Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts
Leave a Comment
காய்ச்சலும் சளியும் பரவலாக உருவாகும் சூழல் இது. நவீன மருந்துகள் இல்லாமல் இச்சூழலைக் கடக்க விரும்புவோருக்கான பதிவு இது.
காய்ச்சலுக்கும் சளிக்கும் எந்த மருந்தும் தேவையில்லை என்பது முதல் செய்தி. ஏன் தேவையில்லை என்பதைச் சற்று கவனமாக அறிந்துகொள்ளுங்கள்.
இப்போது மழை பெய்து நிலம் குளிர்ந்து கிடக்கிறது. மழை நின்று, வெயில் அடித்தாக வேண்டும் என்ற தேவை உருவாகியுள்ளது. ஏன் வெயில் தேவை என்றால், வெப்பம் உருவானால்தான், நிலத்தின் குளிர்ச்சி குறைந்து இயல்பான சூழல் ஏற்படும். மிதமான வெப்பம்தான் இந்த நிலப்பகுதியின் இயல்பான பருவநிலை. மிகையாகக் குளிர்ந்த நிலம் தனது இயல்பான மிதவெப்பத்தை இழந்துவிட்டது எனப் பொருள்.
அதிகமான வெப்பம்தான் குளிரைப் போக்கி, நிலத்தின் இயல்புநிலையை மீட்டெடுக்கும். ஆகவே, வெயில் வந்து நிலத்தின் பருவநிலையைச் சீர்செய்கிறது.
’அண்டமும் பிண்டமும் ஒன்றுதான்’ எனும் ஆசான் திருமூலர் வாக்கினை நினைவில் கொள்ளுங்கள்.
மழை மற்றும் குளிர் காலங்களில் உடலின் இயல்பான வெப்பம் குறைகிறது. இந்த நிலையில் உடலில் குறைந்த வெப்பத்தில் பெருகும் நுண்ணுயிரிகள் அதிகரிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் கிருமிகள் என அழைக்கப்படுபவை. பருவநிலை மாற்றத்திற்கேற்ப நுண்ணுயிரிகளின் வகைகளும் எண்ணிக்கையும் மாறிக்கொண்டுதானிருக்கும். நிலத்திலும் இதுதான் நிகழ்கிறது. நிலம் ஈரமாக இருக்கும்போது நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகும். உடலிலும் இதேநிலைதான் உருவாகிறது. வெப்பம் குறைந்த உடலில், பலவகை நுண்ணுயிரிகள் பெருகி வளரும்.
இந்த நுண்ணுயிரிகள் எங்கிருந்து வந்தன எனக் கேட்டால், அவை எல்லாம் உடலின் உள்ளே இருந்தவைதான். வளர்ந்து பெருகுவதற்கான சூழல் இல்லாததால் இதுவரை அவை எல்லாம் உறங்குநிலையில் இருந்தன. சூழல் மாறியதும் அவற்றின் வளர்ச்சியும் பெருக்கமும் அதிகரிகிறது. மேலும் ஒரு சேதி என்னவெனில், இந்த நுண்ணுயிரிகள் யாவும் உடலின் இயக்கத்திற்குத் தேவையற்ற கழிவுகளில்தான் வளரும் தன்மை கொண்டவை. நீண்ட காலமாகத் தேங்கி இருக்கும் மலம், செரிக்காத உணவு, சிறுநீர், சளி போன்ற கழிவுகளில்தான் கிருமிகள் எனப்படும் நுண்ணுயிரிகள் வளரும்.
கழிவுத் தேக்கம் இல்லாதவர்களின் உடலில் எந்தப் பருவநிலை மாற்றமும் காய்ச்சலை, சளியை ஏற்படுத்துவதில்லை.
ஆக, உடலின் பருவநிலை குளிர்ந்ததும் உடலின் கழிவுகளில் வளரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு உயர்கிறது. இந்த உயர்வை உடனடியாகக் குறைக்க வேண்டியது உடலின் தேவையாக மாறுகிறது. அவ்வாறு குறைக்காமல் போனால், இந்தக் கழிவு உயிரிகள் மேலும் மேலும் பெருகி உடலின் ஆற்றலைச் சிதைக்கும். விளைவாக, பல உறுப்புகள் செயலிழப்பும் நேரலாம். இந்தத் தேவையின் அடிப்படையில்தான் காய்ச்சல் வருகிறது.
உடலின் கழிவுகளையும் அவற்றில் பெருகி வளரும் நுண்ணுயிரிகளையும் கட்டுப்படுத்தவும் வெளியேற்றவும்தான் காய்ச்சல் வருகிறது. வெப்பநிலையை உயர்த்தி, கழிவு உயிரிகள் வளருவதற்கான சூழலைக் கெடுத்து, அவற்றை வெளியேற்றும் உடலின் செயல்பாடுதான் காய்ச்சல். நிச்சயமாக, காய்ச்சல் என்பது நோய் அல்ல. உடலின் உள்ளே இருக்கும் நோயின் வெளிப்பாடுதான் காய்ச்சல். ஆகவே காய்ச்சலைக் கண்டு அஞ்சாதீர்கள். அது உங்கள் உடலைப் பராமரிக்கவே வந்துள்ளது.
உடலின் கழிவு உயிரிகள் வெளியேற்றுவதற்கு எவ்வளவு வெப்பம் தேவையோ அந்தளவு வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தை அனுமதிக்க வேண்டும். இதுதான் நலமாக வாழ்வதற்கான எளிய வழி. ஆம், காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்க நீங்கள் செய்யும் எந்த நடவடிக்கையும் உடலின் பணியில் குறுக்கிடுவதுதான்.
சிலவகை மாத்திரைகளை விழுங்கியதும் உடல் வியர்க்கிறது என மகிழ்ச்சி அடையாதீர்கள். அது காய்ச்சலுக்கான தீர்வு அல்ல. மாறாக, உடலின் வெப்பத்தைக் குறைத்து கழிவு நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலையை அந்த மாத்திரைகள் உருவாக்கிவிடுகின்றன. இவற்றோடு இணைத்துத் தரப்படும் உயிர்க்கொல்லி மருந்துகளும் (ஆண்டி பயாடிக்) வேறுவகை நுண்ணுயிரிகள்தான். இவை உடலில் பெருகி, உடலின் உள்ளே இருக்கும் உயிரிகளை அழிக்க வேண்டும் என்பது நவீன மருத்துவத்தின் அணுகுமுறை. ஆனால், உயிர்க் கொல்லி மருந்துகளின் வழியாக உடலுக்கு உள்ளே அனுப்பப்படும் நுண்ணுயிரிகள் உடலுக்குப் புதிய சுமைகளாகத்தான் மாறுகின்றன.
இவற்றின் வளர்ச்சியையும், இவற்றின் வருகையால் உடலுக்குள் உருவாகும் நுண்ணுயிர்ப் பெருக்கத்தின் மாற்றங்களையும் கையாள முடியாமல்தான் நவீன சமூகம் தள்ளாடிக் கொண்டுள்ளது.
இதனால்தான், ‘காய்ச்சலுக்கு உடனடியாக ஆண்டிபயாடிக் கொடுக்காதீர்கள்’ என தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் உன்னத செயல்தான் காய்ச்சல். இதில் நாம் தலையிட்டு தவறு செய்யும்போது, அந்த நுண்ணுயிரிகள் உடலில் தங்கி நீண்டகால நோய்களை வரவழைக்கின்றன..

