வெள்ளையர்கள் வரும் முன் இந்த நாட்டில்
முறையான கல்வித்திட்டம் கிடையாது,
வெள்ளையன்தான் இந்த நாட்டில் கல்வித்திட்டத்தை ஏற்படுத்தினான்
என்று கருதுபவரா நீங்கள்?
அது உண்மை இல்லை.
முறையான கல்வி இல்லாத நாட்டில்,
அதுவும் இமயம் முதல் இந்து மஹா சமுத்திரம் வரை
மிகப் பரந்த ஒரு நாட்டில்,
ஏராளமான ஜனத்தொகையை உடைய ஒரு நாட்டில்,...
நாடு முழுவதும் நேரமையான மக்கள்,
வீட்டைப் பூட்டாமல் விட்டு விட்டு மாதக் கணக்கில் தீர்த்த யாத்திரைகள்,
தொழிலில் ஏமாற்றாமை, நேர்மை, வஞ்சகம் இன்மை,
பொருளில் கலப்படம் இன்மை,
கூட்டுக் குடும்பம்,
உணவை காசுக்கு விற்காமல் தானம் செய்யும் தன்மை,
கல்வியை காசுக்கு விற்காமல் தானம் செய்யும் தன்மை,
பலசாலி பலஹீணனை திருட்டுத் தனமாக ஏமாற்றாத தன்மை,
முறையான கிராமங்கள், அவைகளுக்கு நீர் வசதிகள்,
அச்சுறுத்தும் மிருகங்களுக்கு இடையில் காடுகள் சீர்செய்யப்பட்டு
மிகப் பரந்த விவசாய நிலங்கள், அவைகளுக்கு நீர் வசதிகள்,
தொழிலுக்கு ஏற்ற வசதியுடைய குடியிருப்புக் கட்டமைப்புடன் நகரங்கள், அவைகளுக்கு நீர் வசதிகள்,
சந்தைகள், அவைகளுக்கு நீர் வசதிகள்,
கோவில்கள், அவைகளுக்கு நீர் வசதிகள்,
வியாபார வீதிகள், அவைகளுக்கு நீர் வசதிகள்,
வெளிநாட்டிலிருந்து வரும் வியாபாரிகளுக்கான குடியிருப்புக்கள், அவைகளுக்கு நீர் வசதிகள்,
அவர்களுடன் உரையாட மொழிபெயர்ப்பு வசதிகள்,
வியாபாரத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்ல கப்பல் கட்டும் வசதிகள்,
மாதக் கணக்கில் கடலில் கப்பலில் உணவுக் கட்டமைப்பு வசதிகள்,
நடுக்கடலில் திசையறிந்து செல்லும் அறிவு
நடுக்கடலில் செல்லும் போது பெரு மழை வந்து
கப்பலில் நீர் சேர்ந்தால் வெளியேற்றும் திறமைகள்,
புயல் வந்தால் காத்துக்கொள்ளும் திறமைகள்,
சுற்றிலும் மலையே இல்லாத தஞ்சையிலும், அதுபோல பல இடங்களிலும்,
கோவில் கட்ட மலைகளை கொண்டுவரும் திறமைகள்,
மலைகளை தூன்கலாக்கும் திறமைகள்,
மலைகளை சிற்பமாக்கும் திறமைகள்,
மலையைக் குடைந்து மாமல்லபுரம் கோவில் கட்டும் திறமைகள்,
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு
நுட்பங்களைக் கொண்டுள்ள கர்னாட சங்கீதம்,
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு
நுட்பங்களைக் கொண்டுள்ள ஹிந்துஸ்தானி சங்கீதம்,
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு
நுட்பங்களைக் கொண்டுள்ள பரத நாட்டியம்,
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு நுட்பங்களைக் கொண்டுள்ள ஜோதிடம்,
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு
நுட்பங்களைக் கொண்டுள்ள ஆயுர்வேதம்,
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு
நுட்பங்களைக் கொண்டுள்ள மொழி இலக்கணம்,
பல துறைகளுடன் நிர்வஹிக்கப்பட்ட அரண்மனைகள்,
உலகில் அன்று தங்க நகை உற்பத்தியில் முதலிடம்,
துணி உற்பத்தியில் முதலிடம்
ஆடை செய்வதில் முதலிடம்,
கட்டிடக் கலைகளில் முதலிடம்
பாலம் கட்டுவதில் முதலிடம்
சாலை அமைப்பில் முதலிடம்
விவசாய முறைகளில் முதலிடம்
வித விதமான சமையலில் முதலிடம்
பிறந்ததிலிருந்து மரணம் வரை ஒருவனின் வாழ்க்கையை
சடங்குகளால் மதித்துப் போற்றி பெருமைப்படுத்துவதில் முதலிடம்,
காக்கும், சேர்ந்து வாழ உதவும் கட்டமைப்பான குடும்பத்தை
பண்டிகைகளால் மதித்துப் போற்றி பெருமைப்படுத்துவதில் முதலிடம்,
காக்கும், சார்ந்து வாழ உதவும் கட்டமைப்பான குடியிருக்கும் ஊரை திருவிழாக்களால் மதித்துப் போற்றி பெருமைப்படுத்துவதில் முதலிடம்,
சிறந்த நீதி கொடுக்க,
குடும்ப உறவுகளின் மூலம் பஞ்சாயத்து பேசும் நீதி முறை.
