Showing posts with label மன நலம். Show all posts
Showing posts with label மன நலம். Show all posts

அழகி ஜோதிகாவுக்கு அறிவையும் அருள்வாய்

4 comments
இவ்வளவு பெரியக் கோவிலை 
வீதிக்கு வீதிக் கட்டிவைத்த 
நம் முன்னோர்கள்
ஒருப் பள்ளிகூடம் கூட கட்டவில்லையே... 
என்று அம்மையார் ஜோதிகா கேட்குது...



இவ்வளவு பெரியக்  கோவிலை 
கட்டியவன் தான் குடியிருக்க 
வீடுகூட கட்டிக்கொள்ளவில்லையே 
என்றுக் கேட்க தோனலையே
உன்னையெல்லாம் என்ன வென்று சொல்வது..

கலைச் சாலையாக
விஞ்ஞானச் சாலையாக
மெய்ஞானச் சாலையாக
மருத்துவச் சாலையாக
நீதிச் சாலையாக
கல்விச் சாலையாக...
பலமுக பயன்பாட்டுச்  சாலைகளாகத்தான் 
அன்று கோவில்களைக் கட்டினார்கள்...

அறிவற்றவர்கள் இன்று  அதனை 
பணச் சாலைகளாக நடத்துகிறார்கள்!!

கல்வி அறிவு இல்லாமலா 
நாம் காகிதத்தில் கூட 
வரைய முடியாததை எல்லாம் 
கல்லில் செதுக்கி வைத்திருக்கிறான்...?

சத்தான உணவு வகைகள் 
இல்லாமலா கற்களை 
தூக்கி கோவில் கட்டியிருப்பான்..?

தரமான மருத்துவம் இல்லாமலா
கற்களை கையாண்டு இருப்பான்..? 

தரமானப் போக்குவரத்து 
இல்லாமலா மிகப் பெரும் பாறைகளை 
வெகுதூரம் கொண்டு சென்றான்..?

இஞ்சினியரிங் இல்லாமலா
பதினெட்டு மாடி கோவிலைக் கட்ட முடியும்?

நிர்வாகத் திறன்  இல்லாமலா 
ஆயிரம் வல்லுணர்களை  திறமைசாலிகளை 
உழைப்பாளிகளை இணைத்து 
கோவில்களை முழுவதுமாக
கட்டிமுடித்திருப்பான்..? 

அத்துனை துறையிலும் வம்சம் 
மேலும் சிறந்து விளங்க உதவியாக 
வரும் தலைமுறை கற்க உதவியாக 
பேரிடர் காலங்களில் அடைக்கலங்களாக 
முன்னோர்கள் கட்டி வைத்த கோவில்களை மதிக்காது...

முன்னோர்களையும், 
அவர்களின் திறமையையும், 
பழக்க வழக்கங்களையும்
மதிக்காது....மிதிப்பதும்

அவர்கள் கட்டிய கோவில்களால் 
நமக்கு என்ன பயன் 
என்று பேசுவதும்தான் பகுத்தறிவென்றால் 
அதுதான் திராவிடத்தின் 
தத்துவமென்றால்... 

உன் தத்துவத்தை உன்னோடு 
வைத்துக்கொள் எங்களிடம் காட்டாதே!

உயர்ந்த கோவில்களை என் முன்னோர்கள
தீர்வுகளாகக் கண்டு நாகரீகமாகக் 
கூடி வாழ்ந்த காலத்திலே 

உலகிலே உடையின்றி 
காட்டுமிராண்டிகளாய்
திருடர்களாகத் தானே எல்லோரும் வாழ்ந்தார்கள்? 

நீங்கள்  உடுத்திய ஆடை 
எப்படி உங்கள் மானத்தை காப்பதற்கோ..

அதுபோலதான் 
எம் முன்னோர்கள் கட்டிய கோவில் 
கோடிபேர் கூடி வாழ சூத்திரமான  
அறத்தை போதிக்கவும்,  காப்பதற்கும்...

பாரதிகள் விசித்திரத் தொழில் நுட்பவாதிகள்...  
கற்களை  செதுக்கி
மனித உள்ளங்களை வடிவமைத்தவர்கள்....

கோவில்களில் சிலையை வைத்து
இதயங்களில் இறைவனை வைத்தவர்கள்.... 

அனுப்பியவனை புரிந்து கொண்டு 
வாழ்க்கையை திருவிழாவாக ஆக்கியவர்கள்...