சித்த வைத்தியர் தணிக்காசலம் - கொரோனா சிகிச்சை - அனுமதி

Leave a Comment
சித்த வைத்தியர் தணிக்காசலம் அவர்கள் ஏன் கொரோனா சிகிச்சையில் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை?

மத்திய மாநில அரசுகள், நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி,...
யாரும் கண்டுகொள்ளவில்லையா?
அல்லது வேறு ஏதாவது காரணங்களா?
'கொரோனா நோயை நான் குணப்படுத்தாவிட்டால்,  வைரஸை நான் அழிக்காவிட்டால் என்னை தூக்கில் போடுங்கள் என்று சொல்கிறார் என்றால் அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்?

இருந்தாலும் ஏன் நடக்கவில்லை?
பின்புலம் என்ன?


https://www.youtube.com/watch?v=RAD3nB6tf1g

கடுகு எண்ணெய் [ MUSTARD OIL ] - ஆரோக்ய நண்பன் !

Leave a Comment
நாம் பெரும்பாலும் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் கடுகில் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
  

கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

கடுகு எண்ணெயும் கூட கடைகளில் கிடைக்கிறது. ஆனால் ரீபைண்டு எண்ணெய் நல்லது இல்லை.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. பொதுவாக இந்த எண்ணெயை நல்ல சுவையான உணவுகள் சமைக்க பயன்படுத்தினால், நல்ல அருமையான சுவையை பெறலாம்.
கடுகு எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் அதிகம் இருக்கிறது.

