“நாங்க கல்யாணம் செய்துகொண்டு 15வருஷமாச்சு, எங்களுக்கு குழந்தையே இல்லை, இதுவரை 100டாக்டரிடம் போய்விட்டோம், 100 ஜோதிடர்கிட்ட போயிட்டோம் , 1000கோயிலுக்குப் போயிட்டோம். எந்தப் பிரயோஜனமும் இல்லை. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு குருஜீ, வாழ்க்கையே ரொம்பவும் வெறுமையா இருக்கு. யாராவது குழந்தை என்ன படிக்கிறான்னு கேட்டா என்ன சொல்றதுன்னே தெரியலை. உலகத்துல யார் யாருக்கோ குழந்தை இருக்கு . எனக்கு ஏன் இல்லைன்னு நெனைச்சா அழுகையா வருது குருஜீ. எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் . நீங்கதான் ஒரு நல்ல தீர்வா சொல்லணும்!”
குருஜீ சொன்னார்.
“முதல்ல நீங்க உடம்பை
, ஆரோக்யமா வச்சுக்கணும் அப்பதான் குழந்தையும் பிறக்கும். அந்தக்குழந்தையும்
ஆரோக்யமா இருக்கும்”
சரிங்க குருஜீ,
நீங்க என்ன சொன்னாலும் கேட்போம்.
“தினசரி ஏதாவது
ஒரு பழம் சாப்பிடனும்.”
ஓஹோ
தினசரி ராத்திரி
11மணிக்குள்ள தூங்க போகணும். தினசரி எட்டு மணிநேரமாவது தூங்கனும்.
நேரமே பத்தாதுங்க
குருஜீ, வேலை அதிகமா இருக்கு.
“புலிக்க வெச்ச
மாவு உடம்புக்கு ரொம்பவும் கெடுதல். மாதம் ஒருநாள் தான் இட்லி தோசை சாப்பிடலாம்.”
அப்படின்னா
காலையிலும் ராத்திரியும் என்னதான் குருஜீ சாப்பிடறது
கம்பு, கேஷ்வரகு,
வரகு, திணை,... போன்ற தானியங்களில் செய்யப் பழகிக்கொண்டு செய்யணும்.
ஓ, அப்படியா.
ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
“குக்கரில்
சமைக்கக் கூடாது. பாத்திரத்தில் சோறாக்கி கஞ்சியை வடித்துவிட்டுதான் சாப்பிடனும். தினசரி
அரிசிக் கஞ்சி ஸ்டார்ச் உடம்புக்கு நல்லதில்லை.”
ஓ, அப்படியா.
ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
“பருப்பு, காய், சாம்பார்,
குழம்பு,.. இதையும் குக்கரில் சமைக்கும்பொது அதிக அழுத்தம் வெப்பத்தில்
சத்தெல்லாம் அழிந்துவிடும். உணவு வெறும் சக்கையாகிவிடும். அதனால் இதையும் குக்கரில்
சமைக்கக் கூடாது. பாத்திரத்தில்தான் சமைக்கணும்,”
ஓ, அப்படியா.
ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
மைதா உடம்புக்கு
ரொம்பவும் கெடுதல். அது ஆரோக்கியத்தியே அழிச்சிடும். உடனடியா மைதா சாப்பிடறதை
விடனும்.
குருஜீ நாங்க
மைதாவை சாப்பிடறதே இல்லையே
மைதான்னா மைதாவில
செஞ்ச பிஸ்கட், புரோட்டா, ப்ரட், ஸ்வீட், ..... எல்லாம்தான்.”
ஓ, அப்படியா.
ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
ரீபைண்ட்
செய்யப்படாத எண்ணையில் தான் சமையல் செய்யனும். ரீபைண்ட் எண்ணை ஆரோக்கியத்துக்கே
எதிரி. அதில தானிய என்னைக்கு பதிலா பெட்ரோலியம் கழிவு மினரல் என்னைதான் இருக்கு. அது
ரொம்பவும் கெடுதல்.
அப்படியா,
ரீபைண்ட் என்னை மட்டும்தானுங்க குருஜீ மார்க்கட்டில கிடைக்குது.
எங்காவது ஒரு
கடையில செக்கு என்னை, அல்லது மில் என்னைன்னு சொல்லி விப்பாங்க. கண்டுபிடிக்கணும்.
