யார் கடவுள்? எங்கே கடவுள்? எத்தனை கடவுள்? - ரிக் வேதத்தின் பதில்கள்!

Leave a Comment
😏 இந்தக் கேள்விகளுக்கு ஹிந்துக்களின் வேதம் என்ன பதில் சொல்கிறது?

  
😊 இவை போன்றவைகளை சரியாக புரிந்துகொள்ள - கடவுள், இறைவன், தெய்வம் இந்த வார்த்தைகளுக்கு முதலில் விளக்கத்தை அறியவேண்டும்.






கடவுள்
கடந்து உள்ளாக இருப்பது. உலகில் உள்ள எல்லாவற்றையும் கடந்து உள்ளாக இருப்பது. உலகம் என்ற வேஷம், உலகில் உள்ள எல்லா விஷயங்கள் என்ற வேஷங்களைக் கடந்து உள்ளாக இருக்கும் ஒரு வஸ்து அல்லது பொருள். கட + உள் = கடவுள் 🔺 

அறிதல், உணருதல், கருதுதல், நினைத்தல், விரும்புதல் போன்று எந்த செயல்களோ, குணங்களோ இன்றி இருப்பது; செயல்களும் குணங்களும் விஷயங்கள், அதனால் வேஷங்கள் என்பதால்.
அதனால் இவை எதுவும் இல்லாத 'வெறும்-அறி'வே கடவுள். 
🔺 கடவுள் = ப்ரம்ம = பிரம்ம = ब्रह्म = All Substance ]
பராசக்தி
அந்த வெறும் அறிவானது, பலப்பல செயல் புரியும் திறன்களை உள்ளடக்கியது. இந்த பெரும் திறனே  பராசக்தி 🔻. 
🔻 சக்தி =  வல்லமை = திறமை = ஆற்றல் = शक्तिः = Capacity = Power to do something
பராசக்தி =  சர்வவல்லமை = பெரும்திறன் = பேராற்றல் = पराशक्तिः = All Capacity = Power to do anything
இறைவன்
இறையை உடையவன் இறைவன்.
அல்லது, 
இறையை செய்பவன் இறைவன்.

இறை என்றால் குற்றமற்ற செயல்திறன்.

இறைவன் என்றால் குற்றமற்ற ஆட்சியாளன். திறமையான நிர்வாகி.

பேரறிவான கடவுள் தன்னை சார்ந்து இருக்கும் இந்த பராசக்தியை பயன்படுத்தும்போது, இயக்கும்போது அவருக்குப் பெயர்  இறைவன் .

[   இறைவன் = ஆண்டவன் = ஈஸ்வரன் = ईश्वरः = Lord = Perfect Ruler ]
[ கவனம்:      இரை = உணவு! ] 
தைவம்
திவ்யத்தின் உள்சக்தி தைவம் 
திவ்யம் என்றால் நேர்த்தியான தோற்றம். ஒரு சரியான காட்சி, பொருள் செயல், அல்லது குணம் எதுவானாலும். அதை ஏற்படுத்த உதவும் திறம் அல்லது நியதி = அதன் உள்சக்தி - ஒரு காட்சிக்கான உள்சக்தி ஒரு தைவம்.
ஒரு புலனால் அறியப்பட்ட ஒரு பொருள் தோன்ற ஆயிரக்கணக்கான திறன்கள் அல்லது நியதிகள் ஈடுபடுகின்றன.
மொத்த சிருஷ்டியும் தோற்றத்திற்கு வர, பல கோடித் திறன்கள் அல்லது நியதிகள் ஈடுபடுகின்றன.
ஒவ்வொரு நியதியும் ஒரு தைவம். 

