இருக்கும்
கடவுளை காணவிடாமல், மற்றவர்களைத் தடுத்துக்கொண்டு இருப்பவன், 'மனித உருவில்
இருக்கும் திருட்டு அயோக்கிய காட்டு மிராண்டி'.
‘கடவுளை நீ காட்டினாலும் நான் ஒத்துக்கொள்ளவேமாட்டேன்’ என்பவன் 'காட்டுமிராண்டி'
‘கடவுளைப்பற்றியெல்லாம்
எனக்கு எதுக்கு பேச்சு’ என்று வாழ்பவன் மனித உருவில் இருக்கும் விலங்கு
‘இந்த
உலகிற்கு காரணமான ஒரு கடவுள் யாரோ எங்கோ இருக்கத்தான் வேண்டும்’ - என்று உணர்வுடன்
வாழ்பவன் 'மனிதன்'.
‘இந்த
உலகில் கண்ணுக்குப் புலனாகும் ஸ்தூல விஷயங்கள் இருக்கின்றன, அவைகள் நியதிகளுடன்
இயங்குகின்றன’ - என்று புரிந்துகொண்டவன் 'புறவிஞ்ஞானி'.
‘இந்த
உலகில் கண்ணுக்குப் புலனாகா ஸூக்ஷ்ம விஷயங்கள் இருக்கின்றன, அவைகள் நியதிகளுடன்
இயங்குகின்றன’ - என்று புரிந்துகொண்டவன் 'அகவிஞ்ஞானி'.
‘இந்த
உலக நிகழ்வுகளுக்கு காரணமே இல்லை. இவைகள் எல்லாம் யதேச்சையே’ - என்று நம்பி வாழ்பவன் கண்ணிருந்தும் குருடன் - 'அஞ்ஞானி'
‘இந்த
வெற்றிகளுக்கும் காரணங்களுக்கும் கடவுள்தான் காரணம்’ என்பதை பார்க்க முடிபவன்
அறிவாளி.
‘இந்த
வெற்றிகளுக்கு நான்தான் காரணம் , இந்த சிரமங்களுக்கு மற்றவர்கள்தான் காரணம்’ என்று
நினைப்பவன் 'அறிவிலி'.
‘உலக
நிகழ்வுகளுக்கெல்லாம் பொருத்தமான ஏதோ காரணம் கடவுளிடம் இருக்கத்தான் வேண்டும்.
அவைகள் எல்லாம் என்றுமே யாருக்குமே முழுவதும் தெரிய முடியாது. தெரியவேண்டிய
அவசியமும் இல்லை.’ என்று புரிந்து கொண்டவன் 'அறிஞன்'.
‘உலகம்
கெட்டுவிட்டது, கடவுளெல்லாம் இந்த உலகத்தை கண்டுகொள்வதில்லை. நானும் இங்கு நியாயமாக
வாழ முடியாது.’ -என்று வாழ்பவன் 'மடையன்'.
‘நியாயமாக வாழவேண்டிய அவசியமெல்லாம் எனக்கு
இல்லை, என் தவறுகளை யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி , நிரூபிக்க முடியாதபடி வாழ்ந்துகொள்வேன்’
-என்று வாழ்பவன் மாங்காய் மடையன்.
‘கடவுள்
என்னை கண்டுகொள்ளவில்லை, நான் தான் என்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்று
நம்புபவன் 'ஏமாளி'.
‘கடவுளிடம்
நான் ஏன் செல்லவேண்டும். என் சிரமங்களை நானே தீர்த்துக்கொள்வேன்’ என்று வாழ்பவன் 'கோமாளி'.
‘கடவுளே உலகை படைத்து நிர்வகிக்கிறார். அவரது
நிர்வாகத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. அதனால் எனக்கும் வரக்கூடாதது வரவேவராது.
வரவேண்டியது நிச்சயம் வரும்’ -என்று வாழ்பவன் 'நிம்மதி'.
‘என்னிடம்
தோல்வி வராது. நான் சாதித்தே தீருவேன். முடியாது என்பதே என் அகராதியில்
இருக்கக்கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்வேன்.’ என்று
வாழ்பவன் 'முரடன்'.
‘ஏன்தான்
உலகம் இப்படி இருக்கிறதோ, ஏன்தான் என் விதி இப்படி இருக்கிறதோ, ஏன்தான்
எனக்குமட்டும் இப்படி எல்லாம் நடக்கிறதோ, ஏன்தான் நான் பிறந்தேனோ, ஏன்தான் நான்
இப்படி இருக்கிறேனோ,....’ என்று வாழ்பவன் 'முணுமுணுத்தான்'
‘நீ
ஏன்தான் இப்படி இருக்கிறாயோ, நான்தான் அப்பவே சொன்னேனே கேட்டியா, நீ எப்பவும்
இப்படித்தான், நீ திருந்தவே மாட்டே, நீ உருப்படவே மாட்டே, நீ ஏன்தான் பிறந்தியோ ,
நீ ஏன்தான் வந்து சேர்ந்தியோ,....’ என்று வாழ்பவன் 'முணுமுணுக்கவைத்தான்'.
‘நான்
வெற்றியடைய வேண்டும். நான் புகழடைய வேண்டும். அதற்காக யாரையும் கெடுப்பேன்.
யாரையும் அழிப்பேன். மற்றவரைப்பற்றி எனக்குக் கவலை இல்லை’ என்று வாழ்பவன் கொடூரன்.
அவர்
கொடுத்த வாழ்க்கை, அவர் கொடுத்த உலகம், அவர் கொடுத்த உறவுகள், அவர் கொடுத்த நாள்,
அவர் கொடுத்த கடமைகள், அவர் கொடுத்த சாதனங்கள், அவர் கொடுத்த திறமைகள், அவர்
கொடுத்த இயலாமைகள்,... இவைகளை வைத்துக்கொண்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு
செய்வோம் போதும் - என்று வாழ்பவன் 'அமைதி'.
இந்தப்
பட்டியலை வைத்துக்கொண்டு, தான் எங்கே இருக்கிறேன், அடுத்து என்னவாக வாழ இனி என்ன செய்யவேண்டும்
என்று யோசிப்பவன் 'யோக்யன்'.
இந்தப்
பட்டியலை வைத்துக்கொண்டு, இவன் எங்கே இருக்கிறான், அவன் எங்கே இருக்கிறான், என்று மற்றவர்களைப்பற்றியே
யோசிப்பவன் 'அயோக்யன்'.
0 comments:
Post a Comment