இந்தப் பிறவியில் நீ பசு , அல்லது பசுவைப்
போல் நல்லவன், பணக்காரன் என்பதால் முன் பிறவிகளில் நீ இயற்கையையோ மற்றவர்களையோ நீ
செய்த கொடுமைகளுக்கு உரிய தண்டனைகளை
தராமல் இறை நியதிகள் விடுவதில்லை.
நீ எப்படி முன்பு மூடனாக முரடனாக இருந்து
கொடுமைகளை செய்தாயோ அதே போல இயற்கையின் மூலம் அல்லது மற்றவரின் மூலமாக இப்
பிறவியில் நீ இன்னொருவன் மூலமாக பலன் அளிக்கப்படுவாய் - இறை நியதிகளின் மூலமாக.
முன் மறு பிறவிகள் உண்மை அதை பார்க்க
இயலாதவன் அறிவிலியே, கற்கத் தயார் இல்லாதவன் காட்டுமிராண்டி, தன்னையும்
அழித்துக்கொண்டு, தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும் மூடன் கொடூரன்.
இந்த உண்மையை சொல்லித்தராத கல்வித்திட்டமும்
காட்டுமிராண்டித்தனமானதே.
இந்த உண்மைகளை பார்க்க திறன் இல்லாத ஒரு சமுதாயம்
என்றுமே நாகரீகமான சமுதாயம் ஆக முடியாது.
இந்த உண்மைகளை பார்க்க திறன் இல்லாத ஒரு
மனிதன் என்றுமே பக்குவமான மனிதனாக ஆக முடியாது.
இவைகளை பார்க்கக் கற்பது மிக எளியதே.
இவைகளுடன்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விதியும் பின்னப்பட்டு உள்ளது.
அதனால் இந்த சூக்ஷ்ம விஞ்ஞானம் மிக அத்தியாவசியமானது.
இவைகளை எல்லாம் நாம் நிரூபித்து வருகிறோம்.
நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். அறிவுப்பூர்வமாக வாழ்வதை விரும்பும் அறிவாளிகள்
கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மூடர்கள் ஆணவத்தினால் கற்க இயலாமல்
அழிகிறார்கள்.
சுகமான இல்லற வாழ்விற்கு சூக்ஷ்ம விஞ்ஞானம்.
துயரமான இல் வாழ்வுக்கு சூக்ஷ்ம விஞ்ஞானம் இல்லாத
ஸ்தூல விஞ்ஞானம் மட்டும்.
பள்ளிக்கூடங்கள். ஸ்தூல விஞ்ஞானத்துடன் சூக்ஷ்ம விஞ்ஞானத்தையும் சேர்த்துத் தரவேண்டும்.
அப்படித்தான் நமது பண்டைய கல்விமுறை இருந்துள்ளது. அதனால் தான் நமது முன்னோர்கள் உலகோர் வியக்கும் உயர்ந்த வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து காட்டினார்கள்.
உலகத்தால் செய்ய முடியாத சாதனைகளைஎல்லாம் சாதித்துக் காட்டினார்கள்.
இன்றும் நமது வம்சம் தொடர்ந்து வாழ்கிறது.
0 comments:
Post a Comment