[   தைவம் = தெய்வம் = தேவதா = தேவர் = தேவன் = தேவி = Law = a particular power to do something
அதாவது,... 
கடவுள் உலகக் காட்சியுடன் இருக்க சங்கல்பம்  விருப்பம் கொள்ளும்போது அவருக்குப் பெயர் 'இறைவன்'. அவருக்கு அதை பூர்த்திசெய்யப்போவது அவரது பெரும்திறன் 'பராசக்தி'. 
அந்த பெரும்திறன் பராசக்தியிடம் இருப்பது பலகோடித் திறன்கள் சக்திகள் அல்லது நியதிகள். ஒவ்வொரு திறன் அல்லது சக்தி அல்லது நியதியும் ஒரு தைவம் அல்லது தெய்வம், அல்லது தேவதா, அல்லது, தேவன், அல்லது, தேவி.
[  சங்கல்பம் = எண்ணமும் முடிவும் ]










😏 கடவுளின் உருவம் என்ன?
😊 பாரத விஞ்ஞானத்தில் கடவுளுக்கு இங்கிருந்து அப்பால் எங்கோ இருக்கும் உருவம் என்று எதுவும் சொல்லப்படவில்லை.
'சிருஷ்டியில் - 'உருவம் உள்ள விஷயங்'களும் இருக்கின்றன, 'உருவம் இல்லாத விஷயங்'களும் இருக்கின்றன. அந்த இரண்டு விஷயங்கள் அல்லது வேஷங்கள் அல்லது இருப்புக்களையும் கடந்து, அந்த இரு வேஷங்களிலும் இருப்பது கடவுள்' - என்றே நிரூபிக்கப்படுகிறது.
இதற்குப் பிறகும் ஒருவர் - 'கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா?' - என்று கேட்டால் ‘அவர் தன் மதிநுட்பத்தை இன்னமும் வளர்த்துக்கொள்ளவேண்டி உள்ளது' - என்று சொல்லவேண்டி உள்ளது.
[ ⃟ பாரத விஞ்ஞானம் = வேதம் = ரிக் , யஜுர், சாம, அதர்வண - வேதங்கள். ] 

😏 அந்தக் கடவுள் அல்லது இறைவன் எப்போது தோன்றினார்?
😊 'எப்போது' என்ற கேள்வியானது, காலத்தின் தோற்றத்திற்குப் பிறகுதான் வருகிறது. காலம் என்பதும்கூட காட்சிக்கு வந்துள்ள ஒரு வேஷம், விஷயம் அல்லது இருப்பு. உருவம் உள்ளது அல்லது உருவம் அற்றது என்ற கணக்கிற்குக் கீழே வருகிறது. எனவே காலம் என்ற வேஷத்தில் இருப்பதும் கடவுளே. அல்லது காலத்தை ஏற்படுத்தியதே இறைவன். அதனால் அவர் காலத்தின் கணக்குகளுக்கு வெளியில் இருப்பவர். அதனால் அங்கே இந்தக் கேள்வியை கேட்க இயலாது.

உதாஹரணமாக, தங்கத்தால் செய்யப்பட்டுள்ள ஒரு வளையலைப் பார்த்து, ‘இந்த வளையலின் சுற்றளவு என்ன?’ என்றால் அதற்கு பதில் இருக்கிறது. ஆனால் வளையலாக இருக்கும் தங்கத்தைப் பார்த்து, ‘இந்த தங்கத்தின் சுற்றளவு என்ன?’ என்றால்,....  வளையலின் குணங்கள், கணக்குகளுக்கு வெளியில் இருப்பது தங்கம். அங்கே இந்தக் கேள்வியை கேட்க இயலாது.

😏 கடவுள் எங்கே இருக்கிறார்?
😊 எல்லாவற்றையும் கடந்து உள்ளாக இருக்கும் கடவுள் எல்லாமாகவே இருக்கிறார். எல்லாவற்றிலும் இருக்கிறார். எல்லாவற்றிலும் அவர் மட்டுமே இருக்கிறார். எல்லாம் என்பது அவர் ஏற்ற வேஷங்கள். உண்மையில் அவர்மட்டுமே இருக்கிறார். 

உதாஹரனமாக ‘இந்த சட்டையில் பருத்தி எங்கே இருக்கிறது?’ என்ற கேள்விக்கு பதிலைப்போல இருக்கிறது, ‘உலகில் கடவுள் எங்கே இருக்கிறார்?’ என்ற கேள்வி.
'அறியப்பட்டது' என்ற - 'எல்லாம்' என்ற வேஷத்திலும், 'அறிபவன்' என்ற - 'நான்' என்ற வேஷத்திலும் இருப்பது கடவுளே. 
                
கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லும்போதோ, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்தவர் என்றுசொல்லும்போதோ, அதன் பொருள் - 
அறையில் ஊதுபத்தியின் புகையைப்போல இல்லை, ஆனால் சட்டையில் பருத்தியைப்போல! அல்லது வளையலில் தங்கத்தைப் போல. 





😏 சிலர் கடவுள் வேறு எங்கோ இருப்பதாக சொல்கிறார்களே?
😊 இங்கே, 'எல்லாவறையும் கடந்து உள்ளே இருப்பதுதான் கடவுள். வேறு எங்காவது இருந்தால் அதனை கடவுள் என்று எப்படி சொல்ல முடியும்? 

வேண்டுமானால் 'கடமேல்' என்று சொல்லலாம். அல்லது காட், ஜெஹோவா, அல்லாஹ்,... போன்று ஏதாவது வார்த்தைகளால் சொல்லலாம். 

அந்த வார்த்தைகளுக்கும் 'கடவுள்' என்ற வார்த்தைக்கும் - எந்தவிதமான சம்பந்தமோ, பொருள் தொடர்புமோ இல்லை. 

அதனால், அப்படி தொடர்பு செய்து மொழிபெயர்ப்பதும் மிகவும் தவறே.

'கடவுள்'-க்கு ஆங்கிலத்தில் Kadavul-தான், அதேபோல God, Jehovah, Allah,... இவைகளுக்கு தமிழில் காட், ஜெஹோவா, அல்லாஹ்,...தான். ஏனெனில், திருவள்ளுவர்-க்கு ஆங்கிலத்தில் Thiruvalluvar; அதேபோலவே Peter க்கு தமிழில் 'பீட்டர்'-தானே.




😏 நீங்கள் சொல்வது ஹிந்துக் கடவுளைப் பற்றி, ஆனால் கிருஸ்தவர் முஸ்லீம்களின் கடவுள் வேறு.
😊 'கடவுள்' என்பது 'வெறும் நம்பிக்கை' இல்லை. இந்த உலகினைப் பற்றிய ஆய்வின் உண்மை. இது ஆளுக்கு ஒருமாதிரி இருக்க முடியாது.
உதாஹரனமாக, 'புவி-ஈர்ப்பு-விசையைப் பற்றிய உண்மையை சொன்னது ஒரு கிருஸ்தவர் என்பதால், அது கிருஸ்தவருக்கான நம்பிக்கை' - என்றா சொல்ல முடியும்.

😏 அப்படி என்றால் கிறிஸ்தவர், முஸ்லீம்கள் சொல்லும் கடவுள் பொய்யா?
😊 அவர்கள் சொல்வது பொய் என்று நாம் கூறவில்லை. அவர்களின் விளக்கம் ‘கடவுள்’ என்ற வார்த்தைக்கு உரியது இல்லை. வேறு எதையோ பற்றியது. 

அதற்கு 'கடவுள்' என்ற வார்த்தையைப் பொருத்தி தவறான மொழிபெயர்ப்புக் காரியத்தை செய்து விட்டார்கள் பலர்.

😏 அப்படி என்றால் அவர்கள் கூறும் காட், ஜெஹோவா, அல்லாஹ்,... போன்ற இவைகள் உண்மையா இல்லையா...?
😊 அது நமக்குத் தெரியாது. அதுபற்றி நமக்கு கருத்தும் இல்லை. அதைப்பற்றிய கருத்தும் தேவை இல்லை - என்பதே நம் கருத்து. 

ஏனெனில், அதனை நிரூபிக்க முடியாது. அது முழுவதும் நம்பிக்கையே. 'அது உண்மை' என்றோ, 'அதுதான் உண்மை' என்றோ, 'அது உண்மை இல்லை' என்றோ யாராலும் நிரூபிக்க முடியாது. 

‘இறந்த பிறகு பார்ப்பாய்’ என்றுதான் சொல்கிறார்கள்.  இறந்தவர்கள் பார்த்தார்களா இல்லையா என்பதற்கும் இதுவரை எந்த நிரூபணமும் இல்லை. 

நிரூபிக்க முடியாததை நம்பும் பழக்கம் பாதுகாப்பானது இல்லை. ஏனெனில் அதனை வைத்துக்கொண்டு ஒருவன் எவ்வளவு ஏமாற்றினாலும் அதனை கண்டுபிடிக்க முடியாது. 
 