கை கால் மூட்டு வலி வாயு பிடிப்பு ரத்தக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய்சிறந்த தீர்வு தரும்.

அதே சமயம் இதனை உடல் வலி இருக்கும் போது, உடலுக்குத் தடவி மசாஜ் செய்தால், உடல் வலியும் நீங்கும். மேலும் குளிர் காலங்களில் தினமும் காலையில் இந்த எண்ணெயை உடலில் பூசி குளித்து வந்தால், உடல் வெதுவெதுப்பாக இருப்பதோடு, மூட்டு வலிகளும் நீங்கும்.
இந்த எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.
கடுகு எண்ணெய் பெண்கள் தங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும், லேசாக சூடு படுத்தியபிறகு கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் மறைந்துவிடும் !

அதிலும் வறட்சியான சருமம் மற்றும் கூந்தல் இருந்தால், அதனைப் போக்குவதற்கு கடுகு எண்ணெய் சிறப்பானதாக இருக்கும்.
குறிப்பாக, கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். 


கடுகு எண்ணெய்யுடன் நன்கு அரைத்த மஞ்சள் கலந்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

கடுகு எண்ணெய் கடுகு எண்ணெயால் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இதில் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை உள்ளதால், குளிர் காலத்தில் மட்டுமே கடுகு எண்ணெய்யை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் இதை பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சல் உண்டாகும்.

கடுகு எண்ணெய்யை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

கடுகை அரைத்து முட்டிவலி மற்றும் ரத்தக்கட்டியின் மீதும், தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போட்டால் வலி நீங்கும்.

கடுகு எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர் வரை, உடலில் பூசி ஊரவைத்து குளிப்பது சருமத்திற்கு வனப்பளிக்கின்றது, மேலும் தலை முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். மேலும் காய்ச்சல் அல்லது சளி இருந்தால், இரவில் படுக்கும் போதே எண்ணெயை தலையில் தடவி படுக்க வேண்டும். இதனால் உடலானது சற்று வெதுவெதுப்புடன் இருக்கும்.

கடுகு மற்றும் கடுகு எண்ணெய் ஆகிய இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது, எனவே சமையலுக்கு கூட நீங்கள் கடுகு எண்ணெய்யை பயன்படுத்தலாம்..
கடுகு எண்ணையில் சமைத்த பொருட்கள் சீக்கிரம் கெடுவதும் இல்லை.  
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கடுகு எண்ணெயின் வாசனை சற்று புதுமையாக இருக்கும், எனவே முதலில் வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று கூட பழக்கத்தை துவக்கலாம்.   


வெற்றிலை பாக்கு போடுவோமே - நல்ல பழக்கம்தான்!

Leave a Comment
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-
சுண்ணாம்பு போடுவது!


பாரதத்தின் அதிர வைக்கும் பண்பாட்டு உண்மை!

பாரதப் பண்பாட்டின் அம்சங்கள் எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்கப்பட்டவை தான்.

முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை குறிப்பிட்ட சரியான விகிதத்தில் கலந்து மென்று சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது. மேலும் இதயத்தையும்கூட வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான விகிதாசாரத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்கக் கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது, தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.  

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால், வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு கூடவே புகையிலையும் சேரும் போது, தீய பழக்கமாக
மாறி விடுகிறது.  

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே! ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகின்றன.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் ஆராய்ச்சியும், பயன்பாடும்.

இது மாறும்போதுதான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பாரதப் பண்பாட்டு பெருமை
நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....

உணர்ச்சிகளும் உடல் பாதிப்புகளும் !

Leave a Comment
அதிகம் உணர்ச்சி வசப்படுதல் பல வித தாக்கங்களை உடலிலும் ஏற்படுத்துகிறது....


தலைகனம், ஆணவம், கர்வம், அஹம்பாவம்,.... போன்றவைகள் இதய நோய்களை உருவாக்கும்..

கவலை, துயரம், பொறாமை, எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னை தாழ்வாகப் பார்த்தல் போன்றவை வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..

எப்போதும் சோம்பலில் நாட்டம், அல்லது எப்போதும் படபடப்பு போன்ற குணங்கள் போன்ற குணங்கள் சுவாச நோய்களை உருவாக்கும்.

பயம், சந்தேகம் போன்ற குணங்கள் சிறுநீரகத்தை சீரழிக்கும்..

