முடக்கத்தான் கீரை - தொக்கு

Leave a Comment

தேவையானவை
முடக்கத்தான் கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் உரித்தது - 1 கப்
தக்காளி - 3 பெரியது
புளி - பெரு நெல்லியளவு
பச்சை அல்லது வரமிளகாய் - 8
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணை - தேவைக்கு
கடுகு ,வெந்தயம் - தலா 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

செய்முறை - 
முடக்கத்தான் கீரையை ஆய்ந்து ஆற வைக்கவும்.இஞ்சி,வெங்காயம்,தக்காளி எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.வெந்தயம்,கடுகு இரண்டையும் வறுத்து
பொடிக்கவும். வாணலியில் சிறிது எண்ணை விட்டு மிளகாய்,புளி,கீரை,வெங்காயம்,தக்காளி,இஞ்சி எல்லாவற்றையும் வதக்கி ஆறவைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வாணலியில் நல்லெண்ணை
விட்டு,கடுகு தாளித்து,அரைத்த விழுதை போட்டு ,பெருங்காயத்தூள்,கடுகு வெந்தயத்தூள் இரண்டையும் சேர்த்து,உப்பு சேர்த்து வதக்கவும்.எண்ணை கசிந்து வந்ததும் இறக்கி ஆற வைத்து எடுத்து வைக்கவும்.

தொட்டுக் கொள்ளவும்,சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

முடக்கு வாதம் தீர்க்கும் முடக்கத்தான்.வீக்கம்,வலிகள் நீங்கும்.
30 முதல் 1 மணி வரை


0 comments:

Post a Comment