😏 ஹிந்துக்கள் கூறும் கடவுளும் அப்படித்தானே?
😊 அப்படி இல்லை. இங்கு ‘அறியப்பட்ட மற்றும் அறியப்படாத எல்லாம் என்ற வேஷத்திலும், அறிபவன் நீ என்ற வேஷத்திலும் இருப்பது [ வேதம் சொல்லும் இந்த - ] ஒரு கடவுள்தான்’ என்பதை நிரூபிக்க, அதாவது, இப்போது நீ இறக்கும் முன்பே, இப்போதே உன்னை நிதர்சனமாக பார்க்க வைக்க - வேதம் தயாராகவே இருக்கிறது. வேதத்தின் போதனா தொழில் நுட்பம் அறிந்த சில குருநாதர்கள் இப்படி பார்க்க வைக்கிறார்கள். இப்போதும்கூட.... - என்று சொல்லிவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள மாட்டோம். 

தேடுதல் உள்ள பல நூறு பேரை பார்க்க வைத்துள்ளோம். 
இன்னமும் நாமும் செய்தே வருகிறோம். 

😏 ஹிந்து மதத்தில் ஏன் பல கடவுள் வழிபாடு உள்ளது. கடவுள் ஒருவர்தானே?
😊 முதலில் 'ஹிந்து மதம்' என்று ஒரு மதமே இல்லை. சைவம், வைஷ்ணவம்,... போன்றவைகள்தான் மதங்கள். 

‘ஹிந்து’ என்பது ‘ஹிமாலம் மலை தொடங்கி தென் கடல் வரை வாழும் மக்கள்’ என்று பொருள்தரும், ஒரு இனத்தைக் காட்டும் சொல். அவர்களின் வாழ்க்கை முறைக்குப் பெயர் ‘சனாதனதர்மம்’ - ‘உலகை நடத்தும் இறைவனின் இயற்கை நியதிகள்’ என்று பொருள். 'தர்மம்' என்றால் விஞ்ஞானம். 

உண்மையில் அந்த வாழ்க்கை முறையானது உலகிற்கே பொருத்தமானது, விஞ்ஞானபூர்வமானது. 

ஹிந்துக்களால் இந்த விஞ்ஞான வாழ்வியல் வடிவமைக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டதால் அதனை ‘ஹிந்து தர்மம்’என்றும் சொல்கிறார்கள். 
 
அடுத்து,...

'கடவுள் ஒருவர்' என்பதற்குமேல், 'இங்கு இருப்பதே கடவுள் ஒருவர் மட்டுமே' என்பதுதான் உண்மை. 'ஒட்டு மொத்த சிருஷ்டியிலும் கடவுளைத் தவிர எதுவும் இல்லை' என்பதுதான் உண்மை.

அதனால் இங்கு 'பல கடவுள் வழிபாடு' என்பதும் இல்லை. அப்படி ஒரு கருத்தும் இல்லை. ஆனால், 'பல தெய்வ வழிபாடு' உள்ளது. யாருக்கு எந்த விஷயத்தில் பற்றாக்குறை இருக்கிறதோ, அல்லது இன்னமும் அடைய ஆசை இருக்கிறதோ, அல்லது தேவை இருக்கிறதோ.... அந்த விஷயத்தை அடைய, அதற்கு உரிய தெய்வத்தை, அல்லது தேவதாவை வழிபடுவதால், அந்த தேவை சுலபமாக பூர்த்தி ஆகிறது. அதனால் தேவைக்கு ஏற்ப, விஞ்ஞானபூர்வ தெய்வ வழிபாடு பின்பற்றப்படுகிறது.




😏 பல ஹிந்து ஆன்மீக தலைவர்கள் ஹிந்து பண்பாட்டில் ‘பல கடவுள் வழிபாடு’ உள்ளது என்று சொல்கிறார்களே?
😊 'அது ஏன்?' என்று அவர்களிடம்தான் கேட்கவேண்டும். ஆனால் அவர்களுக்கும் இந்தக் கருத்தை படிக்கக் கொடுத்தால், இதை மறுக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.  

😏 உருவம் இல்லாத கடவுளுக்கு ஏன் உருவம் கொடுத்து வழிபடவேண்டும்?
😊 முதலில், கடவுளுக்கு உருவம் இல்லை என்று யார் சொன்னது.

