Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

போகர் யோகம்: மன அழுத்தங்கள் நீங்க, வெற்றி அடைய, ஞானம் அடைய!

Leave a Comment

மடையர் யார்? அறிவாளி யார்? கண்டுபிடிப்பது எப்படி?

Leave a Comment

உயர் நிலை தியானம் - சுலபமாக செய்வது எப்படி ?

Leave a Comment
Worship_Higher_Meditation


உருவ வழிபாடு என்பது  ஆன்மீகத்தில் கீழான நிலை என்றும், தியானம் செய்வதே உயர்நிலை என்றும் ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால் அது அப்படி இல்லை. 

60 வயதுக்கு மேற்பட்டோர், வீட்டில் வாழாமல், காட்டில் வாழ்பவர், துறவு ஏற்றவர்,... இது போன்றோருக்கு உருவ வழிபாடு இல்லாத, தியானப் பயிற்சிகள் சரியே. ஆனால், அதற்கு முன் உள்ள இல்லற வாழ்வில் உருவ வழிபாடே சிறந்தது, பாதுகாப்பானதும்கூட. 

இல்லற வாழ்வில் இருந்து மிக உயர்ந்த நிலைகளை அடைந்த - நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், முனிவர்கள்,... அனைவரும் உருவ வழிபாட்டின் துணையுடனே அடைந்தனர். 

உருவ வழிபாடு ஏன் சிறியதாக பார்க்கப்படுகிறது? 

உருவ வழிபாட்டின் முதல் போதனையை கொடுப்பது பெற்றோர்கள். பெற்றோர்கள் சொல்லித்தரும்போது எப்படி வழிபடவேண்டும், ஏன் வழிபடவேண்டும்,... என்பதில் மிகவும் குறைவாகவே விளக்கம் கொடுத்து வழிபட சொல்லித் தருகின்றனர். 

ஆனால், வயது வளர வளர, இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. இதற்குப் பிறகு உண்மையில், உருவ வழிபாட்டை செய்யும் பொது உள்ள பல சூக்ஷ்ம தொழில் நுட்பங்களை குருநாதர் சொல்லித்தரவும், விளக்கவும்வேண்டும். ஆனால் யாரும் குருநாதரிடம் செல்வதில்லை. இன்று குருநாதர் என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் உருவ வழிபாட்டைப் பற்றிய தொழில் நுட்பமும் தெரியாது. 

அது மிகவும் ரகசியமானது. அதனை யாருமே தானாக ஊகம் செய்து கண்டுபிடிக்கவும் முடியாது. அதனாலேயே, ஊகம் செய்து புத்தகம் எழுதியவர்களின் நூல்களைப் படித்தும் அறிய முடியாது. 

உருவ வழிபாட்டின் அடிப்படையே வேதக் கருத்திலிருந்து பிறக்கிறது. அதனால் வேதக் கல்வி இல்லாத ஒருவரால், அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், அதனை கண்டுபிடிக்க முடியாது. 

சிறுவர்களிலிருந்து, பெரிய ரிஷிகள் வரை யார் உருவவழிபாடு செய்யும்போதும் வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், அவரது அறிவில், மனதில் நடக்கும் காரியம் மாறுகிறது. அது குருநாதரின் போதனைக்கு ஏற்ப நடப்பது. அது அவருக்கு மட்டுமே தெரியும். 

அது உண்மையில் தியானம். மிகவும் பலமான தியானம். மிகவும் உயர்நிலையில் நடக்கும் தியானம். மனதை மிகவும் பக்குவப்படுத்தும் தியானம். அறிவை விசாலமாக்கும் தியானம். நினைவாற்றலை பெருக்கும் தியானம். வாழ்வை வளமாக்கும் தியானம். மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் தியானம். பிரார்த்தனைகளின் பலன்களையெல்லாம் அள்ளித்தரும் தியானம். தெய்வங்களின் அருளை இழுத்து வரும் தியானம். அருட்பேராற்றலை பொங்கி எழவைக்கும் தியானம். தோல்வி அடையாத தியானம். சிரமம் இல்லாத தியானம். மனதிற்கு இதமான தியானம். உணர்சிகளுக்கு சுகம் தரும் தியானம். அப்போதே பலன்தரும் தியானம். 

