Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

நீங்களே ஜாதகம் பார்க்க - செயலிகள்

Leave a Comment
ஜோதிடம் - ஜாதகம் பார்க்க உதவும், நாம் பயன்படுத்தி வரும் சில நல்ல கைப்பேசி செயலிகளை [ Mobie Appகளை ]  அறிமுகம் செய்ய விரும்புகிறோம்....  





Kundli App இது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே பேசுகிறது - இன்றைய தேதி வரை. கணக்கு விபரங்களை நன்றாக கொடுக்கிறது. 

https://play.google.com/store/apps/details?id=com.vedicrishiastro.kundli


Divya Chakshu - திவ்ய சக்ஷு [ = சூக்ஷ்மக் கண் ] என்ற ஒரு செயலி நிறைய கணக்கீடுகளை தருகிறது. குறுக்கே வரும் விளம்பரத் தொல்லைகள் சற்று அதிகம். 


திருமணப் பொருத்தம் - அடிப்படைத் தகவல்களை பார்க்க, தமிழில் ஒரு சுலபமான செயலி: 

https://goo.gl/qhFhYs 

அஸ்ட்ரோ விசன் நிறுவனம் வெளியிட்டுள்ள செயலி. இலவசத்தில் அடிப்படைத் தகவல்கள் கிடைக்கின்றன. 
மேலும் விளக்கங்களுக்கு செயலியை விலைக்கு வாங்க வேண்டி உள்ளது. 

https://play.google.com/store/apps/details?id=com.astrovision.horoscope 


கம்ப்யூட்டரில் பயன்படுத்த சிறந்த செயலி, 'ஜகன்னாத ஹோரா'. இதில் கணக்கீடுகள் மிக நன்றாக கொடுக்கப்பட்டுள்ளன. செயலி பலன்களை சொல்லுவதில்லை. 
https://www.vedicastrologer.org/jh/#download 

நன்மை தரும் நக்ஷத்திர காயத்திரி மந்திரங்கள்!

Leave a Comment


27 நக்ஷத்திரங்களுக்கும் காயத்ரி மந்திரங்கள் :!!!
உங்கள் நக்ஷத்திரத்திற்கு உரிய காயத்ரியை மனப்பாடம் செய்துகொண்டு தினமும் 9 முறையாவது சொல்லுங்கள், சொல்லும் அளவு நன்மையே. வாழ்க்கையில் சிரமங்கள் குறைந்து, மிகச்சிறந்த வளர்ச்சியைக் காணலாம்.

நக்ஷத்திரம்: அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: கேட்டை
நக்ஷத்திரம்: ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி

மந்திரங்களை பயன்படுத்துவோம் - பயன் பெறுவோம்!

சனியை பிடிப்போம்.... சாதனை படைப்போம்!

Leave a Comment
சனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்...

"என்னையே நீ பிடித்ததால் இனிமேல் உனக்கு "சனீஸ்வரன்" என்ற பெயர் வழங்கட்டும்" என்று "சிவபெருமான்" அருளினார். அன்று முதல் சனிபகவானுக்கு "சனீஸ்வரன்" என்று பெயர் வழங்கலாயிற்று

கிரகங்களில் ஈஸ்வரன் என்ற சிறப்புப் பெயருக்குக் காரணமாகி நிற்பவர் "சனி"தான்.

பொதுவாக சனி என்றாலே, எல்லோரையும் ஆட்டி வைப்பவர் என்று பொருள்.

ஆனால் தன்னை யார் ஸ்ரத்தையோடு வழிபடுகிறார்களோ அவருக்கு அல்லது அவர்களுக்கு, கருணையாய் அள்ளித் தரும் வள்ளல் இவர்தான்.

சூரியன் சஞ்சிகை என்பவளை மணந்து வாழ்ந்து கொண்டு வந்தான். அவர்களுக்கு மநு, யமன், யமுனை என்று மூன்று
குழந்தைகள் பிறந்து வளர்ந்து வந்தன!

ஒரு சமயம் சஞ்சிகைக்கு, சூரியனது வெப்பம் தாங்க முடியவில்லை. அதோடு அவளுக்கும் தவம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.

