும்
இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில்
தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன்
உடல்
வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண்
மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.
* விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில்
இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும்
புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு
உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள்
ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல்
மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக
விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.
*
ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம்
பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும்
காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில்
அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது
ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள்
பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால்
தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த
சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.
* நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய
சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள்
ஒன்றாவே இருக்கிறது.
அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம்
இருத்தல் என்பதாகும்.
* விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது
என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை கட்டுப்பாட்டில்
கொண்டுவந்து வைத்துப் பழகுதல் - விரதம் இருத்தல் என விளக்கலாம்.
* பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான
உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி
நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக
வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.
* உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின்
அடிப்படையாக இருப்பது பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.
கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று
* நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன்
தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக
உணர்வு உறுப்புக்கள் மூலம்
வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை
செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு
ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.
* காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில்
ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின்
தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின்
செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.
* உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால்
நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி?
* சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும்,
திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்)
கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய
கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும்
வலுசேர்க்கும்.
* சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம்
என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம்
இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக
வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம்
சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை
ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.
* நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு
லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம்
இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம.
* நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும்
உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு
செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல்
இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின்
சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும்.
உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக
மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த
உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.
* விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான
பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில்
அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக
முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம்
இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.
* சாந்திராயண விரதம் என ஒரு வகை விரதம் உண்டு.
சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட
ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள்.
அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு
கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். இது ஒரு மாத விரதம். எப்போதாவது ஒருமுறை
செய்த தவறுக்கு பரிகாரமாகவும், மீண்டும்
கவனக்குறைவு வாராத விழிப்புணர்வுக்காகவும் கடைபிடிக்கப்படுவது.
* யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்கக் கூடாது
என்றால்....
• சஷ்டியப்த பூர்த்தி முடித்த
முதியவர்கள்
• வியாதியினால் மருந்து
உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள் [ வேதம்
பயிலும் பருவத்து மாணவர்கள் ]
• சன்யாசிகள்
* இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம்
என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு
தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.
* மெளனவிரதம் இருப்பது வாய் மற்றும் மனதின்
மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது.
மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை.
உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக
இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம்
இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக
மாற்றும்.
* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில்
எழுதி காட்டி தமது எல்லா தினசரி காரியங்களையும் செய்வார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு
இது ஒரு தொல்லையே. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கருத்தினைத் தவிர மற்ற சிந்தனைகளையும்
குறைக்கவும் , தவிர்க்கவுமே முயற்சிக்கவேண்டும் . மெளனவிரதம் இருக்கும் காலத்தில்
உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடல் செயல்பாடு , சைகை மூலமோ, எழுத்து மூலமோ செயல்பாடு அனைத்தையுமே குறைக்க, தவிர்க்க முயற்சிக்கவும். .
அந்த அளவிற்கு மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது
ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை
செய்கின்றன. விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க,
அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின்
விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற
மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்..
அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று
ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி
புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக
உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன்
பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து
கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது
காலியாக இருக்க வேண்டும். அதற்காகவும்தான் அமாவாசை, பவுர்ணமி,
வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது.
சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. உடலாலும்
மனதாலும் ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர். ஒருவகையில் விரதங்கள் உடலுக்கும் மனதிற்குமான மருத்துவம் என்றும் கூறலாம். குறிப்பாக வரும் முன் காக்கும் மருத்துவம்!
முக்கியக் குறிப்பு: எல்லோரும் எல்லா விரதங்களையும்
கடிப்பது முடியாது, முயற்சிக்கவும் கூடாது.
சில விரதங்களை மட்டும் என்றாலும் கூட, ஒரு
சரியான குருநாதரிடம் , நான் இந்த விரதத்தை கடைபிடிக்க விரும்புகிறேன்,
கடைபிடிக்கலாமா என்றோ, எனக்கு பொருத்தமான விரதத்தை சொல்லுங்கள் என்றோ கேட்டு
கடைபிடிப்பது சிறப்பு.
எந்த மனநிலையுடன் அந்த விரதத்தைக் கடைபிடிக்க
வேண்டும் என்று அவர் சொல்லுவார் .
அந்த மன நிலையில் நிலைத்து இருக்க பழகுவதே
விரதத்தின் தலையாய லட்சியம்!





