Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

சர்வ சக்தி வழிபாடு

இந்த 'சர்வ சக்தி வழிபாடுவழிபாட்டு பயிற்சி முறை மிகுந்த அளவில் இறை ஆசிகளையும்,  ஐஶ்வர்யங்களையும்,  

பாதுகாப்பையும்வெற்றிகளையும்சுகங்களையும் அள்ளித் தருவது. 

 



இந்த முறையில் ஆகம முறை, வைதீக முறை, தாந்திரீக முறை நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இது மிகவும் சக்திவாய்ந்த ஒரு ரகசியத் தொழில் நுட்ப முறை. ஆனால் பயன்படுத்த மிகவும் எளிமை. தினசரி முடிந்தவரை கவனமாகப் படித்தாலே போதுமானது. 

 

தினசரி இதைப் படிக்க, துவக்கத்தில் 25 நிமிடம் தேவைப் படலாம். பிறகு அது படிப்படியாகக் குறைந்து, 10 நிமிடத்திற்கு வரும். இதைப் படிப்பது மிகுந்த சக்தி வாய்ந்த தியானப் பலனைத் தரும், வழிபாட்டுப் பலனைத் தரும், றிஷி முனிவர்களின் ஆசிகளைத் தரும், முன்னோர்களின் ஆசிகளைத் தரும், தெய்வங்களின் ஆசிகளைத் தரும்.... மன அமைதியைத் தரும், கவலைகளைத் துடைக்கும், பணிக் களத்தில் தெளிவினைத் தரும், தேவையான பிரியமான நட்புகளை கவரும் வளர்க்கும், அனைவருக்கும் பிடித்த நபராக நம்மை மாற்றும்... இது போல ஏராளமான பலன்கள் கிடைக்கும். இந்தப் பலன்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், செலவிடும் இந்த நேரம் மிகவும் குறைவே. வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் நமக்கு நேரத்தை மிகவும் மிச்சம் செய்து தரும். 

 

விரைவிலேயே பலன்கள் தெரியத் துவங்கும் என்றாலும், ஒரு ஆண்டுப் பயிற்சிக்குப் பிறகு மிகவும் அதிகமாகும். அதுமட்டுமல்ல, ஆண்டுக்கு ஆண்டு இந்தப் பலன்கள் மிகவும் அதிகமாகிக்கொண்டே செல்லும். சில ஆண்டுகளில் நம்மாலே நம்மை நம்பவே முடியாது, அந்த அளவுக்கு வெற்றிகரமான பாதுகாப்பான சுகவாழ்வில் திளைப்போம். இதை யாருக்கும் புரியவைக்கவும் முடியாது. பயிற்சியால் வரும் இறை அருள் இது. 

 

தம் குழந்தைச் செல்வங்களுக்கு ஓர் உயரிய பரிசளிக்க விரும்பினால், இந்த 'சர்வ சக்தி வழிபாடு' பயிற்சியை கற்றுத் தருவதுதான். தொல்லைகள், கெட்ட சிந்தனைகள், கெட்ட நடத்தைகள், கெட்ட நண்பர்கள், தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தங்கள், பயம், குற்ற உணர்ச்சிகள்... எதுவும் வாழ்க்கை முழுவதும் அருகில் வர முடியாது. 

 

அது மட்டுமல்ல இந்த 'சர்வ சக்தி வழிபாடு'  அவர்களை, உயர் சாதனையாளர்களாக ஆக்கும், வெற்றிகளை அடைய வைக்கும், உயர் குணங்களை விரும்ப வைக்கும்உயர் சுக வாழ்வைத் தரும்.

 

திருமணம்-ஆனவர்கள் இதனைக் கட்டாயம் படிக்க வேண்டும். உயர் சுக வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணையின் கனவனின் மனைவியின் பிரியத்தை அன்பை அக்கரையை சம்பாதிக்க முடியும். அன்பு, காதல், காம வாழ்க்கை, புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், உதவியாக  அனைத்தும் பலமாகும். சுக வாழ்க்கை அமையும். 

 

கணவன் மனைவிக்கு இடையில் உள்ள சங்கடங்கள் தீரும், பனிப்போர் முடியும், பிரச்சனைகள் முடிவுக்கு வரும், சச்சரவுகள் தீரும், கோபம் சண்டைகள் தீரும், விரிசல்கள் விலகும், பழிவாங்கும் உணர்வுகள் நடவடிக்கைகள் முடியும், போதை குடிப் பழக்கங்கள் விலகவும் வாய்ப்புகள் அதிகம், கெட்ட செலவினங்கள், அனாவசிய செலவுகள் குறையும், பணப் பிரச்சனைகள் தீரும், கடன்கள் அடையும், வரவு அதிகமாகும், சேமிப்பு அதிகமாகும். 