எமது பாட்டன் எனக்கு 
பெரிய வீடைக் கட்டவில்லை 
வேப்ப மரத்தை நட்டு வைத்தான் 

வேப்பமரத்திற்கு பதிலாக 
பெரிய வீடு கட்டியிருக்கலாம்.. 
பெரிய வீடு கட்டியிருந்தால் 
மரத்தைப் போலவே அதுவும் நிழல் தரும், 
நான் வீட்டிற்குள் உருண்டு புரண்டு வாழலாம்.. 
ஆனால் அந்த மரம் தரும் உயிர்காற்றை 
வீடு தராது மகளே...

ஐம்பது கிலோ கல்லை 
நம்மால் தூக்கமுடியாத போது.. 
80 டன் கல்லை 216 அடி உச்சியில் 
வைத்து கட்டிய நம் முன்னோர்களின் 
அறிவை உழைப்பை தியாகத்தை அன்பை
கொச்சைப் படுத்துவது 
ஒரு போதும் ஏற்க முடியாதது.. 

தஞ்சைக் கோவில் எதற்கு 
அதற்கு காணிக்கை எதற்கு 
என்று கேட்டாய்.. 

இருப்பவன் கொண்டுவந்து கொடுக்கவும்....
அதை இல்லாதவனுக்கு வினியோகிக்கவும் 
ஒரு தளமாகத்தான் கோவில் இருந்தது.. 

தெய்வத்தைப் பற்றிய அறிவு இருந்து...
இதை தெய்வத்திற்காக செய்தால் 
அங்கு பிழைகள் நடக்காது... அங்கே... 
கொடுத்தவனின் மனமும் கெடாது. 
பெற்றவனின் மனமும் கோணாது...

ஆனால் இன்று  தெய்வத்தைப் பற்றிய 
எந்த அறிவும் இல்லாமல்...

கோவிலில் வசூல் வேட்டை உண்டியல், 
பண வரிக்கு ஏற்ப சிறப்பு தரிசனம்...
மூடத்தனங்கள்  அனைத்தையும் 
கோவிலுக்குள்  கொண்டு வந்து...

அதை நிர்வாகம் செய்ய 
தெய்வ அறிவு இல்லாத 
'மனப்பாட மடையர்'களை 
அதிகாரிகளாகப் போட்டு பயமுறுத்தி...

கோவில்களை வரி மையங்களாக ஆக்கியது...
பகுத்தறிவில்லாத 
திராவிடக் கொழுந்துகள் தான்.. 

கிடைக்கும் ஒட்டுமொத்த உண்டியல் 
பணத்தில் 90%த்தை கொள்ளையடித்ததும் 
அதேத் திராவிடக் கொழுந்துகள் தான்.. 

கோவிலை கட்டியதற்கு பள்ளிக்கூடம் 
கட்டியிருக்கலாம் என்று கேட்கிறாய்...

இப்படி சொல்லித்தான் பல பள்ளிகூடம் 
கட்டப்பட்டது...

ஆனால் இன்று ஒரு LKG மாணவனுக்கு 
கல்விக்கட்டணம்.. மூன்று லக்ஷம்!

பகுத்தறிவு பேசிய அத்துனை 
திருட்டு முட்டாள்களும் கல்வியையும்,
மருத்துவத்தையும் காசுக்கு விற்று 
பகல் இரவுக்  கொள்ளையடிப்பதுதான் மிச்சம்.... 

கோவில் பண்பாடு பெரியோர் மூலம் 
வெள்ளை உள்ளத்தைக் 
கற்றும் பெற்றும் வாழும் 
ஏழைகளைக் கொள்ளையடிக்கும் 
கயவர்களை உற்பத்தி செய்யும் 
பள்ளிகளுடன் கோவில்களை 
ஒப்பிட்டுப் பேசுவது அநாகரீகம் மகளே! 

கோவிலுக்கு வந்ததால்...
எவனும் தற்கொலை செய்துகொள்ளவில்லை
விவாஹரத்து செய்துகொள்ளவில்லை
ஆனால் உள்ளத்தில் வலிமை பிறந்தது....
முழு வாழ்க்கையையும் வாழ உதவியது....
கூடி வாழ சக்தியைத் தந்தது....
குடும்பம் நடத்த புத்தியைத் தந்தது....
புயல்களுக்கிடையில் பிள்ளைகளைக் காக்க
உள்ள வலிமையைத் தந்தது....

கோவிலுக்கு வந்தால் 
விலகும் எண்ணமும் விலகுகிறது...
தற்கொலை எண்ணமும் விலகுகிறது...