அதிலும் முடியாவிட்டால்
கிராமம் கூடி பஞ்சாயத்து பேசும் நீதி முறை.
அதிலும் முடியாவிட்டால்
மன்னரிடம் சென்று பஞ்சாயத்து பேசும் நீதி முறை.
அனாதை இல்லம் என்று தேவைப்படாமலேயே
எந்த பெற்றோரில்லாத ஒருவனும் அனாதையாக வாழாத நிலை
முதியோர் இல்லம் என்று தேவைப்படாமலேயே
எந்த முதியோரும் அனாதையாக வாழாத நிலை
நீதி சொல்லவேண்டிய மன்னனிடமே தவறு நடந்தாலும் யார் வேண்டுமானாலு தட்டிக்கேட்கும் நிலை,....
இன்னும் நமது சிறப்புகள் ஆயிரம் ஆயிரம் , இங்கு எழுதி முடிக்க முடியாது.
நமக்குத் தெரியக்கூடாது என்று வெள்ளையனால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதால் நமக்குத் தெரியாமல் போனவைகள்
நிச்சயமாக ஆயிரக்கணக்கில்.
இந்த சிறப்புகள் ஒருசில ஆண்டுகள் எதேச்சியாக ஏற்பட்டு பிறகு காணமல் போனதா என்றால் அப்படியும் இல்லை.
இந்த சிறப்புகள் எல்லாம் ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக
நடைமுறையில் இருந்து வந்துள்ளன.
இந்த சிறப்புகள் ஒரு ஊர் இரண்டு ஊரிலும் இல்லை.
இமயம் முதல் ஹிந்துமஹா ஸமுத்திரம் வரை மிகப்பெரிய நிலப்பரப்பில்
கடைபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த சிறப்புகளுக்கான திறமைகள் முறையான கல்வி இல்லாமல்
எப்படி வர முடியும்?
எதேச்சையாக முடியுமா?
பிரிட்டனில் எதேச்சியாக வந்ததா?
அமெரிக்காவில் எதேச்சையாக வந்ததா?
ஜெர்மனில் எதேச்சையாக வந்ததா?
பிரான்சில் எதேச்சையாக வந்ததா?
இத்தாலியில் எதேச்சையாக வந்ததா?
அராபியாவில்எதேச்சையாக வந்ததா?
ஏன் எங்கும் வரவில்லை?
உலகப் போர்களை தந்தது எந்தக் கல்வி?
இந்த நாட்டுக் கல்வி கற்றவர்கள் நடத்தினார்களா?
உலக நாடுகளின் கல்வியைக் கற்றவர்கள் நடத்தினார்களா?
உலகப் போர்கள் உலகில் செய்த கொடுமைகளை மறக்கும் ஒரு மனித சமுதாயம் மிருகங்களை விட கீழானது.
எந்தக் கல்வியையும் கற்காத மிருகங்கள்
தனது உணவுக்கு அன்றி வேறு
எந்த தொல்லையையும் எந்த உயிருக்கும் செய்யாதவைகள்.
உலகிற்கும் இயற்கைக்கும் எந்த கேட்டினையும்
இது காலம் வரை செய்யாதவைகள்.
கற்றவர்கள் இந்த உலகப் போர்களை நடத்தி உள்ளார்கள்.
அப்படி என்றால் அவர்களின் கல்வியே கல்வி இல்லை.
ஏதோ மனிதனின் அறியாமையில் பிறந்த திமிரின் உளறல்கள்.
பாரதத்தின் சிறப்புகள் எதேச்சையாக வந்தவைகள்,
கல்வியினால் இல்லை என்றால்,
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக கடைபிடிக்கப்பட முடியுமா?
இன்று இந்த அரசுகள் தங்களது முறையான கல்வியால்,
கல்வி கற்றவர்களை எல்லாம்
நேர்மையானவர்களாக நல்லவர்களாக ஆக்கிவிட்டதா?
