அன்பு + அக்கறை + அறிவு + திறமை = வேத நெறிப் பயிற்சி.

உங்களுக்குத் தேவை, உங்கள் உயர்வுக்குத் தேவை -அன்புள்ள ,அக்கறையுள்ள,அறிவுப்பூர்வமான,திறம்பெற்ற உடன் வரும் வழி நடத்தி.


நான்கும் ஒரே இடத்தில் கிடைத்தால் வேறென்ன கவலை? Find out more...


யோகியின் வேத நெறிப் பயிற்சி – நான்கையும் இணைத்து உங்களுக்குள் கட்டும் உறுதியான நம்பகமான பரிசோதிக்கப்பட்ட சூழ்நிலை சாரா கட்டுமானம்

  • நடைப் பயணம் செய்பவன் அடிக்கும் வெயிலையோ பெய்யும் மழையையோ நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை... தன் நிம்மதியான பயணத்திற்கு தரமான குடை ஒன்றை கையில் பிடித்தாலே போதுமே!
  • உலகம் எப்படி இருந்தால் என்ன? உங்கள் நிம்மதியான வாழ்விற்கு உங்களைப் பாதுகாக்க வேத நெறிப் பயிற்சி இருந்தாலே போதுமே
  • அதுவே வெண்கொற்ற குடை! வேத நெறிக் குடை!!

