ஒழுக்கம் உயர்வினைத் தருவதால் ஒழுக்கம்
சட்டத்தால் மதிக்கப் படாது. :(
பள்ளிக்கூடத்து மாணவன் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை, யாருடைய நிலையுமே, படித்தவாறு ஒப்புவித்தால் போதும்.
மற்றபடி ஒழுக்கம் இன்மை எல்லாம் அவர் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை.
அதைப்பற்றி எல்லாம் அரசுக்கு கவலை இல்லை என்று முதலில் ஆகிறது.
பிறகு அதைப்பற்றி எல்லாம் மக்களும் கவலைப்படக்கூடாது என்று ஆகிறது.
பிறகு அதைப்பற்றி எல்லாம் சிந்தித்தால் வாழ முடியாது என்ற நிலை வருகிறது.
பள்ளிக்கூடத்து மாணவன் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை ஒழுக்கமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ஒரே இடம்தான்.
படித்ததை ஒப்புவிப்பதில் மட்டுமே திறமைக்கு ஏற்ற உயர்வு. அதைக் கடைபிடிப்பதில் இல்லை. இது ஏனோ?
இது இப்படியே போனால் எங்கே போகும் என்று சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துள்ளது.
0 comments:
Post a Comment