ஆனால் 12 ஆண்டுகள் 
பள்ளிக்கூடம் சென்ற குழந்தை 
தற்கொலை செய்துகொள்கிறான்...
கல்லூரியில் கற்றவன் 
ஆண்டுக்கொரு விவாஹரத்து செய்கிறான்
இதெல்லாம் ஒரு கல்வியோ...
அல்லது 'கில்'வியோ...

இனிமேல் எந்தக் கொம்பனாலும் கட்ட முடியாத 
இப்படியான தெய்வீகக் கோவில்களே
பாரதிகளின் உள்ளங்களை வடிவமைத்த மந்திரச் சாலைகள்... 
பாரதிகளின் குடும்பங்களை வடிவமைத்த யந்திரச் சாலைகள்... 
பாரதிகளின் சுக வாழ்வை வடிவமைத்த தந்திரச் சாலைகள்... 
நம் உயர்வுகளின் தனிப்பெரும் தாய் மடிகள்... 
வளர்க கோவில்கள் - வாழ்க பாரதிகள்!!

மடையர் யார்? அறிவாளி யார்? கண்டுபிடிப்பது எப்படி?

Leave a Comment

குழந்தை வளர்ப்புக் கலை: பெற்றோருக்கு ஒரு சொல் - 3

Leave a Comment

மகாபாரதத்தில், ஒரு இடத்தில் ஸ்ரீ ஹனுமன் வருகிறார்.
 

அப்போது பீமனுக்கு மிகுந்த அன்புடன் அக்கறையுடன் பாசத்துடன் ஒரு உபதேசம் கொடுக்கிறார். அனைவருக்குமே அது மிக முக்கியமான அடிப்படையான அறிவுரை.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவசியமாக, அதில் வரும் இந்த மூன்று சுலோகங்களையும் சொல்லித்தந்து மனப்பாடம் செய்ய வைக்க வேண்டும்.

வாழ்க்கையில் பல இடங்களில் இதன் பொருள் உண்மையாக இருப்பதை, அடிக்கடி நினைவுபடுத்தி காட்டியும் சொல்லித்தர வேண்டும்.
இது அவர்களை என்றும் பாதுகாக்கும்.

ஸ்ரீ ஹனுமன் உவாச்ச
1
பலி - ஹோம - நமஸ்காரைர்   மந்த்ரைஸ்ச பரதர்ஷப
தைவதானி ப்ரஸாதம் ஹி       பக்த்யா குர்வந்தி பாரத
2
மா தாத ஸாஹஸம் கார்ஷீஃ    ஸ்வதர்மம் பரிபாலய
ஸ்வதர்மஸ்தஃ பரம்தர்மம்       புத்யஸ்வ கமயஸ்வ ச
3
ந ஹி தர்மம் அவிஜ்ஞாய       புத்தான் அனுபஸேவ்ய ச
தர்மார்தோ வேதிதும் ஶக்யோ    ப்ருஹஸ்பதிர் ஸமைரபி

1
Bali – homa – namaskaarair manthraishcha bharathrshabha
Dhaivathaani prasaadham hi bhakthyaa kurvandhi bhaaratha
2
Maa thaatha saahasam kaarsheeH svadharmam paripaalaya
SvadharmasthhaH parmdharmam budhhyasva gamayasva cha
3
na hi dhharmam avijnaaya budhdhaan anupasevya cha
dhharmaartho vedhithum shakyau bruhaspathi – samairapi.

பொருளுரை:

1
பலி – ஹோம – நமஸ்காரைர் மந்த்ரைஸ்ச பரதர்ஷப
தைவதானி ப்ரஸாதம் ஹி          பக்த்யா குர்வந்தி பாரத
இந்த உலகை நிர்வாகம் செய்யும் தெய்வ சக்திகள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றன.
நைவேத்யம், வழிபாடு, நமஸ்காரம், மந்திரம், இவைகளின் துணையால், செயலாலும், பேச்சாலும், எண்ணத்தாலும், மனிதர்கள் தெய்வங்களை பக்தியுடன் மகிழ்விக்கிறார்கள்.
அதற்கு கைமாறாக தெய்வங்களும் அவர்களை மகிழ்விக்கின்றனர்.
2
மா தாத சாஹஸம் கார்ஷீஃ        ஸ்வதர்மம் பரிபாலய
ஸ்வதர்மஸ்தஃ பரம்தர்மம்          புத்யஸ்வ கமயஸ்வ ச
அன்புச் செல்லமே, அதனால், முரட்டுத்தனமாக செயல்படாதே. ஸ்வதர்மம் எனப்படும் விதி கொடுத்த உனது குடும்ப, குல, கடமைகளை பூர்த்தி செய்து வாழ்வாயாக. விதி கொடுத்த உன் கடமைகளை சரியாக செய்யும்பொது மட்டுமே, மதியால் நீ உண்மையான உயர்ந்த நிலைகளை அறியவோ, அடையவோ முடியும். 
3
 ந ஹி தர்மம் அவிஜ்ஞாய          புத்தான் அனுபசேவ்ய ச
தர்மார்தோ வேதிதும் ஷக்யோ     ப்ருஹஸ்பதிர் ஸமைரபி

