Showing posts with label பரிகாரம். Show all posts
Showing posts with label பரிகாரம். Show all posts

நீங்களே ஜாதகம் பார்க்க - செயலிகள்

Leave a Comment
ஜோதிடம் - ஜாதகம் பார்க்க உதவும், நாம் பயன்படுத்தி வரும் சில நல்ல கைப்பேசி செயலிகளை [ Mobie Appகளை ]  அறிமுகம் செய்ய விரும்புகிறோம்....  





Kundli App இது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே பேசுகிறது - இன்றைய தேதி வரை. கணக்கு விபரங்களை நன்றாக கொடுக்கிறது. 

https://play.google.com/store/apps/details?id=com.vedicrishiastro.kundli


Divya Chakshu - திவ்ய சக்ஷு [ = சூக்ஷ்மக் கண் ] என்ற ஒரு செயலி நிறைய கணக்கீடுகளை தருகிறது. குறுக்கே வரும் விளம்பரத் தொல்லைகள் சற்று அதிகம். 


திருமணப் பொருத்தம் - அடிப்படைத் தகவல்களை பார்க்க, தமிழில் ஒரு சுலபமான செயலி: 

https://goo.gl/qhFhYs 

அஸ்ட்ரோ விசன் நிறுவனம் வெளியிட்டுள்ள செயலி. இலவசத்தில் அடிப்படைத் தகவல்கள் கிடைக்கின்றன. 
மேலும் விளக்கங்களுக்கு செயலியை விலைக்கு வாங்க வேண்டி உள்ளது. 

https://play.google.com/store/apps/details?id=com.astrovision.horoscope 


கம்ப்யூட்டரில் பயன்படுத்த சிறந்த செயலி, 'ஜகன்னாத ஹோரா'. இதில் கணக்கீடுகள் மிக நன்றாக கொடுக்கப்பட்டுள்ளன. செயலி பலன்களை சொல்லுவதில்லை. 
https://www.vedicastrologer.org/jh/#download 

கார்த்திகை தீப வழிபாட்டு வரலாறு

Leave a Comment

ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்த போது விளக்கு ஒளி இழக்கும் தருணம், எலி ஒன்று அங்கு வந்தது.

நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை பிடித்து இழுக்க, திரி தூண்டி விடப் பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது.

ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பிக்க ஒளியைத் தூண்டிய எலிக்கு ஈசனின் அருள் கிடைக்கப்பெற்று அந்த எலி மானிடப் பிறவியை அடைந்தது.

அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார் ஈசன்.

முன்ஜென்மத்தில் எலியாய் இருந்த அந்த உயிர் தான், அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார்.

எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியான இவருக்கு கூடவே ஆணவமும் வளர்ந்தது.

ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார்.

பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் பட்டாடைகள் மீது பட்டுப் பற்றி எரிய ஆரம்பிக்க, உடல் புண்ணாயிற்று.

ஆணவம் அடங்கிய மகாபலி சக்கரவர்த்தி இருகைகூப்பி தன் தவறை உணர்ந்து தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கி மன்னித்தருளுமாறு வேண்டினார்.

ஈசனும் அவரது வேண்டுதலுக்கு செவிசாய்த்து, அவரை மன்னித்து அதற்கு பிராயசித்தமாக தீப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா.
காலப்போக்கில் உன் ரணம் நீங்கும்!

என்று ஈசன் அசரீரியாகச் சொல்ல, மகாபலி மன்னன் மகிழ்ச்சியுற்றான்.
கார்த்திகை மாதமான இந்த மாதத்தில் நாள் தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு திருவிளக்கு ஏற்றி வந்த போது, கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இந்த திருக்கார்த்திகை நாளில் தான் ஈசனின் திருவுள்ளம் இறங்கி, இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நிற்க, மன்னனின் நோய் நீங்கியதாக ஐதீகம்.

இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பது வரலாறு.

கார்த்திகை தீபத்தன்று தீப வரிசைகளை ஏற்றி வழிபட்டால் அஞ்ஞானத்தால் பிறக்கும் ஆணவம் அழியும் .  
இது அகப் பலன் !

மேலும் , தீபம் ஏற்றி வழிபடும் அளவிற்கு வீட்டிற்கும் வீட்டில் உள்ளோருக்கும் அக்னியினால் வரும் தொல்லைகளும் , விபத்துக்களும் அழியும். 
இது பரிஹாரப் பலன். 

தமிழகத்தில் மழை காலம் முடிந்தவுடன் கொசு போன்ற பிற நுண்ணுயிர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். அவை பெரிய அளவில் பரவி மக்களுக்கு நோய்களை ஏற்படுத்துவது இந்த கார்த்திகை மாதத்தில்தான். எனவே அவைகளிடம் இருந்து நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீபதிருநாள் வழி செய்கிறது. 