பாடல்: தியானத் துணை

Leave a Comment
1 தியானத் துணை பாட லிதை நல்லோய்வில் கண்கள் மூடியே ஞான குரு நூல் பொருளை அகக் கண்கள் காணும் போதிலே பாடல் பொருளில் கரையும் ஜீவனே ஈசனில் லயம் ஆகும் அனுபவம் உடல் சாந்தி உளம் சாந்தி உயிர் சாந்தி நலம் மூன்றுமே 2 ஆஆ யிரம் தேவை உள்ளது ஆஆ யிரம் வேலை அவசரம் ஆஆ னாலும் பயணிக் கும் வாக னத்தின் தகுதி அவசியம் உடல் உள்ளம் உணர்வு கொண்ட வாக னத்தின் தியானம் அவசியம் அத னறிவை வழி யறிவை அறியும் மதியின் பயணம் வெற்றியே யார் செய்த தேகம் இது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் 3 மதியின் கவனம் ஸ்வா சத்திலே இதயத் தின் துடிப்பி லேலயம் உடல் முழுதும் பாய்ந் தோடும் பாது காக்கும் ரத்த ஓட்டமே வேக மாகக் காற்றி ழுத்த்து வெளி யேற்றும் நல் ஈரல் ஓய்வின் றித் துடித்துக் கொண்டு பணியாற் றும் நல் இதயம் 4 நடந்து செல்ல கால் இரண்டு வேலை செய்ய கை இரண்டு இரும்புக் கூண்டு போல் நெஞ்சு பஞ்சு மெத்தை போல் வயிறு பாம்பு போல முதுகெலும்பு சங்கு நுணி போல் கழுத்து விஞ்ஞா னத் தொழில் நுட்பம் கொண்ட தலைப் பந்தொன் று யார் செய்த தேகம் இது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் 5 கண் காது வாய் மூக்கில் படர் தோலில் அறி திறன்கள் சிந் திக்கும் மனம் உள்ளே அனுப விக்கும் உணர்வு உள்ளே மூன்றடுக்குத் தொழில் நுட்பம் கொண்ட தேகம் இதில் லமர்ந்து வாக னத்தை ஓட்டிக் கொண்டு என தென்று சொல்பவன் யார் 6 கண் திறந்தால் உலகம் ஒன்று மரம் போல நிற் கிறதே அதில்ல் உடல் இலை போல சுகம் செய்யும் தொழிற் சாலை இந்த மரமென வாழ்வது யார் இதில் இலைகள் பிறந்தது ஏன் மரத்தை ஆளும் உயிர் யாரோ இலையின் உயிரும் அவர் தானே யார் செய்த தேகம் இது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் 7 இலைய னைத்தின் பணி களையும் அனுபவிக்கும் ஒரு உயிரே அனைத் துயிரின் பணி களையும் அனுப விக்கும் ஒரு ஈசன் அவனு காக அனைத் துயிரும் ஓடி ஓடி உழைப் பவர்கள் 222 அவன் தந்த உத்த ரவை தன் விருப்பம் என எண்ணி 8 மெய் மறந்து பணி செய்யும் நல் அடிமைக் கூட் டங்கள் மரத்தின் தொழில் நற்பலன் தரவே பிறந்த திந்த இலைக் கிளைகள் மரத் தாண்டான் உயிரின் இச்சைதான் இலை யாண்டான் உயிரின் இச்சையே உல காண்டான் ஈசன் இச்சைதான் உட லாண்டான் ஜீவன் இச்சையே யார் செய்த தேகமிது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் 9 இலை பிறப்பின் நோக்கம் என்ன ஆராயும் குரு நூலே இலையின் பணிகள் எல்லா மும் மரத்தின் பணியின் வழிபட லே இலை யாண்டான் பணி எல்லாம் மரத் தாண்டான் வழிபட லே மரம் தந்த நீரமு தம் கர்ம பலன் தொழிற் கூலி 10 மரத்தி னுயிர் தன்விருப் பத்தால் விட்ட கிளைகளே இலைகள் அவனிச் சையைப் பூர்த்தி செய்யவே இலை பிறந்து ஸ்வாசிக் குதே இலையி னுடல் வீழும் போதிலே இலையி னுயிர் மரத்தின் உயிரிலே அடங்கிப் புதுப் பிறவி எடுக்குதே மரத்தினிச் சையைப் பூர்த்தி செய்யவே யார் செய்த தேகமிது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் 11 ஜீவன் பிறப்பின் நோக்கம் என்ன ஆரா யும் குரு நூலே உடலாண் டான் பணி எல்லாம் உலகாண் டான் வழிபட லே ஜீவன் பணிகள் எல்லா மும் ஈசன் பணியின் வழிபட லே