ஓ, அப்படியா.
ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
ருசிக்காக புளியை
ரொம்பவும் சாப்பிடக்கூடாது. அதிகபக்ஷம் ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு ஒரு
புளியங்கொட்டை விதை அளவிற்கு சாப்பிடலாம்.
ஓ, அப்படியா.
ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
உணவுப் பொருளை ப்ரிட்ஜில
வச்சுட்டா அதனுடைய கெமிகல் அமைப்பு மாறிடுது. அது முக்கால்வாசியும் விஷமா ஆயிடுது.
அதனால வீட்டுல பிரிட்ஜே கூடாது.
ஓ, அப்படியா.
ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
மிக்சர் மாதிரி
என்னைப் பலகாரங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. அதுக்குன்னு இருக்குற பண்டிகை
நாட்களிலோ, மாதம் ஒரு நாளோ மட்டும் சாப்பிடலாம்.
ஓ, அப்படியா.
ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
சின்ன சின்ன உடல்
கஷ்டத்துக்கெல்லாம் உடனே ஆங்கில டாக்டர் ஆங்கில மருந்துன்னு சாப்பிடகூடாது. ஆங்கில
மருந்து நோய் வலியை குறைத்துக் காட்டி உள் உறுப்புக்களை அழித்துவிடும். பாரம்பரிய
தீர்வுகளை கையாளனும். கொஞ்சம் வலிகளையும் தாங்கிப் பழகனும்.
தினசரி ரெண்டு
முறை வீட்டில சாமி அறையில விளக்கேத்தி வெச்சு இறை வழிபாடு பண்ணனும். ‘இறைவா நீ
கொடுத்த் உலகம். நீ கொடுத்த் வாழ்க்கை. இதனை சிரமம் இல்லாமல் , உடல் மனக்
கஷ்டங்கள் இல்லாமல் நடத்தி உன்னையே பத்திரமாய் வந்துசேர நீதான் அருள் செய்யணும்’ன்னு
மனப்பூர்வமா பிரார்த்திக்கணும்.
ஓ, அப்படியா.
ரொம்ப கஷ்டமாச்சே. குகுஜீ நாங்க குழந்தை வேணும்ன்னு யோசனை கேட்டா நீங்க என்னென்னமோ
சொல்றீங்க.
அப்பா, முதலில
நாம ஆரோக்யமா வாழனும். அப்போது குழந்தை பிறந்தா அந்தக் குழந்தையும் ஆரோக்யமா
இருக்கும். அதேபோல அந்தக் குழந்தைக்கும் ஆரோக்ய
உணவைக் கொடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தையும் ஆரோக்யமாக வளரும். அதேபோல அந்தக்
குழந்தைக்கும் ஆரோக்ய உணவை தயாரிக்கக் கற்றுக்கொடுத்தால் அவன் வளர்ந்து அவனது
குழந்தைக்கும் சொல்லித்தர முடியும். இல்லைன்னா எல்லாம் நோயாளி பரம்பரையாவே
ஆயிடுமே.”
குருஜீ, இதெல்லாம்
அந்தக் காலத்துல முடியும். இந்தக் காலம் மாறிப் போச்சு. இப்போ இதெல்லாம்
முடியாதுங்க குருஜீ, கொஞ்சம் காலத்தையும் புரிஞ்சி அனுசரிச்சு போங்க, சொல்லுங்க.
அப்பா அந்தக்
காலத்துல வாயல சாப்பிட்டாங்க, கீழால வெளிக்கி போனாங்க. இந்தக் காலத்திலையும் அப்படிதானே
எல்லோருமே செய்யறாங்க . அப்பறம் என்ன அந்தக் காலம் இந்தக் காலம். உண்மையிலேயே மாறித்தான்
போச்சுன்னா இதிலும் மாத்தி செய்யேன்.
அந்தக் காலத்தில சேற்றில்
விளைஞ்ச தானியத்தையும், காய்கறியையும் சாப்பிட்டாங்க. இந்தக் காலத்துல நீ வேணும்னா
கம்ப்யூட்டர் சிப்ஸை வாங்கி சாப்பிடேன்.
