இறைவனும் ஐந்தும்....

Leave a Comment
இறைவனின் சிருஷ்டியில் நிறைய விஷயங்கள் ஐந்தின் மடங்காக இருப்பதை பார்ப்போமே- - - -

1- பஞ்ச பூதங்கள்:
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

2- பஞ்ச பூதங்களின் – குணங்கள்:
1- நிலம் -  5 வகை பண்புகளையுடையது
(சுவை, ஒளி , ஊறு , ஓசை, நாற்றம்)
2- நீர் -  4 வகை பண்புகளையுடையது
(சுவை, ஒளி, ஊறு, ஓசை)
3- நெருப்பு -  3 வகை பண்புகளையுடையது
(ஒளி, ஊறு, ஓசை)
4- காற்று -  2 வகை பண்புகளையுடையது
(ஊறு, ஓசை )
5- ஆகாயம் -  1 வகை பண்புகளையுடையது
(ஓசை )

3- பஞ்சபூத தலங்கள்
1- நிலம் -  திருவாரூர்
2- நீர் -  திருவானைக்கா
3- நெருப்பு -  திருவண்ணாமலை
4- காற்று -  திருக்காளத்தி
5- ஆகாயம் -  திருத்தில்லை / சிதம்பரம்


4- பஞ்சலிங்க க்ஷேத்திரங்கள் / சேத்திரங்கள்
1- முக்திலிங்கம் -  கேதாரம்
2- வரலிங்கம் -  நேபாளம்
3- போகலிங்கம் -  சிருங்கேரி
4- ஏகலிங்கம் -  காஞ்சி
5- மோட்சலிங்கம் - சிதம்பரம்

5- பஞ்சவனஸ்தலங்கள் / பஞ்சவனதலங்கள்
1- முல்லை வனம் -  திருக்கருகாவூர்
2- பாதிரி வனம் - *அவளிவள் நல்லூர் 3- வன்னிவனம் -  அரதைபெரும்பாழி
4- பூளை வனம் -  திருஇரும்பூளை
5- வில்வ வனம் -  திருக்கொள்ளம்புதூர்
*அவளிவணல்லூர்

6-  பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள்:

1- இலந்தைக்காடு -  திருவெண்பாக்கம்
2- மூங்கில் காடு -  திருப்பாசூர்
3- ஈக்காடு - திருவேப்பூர்
4- ஆலங்காடு - திருவாலங்காடு
5- தர்ப்பைக்காடு - திருவிற்குடி

7- பஞ்ச ஸபைகள் / பஞ்ச சபைகள் :
1- திருவாலங்காடு -  இரத்தின சபை
2- சிதம்பரம் -  பொன் சபை
3- மதுரை -  வெள்ளி சபை
4- திருநெல்வேலி -  தாமிர சபை
5- திருக்குற்றாலம் -  சித்திர சபை

8- ஐந்து முகங்கள் :
1- ஈஶானம் / ஈசானம் -  மேல் நோக்கி
2- தத்புருஷம் / தத்புருடம் -  கிழக்கு நோக்கி
3- அகோரம் -  தெற்கு நோக்கி
4- வாமதேவம் -  வடக்கு நோக்கி
5- சத்யோஜாதம் -  மேற்கு நோக்கி

9- ஐந்தொழில்கள் :
1- படைத்தல்
2- காத்தல்
3- அழித்தல்
4- மறைத்தல்
5- அருளல்

10- ஐந்து தாண்டவங்கள் :
1- காளிகா தாண்டவம்
2- சந்தியா தாண்டவம்
3- திரிபுரத் தாண்டவம்
4- ஊர்த்துவ தாண்டவம்
5- ஆனந்த தாண்டவம்

11- சிவமூர்த்தங்கள் /  சிவ ரூபங்கள் / சிவ வேஷங்கள்- - - -
1-  பைரவர் -  வக்ர மூர்த்தி / வக்கிர மூர்த்தி
2-  தக்ஷிணாமூர்த்தி /தட்சணாமூர்த்தி -  ஶாந்த மூர்த்தி / சாந்த மூர்த்தி
3-  பிக்ஷாடனர் / பிச்சாடனர் -  வசீகர மூர்த்தி
4-  நடராஜர் / நடராசர் -  ஆனந்த மூர்த்தி
5- சோமாஸ்கந்தர் -  கருணா மூர்த்தி


13- ஆவின் [பசுவின்] அமிர்தங்கள் ஐந்து:
பால், தயிர், நெய், கோமியம், சாணம்

14- ஐங்கலைகள்:
1- நிவ்றுத்தி கலை / நிவர்த்தி கலை
2- பிரதிஷ்டா கலை / பிரதிட்டா கலை
3- வித்யா கலை
4- ஶாந்தி கலை / ஶாந்தி கலை
5- ஶாந்தி அதீத கலை / ஶாந்தி அதீத கலை

15- பஞ்ச வில்வம்

1- நொச்சி
2- விளா
3- வில்வம்
4- கிளுவை
5- மாவிலங்கம்

16-  ஐந்து நிறங்கள்
1- ஈஶானம் / ஈசானம் -  மேல் நோக்கி -  பளிங்கு நிறம்
2- தத்புருஷம் / தத்புருடம் – கிழக்கு நோக்கி -  பொன் நிறம்
3- அகோரம் - தெற்கு நோக்கி -  கருமை நிறம்
4- வாமதேவம் - வடக்கு நோக்கி -  சிவப்பு நிறம்
5- ஸத்யோஜாதம் - மேற்கு நோக்கி -  வெண்மை நிறம்


19- பஞ்சோபசாரம் / பஞ்ச உபசாரம் :
1- சந்தனமிடல்
2- மலர் தூவி அர்ச்சித்தல்
3- தூபமிடல்
4- தீபமிடல்
5- அமுதூட்டல்



0 comments:

Post a Comment