ஈசன் கண்கள் மதிகள் ஜீவரில் சுகம் காணும் வழி தேடிகள் 12 ஈசன் சுகம் விரும்பி போகி ஜீவர் கிளை வாய்கள் யோகி ஈசனிச் சையைப் பூர்த்தி செய்யவே ஜீவன் பிறந்து ஸ்வாசிக் கிறான் ஜீவனுடல் வீழும் போதி லே உயிரடங்கும் ஈசன் உயிரி லே அடங்கிப் புதுப் பிறவிஎ டுக்கிறான் ஈசனிச் சையைப் பூர்த்தி செய்யவே யார் செய்த தேகமிது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் 13 ஈசன் விதியின் பணிகள் என்ன ஆஆ ராஆயும் குரு நூலே விதியின் பணிகள் எல்ல் லாம் ஈசன்மதிக்கு சுகம் செய்ய் தலே ஈசன் வாய்கள் ஜீவர் களே அதனால் விதி உணவ ளிக்குதே விதி தந்த உணவ முதம் கர்மப் பலன் தொழிற் கூலி 14 அன்னை வயிற்றில் வாழும் கருவது அன்னை யுடல் அங்கமேயன் றோ ஈசனுடல் உலகில் ஜீவ னும் ஈசனு டல் அங்கமேயன் றோ அறிந்தால் வரும் பக்தி மனம் கவலை இலா முக்தியு டன் மரமே இலை மதியறிந் தால் இலை மரமே தனிமை யில்லையே யார் செய்த தேகமிது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் 15 குழந்தை யைப்போல் சிற்றறி வில் அரை குறையாய் சிந்தனை கள் இலையாண் டான் நானுள் ளேன் மரத்தாண் டான் யாருமில் லை ஒரு இலை நான் தனி என்றும் பிற இலையை பகை என்றும் நினைக்கு மிலையில் நோய் புற்று மரம் வெறுக்கும் இலை அதுவே 16 தனக்குப் பிறன் இல்லான் ஈசன் ஒற்றை மரமவன் அதிலி லைநீ கவலை பயம் ஏன் மதியே ஈசனின் விதி காக்கி றதே உயிரின் உயிர் ஈசன் ஆதி அதைம றந்த உயிர னாதி அனுப்பி வைத்தவன் ஈசனவ னையே கணம் கணமுமே நினை மதியே யார் செய்த தேகமிது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் 17 இந்த ஆகாசம் ஈசனின் உடல் பிற எல்லாம் அதில் உறுப்பு அவன றிந்தவன் உன் நிலைகள் அவன ளித்தவன் தாய்ப்பால் முதல் கண்ணை மூடிஉன் பணியை செய்யே காக்கும் பணியதை ஈசன் செய்வான் உன் பிறப்பை மீண்டும் மீண்டுமே நடத்தி வைப்பவன் ஈசன் அவனே 18 ஈசனொ ருவனின் வாய்கள் ஜீவர்கள் ஈசன் விதிகளே உலகுஉ டல்கள் ஈசன் மதிகளே ஜீவரின் நான் ஜீவன் மதியில் தோன்றும் ஆசைகள் இலைகள் உண்பது மரத்திற் காக ஜீவன் உண்பது ஈசனுக் காக அறிந்த ஜீவன் ஈசனில் லயம் புத்தி பெற்றவன் முக்தி பெற்றவன் யார் செய்த தேகமிது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் 19 உலகம் பெருமரம் வளர்ந்த ஈசன் இலைகள் ஜீவர்கள் மரத்தி லங்கம் புரிந்த இலையின் மதிக்கு நிம்மதி மரம்வி ரும்பும் இலை அதுவே சிலஇ லையில் பித்துப் புற்று சிகிச் சைதரும் மரம் அதற்கு மரம் இன்றி இலை இல்லையே மரத்தை சார்நிலை பிழையு மில்லையே 20 இதுவே குரு நூல் லாய்வே அதன் அறிவில் அமர் மதியே யுக யுகமாய் பாரதி கள் ஆஆ ராய்ந்த நல் புரிதல் சில மதியில் பித்துப் புற்று சிகிச் சைதரும் விதி அதற்கு மனக் கண்கள் கண்ட உண்மையை உடல் கண்ணும் காண வெற்றியே யார் செய்த தேகமிது யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் இவன் யார் செய்த ஆசைகள் --- 21 அசை போட்டு சிந்தித் தால் தியானித் தால் உள்ள மைதியே தியானமிது சொன்ன உண் மையை நினை விலேஏ கொள்ள நன்மையே உள்ளமிது கண்ட உண் மையை கண்ணி ரண்டும் காண இன்பமே மெய் ஞானம் பக்தி முக்தியும் மதிக்குள் விதியும் பயணம் வெற்றியே யார் செய்த தேகம் விதி யார் செய்த சுவாசங்கள் யார் செய்த நான் மதி யார் செய்த ஆசைகள்