பிறர்மீது, அல்லது தன்மீது எரிச்சல், கோபம்,... போன்ற குணங்கள் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..

தன்னை இருக்குமாறே அங்கீகரித்தல், மற்றவர்களையும் அவர்கள் இருக்குமாறே அங்கீகரித்தல், அமைதி, மகிழ்ச்சி,... போன்ற குணங்கள் அனைத்து நோயையும் குணமாக்கும்.  

ஒருவனது சிந்தனையும், உணர்ச்சிகளும் அவனது  உடலில் உள்ள சுரப்பிகளில் உரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. .

சந்தோஷமாக, தன்னிறைவுடன், விதியை புரிந்து மன அமைதியுடன், திருப்தியுடன் இருந்தால் அவை சரியான உயிர் திரவங்களை, சரியான அளவில் சுரக்கும்.

இல்லையேல் அவை குறைவாகவோ, அதிகமாகவோ, மிக நீர்த்ததாகவோ, மிக அடர்ந்ததாகவோ  அமிலத்தை  சுரக்கச்செய்து உடல் ஆரோக்யத்தைக் கெடுக்கும். 

facts of food codes on packed foot items!

Leave a Comment
What do the food codes mean?
Know the facts of food codes written on the packed food items.
Attention, if following codes are mentioned on food packs then you should know what you are unknowingly consuming.

E 322 = Beef
E 422 = Alcohol
E 442 = Alcohol & Chemical
E 471 = Beef & Alcohol
E 472 = mixture of Beef, meat & Pork
E 476 = Alcohol
E 481 = mixture of Beef and Pork
E 627 = Dangerous Chemical
E 631 = Oil extracted from Pig fats.


● Don't ignore it, pay your kind attention at least for the well-being of your kids, if in doubt, then search by yourself in internet.
● Note! you may find these codes mostly in products of foreign companies like - Chips , Biscuits , Chewing Gums, Toffees, Kurkure and Maggi !


பாலக்காடு குத்தாம்புள்ளியில் சுலப நாடி சிகிச்சை!

Leave a Comment
அக்குபஞ்சர் எனப்படும்
சுலப நாடி சிகிச்சை!
எல்லா நோய்களுக்கும் - எல்லா வயதினருக்கும்!
மருந்தும் இல்லை & பக்கவிளைவும் இல்லை!
செலவு, சிரமம் குறைவு. பக்கவிளைவு என புதிய நோய்களும் இல்லை. உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை இதன் துணையுடன் பாதுகாக்கலாமே!
சர்க்கரை நோய், மாரடைப்பு, ரத்த அழுத்தம் [ உயர் & தாழ் ], மூட்டுவலிகள், தூக்கமின்மை, மனக் கவலை, வயிற்றுக் கோளாறுகள், அல்சர் பிரச்சினைகள், தோல் நோய்கள், பெண்களின் மாதப் பிரச்சினைகள், கற்பப்பை கட்டிகள், பலவித கட்டிகள், பலவித வழிகள்,  குறட்டை, முடி உதிருதல், நுரையீரல் பிரச்சினைகள், இருதயப் பிரச்சினைகள், கிட்னி பிரச்சினைகள், ரத்தம் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள், கண் நோய்கள், காய்ச்சல், அனைத்து தலைவலிகள், பக்கவாதம்,.... போன்ற பல சிறிய & பெரிய நோய்களும் இந்த முறையில் சுலபமாகவே தீருகின்றன! சிறுவர் முதல் பெரியவர் வரை!

சிகிச்சை நேரம் :
திங்கள் - வெள்ளி: பகல் மணி 11 - 2 வரை
நேரில் - முன்பதிவு - அவசியம்! 

நோய்கள் உண்மையில் முதலில் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம்,... போன்ற உள் உறுப்புகளில் ஏற்படுகின்றன. பிறகு அது மேலும் அதிகமாகும்போது, தம்மை சீர் செய்துகொள்ளும் முயற்சியில், அவை, ஜுரம், தலைவலி, சர்க்கரை, ரத்த அழுத்தம், நீரிழிவு,... போன்று பல அறிகுறிகளைக் [Symptoms] காட்டுகிறன்றன. 
இந்த அறிகுறிகளை நிறுத்துவதால் உண்மையில் நோய் [disease] நீங்குவதில்லை, ஆனால், நோய் நீங்கியதாக நாம் நினைத்துக்கொண்டு விட்டு விடுகிறோம். ஆனால், உள்ளுக்குள் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. பிறகு மீண்டும் அதே பாதிப்புகளையோ வேறு பாதிப்புகளையோ பெரியதாக ஏற்படுத்துகிறது.
இந்தக் குறை இன்றி, நோயை அதன் மூலத்திலேயே குணப்படுத்துகிறது - இந்த அக்குபங்க்சர் எனப்படும் நாடி சிகிச்சை. இதன் மூலம் எந்த நோயையும் குணப்படுத்தலாம்.