😏 அப்படி என்றால் கடவுளுடைய உருவம் என்ன?
😊 உனது உடல் = உனது பரு உருவம்
அதனை இயக்கும் மனம் = உனது அரு உருவம்
இந்த இரண்டுக்குள் வாழும் உயிர்தான் ஜீவன் - நீ.

அதேபோலவே,...

இந்த உலகம் = சிருஷ்டி = பரு உருவம்
அதனை இயக்கும் மனம் = இறைவன் = அரு உருவம்
அந்த இரண்டுக்குள் வாழும் உயிர்தான் கடவுள் - அவர். 


இப்போது நீ உருவம் உள்ளவனா உருவம் அற்றவனா என்று உன்னிடம் கேட்டால்....
நீ உருவம் உள்ளவன், இந்த உடல் தான் உன் உருவம் - என்று நீ சொன்னால்... அந்தக் கணக்குகளின் படி
இந்த கடவுளும் உருவம் உள்ளவரே, இந்த சிருஷ்டி தான் அவரது உருவம்....
நீ உருவம் இல்லாதவன் என்று நீ சொன்னால்... அந்தக் கணக்குகளின் படி
இந்த கடவுளும் உருவம் இல்லாதவரே.... 


😏 அப்படி என்றால், ஏன் ஏராளமான உருவங்களைக் கொடுத்து கடவுளை வழிபடவேண்டும்?
😊 உண்மையில், ஹிந்து தர்மத்தில் 'கடவுளை வழிபடுதல்' என்பதே என்றும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. 'கடவுளாக ஆகுதல்', அல்லது 'கடவுளுடன் ஐக்கியம் ஆகுதல்' மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அதையே 'மோக்ஷம் அடைதல்' என்கிறோம்.

😏 ஆனால், இத்தனை கோவில்களில் இருப்பதெல்லாம்.....?
😊 அதெல்லாம், தெய்வங்கள், தேவதாக்கள், உலக நியதிகளை இயக்கும் இறைவனின் சக்திகள். சக்திகளை சுலபமாக புரியவைக்க உருவங்கள். தம் தேவைக்கு ஏற்ற 'தெய்வங்களை வழிபட்டு' தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள. 

உதாஹரனமாக....

'பாரத அரசின்' உதவியைப் பெற பாரத அரசின் அதிகாரிகளைத்தானே அணுகுகிறோம். 'பாரத அரசை'யா தொடர்புகொள்கிறோம்? 

இது முழுவதும், மிக நுட்பமான காரண-காரியங்களுடன்-கூடிய, பலனைத் தரவல்ல, ஒரு விஞ்ஞானத்-தொழில்-நுட்பம். விளக்க-நிரூபிக்க-புரியவைக்க முடிவது. மேலும் சற்று நீண்ட கல்வி தேவைப்படுவது.

______________________________________________________________________________
பதில்களில் எங்காவது புரிவது சிரமமாக இருந்தாலோ,  
எப்படி சொல்லலாம் என்று கருத்து இருந்தாலோ,
உங்களுடைய வேறு சந்தேகங்களையோ, 
அல்லது எந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்தால் வரும் தலைமுறை சந்ததிகளுக்கு நன்மையை தரும் என்று நீங்கள் நினைக்கும் கேள்விகளையோ ,...
அவசியம் எழுத வேண்டுகிறோம்: 
aran.gurukulam@gmail.com 

தேடல் உள்ளவர்கள் தொடர்புகொள்ள: 
9042600600
9042800800

நன்றி. 





மேலும், வேதவிஞ்ஞானத்தை முழுமையாகக் கற்க விவரங்களுக்கும்,  பாடத்திட்ட விவரங்களுக்கும்... 




ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 6 = Post Graduation level

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 5 = Under Graduation level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/5.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 4 = Higher Secondary School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/4.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 3 = High School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/3.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 2 = Middle School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/2_15.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 1 = Primary School level


 

விதி செய்கிறதா? மதி செய்கிறதா?




பெருமை மிகு வேதம்....


 

அரண் நடத்தும் ஆத்ம ஞான விஜ்ஞானம் வகுப்புகள் & விதிகள்



0 comments:

Post a Comment