சர்வ சக்தி வழிபாடு குரல் துணை

ஐஶ்வர்ய மஹ றிஷி அவர்கள் 'சர்வ சக்தி வழிபாடு' என்ற நூலை வெளியிட்டுள்ளார். NOTIONPRESS மூலமும், மலிவுப் பதிப்பினை 'றிஷி பதிப்பகம்' மூலமும் பெறலாம். 


‘சர்வ சக்தி வழிபாடு’ நூலைப் படிக்கும், வழிபாட்டு, பிரார்த்தனைப் பயிற்சி செய்யும் வாசகர்கள் பலர் அதைப் படிக்கும் முறை பற்றிக் கேட்டிருந்தார்கள். அந்த சுலோகங்கள் பாடல்களைப் படிக்கும் முறையின் குரல் பதிவினை இந்த முகவரியில் கேட்கலாம் பதிவிரக்கம் / டௌன்லோட் செய்யலாம்.

சர்வ சக்தி வழிபாடு : https://audio.com/rishi/kpv-2min

காப்புப் பாடல்: வேல் காப்பு : https://audio.com/rishi/kpv-2min


சர்வ சக்தி வழிபாடு

இந்த 'சர்வ சக்தி வழிபாடு' வழிபாட்டு பயிற்சி முறை மிகுந்த அளவில் இறை ஆசிகளையும்,  ஐஶ்வர்யங்களையும்,  

பாதுகாப்பையும், வெற்றிகளையும், சுகங்களையும் அள்ளித் தருவது. 

 



இந்த முறையில் ஆகம முறை, வைதீக முறை, தாந்திரீக முறை நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இது மிகவும் சக்திவாய்ந்த ஒரு ரகசியத் தொழில் நுட்ப முறை. ஆனால் பயன்படுத்த மிகவும் எளிமை. தினசரி முடிந்தவரை கவனமாகப் படித்தாலே போதுமானது. 

 

தினசரி இதைப் படிக்க, துவக்கத்தில் 25 நிமிடம் தேவைப் படலாம். பிறகு அது படிப்படியாகக் குறைந்து, 10 நிமிடத்திற்கு வரும். இதைப் படிப்பது மிகுந்த சக்தி வாய்ந்த தியானப் பலனைத் தரும், வழிபாட்டுப் பலனைத் தரும், றிஷி முனிவர்களின் ஆசிகளைத் தரும், முன்னோர்களின் ஆசிகளைத் தரும், தெய்வங்களின் ஆசிகளைத் தரும்.... மன அமைதியைத் தரும், கவலைகளைத் துடைக்கும், பணிக் களத்தில் தெளிவினைத் தரும், தேவையான பிரியமான நட்புகளை கவரும் வளர்க்கும், அனைவருக்கும் பிடித்த நபராக நம்மை மாற்றும்... இது போல ஏராளமான பலன்கள் கிடைக்கும். இந்தப் பலன்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், செலவிடும் இந்த நேரம் மிகவும் குறைவே. வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் நமக்கு நேரத்தை மிகவும் மிச்சம் செய்து தரும். 

 

விரைவிலேயே பலன்கள் தெரியத் துவங்கும் என்றாலும், ஒரு ஆண்டுப் பயிற்சிக்குப் பிறகு மிகவும் அதிகமாகும். அதுமட்டுமல்ல, ஆண்டுக்கு ஆண்டு இந்தப் பலன்கள் மிகவும் அதிகமாகிக்கொண்டே செல்லும். சில ஆண்டுகளில் நம்மாலே நம்மை நம்பவே முடியாது, அந்த அளவுக்கு வெற்றிகரமான பாதுகாப்பான சுகவாழ்வில் திளைப்போம். இதை யாருக்கும் புரியவைக்கவும் முடியாது. பயிற்சியால் வரும் இறை அருள் இது. 

 

தம் குழந்தைச் செல்வங்களுக்கு ஓர் உயரிய பரிசளிக்க விரும்பினால், இந்த 'சர்வ சக்தி வழிபாடு' பயிற்சியை கற்றுத் தருவதுதான். தொல்லைகள், கெட்ட சிந்தனைகள், கெட்ட நடத்தைகள், கெட்ட நண்பர்கள், தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தங்கள், பயம், குற்ற உணர்ச்சிகள்... எதுவும் வாழ்க்கை முழுவதும் அருகில் வர முடியாது. 

 

அது மட்டுமல்ல இந்த 'சர்வ சக்தி வழிபாடு'  அவர்களை, உயர் சாதனையாளர்களாக ஆக்கும், வெற்றிகளை அடைய வைக்கும், உயர் குணங்களை விரும்ப வைக்கும், உயர் சுக வாழ்வைத் தரும்.

