தீபாவளி பண்டிகையை பெறுமையா கொண்டாடுங்கோ - இதையும் கொஞ்சம் பொறுமையா படிச்சுட்டு......

Leave a Comment
‘பண்டிகை’ என்றால் ‘பண்படுத்தும் கொண்டாட்டம்’ என்று பொருள்.

ஒருவன் வாழ்வை நடத்த எத்தனையோ விஷயங்களைக் கற்கவேண்டி உள்ளது. பணம் சம்பாதிப்பது எப்படி என்பதற்கும் மேல் நிறையவே உள்ளன. ஏனென்றால் பணம் இருந்து பண்படாதவர்களை நமக்குப் பிடிப்பதில்லையே.

சிறு சிறு விஷயங்களில் இருக்கும் பக்குவம் உண்மையில் பெரிய கவர்ச்சி. பணம் குறைவுதான் என்றாலும் பக்குவம் உள்ளவர்களை யாருக்கும் பிடிக்கிறது; மேலும் பக்குவம் உள்ளவர்களும் பல விஷயங்களை மிகவும் அழகாகக் கையாளுகிறார்கள். அது அவர்களுக்கும் பல சிரமங்களைக் குறைக்கிறது, மற்றவர்களுக்கும் சிரமத்தைக் குறைக்கிறது.

அப்படி ஒருவனைப் பக்குவமானவனாக திறமையானவனாக கவர்ச்சியானவனாக ஆக்குவதற்காக நம் முன்னோர்கள் ஏற்படுத்திய சாதனங்களில் முக்கியமான ஒன்று  பண்டிகை.

எப்படி என்றால்.... இப்படி புரிந்துகொண்டு செய்தால் அது உண்மையில் பண்டிகை...

பண்டிகை முக்கியமாக 21 வயதுக்கு உள்ளே உள்ளவர்களுக்காகத்தான். அவர்களுக்கு இந்தப் பக்குவங்களை ஏற்படுத்தத்தான்.





சாதாரண நாட்களிலும் நாம் பக்குவப்படுத்த பல கார்யங்களை செய்கிறோம் என்றாலும்கூட, இதற்கு என சில முக்கிய குறிக்கோள்கள் இருக்கின்றன. அவைகளைப் பார்ப்போம்.

சாதாரண நாட்களில் சிறுவர்கள் அவர்களது படிப்பு, விளையாட்டு,... போன்ற விஷயங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள் பெரியவர்களும் கூட தொழில், போன்ற பல விஷயங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது பூர்த்திசெய்ய முடியாத பல விஷயங்களை பூர்த்திசெய்வது ஒரு நோக்கம்.

பண்டிகை சிறுவர்களின் நாள். அன்று அவர்களை அடிக்கவோ, திட்டவோ, கண்டிக்கவோ முடியாது. முடிந்தவரை பெரிய அறிவுரைகளையும் தவிர்க்கவேண்டும். பேசவேண்டிய விஷயங்கள் இருந்தால் , தவறு இல்லை தள்ளிவைக்கவேண்டும் .

பல விதமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளை வளர்ப்பது திறமைகளையும் குணங்களையும் வளர்ப்பது இதில் ஒரு அங்கம்.

பண்டிகை சம்பத்தப்பட்ட பல வேளைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தி பழக்கவேண்டும்.

உதாரணமாக, பண்டிகைக்கு உரிய பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்குதல், பண்டிகைக்கு உரிய பலகாரங்களைத் தயாரித்தல், பண்டிகைக்காக வீட்டினைத் தூய்மை செய்தல், சமையல் செய்தல், பூஜை அறையினை தூய்மை செய்தல், ஸ்வாமி படங்களுக்கு அலங்காரம் செய்தல், பூஜை செய்தல், விருந்தினரை உபசரித்தல், அன்னம் பரிமாறுதல், சாப்பிட்ட இடத்தை தூய்மை செய்தல், உறவினர்களுடன் அளவளாவுதல் [ பேசுதல் , அரட்டை அடித்தல் ], .... இவைகளை எல்லாம் அவர்களின் வயதுக்கு ஏற்ப அவர்களை ஈடுபடுத்தி செய்ய வைக்கவேண்டும்.

நாம் 5 நிமிடத்தில் செய்யும் வேலைகளை அவர்கள் செய்ய அரை மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். பரவாயில்லை, நாம் பொறுமையாக அவர்களுடன் இருந்து அவர்களைப் பாராட்டி ஊக்குவித்து மெல்ல மெல்ல செய்யவைக்கவேண்டும், நாமும் பொறுமையாக அவர்களுக்கு ஏற்ப உடன் வேலைகளை செய்யதுகொண்டே. நாமும் அவர்களுடன் வேலைகளை செய்திருந்தாலும் அவர்கள் செய்ததாகத்தான் கணக்கு! அது அவர்களுக்கு தைர்யத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

அவர்களின் செயல்களில் குறைகள் இருந்தால் கண்டுகொள்ளக்கூடாது, நிறைகளைக் கண்டுபிடித்து கட்டாயம் பாராட்டவேண்டும் - முடிந்தால் மற்றவர்களிடமும் - இந்த இடத்தில் உறவினர்களின் முக்கியத்துவம் வருகிறது - கவனிக்கவும்.

