சித்தர்கள் ரிஷிகளின் மந்திரக் கட்டுக்குள் - பாரதம்!

Leave a Comment

இது ஒரு உண்மை அவ்வளவுதான்.  

இதில் என் கருத்து, அறிவுரை என்று எதுவும் இல்லை. 



இந்த பாரத நாடு ஜவஹர்லால் நேருவோ காந்தீஜீயோ பெற்றுப் போட்டது அல்ல.
1947 ஆகஸ்டு 15லும் பிறந்தது இல்லை.

ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக ஆயிரம் ஆயிரம் சிரமங்களை ஆயிரம் ஆயிரம் தியாகத்தினால் கடந்து வந்துள்ளது.

ஆயிரமாயிரம் புயல் வெள்ளங்கள், நில நடுக்கங்கள், கடும் பஞ்சங்கள், திருடர்களின் படையெடுப்புக்கள், சதிகாரர்களின் படையெடுப்புக்கள், வியாபாரிகளின் படையெடுப்புக்கள்,...... 

இவைகளால் வந்த வறட்சி, வலி வேதனைகள், பசி பட்டினிகள், பெரும் கொலை போன்ற கொடுமைகள்,.....

எல்லாவற்றையும், தாங்கி வாழ்ந்து, அவைகளிலிருந்து வெளிவர இன்னுயிர் தந்து போராடிதான் வாழ்ந்து வந்துள்ளது....  

ரிஷிகள் தந்த மன அமைதியினால், கிடைத்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து இருக்கும் இயற்கையை ஏற்றும் மதித்தும் இன்பமாய் வாழ ஆயிரம் அழகிய வழிகளை படிகளை வடிவமைத்து வந்துள்ளது....

திருட வந்த பலர் இங்கு ஆட்சியாளனாய் அரியணையில் அமர்ந்தனர், அவர்களிடமிருந்து, அவர்களிடமிருந்து பலமுறை இந்த நாடு விடுதலை பெற்றுள்ளது, 1947 ஆகஸ்டு 15 மாத்திரமல்ல நமக்கு விடுதலை நாள்....

என்குழந்தைகள் இப்படி வாழ்ந்து பெருமிதமும் பெருவாழ்வும் அடைய வேண்டும் என்று ஆசைக் கனவுகளுடன் அவர்களால் அணு அணுவாய் சிந்து சிந்தித்து வடிவமைக்கப்பட்ட கிராமங்கள், வீதிகள், நகரங்கள், குளங்கள், வயல்வெளிகள், கோவில்கள், நீதி நூல்கள், இதிஹாச புராணங்கள், பொழுது போக்குக் கலைகள், ஆட்சி முறைகள், நீதி நெறிகள்,....  
அவர்களின் வயிற்றில் பிறந்து அவர்கள் கொடுத்த இந்த வளங்களை எல்லாம் அனுபவித்துக்கொண்டு, ஆனால், எந்த ஆசை கனவுகளுடன் அவர்கள் இவைகளை தியாகம் பல செய்து ஏற்படுத்தினார்களோ அவைகளை கேட்கவும் கற்கவும் தயார் இல்லாத சந்ததிகள் அறிவு அற்றவர்கள், நன்றி உணர்ச்சி அற்றவர்கள், நீதி நியாயம் தெரியாத மிருகங்களே, எல்லை மீறி அனுபவிக்கும் திருடர்களே, பெற்றோர் முன்னோர்களின் துரோகிகளே,

அவர்களின் தியாகங்களை மறக்கடித்து, துளி பிச்சை போட்டவர்களை பெரிய தியாகிகள் என்று பேசிக்கொண்டு,...
அவர்களின் வாழ்க்கை நீதிகளை மறக்கடித்து விட்டு, திருட வந்தவன் நம்மை சுரண்டவும், நம்மை முட்டாளாக்கி அடிமையாக வைத்துக்கொள்ளவும், ஏற்படுத்திய கல்வியையே நமது கல்வியாகவும், அதற்காகவே அவன் ஏற்படுத்திய சட்ட முறைகளையே நமது நீதியாகவும் ஏற்றுக்கொண்டு வாழ்வது அறிவோ....

சுகம் பல தியாகம் செய்து, கருத்துக் கனவுகளுடன், கொள்கைக் கனவுகளுடன் நாட்டைக்கட்டிய முன்னோர்களின் விருப்பங்களுக்கு எதிராக வாழ்வதற்கு அவர்களுடைய நாட்டில் ஏன் வாழவேண்டுமோ? அது நேர்மையோ? அது நியாயமோ? அது தர்மமோ? அது பன்பட்டவனின் அடையாளமோ? அது திருடர்களின் செயல் இல்லையோ? அது அடாவடிகளின் செயல் இல்லையோ? அது ரவுடிகளின் செயல் இல்லையோ?