இதற்குத் தேவை ஒரு பத்து அல்லது இருபது நிமிடங்களே. அதனால் இதனை சிறியதாகப் பார்க்காமல், கற்க பயிற்சி செய்ய வேண்டும். 

இது நாள் முழுவதும் மனதை அழுத்தங்கள் வராமல், அமைதியாக சுகமாக நிம்மதியாக வைத்துக்கொள்ளும். விரும்பியவைகளையும் அள்ளித்தரும். 

எப்போது பலன் கிடைக்கும்?

செய்யத் துவங்கி சில நாட்களில், மிகச் சிறிய பலனைப் பார்க்கலாம். ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல மிகப் பெரிய பலன்கள் வருவதைப் பார்க்கலாம். இந்த உருவ வழிபாடு ஒரு கற்பக விருக்ஷமாக இருந்து தன்னையும் குடும்ப உறுப்பினர்களையும் முக்கியமான இடங்களிலெல்லாம் கைகொடுத்து காப்பாற்றுவதைப் பார்க்கலாம். 

இந்த சுகமான வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கே, இதற்கு அடுத்த உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் சுலபமாக கைகூடுகின்றது. இது இல்லாமல், உருவங்கள் இல்லாத, அருவ தியானங்களை செய்யும்போது களைப்பும், பலன் இன்மையும் அனுபவங்களாக ஆகிவிடுகின்றன.  

வயதும் அனுபவங்களும் கூடும்போது ஒருவேளை, 'இனி பிறவியே வேண்டாம்' என்று விரும்பினாலும் 'மோக்ஷத்தை'யும் கொடுக்கவல்லது - இந்த வழிபாட்டு தியானம். 

அதனால் முறையாக 'உருவ வழிபாடு' செய்யும் முறையைக் கற்போம். வாழ்வின் சுகங்களை சுலபமாக அடைவோம். மனதை அமைதியாக சுகமாக பாதுகாப்போம். 

தினசரி செய்யும் வழிபாட்டுப் பயிற்சியை - சுலபமாக கற்கும் விதத்திலும் , பயிற்சி செய்யும் விதத்திலும் சத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷி அவர்கள் பயிற்சி அளிக்கிறார். 

வழிபாட்டின் உள் பொருள் மற்றும் தொழில்நுட்பங்களையும் சொல்லித்தருகிறார், அவரவரின் ஆர்வத்திற்கு ஏற்ப. 

வாரம் ஒருநாள் மூன்று மணிநேரம் வீதம் எட்டு வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். விருபுவோருக்கு தீக்ஷை அளிக்கப்படும். 

மேலும் விபரங்களுக்கு: 
8825131416, 9042500500 -க்கு அழைக்கவும். அல்லது-
yogeendra3@gmail.com  -இல் எழுதவும்.

'Yogic Techniques' for Stress Management through 'Yoga'

Leave a Comment
Yoga Techniques for Stress Management
சனி காலை 6 - 8 மணி & ஞாயிறு காலை 6 - 8 மணி
யோக நித்ரா பயிற்சிகள் மூலம் மன அழுத்தங்களிலிருந்து விடுதலை, உடல் ஆரோக்ய மேம்பாடு, அமைதி நிலையிலிருந்து அனைத்து பணிகளையும் செய்ய. .  


‘கோர்ஸ் கோட் எண்’            &    கோர்ஸ் பெயர்

SM1. ‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for College Students
[ Fee Rs 1000/- ; college id proof is needed ]

SM2. ‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for School Students
[ Fee Rs 500/- ; below age 16, age proof id is needed ]

SM3. ‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for IT people
[ Fee Rs 2000/-  ]

SM4. ‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for Executives
[ Fee Rs 2000/- ]

SM5. ‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for Ladies
[ Fee Rs 2000/- ]  



☝ வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala


‘ரிஷி- வேத- விஞ்ஞானம்’ / ரிஷிகளின் கல்வி

Leave a Comment
‘ரிஷி- வேத- விஞ்ஞானம்’ / ரிஷிகளின் கல்வி –
தமிழில் வேதங்களின் பொருள் உபதேசம்
சுருக்கமாக சாரம்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை-களில்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
முதலில் பதிவு செய்த 10பேருக்கு மட்டும் அனுமதி. 


