சுயநலம் நல்லதா கெட்டதா...

Leave a Comment
தான் - குடும்பம் - சமுதாயம் இவை மூன்றும் பிரிக்க முடியாதவைகள்.








ஒருவர் தனது குருநாதரிடம் கூறினார், சமுதாயம் எனக்கு எதுவும் செய்யவேண்டாம். நானும் சமுதாயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை., எனக்கு அந்தக் கடமையும் இல்லை.  நான் உழைக்கிறேன். சம்பாதிக்கிறேன். என் பணம்  சாப்பிடுகிறேன். நீங்கள் எனது உயர்வுக்கு சொல்லிக்கொடுங்கள் செய்கிறேன். எனக்கு விருப்பமில்லாத  சமுதாய நன்மையெல்லாம் எனக்கு சொல்லித்தரவேண்டாமே.



அவரிடம் குருநாதர் சொன்னார், "அப்பா, அப்படி நீ உண்மையில் உன் பணத்தில் மட்டுமே வாழ்பவன் என்றால், நீ உன்னுடைய எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு , போய் செவ்வாய் கிரகத்தில் குடியிரு. அதுதான் நியாயமான செயல்." என்றார்.



தான் - குடும்பம் - சமுதாயம் இவை மூன்றில் ஒன்றை அழித்து இன்னொன்றை நன்றாக வைக்க முயற்சிப்பது நல்லது இல்லை. ஏனென்றால், ஒன்றின் அழிவு நடக்கும்போதே இன்னொன்றின் அழிவும் துவங்கிவிடுகிறது. அது உடனே தெரியாமல் இருக்கலாம் , பிறகு கொஞ்சம் நாள் கழித்து வெளிப்படும்.

பலர் சில நேரங்களில் நினைக்கிறார்கள், சமுதாயத்தை ஏமாற்றி, அல்லது சமுதாயத்தை தொல்லை செய்தாவது என் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறேன் என்று, அல்லது என்னைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறேன் என்று.

 இன்னும் பலர் சில நேரங்களில் நினைக்கிறார்கள், குடும்பத்தை ஏமாற்றி, அல்லது குடும்பத்தை தொல்லை செய்தாவது என்னைக் காப்பாற்றப் போகிறேன் என்று, அல்லது சமுதாயத்தைக் காப்பாற்றப் போகிறேன் என்று.

 இன்னும் பலர் சில நேரங்களில் நினைக்கிறார்கள், தன்னை அழித்துக்கொண்டு,   குடும்பத்தை காப்பாற்றப் போகிறேன் என்று, அல்லது சமுதாயத்தைக் காப்பாற்றப் போகிறேன் என்று.

இந்த ஆறில் எதுவுமே தவறுதான். அதுமட்டுமல்ல, ஆச்சர்யம் - அனால் உண்மை -  இந்த ஆறில் எதற்குமே வாய்ப்பு இல்லை.

ஒருவன் எதற்கு துரோகம் செய்கிறான் என்பது முக்கியமில்லை. அவன் துரோகம் செய்யும் சக்தி உள்ளவன் = அழிவை செய்யும் கக்தி உள்ளவன் . அது ஒன்றே போதும்.

அது எதனை என்பது பிறகு வருவது. அது இன்று ஒரு திசையில் பாய்கிறது. நாளை அதே கத்தி எந்த திசையிலும் பாயும் சக்தியை உடையது.

இப்போது, நன்கு பலமாக்கப்படுகிறது, பட்டை தீட்டப்படுகிறது, வெறி ஏற்றப்படுகிறது ஒரு திசையை நோக்கி, நாளை அது திசை மாறினால்....

நிச்சயம் மாறும்....

அதேபோல மூன்றில் ஒருவிஷயத்தின் நன்மையைப்பற்றி சிந்திக்கும்போது கூட, அது குறைந்தது மற்ற இரண்டுக்கும் தொல்லை செய்யாத விதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம், மற்ற இரண்டுக்கும் நன்மை செய்யும்விதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள முடிந்தால் மிகவும் அருமை!

அதுதான் நல்லது.......... - இல்லை;
அதுதான் - பாதுகாப்பானது!

வேறு வழியே இல்லை,.......
இது தான் நம் எல்லோரின் தலை எழுத்தும் - நமக்குப் பிடித்திருந்தாலும் சரி , பிடிக்கவில்லை என்றாலும் சரி!

இவைகள் எல்லாம் தேவை இல்லாதவைகளைப் போலத் தோன்றும் - முன் பிறவி மறு பிறவி , புண்ணிய - பாபம், சுவர்க்கம் - நரகம்,... இவைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டால். ஆனால் இவைகள் எல்லாம் உண்மை! இவைகளைப் பற்றிய உண்மைகளை ஒருவனால் கற்க முடியும். கற்பதே நல்லது - மூன்றுக்கும்!

நினைவில் வைக்கவேண்டிய ஒரு சூத்திரம்  -
ஒரு விஷயம் உண்மையாக இருந்து அதனை ஒருவன் பார்க்கத் தவறினால் - அந்த உண்மைக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஆனால் அதனைப் பார்க்கத் தவரியவனுக்கே நஷ்டம்!


உதாஹரனமாக, எரிந்துகொண்டு இருக்கும் அடுப்பில் அமர்ந்திருக்கும் தோசைக்கல் சுடும் என்பது ஒரு உண்மை.... அதனை ஒருவன் பார்க்கத் தவறினால் ஏற்கத் தவறினால்- அந்த உண்மைக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஆனால் அதனைப் பார்க்கத் தவறியவனுக்கே நஷ்டம்!

இந்த ஆய்வில் தேர்ச்சி பெற்ற ஒரு சுயநலம் தவறே இல்லை...
அதாவது...
மற்ற இரண்டையும் தொல்லை செய்யாத சுயநலத்தில் குற்றம் இல்லை!
அதே போல தனக்கு அழிவைத்தரும் பொதுநலமும் நல்லதே இல்லை!!

0 comments:

Post a Comment