 

அன்பளிப்பு வழங்க இந்த 'சர்வ சக்தி வழிபாடு' ஒரு மிகமிகச் சிறந்த நூல். இதைப் பெற்றவர்கள் மிகவும் மகிழ்வார்கள். 'சிறந்த பரிசு கிடைத்தது' , 'இது இறைவனின் அருள்' - என்று உள்ளம் குளி்வார்கள். இதைப் பரிசாக அளிப்பது சிறந்த பரிகாரம், சிறந்த இறை சேவையும் கூட. 

 

நூல் கிடைக்குமிடங்கள்: 

தரமான காகிதப் பதிப்புக்கு: NOTION PRESS 

மலிவு விலைப் பதிப்பிற்கு: றிஷி பதிப்பகம் , 'திருமுருகன்', 10/25, எல்லைக்கல் தெரு, உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம், 621804 (பேசிகள்: 9443903648, 9443903638) 

 

This is a support for the readers of ‘Sarva Shakthi Vazhipaadu’ a Hindu Spiritual Bhakti book for daily worship, rituals, festivals… Composed by Aishwarya Maharishi.  It gives a tremendous blessing, changes in oneself, family members, relatives, friends, work area… and especially it gives a very good basic mind set to the children which will protect them in thousands of matters and from troubles. This book proves that right wakeful trust and confidence in Ishwara blesses and protects the life.

 

தந்தை மந்திரம்

Leave a Comment
பெற்றோர் ஆசி

குழந்தை மன பலத்துடன் திறமையாகவும், பலத்துடன் உடல் ஆரோக்யமாகவும் வளர உதவும் பெற்றோர் ஆசீர்வாத சுலோகம்

குழந்தை பிறந்ததும் தந்தை தன் முதல் தரிசனத்தில், குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது.

தந்தையானவர் தினசரி குளித்து முடித்ததும் இறைவழிபாடு முடித்து, [ முடிந்தால் தாயின் மடியில் குழந்தையை படுக்க அல்லது அமர வைத்து ] குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது.


ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய்
ஓம்கண நாதன் உன்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ



இதை மூன்றரை வயது வரை சொல்லவேண்டும். முடிந்தவரை இடைவிடாது தினசரி சொல்வது நல்லது. 


குழந்தை பேசத்துவங்கிவிட்டால் தந்தை ஒவ்வொரு வரியாக சொல்ல, குழந்தை இப்படி திருப்பிச் சொல்லவேண்டும்.




ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய்

ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய்
ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய்
ஓம்கண நாதன் உன்மனம் திறனாய்
ஓம்கண நாதன் என்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய்
ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே
சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ
ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ
 தேவைப்பட்டால் திருப்பிச்சொல்ல தாயார் உதவி செய்யலாம்.



பதிமூன்று வயதிற்கு பிறகு வழிபாட்டு சமயத்திலேயே தானே இப்படி சொல்லிக்கொள்ள வேண்டியது.




ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய்
ஓம்கண நாதன் என்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ

 
இது கால யந்திரத் தந்திர மந்திர பலம் பொருத்தப்பட்டது. சொல்லும் அளவு நல்ல பலன்களை வாழ்க்கையில் ஏற்படுத்தும். 

குருமுகமாக மந்திர தீக்ஷை பெற்றுக்கொண்டு, குருதக்ஷிணை அளித்து, பிறகு பயன்படுத்துவம், சொல்வதும் முழுமையான நல்ல பலனைத் தரும். 

குருமுகமாக மந்திர தீக்ஷை பெற்ற விரும்புவோர் அணுகவும்:
9042800800 



நன்மை பகிர்வது – புண்ணியம் காக்கும்.
அரண் குருகுலம் 9042800800  

எத்தனை வயதில் திருமணம் நல்லது?

Leave a Comment
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய மனோவியல் உண்மைகள். 

உங்கள் அன்புக்குழந்தைகளை வளர்க்கும்போது....
மிக முக்கியமாக அறிந்திருக்க வேண்டியவை

  

20, 40, 60 வயதுகள் மிகப்பெரிய அளவில் மனிதனின் மனதைப் புரட்டிப்போடும் - ‘ஆளே மாறிப் போயிட்டான்’ - என்று சொல்லும் அளவுக்கு.

இதை குற்றம் சொல்லாமல், ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்க சிந்தித்துப் பழக வேண்டும். ஏனெனில் நாமே அப்படித்தான், யாருமே அப்படித்தான். விதிவிலக்கு உண்டு - சில மன நோயாளிகள் மாத்ரம்.

நாமோ நமது குழந்தைகளோ யாருமே கோடி வருடங்கள் வாழப்போவது இல்லை. வாழப்போவது சில ஆண்டுகளே. அதிலும் அனுபவிக்க சாதகமான வயது 20லிருந்து 40வரையே.

அதையும் படிக்கணும், சம்பாதிக்கணும், சொந்த வீடு கட்டனும், வண்டி வாஹனம் வாங்கணும்,.... அப்புறம்தான் கல்யாணம்னு - தள்ளி வைப்பது சிறப்பு இல்லை.