இந்த நாளில் அவர்களுக்கு - சிக்கல்களில் , விபத்துக்களில் மாட்டச்செய்யாத - சிறு சிறு தவறுகளை செய்யவோ தோல்விகளை சந்திக்கவோ அனுமதி இருக்கிறது.  

பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லுதல்... போன்ற வேலைகளில் குழந்தைகளும் உடன் வந்தால்..... 1. அவர்களுக்கு கஷ்டமாக இருக்குமே - என்று பெரியவர்கள் வீட்டிலேயே விட்டு விட்டுச் செல்கின்றனர். 2. தமக்கு கஷ்டமாக இருக்குமே - என்றும் பல பெரியவர்கள் வீட்டிலேயே விட்டு விட்டுச் செல்கின்றனர். 

யாருக்கும் கஷ்டம் என நினைக்காது அழைத்துச் செல்லவேண்டும். அது அவர்களுக்கு கல்வி. வழி கேட்டல், தரம் பார்த்தல், விலை பேசுதல், சிரமங்களைத் தாங்குதல், எதிர்பாராத சூழ்நிலைகளில் முடிவெடுத்தல், ... போன்று  பல அனுபவங்களை சம்பாதிக்கிறார்கள். இவைகளெல்லாம் பள்ளியில் யாரும் சொல்லித்தருவதில்லை. 21 வயதிற்குப் பின் பெரியோரைச் சாராது வாழவேண்டியவர்கள். மற்ற நாட்களிலும் இவைகளை சொல்லித்தர , கற்க - அந்த அளவிற்கு சௌகர்யங்கள் கிடையாது. பண்டிகைகள் இதற்கென்றே இருக்கும் நாட்கள். 

ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். சிறுவர்களும் கூட இவைகளை சிரமாகப் பார்ப்பது கிடையாது. அவர்களுக்கு, கற்பதில் விருப்பம். சிரமங்களைத் தாங்குவதில் ஒரு உற்சாகம் உண்டு. சிரமப்பட்டு சுற்றிவிட்டு வந்த பின் கதை கதையாக அளப்பார்கள். அப்படிப் பேசவேண்டும். அதை நாம் ஊக்குவிக்கவேண்டும். இவற்றில் அவர்கள் வளர்கிறார்கள். 

அன்றைய தினத்தில் அவர்களது விருப்பங்கள், செயல்கள், முடிவுகள், ... அனைத்திற்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும். அவர்களின் பல செயல்பாடுகளை ‘எவ்வளவு பணத்திற்குள் என்பதை பெரியவர்கள் சொல்லவேண்டி இருக்கலாம், ஆனால் ‘எதனை’ என்பதை சிறுவர்களின் முடிவுக்கே விடவேண்டும். அதேசமயம், அவர்களின் முடிவுகளில் அங்கீகரிக்க முடியாத தவறுகள் என்றால், இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சொல்லித்தரவேண்டும் - அன்புடன் - பண்டிகை என்பதால் அவர்களை கண்டிக்கவோ வருத்தப்படவைக்கவோ கூடாது - அதனால் இது பெரியவர்களுக்கும் ஒரு பயிற்சி. அதற்கு ஏற்ப எப்படி பேசி சூழ்நிலையை சீர்செய்வது என்று கண்டுபிடிக்கவேண்டும்.


பண்டிகை சாராத, பெரியவர்களுக்கு உரிய, மற்ற முக்கிய வேலைகள், பேச்சுக்கள், சர்ச்சைகள் அனைத்தையும் பண்டிகை முடிந்தபின் செய்ய வசதியாக தள்ளிவைத்துக்கொள்ளவேண்டும். ஆள் கிடைத்ததால் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது.

கொண்டாதுவது எப்படி என்பதில் அல்லது வேலைகளில் 21 வயதுக்கு உள்ளே உள்ளவர்களுக்கு முக்கியத்துவம், பொழுதுபோக்கு அம்சங்களில் 13 வயதுக்கு உள்ளே உள்ளவர்களுக்கு முக்கியத்துவம், அளவலாவுதலில் [ பேசுதல் , அரட்டை அடித்தலில் ] 6 வயதுக்கு உள்ளே உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் என்பதைப் புரிந்து இருக்கவேண்டும் .

இந்த விஷயங்களில் பெரியவர்கள் அன்று முன்னுரிமை எடுக்ககூடாது. அவர்களது லீலைகளுக்கு துணையாக இருந்து, அவர்கள் வேறு எதுவும் சிரமங்களில் சிக்க மாட்ட வாய்ப்பு இல்லை என்பதை கண்காணித்து உறுதிசெய்துகொண்டு அமைதியாக இருக்கவேண்டியது.

