येषां न विद्या न तपो न दानं ज्ञानं न शीलं न गुणो न
धर्म:।
ते मर्त्यलोके भुवि भारभूता मनुष्यरूपेण मृगाश्चरन्ति॥
ते मर्त्यलोके भुवि भारभूता मनुष्यरूपेण मृगाश्चरन्ति॥
ஏஷாம் ந வித்யா ந தபோ ந தானம்
ஞானம் ந ஶீலம் ந குணோ ந தர்மஃ
தே மர்த்ய-லோகே புவி-பார-பூதாஃ
மனுஷ்ய-ரூபேண ம்ருகாஶ் சரந்தி
ஞானம் ந ஶீலம் ந குணோ ந தர்மஃ
தே மர்த்ய-லோகே புவி-பார-பூதாஃ
மனுஷ்ய-ரூபேண ம்ருகாஶ் சரந்தி
Those who are devoid of knowledge,
austerity, charity, wisdom, morality, virtue and righteousness are virtually
animals living in the garb of human beings, and burdening the Earth.
யாருடைய வாழ்வில் ஆத்ம ஜ்ஞானம்
இல்லையோ, தவம் இல்லையோ, தானம்
இல்லையோ, தெளிவான அறிவு இல்லையோ, நன்னெறி
இல்லையோ, நற்குணம் இல்லையோ, கடமை
நிறைவேற்றல் இல்லையோ, அவர்கள் மனித உருவத்தில் வாழும் மிருகங்கள். இவ்வுலகில்
பூமிக்கு பாரமாகவே வாழ்பவர்கள்.
இதை, நான்
சொல்றேன்னு நினைச்சுக்காதீங்கங்க. நம்ம பாட்டனுக்கு பாட்டன்கள் எல்லாம் இவைகளை
எல்லாம் கடைபிடித்து வாழ்ந்துட்டு, அதன்
பலனை பார்த்துட்டு, அப்புறம் சொன்னது.
“ம்ம்ம்ம்ம்ம்....என்ன
பண்றது? அந்தக் காலத்துல அவங்கல்லாம் விவரம் இல்லாம அறிவாளியா
வாழ்ந்துட்டாங்க.... நாம விவர்ர்ர்ரர்ரமா முட்டாளாவே வாழ்ந்து, வாழ்க்கையை
என்ஜாய் பண்ணிக்கலாம்!”
சரி சரி,...
நீங்க நினைச்சது என் காதில விழுந்துடுச்சு. அப்படியே
இருங்க. அப்படியே உங்க புள்ளைங்களையும் கொஞ்சம் முட்டாளாவே வளத்துடுங்க....
“கொஞ்சம்
என்ன நிறையவே ஆக்கிடுவோம். என் புள்ளைங்க ஆச்சே.... விடுவேனா என்னை விட
திற்ற்ற்ற்றமையான முட்டாளா ஆக்கிட்டுதானே விடுவேன் , எவ்வளவு
கஷ்டப்பட்டாலும் சரி.”
ஓகே ஓகே இதுக்கு பேருதான் விவரம், திறமை...யா...
ஓகே ஓகே எஞ்ஜாய்... இது மாதிரி விஷயத்தைஎல்லாம் திரும்பவாவது படிச்சு சிந்திச்சு
டைம்மை வேஸ்ட் பண்ணிடாதீங்க.... ஆல் தி பெஸ்ட்....
“தேங்க்
யூ.... அப்பாடா , நல்லவேளை விட்டுட்டீங்க.... புடிச்சிப்பீங்களோன்னு
பயந்துகிட்டே இருந்தேன்... நீங்கதான் நல்ல்ல்ல்ல்ல்ல பெருசு....”
ஐ....
0 comments:
Post a Comment