இதற்காக சஞ்சிகை ஒரு ஏற்பாட்டை செய்தாள். சூரியனுக்கு தெரியாமல்தான் அவரை விட்டுவிலகவேண்டும் என்பதற்காக, தன் நிழலையே ஒரு பெண்ணாகச் செய்து, அவளை அங்கேயே விட்டுவிட்டு, தந்தையிடம் சென்று விட்டாள்.

அவளுடைய நிழலில் தோன்றிய பெண்ணிற்கு "சாயாதேவி" என்று பெயர் அமைந்தது.

சஞ்சிகையின் வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி தான் வேறு ஒருத்தி என்பதைத் தெரிவிக்காமலேயே சூரியனோடு வாழ்ந்து வந்தாள்.

அவளுக்கு சாவர்ணீ என்ற மனுவும், சனி பகவானும், பத்திரை என்ற பெண்ணும் பிறந்தனர்.

இந்தக் குழந்தைகள் பிறந்ததும், சாயாதேவிக்கும், சஞ்சிகையின் குழந்தைகள் மீது பாசமே ஏற்படவில்லை.

யமனுக்கு கோபம் வந்தது. தன்னை நேசிக்காத சாயாதேவியை உதைக்கப் போனான்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாயாதேவி, உன் கால் முறியட்டும் என்று சாபமிட்டாள். யமனுக்கு கால் ஒடிந்தது.

இந்த செய்தி பின்னர் சூரியனுக்குத் தெரிய வந்தது. ஏன் இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறாள், என்று விசாரித்த பொழுது, சாயாதேவி யார் என்பது தெரிந்தது.

பிறகு சூரியன் சாயாதேவியையும் தன் மனைவியாக ஏற்றுக்
கொண்டான்.

தந்தையின் வீட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த சஞ்சிகையை அழைத்து வந்து இல்லறம் நடத்தி வந்தான்.

யமனது காலும் குணமாயிற்று.

சூரியனுக்கும், சாயாதேவிக்கும் புதல்வனாக தோன்றியவர் சனி பகவான்.

இவர் பூலோகத்திற்கு வந்து காசிக்கு சென்று தன் பெயரால் ஒரு லிங்கத்தை நிறுவி, பூசை செய்து வந்ததினால் நவக்ரகங்களில் ஒருவராக சிறப்புப் பதவியை அடைந்தார் என்று சனி பகவான் வரலாறு கூறுகிறது.

சனிபகவான், ஒரு சமயம் தன் பெரிய தாயாரான சஞ்சிகையை கேவலமாக பேசினார். இதைக் கேட்ட யமன், கோபப்பட்டு சனி பகவானின் காலை உடைத்தார். சனி பகவான் ஒரு கால் ஊனமானார்.

சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு ஒரு கதை உண்டு.

சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை.

இதை அறியாமல் அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை
சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார்.

கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன்.

ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால், அவன் மனைவி சபித்துவிட்டாள். "ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், தவ வலிமையின் ஆனந்தம் அடையாமல் போவீர்களாக!" என்று சபித்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார். அன்று முதல் அவரது பார்வை வக்கிரமாக அமைந்துவிட்டது. மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம்.

ஆகமங்களில், சனியினுடைய உருவம், உடை ஆகியவைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கரிய நிறமுடையவன். கரிய ஆடையை அணிபவன். ஒரு கால் முடவன். இருகரம் உடையவன். வலக்கரத்திலே தண்டமும், இடக்கரத்தில் வரதக் குறிப்பும் உடையவன். பத்மபீடத்தில் வீற்றிருப்பவன். அட்ச மாலையை கொண்டு எட்டு குதிரைகள் பூட்டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன்.

சனிபகவானுக்கு இருவகை மந்திரங்கள் உரியது. ஒன்று வேதம். இதற்கு ரிஷியாக இருப்பவர் இளிமிளி. அந்த மந்திரத்தின் பெயர் உஷ்ணிக் என்ற சந்தத்தில் அமைந்தது. மற்றொரு மந்திரம் காயத்ரி சந்தசைக் கொண்டது. அதற்கு ரிஷி - மித்ரரிஷி. நவக்ரக ஆராதனம் என்னும் நூலில்
சனிபகவான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிருப்பான்.

அழகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி இருப்பான். நீல மேனி உடையவன். முடிதரித்தவன். சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், மெல்ல நடப்பவன். கருஞ்சந்தனம் பூசுபவன். கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன். கரு நிறக்குடை, கொடி கொண்டவன் என்று சனியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.

சனிக்கு, அதிதேவதை யமன். வலப்பக்கத்தில் இவனை ஆவாகனம் செய்ய வேண்டும். இடப்பக்கத்தில் ப்ரத்யாதி தேவதையாகிய பிரஜாபதி இருப்பார்.

சனியைப் போல் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை.

தமிழ்நாட்டில்தான் சனிபகவானுக்கு காக்கையை வாகனமாக சொல்வது வழக்கம். வடநாட்டில் உள்ள த்யான சுலோகங்களில் சனி பகவானுக்கு கழுகை வாகனமாக குறிக்கின்றனர்.

சனி, மந்தன், பிணிமுகன், முதுமகன், முடவன், காரி என்ற வேறு பெயர்களும் உண்டு. தாமத குணம் உண்டு.

பிரியமான உலோகம்- இரும்பு. மணி- நீளம், தானியம்- எள், மலர்- கரும்குவளை, சுவை- கசப்பு.

காச்யப கோத்திரத்தை சேர்ந்தவர்.

சனியை வழிபட்டால், நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

சனி பகவானுக்கு ஜேஷ்டா, நீலா, மன்தா என்று மூன்று மனைவிகள் உண்டு. இவர்களில் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த மனைவி, நீலா.

சனியின் குமாரன், குளிகன். குளிகை காலத்தில் எதைச் செய்தாலும், நன்கு பெருகும். ஆனால் இறந்தவர்கள் உடலை மாத்திரம் எடுக்கக்கூடாது என்பது சாஸ்த்திரம்.

எல்லா கிரகங்களுக்கும் இல்லாத "ஈஸ்வரன்" என்ற அடைமொழி சனிக்கு மட்டுமே உண்டு. ஒரு சமயம் சிவபெருமானையே சனி பிடிக்கும் முறை வந்தது. சனியை தூரத்தில் கண்டதும் "இவன் கையில் பிடிபடக் கூடாது, நிஷ்டையில் அமரப் போகிறேன்" என்று பார்வதி தேவியிடம் கூறிவிட்டு, ஒரு குகையில் சென்று அதன் வாயிலை நன்றாக மூடிக்கொண்டு நிஷ்டையில் அமர்ந்தார் சிவபெருமான்.

ஏழரை ஆண்டுகள் கழிந்தன. சிவபெருமான் தன் நிஷ்டையைக் கலைத்துவிட்டு எழுந்தார். சனி பகவானிடமிருந்து தான் தப்பி விட்டதை எண்ணி மகிழ்ந்தார். குகையின் வாயிற் கதவை திறந்தார். வெளியே வந்தவர், வாசலில் அமர்ந்திருந்த சனிபகவானைக் கண்டதும் வியப்படைந்தார். "வணக்கம். என் வேலை முடிந்துவிட்டது. போய் வருகிறேன்" என்று கூறி
அங்கிருந்து சனி பகவான் கிளம்ப முயன்றார். "எப்படி உன் கடமை முடிந்தது? நான் தான் உன் பிடியில் சிக்கவில்லையே?" என்றார் சிவபெருமான். "தாங்கள் பார்வதி தேவியை விட்டுப் பிரிந்து இந்த ஏழரை ஆண்டுகள் குகையிலே அடைந்து கிடக்கும்படி செய்தவனே அடியேன்தான். அதனால்தான் சொன்னேன், என் கடமை முடிந்து விட்டது" என்றார் சனிபகவான்.

சிவபெருமான் உண்மை இதுதான் என்பதை உணர்ந்து
"என்னையே நீ பிடித்ததால் இனிமேல் உனக்கு "சனீஸ்வரன்" என்ற பெயர் வழங்கட்டும்" என்று அருளினார். அன்று முதல் சனிபகவானுக்கு "சனீஸ்வரன்" என்று பெயர் வழங்கலாயிற்று.