கார்த்திகை தீபத்தில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து ஒருவித நெடி வரும். இந்த நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது. குடும்பத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகிறது. 

 தற்போதைய சூழ்நிலையில் பிற வேலைகளை காரணம் காட்டி, சாக்குபோக்கு சொல்லி இந்த விழாவை தவிர்க்காமல், பழைய வழக்கம் இப்போ எதற்கு? சாஸ்திரத்துக்கு 2 தீபம் ஏற்றுவோம் என்று நினைக்காமல் வீடு நிறைய விளக்கு ஏற்றி நம் குடும்பத்தை காத்துக் கொள்வோம்.
இது புறப் பலன்! 



கார்த்திகை தீபம் திரு விளக்கின் சிறப்பு
கார்த்திகை தீபத்தின் நோக்கம், பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்திற்கு தான் தெரியும். அதையே மலை உச்சியிலோ, தரையில் சொக்கப்பனையாகவோ ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும். மலையில் ஏற்றும் தீபம், அந்த ஊரில் மட்டுமின்றி பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூ
ட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துகளின் உடலில் கூட அந்த பிரகாசம் படும். மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் இன்னும் பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி, தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. தீபத்தின் ஆடி பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு,நெய், எண்ணெய் நிறையும் இடத்தில சிவபெருமான் வாசம் செய்கிறார்.
கார்த்திகை விளக்கின் தத்துவம்
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம். எப்படி, தீபத்தின் ஒளி, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ.. அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.
முதல் விளக்கு திருவிழா
திருவிளக்கு திருவிழா இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிப்பாட்டை “கார்த்திகை விளக்கீடு”என்று குறிப்பிடுகின்றன .பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு , நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
கிராமங்களில், திருவிளக்கை “தாய்” என்றும் “நாச்சியார்” என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப்பாடி பொட்டு வைத்து, மாலை அணிவித்து, தூப தீபம் காட்டினால் நிலையான பலன் கிடைக்கும்.
எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்
திருக்கார்த்திகை திருநாளில், திருவண்ணமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை தான் அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அறியும் நாளே திருக்கார்த்திகை.
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்ட போது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின, ஆறு தீபப் பொறிகளும் சரவணப் பொய்கையில் மூழ்கி சிறு குழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ் சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறு அகல்களில் சின்ன சின்ன குழந்தைகளாக, முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும் போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல் தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.
திருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும்
திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தன பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். பொட்டு வைக்கும் போது ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, கஜ லட்சுமி, வீர லட்சுமி , விஜய லட்சுமி ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுக்கள் வைப்பதற்கு தத்துவரீதியாக காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி .. வாழ்வில் வளம் பெறுவோமாக!

ஸர்வ வசிய பூஜா தந்திரம்

Leave a Comment

சத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷிகள்  நடத்தும் ......

ஸர்வ வசிய பூஜா தந்திரம்
சனி & ஞாயிறுகளில் முழுதின வகுப்பு நடத்தித் தரப்படும்.
சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஞாயிறு மாலை 3மணி வரை.
அதாவது, சனி காலை 7மணிக்கு கோவையில் ட்ரெயினில் கிளம்பி, ஞாயிறு மாலை 7மணிக்கு கோவையை ட்ரெயினில் அடைவீர்கள். பயணம்: 3மணிநேரம். மற்ற பயண விபரங்களுக்கு: 08825131416
பொருளாதாரம், தொழில், குடும்பம், உறவுகள், ஆரோக்யம், செலவுகள், கல்வி, மன அமைதி, வெற்றிகள், சொத்துக்கள், பல வித இன்பங்கள், புகழ், அதிகாரம், பதவி, ...... 
போன்றவைகள் பொதுவாக விதி & மதி இரண்டின் துணையுடனும்
வருகின்றன & நடத்தப்படுகின்றன.

இதில் விதியின் பகுதியை நம்மால் எதுவும் செய்ய முடிவதில்லை.

 காரணம் அவைகள் நம் வசத்தில் இல்லை. 

ஆனாலும், விதியினால் வரும் சிரமங்களை கணிசமாக குறைக்கவும், ஸௌகர்யங்களை அதிகரிக்கவும் 
தெய்வீக சக்திகளின் துணையால் முடியும்.
நாமும் அந்த சக்திகளை பயன்படுத்த முடியும்.

அதற்கு உரிய பூஜை முறைகள் வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

அவைகளை முறையாக செய்யும் அளவுக்கு 
எந்த சூழ்நிலைகளையும் நம் வசத்திற்கு கொண்டுவர முடியும்.