‘கோர்ஸ் கோட் எண்’            &    கோர்ஸ் பெயர்

RV1.  கடவுளும் நீயும்:
ரிஷி- வேத-விஞ்ஞானம் -பாடம்1

RV2.  ஜீவனும் விதியும்:
ரிஷி- வேத-விஞ்ஞானம் -பாடம்2

RV3.  உறவுகளும் நிகழ்வுகளும்:
ரிஷி- வேத-விஞ்ஞானம் -பாடம்3

RV4.  ப்ரார்தனையும் மோக்ஷமும்:
ரிஷி- வேத-விஞ்ஞானம் -பாடம்4



☝ வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala




To read Bhagavad Gita oneself-

Leave a Comment

The method to read Bhagavad Gita oneself, to understand more, better, easily, ...

Better to get a
Bhagavad Gita-
With Serial number 823
book of
GeetaPress, Gorakhpur 04223202521























Start reading the meaning of shlokas of Bhagavad Gita from chapter 12 onwards till 18

Afterwards chapter 7 onwards till 11

Afterwards chapter 2 onwards till 6

And finally chapter 1

While reading avoid explanations
Just go through translations of Sanskrit Shlokas

Draw a '✔ ' mark when you complete a Shloka

Draw a '✳' mark on inspiring Shlokas

Draw a '?' mark on the Shlokas where you need more clarity  &
Pray a moment for the solution

And just proceed....  :)

You can understand better in this way...
And you will get a GuruJi to teach you properly too...

Aishwarya Maharishi
RishiVedaJnaanaYogaPeetam
9042500500

Om.

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்:

Leave a Comment


1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்
எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல,
தப்பித்தவறி கூட அதே தவறைஇன்னொருவருக்கு
செய்துவிடக்கூடாது.

2.யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய
விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

3.நமக்கு பிடிக்காதவாரகவே
இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.

4.'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட,
'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று
எண்ணி வாழுங்கள்..

5.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற
எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்.. அது
தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால்
சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ
பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்..

7.சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை
சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய
வாய்ப்புகள் தேடி வரும்..

8.பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..
உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று..

9. எதிரே வருபவரின் தகுதியை பாராமல்
சிறு புன்னகை
உதித்தபடி கடந்து செல்லுங்கள்..

10.உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச்
செல்கிறார் என்றால் அமைதியாக
ஒதுங்கிவிடுங்கள்.

ரிஷிகளின் கல்வி நிலை-1 துவக்கம்

Leave a Comment




7 - 9 - 2015 லிருந்து 

வாரம் 2 நாட்கள். 

மாலை மணி 6:30 - 9:00 வரை. 

அனைவருக்கும் அனுமதி 



இடம் : 

ரிஷி குடில்

2/220 S-3

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கார்டன்ஸ்

தீத்திப்பாளையம்

பேரூர்

கோவை




விபரங்களுக்கு: 

81 90 805 605 / 90 42 500 500 

rvjp2015@gmail.com




நவகிரகங்களால் எற்படும் சிரமங்கள் குறைய விலக!

Leave a Comment
ஞான சம்பந்தர் அருளிய இந்த சுலோகத்தை 
வழிபடும்போதும்  

ஓய்வு நேரங்களிலும் 
பொருள் உணர்ந்து சொன்னால்,  
நவகிரகங்களால் வரும் தொல்லைகள் குறையும், 

சிவன் அருள் காக்கும்! 