"காக த்வஜாய வித்மஹே, கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த: ப்ரசோதயாத்" என்கிற சனிபகவான் காயத்ரி மந்திரத்தை தினசரி பாராயணமாகக் கொள்ளலாம்.

சனிபகவான் அருள் நன்றாகவே கிட்டும். சனிபகவான் தானே விருப்பப்பட்டு பூசை செய்த ஸ்தலங்கள் பல இந்தப் பூமியில் உண்டு. அவற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பது "திருநள்ளாறு".

ஏழரை சனி என்பது, அவரவர் ராசிக்கு சனிபகவான் 12ம் இடம், ஜென்ம ராசி, இரண்டாம் இடம் - இந்த வீடுகளை வரிசையாகக் கடக்கும் பொழுது ஏற்படுவது. ஒரு வீட்டைக் கடக்க இரண்டரை வருடங்கள் என மொத்தம் ஏழரை வருடங்கள்.

உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற சந்தேகம், இடம்விட்டு இடம் மாறுதல், குடும்பத்தை விட்டுப் பிரிதல், உத்தியோகத்திலிருந்து விலக்கப்படுதல், பண நஷ்டம், தொழில் நஷ்டம், இவைகள் இக்காலத்தில் ஏற்படும். மொத்தத்தில் லௌகீகம் வளச்சிக்கு பொருத்தம் இல்லாத காலம். அதேசமயம் வைதீகம் வளர்ச்சிகளுக்கு, அதாவது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த காலம்.

சனீஸ்வரர் இருக்கும் கோயில்களில் முதன்மை பெற்றது, திருநள்ளாறு. இது காரைக்கால் ரயில் மார்க்கத்திலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆதிபுரி, தர்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேச்வரம் என்ற பெயர்களும் இந்த ஸ்தலத்திற்கு உண்டு. 

நளமகாராஜா ஏழரை சனியில் பீடிக்கப்பட்டு துன்புற்றபோது, இங்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை பூசித்ததும், சனிபகவான் அவரைவிட்டு விலகியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த கோயிலில் உள்ள நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், சரஸ்வதிதீர்த்தம், அகஸ்தியர்தீர்த்தம் ஆகியவை விசேஷமான தீர்த்தங்கள். திருநள்ளாரில் உள்ள நளதீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீ விநாயகரை வலம் வந்து குளத்தின் நடுவில் உள்ள நளமாகாராஜா குடும்பத்தை மரியாதையுடன் வணங்க வேண்டும்.

பிறகு குளத்தில் இறங்கி முதலில் தலையில் கொஞ்சம் ஜலம் எடுத்து ப்ரோக்க்ஷணம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தகுந்த நபர்களை கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு, ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு கோயிலுக்குள் சென்று சனீஸ்வரனை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்வது நலம்.

ஜோதிட சாஸ்த்திரம், சனிபகவானை பற்றி கூறும் பொழுது, கீழ்நிலையைச் சேர்ந்தவர்களை தங்க இடமாகக் கொண்டிருப்பான் என்கிறது. அலியாக இருப்பவன். பஞ்ச பூதங்களில் காற்றாக வருபவன். மேற்கு திசைக்கு உரியவன். துலாம் உச்ச வீடு மகர கும்பங்கள் சொந்த வீடு. பூசம், அனுஷம், உத்தரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களுக்கு உரியவன். புதன், சுக்கிரன் நண்பர்கள். செவ்வாய், சந்திரன், சூரியன் - பகைவர்கள். இவனுக்கு ஒரு கால் கிடையாது. அதனால், மந்த நடை நடப்பான். அற்புதமான பராக்கிரம சாலியான இவன், சிவபெருமானது கருணைக்கு எதையும் செய்யக் கூடியவன். நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்கும் காரணமானவன். வறுமை, கஷ்டம், நோய், அவமரியாதை இதற்கு மூல காரணமாக இருப்பவன். சனி பலமாக இருந்தால் தியாகிகளாகவும், தேசத் தலைவர்களாகவும் மாற முடியும். உலக அறிவில், வெளி நாட்டு மொழிகளில் பாண்டித்தியம் அடைய உதவுவதும் சனி. இரும்புக்கு காரகன். நல்லெண்ணெய் நாயகன். கருப்பு தானியங்களின் பிரதிநிதி. இயந்திரங்களை கற்க, ஓட்ட திறனளிப்பவன். விவசாயம் செழிக்க சனி கருணை காட்ட வேண்டும். உடலில் நரம்பு இவன். கொடிய மனம் உடையவன். கல் நெஞ்சன். வாதம், பித்தம், கபம் மூன்றில், வாதமாக இருப்பவன். தாமச குணத்தோன், ரத்தினங்களில் நீலமாக இருப்பவன். காடு, மலைகளுக்கு உரியவன். ஜோதிட சாஸ்த்திரத்தில், எண் கணிதத்தில் "8"ம் எண்ணை சனீஸ்வரனுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