குருஜீ, நீங்க இன்னும்
மாடர்னா ஆகலை . இன்னும் காட்டுமிராண்டிகளின் உகத்திலேயே இருக்கீங்க. நீங்கல்லாம் என்னைக்குத்தான்
திருந்துவீன்களோ.
“அறிவுகெட்ட பிசாசுகளே,
உங்களுக்கெல்லாம் குழந்தை ஒரு கேடு. நல்லவேளை உங்களுக்கு குழந்தை பிறக்கலை.
பொறந்திருந்தா அவனை நோயாளியாக்கி சித்திரவதை பண்ணி கொலையே பண்ணியிருப்பீங்க. உங்க கிட்ட
ஒரு ஜீவன் மனுஷனா பொறந்து கஷ்டப் படறதுக்கு ஒரு நாய்க்கு பொறந்து ஆரோக்கியமா இருந்துட்டு
போகலாம். சோம்பேறிப் பசங்களா. தன்னை ஆரோக்கியமா வெச்சுக்க முயற்சி செய்ய முடியாத குத்துக்
கல்லுகளுக்கு குழந்தை ஒரு கேடா? என்னத்தடா நீங்கல்லாம் காலேஜில போயி படிச்சிங்க.
குப்பையை. அந்தப் பசங்களும் உங்க வாழ்க்கையில மண்ணை வாரிப் போட்டுட்டாங்க.
நீங்க பதிலுக்கு
மண்ணை வாரிப்போட ஒரு குழந்தைவேற கேட்குது உனக்கு. படுபாவிப் பசங்களா.
இப்படி
சோம்பேறியா ஆக்கறதுக்காடா உங்க அப்பனும் ஆத்தாவும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி லக்ஷ
லக்ஷமா செலவு செஞ்சி படிக்க வெச்சாங்க. படிச்சவன்கர பேர்ல வம்சத்தோட
ஆரோக்கியத்தியே அழிக்கிரீங்களே. நீங்கல்லாம் நல்லாருப்பீங்களா டா லூசுப் பசங்களா....”
குருஜீ முதலில
நாகரீகத்தை கத்துகீங்க. அது தான் நாட்டுக்கு நல்லது.
நாகரீகம்னா
என்னப்பா முதல்ல அத சொல்லு?
நாகரீகம்னா - அழகா
டீசண்டா ட்ரஸ் பண்ணனும், ஷூ போடணும் , டை கட்டனும், அழகா டீசண்டா பேசணும். அழகா
டீசண்டா வண்டி வெச்சுக்கணும். அழகா டீசண்டா வீடு வெச்சுக்கனும்.
அது சரி , அப்போ
உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் எல்லாம்....
அதைத் தவிர
உடம்பு மனசுல்லாம் எவ்ளோ வேன்ம்னாலும் குப்பையா இருக்கலாம் , நோய் பிடிச்சு
இருக்கலாம் . ஏன்னா அதுதான் வெளியில தெரியாதே. அசிங்கம் ஏதும் வெளியில தெரியாம
இருக்கலாம். தப்பில்ல. உள்ள இருக்குற உடம்பும் மனசும் எவ்வளவு குப்பையா இருந்தாலும்
தப்பில்ல. ஏன்னா அதான் வெளியில தெரியாதே. இதுக்கு பேருதான் நாகரீகம் . அதனாலதான்
நம்ம நாட்டு நீதி மன்றம் கூட பாருங்க நிரூபிக்க முடியிற மாதிரி குற்றம் செஞ்சாதான்
குற்றம்ங்குது. நிரூபிக்க முடியாத மாதிரி செஞ்சா குற்றம் இல்லைங்குது. இதையெல்லாம்
நீங்க என்னைக்குதான் புரிஞ்சிக்குவீங்களோ.
உங்களை பார்க்க
வந்தது முதலில் எங்க தப்புன்னு சொல்லிக்கொண்டே, தனது டையை டீசன்ட்டாக
சரிசெய்துகொண்டு, டீசண்டாக ஷூவைப் போட்டுக்கொண்டு, டீசன்ட்டான காரில் ஏறிக்கொண்டு,
டீசன்ட்டான ரோட்டில் டிரைவ் செய்தார்கள் டீசன்டான டாக்டரைப் பார்க்க....
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப
டீஈஈஸன்ட்டான கபில்!
0 comments:
Post a Comment