வேதாந்த ஶாஸ்த்ரி ஸத்குரு ஸ்ரீ நாடிவைத்யர் ஐஶ்வர்யமஹரிஷி
யோகீந்த்ரபாரதி M.D. (Acu)., 

ஸத்குருஸ்ரீ அவர்களின் மற்ற காரியங்கள்:


ஜோதிட ஆலோசனை [ ஞாயிறு 11 – 1 மட்டும் ], பூஜை பயிற்சிகள், சுலோகப் பயிற்சிகள், சம்ஸ்க்ருத வகுப்புகள், பகவத் கீதை, வேத ஞான உபதேசங்கள், தியானப் பயிற்சிகள், ப்ராணாயாம பயிற்சிகள், யோகாசன பயிற்சிகள், பால விஞ்ஞான வித்யா, பால சம்ஸ்கார வித்யா,...                        


☝  இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala

விரதங்களும் - விதிகளும் !

1 comment
பலவித விரதங்களால்  நமக்கு சக்தி கிடைக்குமா
எப்படி?

* மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.

* பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை
குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.

* துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய
விளையாட்டை புரிந்துகொண்டாள்.

* பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும்
இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல்
வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.

* விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும்
புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக
விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

 * ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும்
காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது
ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த
சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

* நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது.
அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.
* விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைத்துப் பழகுதல் - விரதம் இருத்தல் என விளக்கலாம்.

* பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.

* உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பது பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.
கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

* நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம்
வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.

* காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின்
தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும்  வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.

* உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி?

* சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய
கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

* சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.

* நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம.

* நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு
செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக  கொண்டாடப்படுகிறது.

* விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில்
அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

* சாந்திராயண விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக  குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். இது ஒரு மாத விரதம். எப்போதாவது ஒருமுறை செய்த தவறுக்கு பரிகாரமாகவும்,  மீண்டும் கவனக்குறைவு வாராத விழிப்புணர்வுக்காகவும் கடைபிடிக்கப்படுவது.

* யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்கக் கூடாது என்றால்....
• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள் [ வேதம் பயிலும் பருவத்து மாணவர்கள் ]
• சன்யாசிகள்

* இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

* மெளனவிரதம் இருப்பது வாய் மற்றும் மனதின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டி தமது எல்லா தினசரி காரியங்களையும் செய்வார்கள்.  மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது ஒரு தொல்லையே. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கருத்தினைத் தவிர மற்ற சிந்தனைகளையும் குறைக்கவும் , தவிர்க்கவுமே முயற்சிக்கவேண்டும் . மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக  பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்பாடு , சைகை மூலமோ, எழுத்து மூலமோ செயல்பாடு அனைத்தையுமே குறைக்க, தவிர்க்க முயற்சிக்கவும். . அந்த அளவிற்கு மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்..

அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில்,  உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதற்காகவும்தான் அமாவாசை, பவுர்ணமி,
வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர். ஒருவகையில் விரதங்கள் உடலுக்கும் மனதிற்குமான மருத்துவம் என்றும் கூறலாம். குறிப்பாக வரும் முன் காக்கும் மருத்துவம்! 

முக்கியக் குறிப்பு: எல்லோரும் எல்லா விரதங்களையும் கடிப்பது முடியாது, முயற்சிக்கவும் கூடாது.
சில விரதங்களை மட்டும் என்றாலும் கூட, ஒரு சரியான குருநாதரிடம் , நான் இந்த விரதத்தை கடைபிடிக்க விரும்புகிறேன், கடைபிடிக்கலாமா என்றோ, எனக்கு பொருத்தமான விரதத்தை சொல்லுங்கள் என்றோ கேட்டு கடைபிடிப்பது சிறப்பு.

எந்த மனநிலையுடன் அந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் சொல்லுவார் .

அந்த மன நிலையில் நிலைத்து இருக்க பழகுவதே விரதத்தின் தலையாய லட்சியம்!