வியாதிகள் நீங்கவும், கடன் தொல்லை ஒழியவும், துர்தேவதைகளால் ஆபத்து நீங்கவும் சௌந்தர்யலஹரியில் உள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லலாம். "த்வயா ஹ்ருத்வா:வாமம் வபு ராபரி திருப் தேந மநஸா ஸரீரார்த்தம் சம்போ ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத்! ததா ஹித் வத்ரூபம் சகல மருணாபம் த்ரிநயனநம் குசாப்யா மாநம்ரம் குடில சசி சூடால முகுடம்!"
"ஓம் சமக்நிரக்நிபிச்கரச் சன்ன ஸ்தபது சூர்யா: சம்வாதோ வாதவரப
அபச்ரித: ஸ்வாஹா!" என்கிற மந்திரத்தைச் சொல்லி ஹோமம செய்தால் ஒருவருக்கு இருக்கின்ற கஷ்டங்கள் விலகும், கஷ்டங்கள் வராது, நன்மைகள் கூடும்.

ஜோதிடம் - விதியை அறிந்து மதியுடன் வாழ...

Leave a Comment
பஞ்ச பாண்டவர்களில் இளையவரான சகாதேவன் ஜோதிட புலமையால் மஹாபாரத போரின் விளைவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்திருந்தார்.


ஜோதிட பயன்பாடு:--

உலக கடமைகளை ஆற்றுபவர்கள், குடும்பத்தைப் பராமரிப்பவர்கள், செல்வத்தை ஈட்டுபவர்கள், வாழ்க்கையை சமநிலையுடன் செயல்படுத்த விரும்புபவர்கள், மற்றும் ஆரோக்கியமான வாழ்வில் ஈடுபட நினைப்பவர்களும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்தில் தகுதி வாய்ந்த ஜோதிடர்களை ஆலோசிப்பதால் எவ்வித தீங்கும் இல்லை. நன்மையே.

திருமண பொருத்தம், திருமணத்திற்கு உகந்த காலம், வர்த்தக முதலீட்டின் தன்மை, தொழிலைத் தேர்ந்தெடுப்பது, குழந்தையின் எதிர்கால செயல் நாட்டத்தை அறிவது, இல்லறம் துறவறம் இவற்றைக் கடைப்பிடிப்பதற்கான காலகட்டங்கள், மற்றும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அறிவதற்கும் ஜோதிடம் பலவகையில் பயன்படுகிறது.

விதியின் படி எவ்வளவு சிரமத்தை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ, எந்தவிதத்தில் அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதனை ஜாதகத்தில் பார்க்க முடியும்.

அதனை அறிந்து அதற்க்கு உரிய சிரமத்தை வழிபாட்டில் அதற்குப் பொருத்தமான விதத்தில் நாமே எடுத்துக்கொண்டால் அது அந்த அளவிற்கு லோக வாழ்க்கையில் வரும் சிரமங்களைக் குறைத்துவிடுகிறது. இதற்குப் பெயர்தான் பரிகாரம். இந்த பொருத்தமான பரிகாரத்தை அறிந்து செய்து சிரமத்திலிருந்து விடுபடவும் ஜோதிடம் பயன்படுகிறது.