 

திருமணம்-ஆனவர்கள் இதனைக் கட்டாயம் படிக்க வேண்டும். உயர் சுக வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணையின் கனவனின் மனைவியின் பிரியத்தை அன்பை அக்கரையை சம்பாதிக்க முடியும். அன்பு, காதல், காம வாழ்க்கை, புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், உதவியாக  அனைத்தும் பலமாகும். சுக வாழ்க்கை அமையும். 

 

கணவன் மனைவிக்கு இடையில் உள்ள சங்கடங்கள் தீரும், பனிப்போர் முடியும், பிரச்சனைகள் முடிவுக்கு வரும், சச்சரவுகள் தீரும், கோபம் சண்டைகள் தீரும், விரிசல்கள் விலகும், பழிவாங்கும் உணர்வுகள் நடவடிக்கைகள் முடியும், போதை குடிப் பழக்கங்கள் விலகவும் வாய்ப்புகள் அதிகம், கெட்ட செலவினங்கள், அனாவசிய செலவுகள் குறையும், பணப் பிரச்சனைகள் தீரும், கடன்கள் அடையும், வரவு அதிகமாகும், சேமிப்பு அதிகமாகும். 

 

அன்பளிப்பு வழங்க இந்த 'சர்வ சக்தி வழிபாடு' ஒரு மிகமிகச் சிறந்த நூல். இதைப் பெற்றவர்கள் மிகவும் மகிழ்வார்கள். 'சிறந்த பரிசு கிடைத்தது' , 'இது இறைவனின் அருள்' - என்று உள்ளம் குளி்வார்கள். இதைப் பரிசாக அளிப்பது சிறந்த பரிகாரம், சிறந்த இறை சேவையும் கூட. 

 

நூல் கிடைக்குமிடங்கள்: 

தரமான காகிதப் பதிப்புக்கு: NOTION PRESS 

மலிவு விலைப் பதிப்பிற்கு: றிஷி பதிப்பகம் , 'திருமுருகன்', 10/25, எல்லைக்கல் தெரு, உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம், 621804 (பேசிகள்: 9443903648, 9443903638) 

 

This is a support for the readers of ‘Sarva Shakthi Vazhipaadu’ a Hindu Spiritual Bhakti book for daily worship, rituals, festivals… Composed by Aishwarya Maharishi.  It gives a tremendous blessing, changes in oneself, family members, relatives, friends, work area… and especially it gives a very good basic mind set to the children which will protect them in thousands of matters and from troubles. This book proves that right wakeful trust and confidence in Ishwara blesses and protects the life.

 

பகவத் கீதை கைவிளக்கு

Leave a Comment

 

பகவத் கீதை கைவிளக்கு நூலை வெளியிட்டுள்
ளோம்.......

 


அது 27 முக்கிய சுலோகங்களையும், அவற்றின் மொழிபெயர்ப்பையும் தருவது.





 இலவச நூலைப் பெற அழைக்கவும்: 90422600600 ,

அல்லது எழுதவும்: Aran.Gurukulam@Gmail.com


அவற்றை ஸம்ஸ்க்ருதத்தில் பாராயணம் செய்யும் முறையை யூட்யூப்இல் பதிவிட பணிகள் நடக்கின்றன.

 

அதன் பிடிப்பான் அல்லது லிங்க்கை இங்கே விரைவில் காணலாம்.

 

நன்றிகள்!

பாரதமும் தமிழகமும்

 மொழிவாரி மாநிலங்கள் உருவானதன், வருந்த வைக்கும் பின்புலங்கள்:




சரித்திரத்தில் சில பக்கங்கள் பின்னோக்கிப் பயணிப்போம்



நாடு சுதந்திரம் பெற்றபோது, பிரிட்டீஷார் ஆளுகையின் கீழ் கொண்டிருந்த அதே நிர்வாக வசதிகளுடன் மாகாண அரசுகளும் (மாநிலங்கள்), அதன் ஒருங்கிணைப்பான மத்திய அரசும் அமைக்கப்பட்டன.