வேயுறு தோளி பங்கன்    

           விடம் உண்ட கண்டன்   

                       மிகநல்ல வீணை தடவி


மாசறு திங்கள் கங்கை    

               முடிமேல் அணிந்து என்    

                               உளமே புகுந்த அதனால்


ஞாயிறு திங்கள் செவ்வாய்    

              புதன் வியாழன் வெள்ளி    

                                சனி பாம்பிரண்டும் உடனே


ஆசறு நல்ல நல்ல    

           அவை நல்ல நல்ல    

                               அடியார் அவர்க்கு மிகவே








பொருள்: 


வேயுறு தோளி பங்கன்   

வலிமைப் பெற்ற தோளினை உடைய உமையன்னைக்கு,
தன்னில் ஒரு பகுதியைக் கொடுத்து எமைப் பெற்ற ஐயன் ஈசன்

விடம் உண்ட கண்டன்

தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி 
வாழ்க்கை எனும் திருப்பாற்கடலைக் கடைந்து ஆராய்ந்த போது 
அமுதம் தோன்றுமுன் 
முதலில் ஆலகால விஷம் தோன்றியது, 
அதனை, உயிர்களைக் காக்கும் பொருட்டு, 
ஐயன் கருணையுடன் பருகவே, 
அன்னை தன் திருக்கரங்களால் தடுத்தார், 
விஷமானது ஐயனின்  திருக்கழுத்தில் தங்கிவிட, 
அதனால், நீலமாய் கருத்த கழுத்தினையுடைய வள்ளல் பெருமான்.



மிகநல்ல வீணை தடவி

மனதிற்கு மிக இதமான வேதம் எனும் ஞான வீணையைத்
தன் எண்ணம் எனும் விரல்களால் மீட்டுவதில் 
நல்ல திறம் பெற்ற ஐயன்




மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து

குறையற்ற மனம் எனும் பிறை சந்திரனையும், 
பெருகி வளம் தரும் குறையற்ற அறிவு எனும் கங்கையையும் 
தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு



என்  உளமே புகுந்த அதனால்

 அவரது நாடகத்தில் எனது பங்கினை செவ்வனே நடத்தவேண்டி
அவரே என் உள்ளத்தில் உயிராய் உள் புகுந்து நிறைந்ததனால்



ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

 நாடகத்தை நடத்த அவரது உத்தரவுகளை நிறைவேற்றும்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி &  ராகு, கேது என்னும் ஏழு கோள்களும், பாம்பின் பகுதிகளான ராகுவும் கேதுவும் கூட



ஆசறு நல்ல நல்ல


ஒரு குற்றமும் இல்லாத நல்லவைகளே!



அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே

 அவையெல்லாம், ‘ஈசன் நடத்தும் இந்த உலகம் எனும் திருவிளையாடலில் நடிக்கும் நான் வெறும் அடிமையே சேவகனே’ என்ற மன நிலையுடன் தன் கடன் ஆற்றி வாழ்வோருக்கு அடியாருக்கு, தொல்லை தராது விலகும்,
அவை மிக மிக நல்லவையே!  


-----------------------------------------------------------------------------------------------------------


ஏழரை சனி, ராகுதசை, அஷ்டமா சனி, சந்திராஷ்டமம்,.. போன்ற நேரங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகளிலிருந்து சுலபமாக பாதிப்பாகாமல் காத்துக்கொள்ள முடியும். 

உங்கள் குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் இதனை சொல்லி உதவலாமே.... 




மனசில் இருந்தால் போதுமே பக்தி !

Leave a Comment
பக்தி ஒருவருக்குத் தேவையா என்பதனை அவர்தான் முடிவு செய்யவேண்டும். ஏனெனில் அதன் பலன் அவருக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்தான் முடிவுசெய்ய முடியும். 



ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது, பிரார்த்தனை பலனை தருமா இல்லையா  என்பது .... போன்றவைகள் உண்மைகள். அதனை அவரவர் இஷ்டத்திற்கு  முடிவுசெய்ய முடியாது.

ரிஷி வேத விஞ்ஞானம் - பாடத்திட்டத்தின் பயிற்சிகள் -ஆனது கடவுள் இருப்பதைப் பார்க்க வைக்கிறது, மற்றும் பிரார்த்தனை எப்படி பலனைத்தருகிறது என்ற தொழில் நுட்பத்தையும் கற்றுத்தருகிறது. 