ஒவ்வொருவரின் வாழ்விலும் விதியிலும் சில விஷயங்கள் சாதகமாகவும், சில விஷயங்கள் பாதகமாகவும் இருக்கின்றன. அவைகளை அறிந்துகொண்டு சாதகமான விஷயங்களைப் பிடித்துக்கொண்டும், பாதகமானவிஷயங்களைளிருந்து விலகிக்கொள்ளவும் ஜோதிடம் பயன்படுகிறது.


கர்தம முனிவருக்கு பிரம்மா உபதேசித்த போது, அவர் தனது மகள்களை குணம் மற்றும் விருப்பத்திற்கு தகுந்தவாறு உரிய மணமகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் (ஸ்ரீமத் பாகவதம் 3.24.15).
அதாவது, திருமண வாழ்க்கைக்கு தம்பதிகளின் குணம் போன்ற பொருத்தங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அப்படி குணம் போன்ற பொருத்தங்களைக் கண்டுபிடிக்க ஜோதிடம் பயன்படுகிறது. 

திதி- என்றால் என்ன?

Leave a Comment
சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது - திதி

சாந்திர மாதம்; 29 நாள் 12 மணி 44 நிமிடங்கள் கொண்டது ஒரு சாந்திர மாதம் (Lunar Month).

சாந்திர வருடம்; இப்படி பன்னிரண்டு சாந்திர மாதங்கள் கொண்டது ஒரு சாந்திர வருடம் (Lunar year).

இது 354 நாட்கள் கொண்டது. ஒரு சாந்திர மாதத்தின் இருபத்து ஒன்பதரை நாட்கள் சொச்சத்துக்குள் முப்பது திதிகள் அடங்கி நிற்கும்.

கிருஷ்ண பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது தேய்ந்து வருகின்ற காலம் தேய்பிறைக் காலமாகும். இது அமாவாசையில் (New Moon) முடிவுறும். இதை கிருஷ்ண பட்சம் என்பர்.

சுக்ல பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது வளர்ந்து வருகின்ற காலம் வளர்பிறைக் காலமாகும். இது பௌர்ணமி என்னும் முழுநிலவில் முடிவுறும். இதை சுக்ல பட்சம் என்பர்.

வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

. அமாவாசை - நிலவில்லாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை.