நியாயம் என்று நமக்குத் தோன்றுவது....
உலகில் மனிதனாகப் பிறந்தவன் முன்னோர் யாருடைய கருத்துக்களையும் கேட்கவேண்டும் என்று கட்டாயம் கிடடியாது, அவரவரின் இஷ்டத்திற்கு சுதந்திரமாக வாழலாம்.
ஆனால் அவரவரின் கருத்துக்கு ஏற்ற நாட்டினை கண்டுபிடித்து அங்கு வாழ்ந்துகொள்ளவேண்டும்.
அமெரிக்காவின் சாலை விதிகளை இங்கு பாரதத்தில் கடைபிடிக்க முடியாதே அப்படித்தான்.

பல ஆயிரம் தலைமுறைகளாக தனக்கு என்று ஒரு கருத்து ஓட்டத்தை வைத்துக்கொண்டு வாழும் ஒரு தேசத்தை, புறம்போக்காகப் பார்ப்பதும் பாபம், ஓட்டத்தை பாதிக்காத, ஓட்டத்திற்கு உதவும் முறைகள் இன்றி இஷ்டத்திற்கு மாற்றுவதும் பாபமே.
அப்படி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ரிஷிகளின் சாபங்களை அடைகிறார்கள். அவர்களின் சந்ததிகள் அழிவார்கள்.
இதே காரணத்தினால்தான் காந்தீஜீயின் வம்சம் கெட்ட நடத்தைகளால் அழிந்தது. இதே காரணத்தால்தான் ஜவஹர்லால் நேருவின் குடும்பமும் கொலை செய்யப்பட்டே அழிந்தது. அடுத்து வருபவர்களும் மன நோயாளிகளாகவே இருப்பார்கள்.
கருணாநிதியின் குடும்பமும் சீரழிவையே அடையும். இனி வரும் சந்ததிகள் மன நோயாளிகளாகவே இருப்பார்கள்.
ஈ.வே.ராமசாமியின் குடும்பமும் சீரழிந்துவிட்டது. அவரது கொள்கை குடும்ப வம்சத்தைர்களையும் கூட இந்த பாபம் பாதித்து நிம்மதியான வாழ்வை இழந்து அழிந்தே வருகிறார்கள்.
அவர்கள் யாருக்குமே இந்த பாப காரணம் தெரியாமல் - எல்லாம் எதேச்சையாக என்று சப்பைக்கட்டு கட்டி வருகிறார்கள்.

இந்த பாரத நாடு முழுவதும் சித்தர்களின், ரிஷிகளின் சங்கல்பத்தினால் கட்டுமானம் செய்யப்பட்டு உள்ளது. சித்தர்கள் ரிஷிகள் இந்த ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லவே இதனை வடிவமைத்து மந்திரக் கட்டும் செய்து வைத்துள்ளார்கள். அதை ஏற்காமல் இங்கு வாழ்பவர்களை அது நிச்சயம் பாதிக்கும். பாதித்து வருகிறது.

நாட்டின் சித்தர்கள் ரிஷிகளின் இந்த நாட்டின் விதிகளை மாற்ற முயலுபவர்களை அது அழிக்கும். அவர்களின் சந்ததிகளையே கூட அழித்துக் காட்டும். 

அது இந்த பாரத நாடு மட்டுமல்ல. இந்த பாரத நாட்டு குடிமக்கள் அனைவரும் ரிஷிகளின் சந்ததிகளே. 

பாரத தேசம் என்ற சொல்லின் பெயரிலேயே அது அறிவிக்கப்பட்டே உள்ளது. பாரதம் என்றால் பா நெறி அல்லது வேத ஞான நெறிக்காக அர்ப்பணிக்கப் பட்டு கட்டுமானம் செய்யப்பட்டது என்று பொருள்! 

அதனால் இந்த பாரத மக்களை, அதாவது இந்த நாட்டினை வடிவமைத்த உரிமையாளர்களான சித்தர்கள் ரிஷிகளின் சந்ததிகளான அவர்களை ஏமாற்றுதல், அவர்களிடம் லஞ்சம் வாங்குதல், அவர்களை அல்லது அவர்களின் சமைய உணர்வுகளை  மதிக்காமல் ஆட்சி செய்தல், அரசு நிர்வாகம் செய்தல், சட்டங்களை இயற்றுதல், நீதி என்ற பெயரில் அநீதிகளை தீர்ப்பாகக் கொடுத்தல்,..... அனைத்துமே மிகப் பெரிய பாப காரியங்கள்.


அதனால்தான் ஆன்மீகக் வாழ்வு இல்லாத அரசியல் வாதிகள் இந்த நாட்டில் நிம்மதி இல்லாத தனிப்பட்ட வாழ்க்கையையே அனுபவிக்கிறார்கள். அவர்களது சந்ததிகளும் நன்னெறியில் செல்ல இயலாது கெட்டு சீரழிகிறார்கள்.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை யாரும் தண்டிக்கும் முன் அவர்களது வம்சத்தை ரிஷிகளின் இந்த மந்திரக் கட்டுமானமே அழித்து வருகிறது.