அது சுதந்திரத்துக்கு முந்தைய நிர்வாக அமைப்பே.



'நாட்டில் பெரும்பாலான பகுதிகள் மொழி அடிப்படையில் தனித்து இருந்ததால் மொழி அடிப்படையில் தனி மாநிலங்கள் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை 1950-களில் எழுந்தது. இதுபோன்ற கருத்துக்கள் பிறக்க காரணமான, பல காரணிகளில் முக்கியமானதை நாம் அறிய வேண்டும்.

 

தீர்கமாக ஆராய்ந்தால், நமது அமைப்புகளுக்குள் சில அரைவேக்காடுகளை அன்னிய சதிகாரர்கள் குழப்பி, அவர்களை அங்கீகரிக்க வைக்கிறார்கள்.

 

பிறகு அவர்களின் மூலமாக மற்றவர்களிடம் கருத்தைப் பரப்புவது, தலைமைக்கு கொண்டு செல்வது, ஏற்க வைப்பது அல்லது நெருக்கடி ஏற்படுத்துவது இதெல்லாம் அவர்களின் தந்திரம். விடுதலையைக் கொடுத்த பிறகும் கூட, அவர்களுக்கு இங்கு சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்த கைக்கூலிகளை ஏற்படுத்திக்கொள்வது, போன்றவைகளும் அவர்களின் செயல் தந்திரம்.



ஆரம்பத்தில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேலும் அதனை ஏற்கவில்லை. ஆனால் பெரும்பாலான மாநில காங்கிரஸ் கமிட்டிகள், நிர்வாகம் & தொடர்பு வசதிக்காக மொழி அடிப்படையில் இயங்கிவந்தன.



இந்நிலையில் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளைப் பிரித்து அதனை விசால ஆந்திராவாக உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.



இதற்கு வித்திட்டவர், ஆந்திர காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பொட்டி ஸ்ரீராமுலு. அவர் தனது கோரிக்கையை முன்னிறுத்தி, சென்னையில் 1952, அக். 19-இல் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார்.



இறுதியில், 1952, டிச. 15-இல் உண்ணாவிரத நிலையிலேயே காலமானார். 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தனது கட்சித்தலைவரின் உயிர் பிரிந்ததால், தொண்டர்களிடம் ஏற்பட்ட மனக் கவலைக்கு சமாதானம் தர,

தெலுங்கு பேசும் பகுதிகள் தனி மாநிலமாக்கப்படும் என்று பிரதமர் நேரு அறிவிக்க வேண்டி வந்தது.



அதன்படி, 1953, அக். 1-இல் தனி ஆந்திரப் பிரதேச மாநிலம் உதயமானது.

ஆந்திர மாநில உருவாக்கம், பிறகு மற்ற மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்கு வழியை ஏற்படுத்தியது.



அதே ஆண்டில் (1953) ஃபஸல் அலி, கே.எம்.பணிக்கர், எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் அடங்கிய மாநில மறு சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.



அவர்கள் அளித்த பரிந்துரைப்படி 1956-இல் மாநில மறுசீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.



அதன் அடிப்படையில் 1956, நவ. 1-இல் மொழி அடைப்படையில் 14 மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

உடன் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.

 

பிற்பாடு மேலும் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

மும்பை மாகாணம் 1960-இல் தான் இரண்டாகப் பிரிக்கப்பட்டு குஜராத், மஹாராஷ்டிரா என்ற இரு மாநிலங்களானது.



1956-இல் நடைபெற்ற மாநிலப் பிரிவினையில் சென்னை மாகாணத்தின் கீழிருந்த மளையாளப் பகுதிகள் கேரளமாகின.