1. பிரதமை - முதாலம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன.
2. துதியை - இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள். துவி என்பது இரண்டு என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இரண்டைக் குறிக்கும் 'one' என்ற சொல்லும் இதிலிருந்ந்தே வந்தது. இதில் இருந்துதான் துவிச்சக்கர வண்டி, துவைதம் போன்ற சொற்கள் வந்தன. அத்துவைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள்.
3. திருதியை- மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள். திரி என்ற சொல் மூன்று என்று பொருள்படும். ஆங்கிலத்தில் மூன்றைக் குறிக்கும் 'Three' என்ற சொல் இதில் இருந்துதான் வந்தது. திரிபுரம் என்பது முப்புரங்களான மூன்று நகரங்களைக் குறிக்கும். திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும்.
4. சதுர்த்தி- நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பொருள். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் உள்ளது என்று பொருள். சதுர்முகன் என்றால் நான்கு முகங்களை உடைய பிரம்மாவைக் குறிக்கும். 'சுக்லாம் பரதரம்' என்ற பிள்ளையார் மந்திரத்தில் வருகின்ற சதுர்ப்புஜம் என்பது பிள்ளையாரின் நான்கு தோள்களைக் குறிக்கும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களினதும் கூட்டாகும்.
5. பஞ்சமி-ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். ஆங்கிலத்தில் ஐந்தைக் குறிக்கும் 'five' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் ந-ம-சி-வா-ய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.
6. ஷஷ்டி-ஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள். ஷ என்றால் ஆறு என்று பொருள். ஆங்கிலத்தில் ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் 'six' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது.ஷண்முகன் என்பது ஆறு முகங்களுடைய முருகனைக் குறிக்கும். ஷடாட்சரம் என்பது முருகனின் ச-ர-வ-ண-ப-வ என்ற ஆறு எழுத்து மந்திரமாகும்..
7. ஸப்தமி-ஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள். ஸப்த என்றால் ஏழு என்று பொருள். ஆங்கிலத்தில் ஏழைக் குறிக்கும் 'seven' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. ஸப்த ரிஷிகள் என்பது ஏழு முனிவர்களைக் குறிக்கும்.
8. அட்டமி-எட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலைகள். ஆங்கிலத்தில் எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் 'Eight'என்ற சொல் இதிலிருந்தே வந்தது. அட்டம் என்றால் எட்டு என்று பொருள். அட்டலட்சுமி என்றால் எட்டு இலட்சுமிகளைக் குறிக்கும். அட்ட திக்குகள் என்றால் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திக்குகளைக் குறிக்கும். அட்டதிக்குப் பாலகர்கள் என்றால் முறையே இந்த எட்டு திக்குகளுக்கும் உரிய இந்திரன். அக்கினி, இயமன், நிருதன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் எட்டு திக்குத்தெய்வங்களையும் குறிக்கும். ' அருணன் இந்திரன் திசை அணுகினான்' என்றால் சூரியனின் சாரதியாகிய அருணன் இந்திரனுக்குரிய கிழக்குத் திசையை அணுகினான் என்று பொருள். இந்த வரி திருவாசகத்தின் திருப்பள்ளி எழுச்சியில் வருகின்றது.
9. நவமி- ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள். நவம் என்றால் ஒன்பது. ஆங்கிலத்தில் ஒன்பதைக் குறிக்கும் 'Nine' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளைக்குறிக்கும். நவதானியம் என்றால் ஒன்பது தானியங்களைக் குறிக்கும். நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கும்.
10. தசமி- பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள். தசம் என்றால் பத்து. கணிதத்தில் தசமத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்களே. இதை ஆங்கிலத்தில் Decimal என்று கூறுகிறார்கள். தசகாரியம் என்பது ஆத்மீகப்பாதையிலுள்ள பத்துப்படிநிலைகளைக் குறிக்கும். தசரா என்று நமது நவராத்திரியை வட இந்தியாவில் பத்து நாட் கொண்டாட்டமாகக் கொண்டாடுவர். 'தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' - திருவாசகம். இங்கு தசமதி என்பது பத்து மாதங்கள். இது தாயின் வயிற்றில் நாம் இருந்த காலத்தைக் குறிக்கின்றது.
11. ஏகாதசி- பதினோராம் பிறை. இன்று நிலவுக்கு பன்னிரண்டு கலைகள். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். ஏகம் என்றால் ஒன்று. ஏகாதசி என்றால் பத்தும் ஒன்றும் சேர்ந்த பதினொன்று.
12. துவாதசி- பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள். துவி என்றால் இரண்டு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். துவாதசி என்பது பத்தும் இரண்டும் சேர்ந்த பன்னிரண்டைக் குறிக்கும்.
13. திரயோதசி-பதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள். திரி என்றால் மூன்று என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். திரயோதசி என்பது பத்தும் மூன்றும் சேர்ந்த பதின்மூன்றைக் குறிக்கும்.
14. சதுர்த்தசி- பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். சதுர்த்தசி என்பது பத்தும் நான்கும் சேர்ந்த பதினான்கைக் குறிக்கும்.
15. பௌர்ணமி- பூரண நிலவு. இன்று பூரண நிலவுக்கு கலைகள் பதினாறு. அமாவசையில் இருந்து ஒவொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப் பரிணமிக்கின்றது. .
இந்த திதிகளை பௌர்ணமி- பூரண நிலவு நாள் துவங்கி அமாவாசை - நிலவில்லாத நாள் வரை உள்ள தேய்பிறைக்காலத்தில் கிருஷ்ண பட்ச திதிகள் என்றும், அமாவாசை - நிலவில்லாத நாள் துவங்கி பௌர்ணமி- பூரண நிலவு நாள் வரை உள்ள வளர்பிறை காலத்தில் சுக்ல பட்ச திதிகள் என்றும் அழைக்கிறோம். ஆக மொத்தம் திதிகள் முப்பது.