இந்த நாட்டின் இந்த கட்டுமானத்திற்கு எதிரான பணி, சிந்தனை, தீர்ப்புகள்,.... என்று வாழ்ந்த நீதிபதி பணியில் இருப்பவர்களின் குடும்பங்களும்கூட சில தலை முறைகளில் அழிந்தே வருகிறது. அவர்களும் மற்ற பிறவிகளில் இழிந்த பிறவிகளையே அடைந்து கடன் அடைத்து வருகிறார்கள்.

உண்மையில் வெள்ளையர்கள் இங்கு திருட வந்தார்கள், ஆட்சி செய்யத் துவங்கிவிட்டார்கள்.

அதே சமையத்தில் பிரிட்டிஷ் உலகில் உயர்ந்த பலம் கொண்ட நாடாக இருந்தது. அவர்கள் கொள்ளை அடித்து சென்றபோது வரை அவர்களுக்கு பெரிய பாதிப்பு இருந்தது இல்லை.

அனால் இந்த நாட்டில் மதம் மாற்றத்தை அதிகரித்து, இந்த நாட்டின் கல்விமுறையையும் மெக்காலே கல்வி முறையினால் மாற்றினார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகெங்கும் விழத் துவங்கியது. அழிந்து சுருங்கிப்போய் விட்டது.

இதற்கெல்லாம் பலர் எதேச்சை என்று காரணம் கற்பிக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் விழுந்த காரணம் ரிஷி சாபமே.  

இசுலாமியர்களும் இந்த நாட்டிலிருந்து திருடிச்சென்றவரை அவர்களுக்கு எந்த பெரிய பிரச்சினைகளும் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் இங்கு இருந்து ஆட்சி செய்யத் துவங்கினார்கள். அழிந்து போனார்கள்.

இசுலாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் உலகில் எங்கெல்லாம் படை எடுத்துச் சென்றார்களோ, அங்கெல்லாம் பிடித்த நாடுகளை இசுலாமிய நாடாக ஆக்கிவிட்டார்கள். ஆனால் இங்கு முடியவில்லை. அதன் காரணம் இந்த ரிஷிகளின் மந்திரக் கட்டுமானமே.

அதேபோலவே கிருஸ்தவர்களும் உலகில் எங்கெல்லாம் படை எடுத்துச் சென்றார்களோ, அங்கெல்லாம் பிடித்த நாடுகளை கிருஸ்தவ நாடாக ஆக்கிவிட்டார்கள். ஆனால் இங்கு முடியவில்லை. அதன் காரணமும் இந்த ரிஷிகளின் மந்திரக் கட்டுமானமே.

புத்தர் இந்த நாட்டில் கௌரவத்துடன் வாழ்ந்தார். மதிப்புடன் மரியாதையுடன் வாழ்ந்தார். அவர் வேத நெறிக்கு புறம்பாக வாழ்ந்தது பேசியது என்பது என்றுமே இல்லை. அவர் இந்த வேத நெறிக் கட்டமைப்புக்கு உள்ளே இல்லாதவர்களை, வர விரும்பாதவர்களை, காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்களை முதலில் மனிதத் தன்மைகளுக்கு கொண்டுவருவோம். பிறகு அவனே தனது பகுத்தறிவின் துணையுடன் வேத நெறிக்குள் வருவான். ஆனால் அதனை வெளிப்படையாக கூறினாள் ஒதுங்கிவிடுவார்கள்,... என்ற காரணங்களால் அவர் எதுவும் வேத நெறிகளை பேசாமல் மனித நெறிகளை மட்டுமே பேசினார்.

ஆனால் அவரது வழிவந்தவர்கள் புத்தர் பேசியது வேதம் வேண்டாம் என்று பேசினார்கள். அழிந்தார்கள். உலகமெங்கும் வளர முடிந்த அவர்களின் அந்த புத்த மதம் என்று அவர்கள் கூறிய கோட்பாடுகள், இந்த பாரத நாட்டில் இல்லாமலேயே ஆகிவிட்டது.

இதேபோன்று இன்னமும் ஆயிரக் கணக்கான நிகழுவுகளை, உதாரணங்களை காட்ட முடியும். கட்டுரை நீளும் என்பதால் சுருக்கிக்கொண்டு முடிக்கிறேன்.



ரிஷிகளின் இந்த சூக்ஷ்ம மந்திரக் கட்டுமானம் வேலை செய்யும் சூக்ஷம விதிகளை, நியதிகளை, முறைகளை பார்க்கும் சக்தியை இறைவன் அருளினான். நாமும் பார்க்கிறோம். அதனால் இந்தக் கட்டுரையின் மூலம் நான் அந்த உண்மையை அறிவிக்கிறேன். அவ்வளவுதான்.



ஓம். ஸ்ரீ ரிஷிப்யோ நமஹ. 

0 comments:

Post a Comment