கொள்ளேகால், கொல்லங்கோடு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பகுதிகள் மைசூரு மாகாணத்துடன் இணைந்து கர்நாடகா ஆகின.



பிறகும்கூட மீதிப்பகுதிகள் ‘சென்னை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டன.

 

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்துக்கு செல்லாமல் தடுக்க,

நேசமணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், டி.வி.ராமசுப்பய்யர் ஆகியோர் போராடி வென்றனர்.



அதேபோல, திருத்தணி பகுதி ஆந்திரத்துடன் செல்லாமல் தடுக்க ம.பொ.சிவஞானம் போராடி வென்றார்.



‘மதராஸ் மனதே’ என்று தெலுங்கு அரசியல்வாதிகள் கோஷமிட்டபோது அதை எதிர்த்து ம.பொ.சி.யின் ‘தமிழரசுக் கழகம்’ போராடியது.

இன்று சென்னை தமிழகத்தின் தலைநகராக இருப்பதே அதனால்தான்.



பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே அதிகமாகக் கொண்ட சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு காங்கிரஸ் தலைவரால்தான் முன்னிறுத்தப்பட்டது.



அவர் தியாகி சங்கரலிங்கம். அதற்காக, அவர் விருதுநகரில் 1956 ஜூலை 27 முதல் 1956 அக். 13 வரை 78 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார்.

 

அதன் விளைவாக, உண்ணாவிரதம் இருந்த தனது கட்சித்தலைவரின் உயிர் பிரிந்ததால், தொண்டர்களிடம் ஏற்பட்ட மனக் கவலைக்கு சமாதானம் தர, முன்பு பிரதமர் நேரு எடுத்த அதே தீரவை, முதல்வராக இருந்த காமராஜர் எடுக்கவேண்டிய நிர்பந்தம் வந்தது.

 

எனவே காமராஜர் 1962இல் தமிழ்நாடு மாநிலப் பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டுவந்தார்.



பிறகு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோதும் 1964 இல் இதே தீர்மானத்தை கொண்டுவந்தார்.



ஆனால், அவை நிறைவேறவில்லை.

திமுக ஆட்சி அமைத்த பின்னர் அண்ணாதுரை முதல்வரான பின், தமிழ்நாடு என்று சென்னை மாகாணம் பெயர் மாற்றம் பெற்றது (1968, ஜூலை 18).



பிறகு, காலப்போக்கில் நாட்டின் மாநிலங்களின் எண்ணிக்கை 29 ஆகவும், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால் நிலப்பரப்பு எதுவும் அதிகமாகவில்லை, மாறாக குறைந்துள்ளது என்று சொல்லலாம். இதுதான் சரித்திரம்!



‘மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவது நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாகிவிடும்’ என்று நேருவும், தேசபக்தர்களும்  அன்று அஞ்சியது உண்மையாகிவிட்டது.



இன்று மாநில எல்லைப் பூசல்கள் பல இடங்களில் பூதகரமாகி வருகின்றன. மஹாராஷ்டிரா- கர்நாடகா இடையே பெலகாவிக்காக நடக்கும் போராட்டம் அதில் குறிப்பிடத் தக்கது.



மேலும், பல மாநிலங்களிடையே பாயும் நதிநீரை சுமுகமாகப் பங்கிடுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணம்: காவிரி, மகாநதி, பெரியாறுப் பிரச்னைகள்.



மொழிவாரி மாநில நிர்வாக வசதி அமைப்பானது, மெல்ல மெல்ல மொழிவாரித் தனி இனம் என்ற உணர்வினை ஏற்படுத்திவிட்டது.



உதாரணம்: காவிரி நதிப் பிரச்னைகள்.

பல ஆயிரம் தலைமுறைகளாக ஒற்றுமையாக இருந்து, மொகலாய, கிருஸ்தவர்களின் ஆட்சிகளை அகற்ற ஒற்றுமையாக போராடிய, இந்த பெரும் சமூகம், மொழிவாரி பிரிப்பினால் பிரியத் துவங்கியது.