அந்த நுட்பங்களைக் கற்று கடைபித்தவர்கள் அனைவரும் சுலபமாகவே நற்பலனை அடைந்து அனுபவிக்கிறார்கள். 

இதில் பலருக்கு ஒரு கருத்து என்னவென்றால் - பிரார்த்தனை , பூஜை,... எல்லாம் சிரமப்பட்டு செய்யவேண்டியவைகளாக இருக்கின்றன, அதனால் அதை ஏன் செய்யவேண்டும்- என்றும், எனக்கு என்னதேவை என்று அவருக்கே தெரியுமே, பிறகு நான் ஏன் கேட்கவேண்டும்- என்றும், அதெல்லாம் மனசில் இருந்தால் ;போதும் - அவரே புரிந்துகொண்டு கொடுப்பார் - என்றும் கேள்விகள்.

இதில் ஒன்றினைப் புரிந்துகொள்ளவேண்டும். இறைவனை வழிபடாவிட்டால் அவர்ஒன்றும் கோபித்துக் கொள்ளவும் மாட்டார்,தண்டிக்கவும் மாட்டார்,  ஏனென்றால் - அவர் ஒன்றும் மன நோயாளி இல்லை.

 செய்தவேலைக்கு கூலியைக் கொடுக்காமலும் இருக்கமாட்டார், ஏனென்றால் அவர் ஏமாற்றியாவது உயரவேண்டும என விரும்பும் கிறுக்கு முதலாளியும் இல்லை.

பிரார்த்தனை என்பது ஒருசெயல் , அது கட்டாயம் செய்யாப்பட்ட விதம் தன்மைகள், மனப்பான்மைகளுக்கு ஏற்ப பலனைத் தந்துவிடும் - நிச்சயமாக. 

இதில் இருந்த நிறை குறைகள் எனக்கு மட்டுமே தெரியும் , அவருக்குத் தெரியவா போகிறது .... என்பதெல்லாம் கிடையாது. அவருக்கு நிச்சயம் தெரியும். 

ஆனால் இருந்த குறைகளுக்காக அவர் தண்டிக்கப்போவதும் கிடையாது. அதே சமயம், 'குறைகள் இருந்தாலும்சரி - பரவாஇல்லை, முழுப் பலனையும் கொடுப்போமே' என்று கொடுக்கப்போவதும் கிடையாது.

செய்தவைகளுக்கு  ஏற்ப மட்டுமே பலன் வரும். கட்டாயம் வரும்.

அவருக்கே தெரியுமே நான் ஏன் கேட்க வேண்டும் என்றால், அவர் ஏற்கனவே சரியாகத்தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அதுபற்றி மனதில் விமர்சன எண்ணம்கூட இல்லை என்றால் பிரார்த்தனை தேவையே இல்லை. அனால் ஏன் வருத்தங்கள் வாட்டி எடுக்கவேண்டும், அதை எல்லோரிடமும் கொட்டித் தீர்வு தேடவேண்டும். மற்றவர்களிடம் தீர்வு தேடுவது சரிதான் என்றால் இறைவனிடமும் தீர்வு தேடுவது சரிதான். 

அதெல்லாம் மனதில் இருந்தால் போதும் - கேட்க வேண்டியது இல்லை என்றால் - அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அவரும் உனக்கு உதவ வேண்டும் என்று மனதில் மட்டும் நினைப்பார், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தமாட்டார். 

இறைவனும் இயற்கை விதிகளை மீற மாட்டார். ஏனெனில் அவைகள் சரியாக நடக்குமாறு , அவைகளை ஏற்படுத்தியதே அவர்தான் . அவைகளை மீர வேண்டிய அவசியம் எதுவும் அவருக்கு இல்லை. 

யார் எதனைக் கேட்கிறானோ அவன் அதனை அடைகிறான். நியதிகளின் படி.
இதுவே அவனது மகிமை.