சிரியவரிகள் சிரமங்களில் மாட்டாமல் இருக்க தேவையான இடத்தில் தேவையான விதிகளை சொல்லித்தரவேண்டும். அதேசமையம், அந்த எல்லைகளை சிறிய அளவில் அவர்கள் மீறும்போது -பாதிப்பு இல்லை என்னும் பக்ஷத்தில் - கண்டிக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருக்கவேண்டும்.

மொத்தத்தில் பண்டிகை என்றால் தான்தான் மகாராஜா, மகாராணி என்பதுபோல சிறுவர்கள் மனதில் உணரவேண்டும், அதற்கு என்ன செய்வது என்று பெரியவர்கள் புரிந்து நடந்துகொள்ளவேண்டும்.


பண்டிகை தினங்களில் முடிந்தவரை சிறுவர்கள் நிறைய உறவினர்கள் பெரியவர்களிடம் சென்று நமஸ்காரம செய்து ஆசி பெற சொல்லித்தரவேண்டும், ஊக்கம்தரவேண்டும். ஏனென்றால் , அந்த நாளில் பிரச்சினைகள் தூர வைக்கப்பட்டுள்ளதால், அன்று பெரியவர்கள் அளிக்கும் அசீர்வாதத்திர்க்கும் சக்தி அதிகம், சிறுவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் அந்த ஆசிகள் அன்று அவர்களுள் பலனை ஏற்படுத்துவதும் அதிகம்!

அதே போன்று , அந்த பண்டிகை சார்ந்த நாட்களில் குழந்தைகளின் கையால் ஏதாவது யாருக்காவது தானம் செய்வது நல்லது. அன்று செய்தால் அவர்களுக்கு புண்ணியம் மிகவும் அதிகம்.

அதே போன்று பண்டிகை சார்ந்த நாட்களில் செய்யும் வழிபாட்டிக்கும் பலன் மிகவும் அதிகம். அன்று கவனமாக பொறுமையாக வழிபாடு செய்யவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும். 

குழந்தைகள் கடகடவென வளர்ந்து விடுவார்கள். 21 வயதுக்குள் கொடுப்பதுதான் பண்புக்கல்வி. அதிலும் மிகவும் முக்கியமான காலம் 13 வயதுக்குள் அதிலும் மிக மிக முக்கியமான காலம் 6 வயதுக்குள். 

ஒவ்வொரு பண்டிகையும் வேறு வேறு முக்கிய சடங்குகளை உடையதாக இருக்கின்றன. அவைகளை எடுத்துச் செய்யும்போது வேறு வேறு அனுபவங்களும் பக்குவங்களும் வருகின்றன. ஒரு பண்டிகையோ ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகின்றது. ஆக சில ஆண்டுகளே நம் கையில் இருக்கின்றன, இவைகளை சொல்லித்தர. 

பெரியவர்களுக்கும் இப்படி சொல்லித்தருவதில் சிரமம் இருக்கிறது . உண்மை. ஆனால் இப்படி ஒரு கடமை இருப்பதை மனதில் வைத்துக்கொண்டால், அதற்க்கு ஏற்ப சிந்தித்தால் அதில் உள்ள கஷ்டங்கள் நமக்கு சுமையாக இருக்காது. 

அதே சமையம் , இப்படி கொண்டாடுவதால், குழந்தைகள் விரைவில் பக்குவமாக நடந்துகொள்ளத் துவங்குவதை நீங்கள் பார்க்கலாம். மேலும் பொறுப்புணர்ச்சியும், திரமைகளும்கூட ஏராளமாக வளருவதைப் பார்ப்பீர்கள்! இந்த எல்லாப் பலன்களுக்கும் பண்டிகைதான் ஒரு வாய்ப்பு!  

நினைவில் வையுங்கள் - பண்டிகையில் ஏற்படும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் சிறுவர்களின் வாழ்வில் மிக முக்கியமான மைல் கற்கள். அவைகள் மிக ஆழமான பண்புப்பதிவுகளை மனதில் ஏற்படுத்துகின்றன !

அந்தக்காலத்தில் குழந்தைகள் 21 வயது வரை குரு குலத்தில் வாழ்ந்தார்கள். இந்தக் கண்ணோட்டங்களுடன் குருஜியும் சொல்லிக்கொடுத்தார். அதற்க்கு ஏற்பவே அவரது குடும்பமும் வாழ்க்கையும் கட்டமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று பெற்றோர்களும் பெரியவர்களும்தான் பண்டிகை நாட்களில் குருஜீயாக இருக்கவேண்டி உள்ளது! :) அந்தக் கடமைகளையும் செய்து அவர்களும் உயரலாம், நீங்களும் உயரலாம். 

பண்டிகை நாட்களில்.... குழந்தைகள் சிஷ்யர் - பெற்றோர்கள் குருஜீ ! 

பண்டிகையை - நன்கு கொண்டாடுவோம் - நன்கு பயன்படுத்துவோம் - இனைந்து உயருவோம் !

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்துக்கள்.....

உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் - இந்த செய்தி-கிப்டையும் ஷேர் செய்து - வாழ்த்துக்களை சொல்லலாமே ! 

0 comments:

Post a Comment