மொழிவாரி மாநிலங்களுக்கு வித்திட்டது ஆந்திரப் பிரதேச உதயம். இன்று அந்த மாநிலமும் இரண்டாகிவிட்டது-



ஆந்திரம்- தெலுங்கானா என்று! ஒரே தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் இரு மாநிலங்களாகப் பிரிந்ததன் காரணம் அரசியல் மட்டுமே.



இங்கு மக்களை மொழியால் பிணைக்க முடியவில்லை.



மத அடிப்படையில் ஒரு நாடாக உருவான பாகிஸ்தான் மொழி அடிப்படையில் இரு நாடாகி, பங்களாதேஷ் உருவானதையும் நாம் அறிவோம்.



ஆக, மொழிவாரி மாநில அமைப்பு மக்களைப் பிணைப்பது அல்ல என்பது தெளிவாகிறது.



மராத்தி பேசும் மக்களை அடிப்படையாகக் கொண்டே மகாராஷ்டிரா மாநிலம் அமைந்தது. இன்று அதே மாநிலத்தில் விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை அதே மொழி பேசும் மக்கள் எழுப்புகின்றனர்.



அதற்கு பொருளாதார ரீதியாக் தாங்கள் பின்தங்கி இருப்பதை விதர்ப்பா பகுதி மக்கள் காரணமாகக் கூறுகின்றனர்.



தெலுங்கானாவும் அதே காரணத்தால் தான் பிரிந்தது.

எனில், மக்களை மொழிவாரியாகப் பிரித்தது,

நிர்வாக ரீதியாகப் பலனளிக்கவில்லை என்பது உறுதியாகிறது.



நமது சில தலைவர்களின், 'மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால் மாநில முன்னேற்றம் விரைவுபெறும்' என்ற கனவு- பகல் கனவே என்பது தெரியவந்திருக்கிறது.



அதே சமயம், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், ஒரு நாடாக நாம் தொடர்ந்து உணர, வாழ பொதுவான நமது கலாச்சாரப் பிணைப்புகளே காரணம்.



நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மகாகவி பாரதி ‘செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று பாடிய வரிகளின் ஊக்க சக்தி எது? அதுவே நம்மை இணைக்கிறது. அதை அழிக்க, துண்டாடவே வெள்ளை கிருஸ்தவர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து, இன்றும் பல முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

 

உண்மையில் கிட்டத்தட்ட 20000 தலைமுறைகளாக நமது முன்னோர்கள், மெழிரீதியாக தங்களை என்றுமே வேறுபடுத்திக்கொண்டு பார்த்தது இல்லை. ஆனால், திருட வந்திருந்த அன்னியர்கள், பிரித்தாளும் ஒரு தந்திரமாக, ஒரு சதியாகவே புல்லுறுவிகள் மூலமாகவும், கல்வி மூலமாகவும் இதை பரப்பினர்.

 

அன்று மொழிவாரி மாநிலம் அமைந்ததைக் கொண்டாடத் துடித்தவர்கள் பலரும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களாக இருந்ததை, இன்று புரிந்துகொள்ள முடிகிறது.



ஆனாலும், அவர்களால் நடந்த நன்மைகளுக்காக அவர்களை என்றும் மதிப்போம். அதே சமயம் பெரியவர்களிடம் ஏதாவது பிழைகள் நடந்திருந்தால், அவற்றை, நாமே முன்பு அறியாப் பருவத்தில், சில அறியாமைத்துடிப்பால் செய்ததாகக் கருதி, திருத்திக்கொண்டு செல்வோம்.


வரும் சந்ததிகளுக்கு பாதுகாப்பு மிகுந்த, ஒற்றுமையும் ஒத்துழைப்புகளும் உதவிகளும், பலமும், சுகமும் நிறைந்த நாட்டினை அமைத்துச் செல்வோம்.