உன்னுடைய கடமைபற்றிய அறிவை அறியாமலும், பூர்திசெய்து அதன் பலனைப் பார்க்காமலும், இதில் அறிவு உள்ளோரிடம் பணிந்து சேவை செய்து கற்காமலும், புண்ணியம் தரும் வாழ்க்கை முறையையோ, உண்மையான சுகம் தரும் வாழ்க்கை முறையையோ அறிய முடியவே முடியாது, ப்ருஹஸ்பதிக்கு சமமான அறிவு உள்ளவர்களாலும்கூட.  


முற்றும். சுபம்.

நல்லதை பகிர்வோம். புண்ணியம் கோடி.
அரண் குருகுலம். 9042800800, 9042500500.

எத்தனை வயதில் திருமணம் நல்லது?

Leave a Comment
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய மனோவியல் உண்மைகள். 

உங்கள் அன்புக்குழந்தைகளை வளர்க்கும்போது....
மிக முக்கியமாக அறிந்திருக்க வேண்டியவை

  

20, 40, 60 வயதுகள் மிகப்பெரிய அளவில் மனிதனின் மனதைப் புரட்டிப்போடும் - ‘ஆளே மாறிப் போயிட்டான்’ - என்று சொல்லும் அளவுக்கு.

இதை குற்றம் சொல்லாமல், ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்க சிந்தித்துப் பழக வேண்டும். ஏனெனில் நாமே அப்படித்தான், யாருமே அப்படித்தான். விதிவிலக்கு உண்டு - சில மன நோயாளிகள் மாத்ரம்.

நாமோ நமது குழந்தைகளோ யாருமே கோடி வருடங்கள் வாழப்போவது இல்லை. வாழப்போவது சில ஆண்டுகளே. அதிலும் அனுபவிக்க சாதகமான வயது 20லிருந்து 40வரையே.

அதையும் படிக்கணும், சம்பாதிக்கணும், சொந்த வீடு கட்டனும், வண்டி வாஹனம் வாங்கணும்,.... அப்புறம்தான் கல்யாணம்னு - தள்ளி வைப்பது சிறப்பு இல்லை.



20-25க்குள் ஒரு அசட்டு தைரியம் இருக்கும் - காதல் வாழ்வின் சுகத்தை அனுபவிக்க அது தேவை. அந்த சிறு பிராயத்திலேயே திருமணம் செய்துவைத்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் வாழ்க்கையை பயம் இன்றி சுகமாக வாழ முடியும். அவர்களது குழந்தையை மன அழுத்தங்கள் இன்றி வளர்க்கவும் அந்த மன நிலை தேவைப்படுகிறது.

40க்கு மேல் கணக்குப் பார்க்கும் வயது. நான், எனது என்ற எண்ணம் மேலோங்கும். எதற்கெடுத்தாலும் புத்தி சொல்லும் வயது. கூட இருப்பவர்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். சுக நாட்டம் குறையும். சேமிப்பு நாட்டம் பெருகும்.

பிள்ளைகளின் 40வயதுக்குள், பேரக் குழந்தைகள், அதாவது பிள்ளைகளின் பிள்ளைகள் 13வயதை தாண்டிவிடுவது நல்லது. இல்லை என்றால் பேரக் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது அவர்களின் வாழ்வில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்த முடியும்.

இந்தக் கணக்கு தெரியாமல் பல பெற்றோர்கள் நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம், சொந்த வண்டி, வீடு,.... பிறகு கல்யாணம் என்று ஊக்குவிக்கிறார்கள். அந்த குழந்தைகள் வளர்ந்து அதை எல்லாம் சாதித்து கல்யாணம் செய்யும்பொது வயது 35, 40, 45,… ஆகிவிடுகிறது. அவர்களின் திருமண வாழ்க்கை விரக்தியாகவும், சுகம் இன்றியும், வெளியில் சொல்ல இயலாத மனப் புழுக்கங்களுடனும் செல்கிறது.

சில குடும்பங்களில் வெளிப்படையாக சண்டைகள் பெரியதாகிறது. சில இடங்களில் விவாஹரத்து வரை செல்கிறது. சில இடங்களில் தற்கொலை வரை செல்கிறது.

