விநாயகப் பெருமான்– மனித கண்கள், யானை முகம், பேழை வயிறு, தேவ அம்சம் என அதிசய– அற்புத திருவடிவை கொண்டவர்.
அதுமட்டுமல்ல விநாயகப் பெருமான், அவரே ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவமாகவும், ‘கம்’ என்னும் பீஜ மந்திரமாகவும் காட்சி தருபவர்.
அருகம்புல், வெள்ளை எருக்கம்பூ, வன்னி இலை போன்றவை விநாயகருக்கு பிடித்தமானவை. இதனைக் கொண்டு அவருக்கு அர்ச்சித்து வழிபட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும், கிரக பீடைகள் விலகும். சிரமங்கள் குறையும்.
நம்வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகளை எதிர்வந்தபோதிலும் இடைவிடாது ஸ்ரீ கணபதி காயத்ரியை ஜபிப்பதால் அவற்றை ஜெயித்து விக்கினங்களை விளக்கி வெற்றி காண வைக்கும் மந்திரம். இது
அனுபவபூர்வமான சத்தியம்
பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொண்ட ஸ்ரீ கணபதி காயத்ரி இதுவே .
ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்
நெடுங்காலமாக துரத்திவரும் துரதிருஷ்டத்தை விலக்கி நிலைத்து நிற்கிற அத்ருஷடத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது இது
அதேபோல இந்த கணபதி காயத்ரியும் வழக்கத்தில் உள்ளது.
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ; தந்தி ப்ரசோதயாத்’
எது ஒருவருக்கு ப்ரியமானதாகவும் மனதிற்கு இதமானதாகவும் இருக்கிறதோ அதனை ஜபம் செய்யலாம்.
தினசரி 3, 9, 18, 27, 54, 108 அல்லது 1008.முறைகள் ஜபம் செய்து வளங்களைப் பெறலாம். செய்யும் அளவிற்கு நல்லதே.
மேலும் மகா கணபதியின் 16 அர்ச்சனைக்குரிய நாமங்கள்:
ஓம் சுமுகாய நமஹ,
ஓம் ஏக தந்தாய நமஹ,
ஓம் கபிலாய நமஹ,
ஓம் கஜகர்ணிகாய நமஹ,
ஓம் லம்போதராய நமஹ,
ஓம் விகடாய நமஹ,
ஓம் விக்ன ராஜாய நமஹ,
ஓம் பாலச்சந்தராய நமஹ,
ஓம் கஜானாய நமஹ,
ஓம் கணாதிபதயே நமஹ,
ஓம் தூம கேதுவே நமஹ,
ஓம் வக்ர துண்டாய நமஹ,
ஓம் ஹேராம்பாய நமஹ,
ஓம் ஐங்கராய நமஹ,
ஓம் ஸ்கந்த பூர்வஜானியே நமஹ,
ஓம் ஸ்ரீ சகங்ரடஹர கணபதயே நமஹ.
இவைகளை ஒருமுறை சொல்லி புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டால் சங்கடங்கள் குறையும், காரியங்களில் வரும் இடையூறுகள் குறையும், வெற்றிகரமான வாழ்க்கை அமையும்.
0 comments:
Post a Comment