அஹிம்சை எது - ஹிம்சை எது ?

Leave a Comment

அஹிம்சை எது, ஹிம்சை எது 
என்று பாரதிக்கு  புத்திசொல்ல 
உலகிற்குத்  தகுதியில்லை.

ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக
மனிதப் பண்புகளையும், 
உயிர்ப் பண்புகளையும்,
இயற்கைப் பண்புகளையும், 
இறைவனின் பண்புகளையும்,
ஆராய்ந்து பார்த்தவர்கள், 
கல்வியாகத் தந்தவர்கள்,
கல்வியாகக் கற்றவர்கள்,
வாழ்ந்து பார்த்தவர்கள்,
ஞானம் மிகு  பாரதிகள்!

பாம்பும் தெய்வம் என்று கண்டுபிடித்து
பால் வைத்து வழிபட்டவனை,
வேப்பமரமும் தெய்வம் என்று கண்டுபிடித்து
வணங்கி வழிபட்டவனை,
உலக மனிதர்களை சுரண்ட
உலகப்போர்களை நடத்திய உலகம்
குறை சொல்லத் தகுதியில்லை!

அஹிம்சை ஹிம்சைகளின்
எல்லைகளை அறிந்தவர்கள் பாரதிகள்
எங்கே, எது, எவ்வளவு, எப்படி, ஏன்,...
என்பது பாரதிக்குத் தெரியும்! 

‘தான் வாழ மற்ற மனிதர்களை 
அழித்தால்தான் முடியும்,
நிரூபணம் இன்றி அழிப்பது 
தவறு இல்லை, திறமை’
என்ற கொள்கை உடையவன்
'உயிர்களின் பாதுகாப்பு' என்ற 
போலிக் கருணையை எங்களுக்கு 
சொல்லித்தரத் தேவை இல்லை.  

யாம் அறிவோம் பாரதிகள்,
உலகில் யாரையும் விட நன்றாக
காருண்யம் எது என்று !

அன்புடன் அழைக்கிறோம் 
உங்களையும் உலகமே...
கற்க வாரீர்  ஆணவத்தை விட்டு விட்டு....


[ ஜல்லிக்கட்டினை உயிரின சித்திரவதை என்ற PeTAவின் வழக்கிற்கு பதில்... ]

0 comments:

Post a Comment