'பொருளாதார வெற்றி'க்கு 'சுக வாழ்வை' பலியாக்க வேண்டாமே. ஏனென்றால் எத்தனை கோடி சொத்து இருந்தாலும் நம் குழந்தைகள் கோடி ஆண்டுகள் இருந்து அனுபவிக்கப்போவது இல்லையே.

கொஞ்சம் கருணையுடன் சிந்திக்கலாமே.  

உங்கள் அன்புகுரியவற்கும் பகிருங்கள்
அவர்தம் நலனுக்கும் உதவுங்கள்

நன்றி.

கண்ணுறவும் திரையுறவும்

Leave a Comment
கண்ணுறவுகளையும் திரையுறவுகளையும் நிர்வாஹம் செய்வது எப்படி?

 

கண்ணுறவுகளுடனும், திரையுறவுகளுடனும் மாறி மாறி வாழவேண்டி உள்ளது.

 

எப்போதுமே கண்ணுறவுகளிடத்தில் அதிக பொறுப்பும் கடமையும் உள்ளதை மறக்கக்கூடாது. நேரடியாகவும், உடனடியாகவும் சார்ந்துவாழும் நிலையில் விதி வைத்துள்ளதால்.


இதை மறந்தால் பல பிரச்சினைகளை உண்டுபண்ணும்.


உதாரணமாக, வண்டியோட்டும்பொது சாலையில் பயணம் செய்வோர் கண்ணுறவுகள், வீட்டிலோ அலுவலகத்திலோ இருப்பவர்கள் திரையுறவுகள்.


திரையுறவுகளுடன் ஃபோனில் சண்டை போட்டுக்கொண்டு வண்டியோட்டினால், விபத்து நடக்கிறது. அப்போது கண்ணுறவுகளுக்கு கவனம் தரவேண்டி உள்ளது.

 

அவ்வாறே, வீட்டில் இருக்கும்போது வீட்டில் இருப்போர் கண்ணுறவுகள். அலுவலகத்தில் இருக்கும்போது அங்கு உள்ளோர் கண்ணுறவுகள்.

 

ஃபோன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்றவை வந்துவிட்டதால் அலுவலகத்தில் இருந்துகொண்டு வீட்டு வேலைகளை செய்வதோ, வீட்டில் இருந்துகொண்டு அலுவலக வேலைகளை செய்வதோ பல பிரச்சினைகளை கொண்டுவரும். தவிர்க்கவும், குறைக்கவும் முயற்சி தேவை.


ஏனெனில் கண்ணுறவுகள்தான் சோறுபோடுகிறது. திரையுறவுகள் இல்லை. ஒரு விபத்தில் சிக்கினால் கண்ணுறவுகள்தான் அவசரத்திற்கு உடன் இருக்கும் திரையுறவுகள் இல்லை.


அதேசமயம், சிலர் கண்ணுறவுகளில் நன்கு முழுகி திரையுறவுகளை முழுவதும் நிராகரிக்கின்றனர். அதாவது தொழிற்களத்தில் இருக்கும் போது, அவசரகால வீட்டு அழைப்புகளைக்கூட கவனிப்பதில்லை. அவ்வாறே, வீட்டில் இருக்கும் போது அவசரகால தொழிற்கள அழைப்புகளைக்கூட கவனிப்பதில்லை. இன்றைய வாழ்வியலில் அது நியாயமாக முடியாது.


கண்ணுறவுகளில் 99% கவனமும், திரையுறவுகளில் 1% கவனமும் இருக்கவேண்டும்.

 

பொதுவிதிகளிலிருந்து அவசர கால விதிகள் எப்போதுமே மாற முடியும்.


விதி ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சிலரை கண்ணுறவுகளாக வைக்கிறது என்றால் ‘அவர்களிடத்தில் இப்போது நீ அதிக கவனம் தரவேண்டும்’ - என்பதே விதியின் எதிர்பார்ப்பு. 


அதேபோலவே, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சிலரை, திரையுறவுகளாக வைக்கிறது என்றால் ‘அவர்களிடத்தில் இப்போது நீ குறைந்த கவனம் தந்தால்போதும்’ - என்பதே விதியின் எதிர்பார்ப்பு.


கண்ணுறவுகளை காத்திருக்க வைத்துவிட்டு - திரையுறவுகளில் லயிப்பது தவறே. 


‘கண்ணுறவில் மனலயனம்’ - விதி.


விதியை மதித்தோரை விதி மதிக்கிறதே.
விதியை மிதித்தோரை விதி மிதிக்கிறதே.