பொதுவாக எல்லா பரிகாரங்களையும் இதிலேயே முடித்துக்கொள்ளலாம். எல்லா தோஷங்களையும் நிவர்த்தி செய்துவிடலாம். கண்திருஷ்டிகள், செய்வினை, ஏவல்கள், பில்லி சூனியம் முதலியவைகளின் தாக்கங்களும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்....

அதற்கு, உரிய வேதத்தின் உபாஸனா முறைப்படி 
பூஜை பயிற்சிகள் இவ் வகுப்பில் கற்றுத்தரப்படும்.

ரூ. 2000/- மதிப்புள்ள பூஜை சாமகிரிகள் [ பாத்திரங்கள் ] இலவசமாக கொடுக்கப்படும்

பூஜைக்கான புஷ்பம்,... போன்ற பொருட்களும்
சுலோகங்கள், மந்திரங்கள்,,.... போன்ற பாடங்களும், நோட்டுப்புத்தகம் & பேனாவும் வழங்கப்படும்.

கட்டணம் ரூ 12000/- மட்டும்.

இதை கற்றுக்கொண்டு, வீட்டிலேயே தினசரி ஒரு அரை மணி நேர வசிய பூஜைசெய்வதால் வாழ்வில் அற்புதமான மாற்றங்களும் நன்மைகளும், தனக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் அமையும்.
இப் பலன்களை அதிகமாக்க உதவியாக....

 தவ சக்தி தீக்ஷைஅளிக்கப்படும்.

ஏற்பாடுகளை சரியாக செய்யவசதியாக
முன் பதிவு கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

விவரங்களுக்கு: 8825131416  


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala


விரதங்களும் - விதிகளும் !

1 comment
பலவித விரதங்களால்  நமக்கு சக்தி கிடைக்குமா
எப்படி?

* மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.

* பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை
குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.

* துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய
விளையாட்டை புரிந்துகொண்டாள்.

* பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும்
இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல்
வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.

* விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும்
புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக
விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

 * ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும்
காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது
ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த
சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

* நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது.
அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.
* விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைத்துப் பழகுதல் - விரதம் இருத்தல் என விளக்கலாம்.

* பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.

* உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பது பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.
கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

* நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம்
வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.

* காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின்
தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும்  வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.

* உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி?

* சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய
கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

* சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.

* நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம.

* நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு
செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக  கொண்டாடப்படுகிறது.

* விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில்
அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

* சாந்திராயண விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக  குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். இது ஒரு மாத விரதம். எப்போதாவது ஒருமுறை செய்த தவறுக்கு பரிகாரமாகவும்,  மீண்டும் கவனக்குறைவு வாராத விழிப்புணர்வுக்காகவும் கடைபிடிக்கப்படுவது.

* யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்கக் கூடாது என்றால்....
சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
வியாதியினால் மருந்து உண்பவர்கள்
கர்ப்பிணிகள்
பிரம்மச்சாரிகள் [ வேதம் பயிலும் பருவத்து மாணவர்கள் ]
சன்யாசிகள்

* இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

* மெளனவிரதம் இருப்பது வாய் மற்றும் மனதின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டி தமது எல்லா தினசரி காரியங்களையும் செய்வார்கள்.  மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது ஒரு தொல்லையே. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கருத்தினைத் தவிர மற்ற சிந்தனைகளையும் குறைக்கவும் , தவிர்க்கவுமே முயற்சிக்கவேண்டும் . மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக  பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்பாடு , சைகை மூலமோ, எழுத்து மூலமோ செயல்பாடு அனைத்தையுமே குறைக்க, தவிர்க்க முயற்சிக்கவும். . அந்த அளவிற்கு மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்..

அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில்,  உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதற்காகவும்தான் அமாவாசை, பவுர்ணமி,
வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர். ஒருவகையில் விரதங்கள் உடலுக்கும் மனதிற்குமான மருத்துவம் என்றும் கூறலாம். குறிப்பாக வரும் முன் காக்கும் மருத்துவம்! 

முக்கியக் குறிப்பு: எல்லோரும் எல்லா விரதங்களையும் கடிப்பது முடியாது, முயற்சிக்கவும் கூடாது.
சில விரதங்களை மட்டும் என்றாலும் கூட, ஒரு சரியான குருநாதரிடம் , நான் இந்த விரதத்தை கடைபிடிக்க விரும்புகிறேன், கடைபிடிக்கலாமா என்றோ, எனக்கு பொருத்தமான விரதத்தை சொல்லுங்கள் என்றோ கேட்டு கடைபிடிப்பது சிறப்பு.

எந்த மனநிலையுடன் அந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் சொல்லுவார் .

அந்த மன நிலையில் நிலைத்து இருக்க பழகுவதே விரதத்தின் தலையாய லட்சியம்!