20-25க்குள் ஒரு அசட்டு தைரியம் இருக்கும் - காதல் வாழ்வின் சுகத்தை அனுபவிக்க அது தேவை. அந்த சிறு பிராயத்திலேயே திருமணம் செய்துவைத்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் வாழ்க்கையை பயம் இன்றி சுகமாக வாழ முடியும். அவர்களது குழந்தையை மன அழுத்தங்கள் இன்றி வளர்க்கவும் அந்த மன நிலை தேவைப்படுகிறது.

40க்கு மேல் கணக்குப் பார்க்கும் வயது. நான், எனது என்ற எண்ணம் மேலோங்கும். எதற்கெடுத்தாலும் புத்தி சொல்லும் வயது. கூட இருப்பவர்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். சுக நாட்டம் குறையும். சேமிப்பு நாட்டம் பெருகும்.

பிள்ளைகளின் 40வயதுக்குள், பேரக் குழந்தைகள், அதாவது பிள்ளைகளின் பிள்ளைகள் 13வயதை தாண்டிவிடுவது நல்லது. இல்லை என்றால் பேரக் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது அவர்களின் வாழ்வில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்த முடியும்.

இந்தக் கணக்கு தெரியாமல் பல பெற்றோர்கள் நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம், சொந்த வண்டி, வீடு,.... பிறகு கல்யாணம் என்று ஊக்குவிக்கிறார்கள். அந்த குழந்தைகள் வளர்ந்து அதை எல்லாம் சாதித்து கல்யாணம் செய்யும்பொது வயது 35, 40, 45,… ஆகிவிடுகிறது. அவர்களின் திருமண வாழ்க்கை விரக்தியாகவும், சுகம் இன்றியும், வெளியில் சொல்ல இயலாத மனப் புழுக்கங்களுடனும் செல்கிறது.

சில குடும்பங்களில் வெளிப்படையாக சண்டைகள் பெரியதாகிறது. சில இடங்களில் விவாஹரத்து வரை செல்கிறது. சில இடங்களில் தற்கொலை வரை செல்கிறது.

'பொருளாதார வெற்றி'க்கு 'சுக வாழ்வை' பலியாக்க வேண்டாமே. ஏனென்றால் எத்தனை கோடி சொத்து இருந்தாலும் நம் குழந்தைகள் கோடி ஆண்டுகள் இருந்து அனுபவிக்கப்போவது இல்லையே.

கொஞ்சம் கருணையுடன் சிந்திக்கலாமே.  

உங்கள் அன்புகுரியவற்கும் பகிருங்கள்
அவர்தம் நலனுக்கும் உதவுங்கள்

நன்றி.

ஒரு குடும்பம் நன்றாக இருக்க.....

Leave a Comment
பணம்தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைப்பவரை அவருக்குத் தேவையான பணத்தினை எல்லாம் மூட்டை கட்டி, பணத்துடன் அவரை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.பிறகு என்ன? அவருக்கும் நிம்மதி! குடும்பத்திற்கும் நிம்மதி! 

ஒரு கல் இரண்டு மாங்காய்....!



உலகம் நன்றாக இருக்க.....
பணம்தான் வாழ்க்கையில் முக்கியம் 
என்று நினைப்பவர்களை எல்லாம் 
சேர்க்க வேண்டும். 

அவர்களுக்குத் தேவையான 
பணத்தினை எல்லாம் 
அவரவர்களுக்கும் தேவையான அளவு
தனித் தனியாக மூட்டை கட்டி, 

விண்வெளி ஆராய்ச்சிக்கு 
திரும்பி வராமல் செல்லும் ராக்கட்டில் 
அவர்களுடன்பணத்துடன் ஏற்றி   
அனுப்பிவிட வேண்டும்.   

கவனம்: ஒரு ராக்கட்டில் 
ஒருவருக்கு மேல் இருக்கக் கூடாது. 

அவர்களுக்கும் பணம் கிடைத்தது 
விண்வெளி ஆராய்ச்சிக்கும் ஆள் கிடைத்தது!  
நாடும் நிம்மதியாக இருக்கும்! 

ஒரு கல் பல மாங்காய்....!


ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்தது......

பண வளர்ச்சி
முக்கியமாகக் கருதப்படும் அளவு 
மனிதப் பண்புகள் 
முக்கியத்துவத்தை இழக்கிறது.

மனிதப் பண்புகள் 
முக்கியத்துவத்தை இழக்கும் அளவு 
மனிதன் 
மிருகமாகிறான். 

மனிதன் 
மிருகமாகும் அளவு 
குடும்பம் 
சிதைகிறது.


குடும்பம் 
சிதையும் அளவு 
சந்ததிகள் 
நாசமார்கத்தில் செல்கிறார்கள்....