அல்லது பிரிட்டிஷ் அரசு தனது நாட்டில் உள்ள அனைவரையும் நேர்மையானவர்களாக நல்லவர்களாக ஆக்கிவிட்டதா?
அல்லது உலகில் எந்த அரசு தனது நாட்டில் உள்ள அனைவரையும் நேர்மையானவர்களாக நல்லவர்களாக ஆக்கிஉள்ளது இதுவரை?
எங்கும் முடியாதது, இந்த நாட்டில்
வெள்ளையன் வருவதற்கு முன் நடந்து உள்ளதே எப்படி?
எந்தக் கட்டமைப்பு இந்த பலனைத் தருமோ அதுதான் கல்வி!
இந்தக் கல்வியின் இலக்கணமே இன்னமும் உலக நாடுகளால் பார்க்கப்படாமல் இருக்கிறது.
--------------------------------------------------------
நேர்மையானவர்களாக நல்லவர்களாக ஆக்குவதேல்லாம்
கல்வித்துறையின் வேலை இல்லை - என்றால்
வேறு என்னதான் கல்வித்துறையின் வேலை?
சோற்றுக்காக சம்பாதிக்க வைப்பதா?
கல்வித்துறை வரும் முன் யாரும் தன் சோற்றுக்கு
சம்பாதிக்கவே இல்லையா?
சம்பாதிக்க வைக்க அரசு ஒன்றும் செய்யவே வேண்டியதில்லையே!
அரசின் உதவி இல்லாமலேயே
ஒவ்வொரு கழுதையும் இந்த உலகில்
தன் உணவை கண்டு உண்டு வாழுகிறது.
அரசின் உதவி இல்லாமலேயே ஒவ்வொரு நரியும்,
சிறுத்தையும், கொக்கும், குயிலும், மீனும், முதலையும்... இந்த உலகில்
தன் உணவை கண்டு உண்டு வாழுகின்றன.
பிறந்து, சாப்பிட்டு, சாணிபோட்டு,
காம வெறி தீர்த்து, குட்டி போட்டு,
குட்டிகள் வளர்வதைப் பார்த்து சந்தோஷப்பட்டு
சாகுவது மட்டும்தான் வாழ்க்கை,
அதை நன்கு செய்ய வைக்கத்தான் கல்வி - என்றால்...
அதை இந்த மனித வாழ்க்கைக் கட்டமைப்பில் செய்வதை விட
மிருக வாழ்க்கைக் கட்டமைப்பில் இன்னும் சிறப்பாகவே செய்ய முடியும்.
அதற்கு அரசும் தேவை இல்லை, கல்வியும் தேவை இல்லை.
கல்வி என்றால் என்ன என்பதை புரிய வைப்பது
இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம் அல்ல.
இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்
கல்வி என்றால் என்ன என்று பாரதம் அறிந்து இருந்தது.
கற்க-கற்பிக்க மிகவும் அனுபவமுள்ள கட்டமைப்பினை வைத்திருந்தது
என்பதையும்
உலகில் இன்னமும் கல்வி என்றாலே என்ன என்று தெரியவில்லை
அதனால், வெள்ளையன் நமக்குக் கொடுத்தது கல்வியே இல்லை
என்பதையும் காட்டுவதுதான்.
உண்மையில் கல்வி என்றால் என்ன என்று
இன்னமும் உலக நாடுகளுக்கு தெரிவும் இல்லை, புரியவும் இல்லை. காட்டுமிராண்டிகளாகவே வாழ்கிறார்கள்.
அவர்களது காட்டுமிராண்டிதன வாழ்வை மேலும் நன்றாக செய்ய ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு
அதற்குப் பெயர் கல்வித்திட்டம் என்கிறார்கள்.
அதையே இந்த நாட்டிலும் அறிமுகம் செய்தார்கள்.
அதைத்தான் நாம் சொல்கிறோம்
"வெள்ளையன் இந்த நாட்டில் கல்வியை அறிமுகம் செய்தான்" என்று!
இது எந்த அளவுக்கு உண்மையான கல்வியில் உயர்ந்து இருந்த
நம் மக்களை
இந்த வெள்ளையனின் திட்டம் முட்டாள்களாக்கி உள்ளது என்பதற்கு
இந்த பேச்சே நிரூபணம்!
-------------------------------------------------------------------------------------------
மேலும் சில விபரங்களுக்கு இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக பெற்றோர்கள் அனைவரும் பார்கவேடிய பதிவு.
https://www.youtube.com/watch?v=CpPa1GiPO-c
0 comments:
Post a Comment