ஒவ்வொரு
நாட்டிற்கும் ஒரு வளம் இருக்கிறது. அதனால் அந்த நாடுகள் உலக அரங்கில் தலை
நிமிர்ந்து வாழ முடிகிறது.
நம்
நாடும் பல ஆயிரம் தலைமுறைகளாக உலகிலேயே மிகச் சிறந்த ஒரே நாடாக கௌரவத்துடன்
வளம்கொழிக்க வாழ்ந்த நாடு.
அன்னியர்
ஆட்சி துவங்கிய ஆயிரம் ஆண்டுகள் முன்புவரை.
பாரதத்
தாயிடம் இயற்கை வளம் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் அவளது சூக்ஷ்ம விஞ்ஞான ஞான
வளத்தினால் உலகைக் கவர்ந்து , உலகை உயர்த்தி வாழ்ந்துவந்தாள்.
பாரதத்
தாயிடம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக வரும் ஒரு ஞான வளம் இருக்கிறது. அது அன்றும்
இன்றும் என்றுமே மனித குலம் முழுமைக்கும் தேவையானது. ஜாதி, மத, அரசியல், பொருளாதார, தேச
வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் விரும்பக்கூடியது. அனைவருக்குமே பிடிப்பது. அனைவருக்குமே
மிகப் பெரிய நன்மையை செய்வது. அனைவருக்குமே வேறு எதனாலும் அடையமுடியாத
நிம்மதியையும் ஆனந்தத்தையும் தருவது. உண்மையில் அனைவருக்குமே அவசியமானது. உலகில் வேறு எங்குமே இல்லாதது.
அந்த
ஞானத்தை ஒருவனுக்குக் கொடுத்தால் , பெற்றவன் கொடுத்தவனுக்கு தன் வாழ்வில் எதையுமே
கொடுப்பான் ! உண்மையில் !
இந்த
ஞானத்தைக் கொடுக்கும் திறமையை நாம் இப்போதும் வளர்த்துக்கொள்ள முடியும். இந்த ஞான
பலனுக்குக் கைமாறாக உலகம் நமக்கு வாரி வழங்கித்தான் தீர வேண்டும்.
ஒரு
கணக்குக்காக , பாரதத்தின் வருமானம் , வேறு எந்த முயற்சிகளால் வரும் செல்வத்தையும்
விட குறைந்தது 100 மடங்கு உயரும் ! இது உண்மை நாம் நிரூபிக்கத் தயார் !
ஞானம்
என்றாலே நாம் ஏதோ தாழ்வாகப் பார்க்கும் நிலையை சிலர் ஏற்படுத்தி விட்டார்கள் , அது
என்ன என்று தெரியாமல்.
ஒரு
உண்மையைச் சொல்லுகிறேன். யாரையெல்லாம் நீங்கள் உயர்வாக நினைத்து , முன் மாதிரியாக வைத்து ஓடுகிறீர்களோ , அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தால் , அவர்கள் உங்களுக்கு அடிமை
செய்யும் சேவகனாகக் காத்துக் கிடப்பார்கள். இதுவும் உண்மை. இதற்கு மேல் என்ன
வேண்டுமோ?
அப்படி
என்றால் , மற்ற உயர்வுகளெல்லாம் தேவை இல்லை என்று நாம் சொல்லவில்லை. அவைகளை இந்த உலகம்
வந்து தானே காலடியில் கொட்டும். நாம் அவைகளுக்காக கையேந்திக் கெஞ்சிக்
காத்துக்கிடக்க தேவை இல்லை! கலைக்கக் கலைக்க ஓடி அலையவும் தேவையில்லை!
அரபு
நாடு தன்னிடம் இருக்கும் பெட்ரோலை விட்டு விட்டு காய்கறி உற்பத்தி மூலம் பொருள்
ஈட்ட முயற்சிப்பது போல இருக்கிறது நமது இன்றைய பாரத மக்களின் கண்ணோட்டங்களும், நாட்டின் பொருளாதார
நிபுணர்களின் கருத்துக்களும், பாரத அரசுகளின் முயற்சிகளும்!
நம்மிடம்
இருக்கும் இந்த ஞானத்தினை வேண்டி இந்த உலகம் நமக்கு அனைத்தையும் கொடுத்து அடிமையாகி
கெஞ்சிக் கதற வைக்க நான் தயார். நீங்கள் ஒத்துழைக்கத் தயாரா?
இன்னும்
ஐம்பதே ஆண்டுகளில் பாரதத்தை உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடாக , உலகமே பார்த்து
பெருமைப்படும் , வணங்கும் , போற்றும் தலைமை நாடாக நாம் நிச்சயம் ஆக்க முடியும்.
0 comments:
Post a Comment