டீசன்டான ஒரு மாடர்ன் குழந்தை வேண்டும்....

Leave a Comment


“நாங்க கல்யாணம் செய்துகொண்டு 15வருஷமாச்சு, எங்களுக்கு குழந்தையே இல்லை, இதுவரை 100டாக்டரிடம் போய்விட்டோம், 100 ஜோதிடர்கிட்ட போயிட்டோம் , 1000கோயிலுக்குப் போயிட்டோம். எந்தப் பிரயோஜனமும் இல்லை. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு குருஜீ, வாழ்க்கையே ரொம்பவும் வெறுமையா இருக்கு. யாராவது குழந்தை என்ன படிக்கிறான்னு கேட்டா என்ன சொல்றதுன்னே தெரியலை. உலகத்துல யார் யாருக்கோ குழந்தை இருக்கு . எனக்கு ஏன் இல்லைன்னு நெனைச்சா அழுகையா வருது குருஜீ. எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் . நீங்கதான் ஒரு நல்ல தீர்வா சொல்லணும்!”



குருஜீ சொன்னார்.
“முதல்ல நீங்க உடம்பை , ஆரோக்யமா வச்சுக்கணும் அப்பதான் குழந்தையும் பிறக்கும். அந்தக்குழந்தையும் ஆரோக்யமா இருக்கும்”
சரிங்க குருஜீ, நீங்க என்ன சொன்னாலும் கேட்போம்.
“தினசரி ஏதாவது ஒரு பழம் சாப்பிடனும்.”
ஓஹோ
தினசரி ராத்திரி 11மணிக்குள்ள தூங்க போகணும். தினசரி எட்டு மணிநேரமாவது தூங்கனும்.
நேரமே பத்தாதுங்க குருஜீ, வேலை அதிகமா இருக்கு.
“புலிக்க வெச்ச மாவு உடம்புக்கு ரொம்பவும் கெடுதல். மாதம் ஒருநாள் தான் இட்லி தோசை சாப்பிடலாம்.”
அப்படின்னா காலையிலும் ராத்திரியும் என்னதான் குருஜீ சாப்பிடறது
கம்பு, கேஷ்வரகு, வரகு, திணை,... போன்ற தானியங்களில் செய்யப் பழகிக்கொண்டு செய்யணும்.
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
“குக்கரில் சமைக்கக் கூடாது. பாத்திரத்தில் சோறாக்கி கஞ்சியை வடித்துவிட்டுதான் சாப்பிடனும். தினசரி அரிசிக் கஞ்சி ஸ்டார்ச் உடம்புக்கு நல்லதில்லை.”
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
“பருப்பு, காய், சாம்பார், குழம்பு,.. இதையும் குக்கரில் சமைக்கும்பொது அதிக அழுத்தம் வெப்பத்தில் சத்தெல்லாம் அழிந்துவிடும். உணவு வெறும் சக்கையாகிவிடும். அதனால் இதையும் குக்கரில் சமைக்கக் கூடாது. பாத்திரத்தில்தான் சமைக்கணும்,”
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
மைதா உடம்புக்கு ரொம்பவும் கெடுதல். அது ஆரோக்கியத்தியே அழிச்சிடும். உடனடியா மைதா சாப்பிடறதை விடனும்.
குருஜீ நாங்க மைதாவை சாப்பிடறதே இல்லையே
மைதான்னா மைதாவில செஞ்ச பிஸ்கட், புரோட்டா, ப்ரட், ஸ்வீட், ..... எல்லாம்தான்.”
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
ரீபைண்ட் செய்யப்படாத எண்ணையில் தான் சமையல் செய்யனும். ரீபைண்ட் எண்ணை ஆரோக்கியத்துக்கே எதிரி. அதில தானிய என்னைக்கு பதிலா பெட்ரோலியம் கழிவு மினரல் என்னைதான் இருக்கு. அது ரொம்பவும் கெடுதல்.
அப்படியா, ரீபைண்ட் என்னை மட்டும்தானுங்க குருஜீ மார்க்கட்டில கிடைக்குது.
எங்காவது ஒரு கடையில செக்கு என்னை, அல்லது மில் என்னைன்னு சொல்லி விப்பாங்க. கண்டுபிடிக்கணும்.
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
ருசிக்காக புளியை ரொம்பவும் சாப்பிடக்கூடாது. அதிகபக்ஷம் ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு ஒரு புளியங்கொட்டை விதை அளவிற்கு சாப்பிடலாம்.

ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
உணவுப் பொருளை ப்ரிட்ஜில வச்சுட்டா அதனுடைய கெமிகல் அமைப்பு மாறிடுது. அது முக்கால்வாசியும் விஷமா ஆயிடுது. அதனால வீட்டுல பிரிட்ஜே கூடாது.

ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
மிக்சர் மாதிரி என்னைப் பலகாரங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. அதுக்குன்னு இருக்குற பண்டிகை நாட்களிலோ, மாதம் ஒரு நாளோ மட்டும் சாப்பிடலாம்.

ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
சின்ன சின்ன உடல் கஷ்டத்துக்கெல்லாம் உடனே ஆங்கில டாக்டர் ஆங்கில மருந்துன்னு சாப்பிடகூடாது. ஆங்கில மருந்து நோய் வலியை குறைத்துக் காட்டி உள் உறுப்புக்களை அழித்துவிடும். பாரம்பரிய தீர்வுகளை கையாளனும். கொஞ்சம் வலிகளையும் தாங்கிப் பழகனும்.
தினசரி ரெண்டு முறை வீட்டில சாமி அறையில விளக்கேத்தி வெச்சு இறை வழிபாடு பண்ணனும். ‘இறைவா நீ கொடுத்த் உலகம். நீ கொடுத்த் வாழ்க்கை. இதனை சிரமம் இல்லாமல் , உடல் மனக் கஷ்டங்கள் இல்லாமல் நடத்தி உன்னையே பத்திரமாய் வந்துசேர நீதான் அருள் செய்யணும்’ன்னு மனப்பூர்வமா பிரார்த்திக்கணும்.
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. குகுஜீ நாங்க குழந்தை வேணும்ன்னு யோசனை கேட்டா நீங்க என்னென்னமோ சொல்றீங்க.
அப்பா, முதலில நாம ஆரோக்யமா வாழனும். அப்போது குழந்தை பிறந்தா அந்தக் குழந்தையும் ஆரோக்யமா இருக்கும். அதேபோல அந்தக் குழந்தைக்கும்  ஆரோக்ய உணவைக் கொடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தையும் ஆரோக்யமாக வளரும். அதேபோல அந்தக் குழந்தைக்கும் ஆரோக்ய உணவை தயாரிக்கக்  கற்றுக்கொடுத்தால் அவன் வளர்ந்து அவனது குழந்தைக்கும் சொல்லித்தர முடியும். இல்லைன்னா எல்லாம் நோயாளி பரம்பரையாவே ஆயிடுமே.”

குருஜீ, இதெல்லாம் அந்தக் காலத்துல முடியும். இந்தக் காலம் மாறிப் போச்சு. இப்போ இதெல்லாம் முடியாதுங்க குருஜீ, கொஞ்சம் காலத்தையும் புரிஞ்சி அனுசரிச்சு போங்க, சொல்லுங்க.

அப்பா அந்தக் காலத்துல வாயல சாப்பிட்டாங்க, கீழால வெளிக்கி போனாங்க. இந்தக் காலத்திலையும் அப்படிதானே எல்லோருமே செய்யறாங்க . அப்பறம் என்ன அந்தக் காலம் இந்தக் காலம். உண்மையிலேயே மாறித்தான் போச்சுன்னா இதிலும் மாத்தி செய்யேன்.
அந்தக் காலத்தில சேற்றில் விளைஞ்ச தானியத்தையும், காய்கறியையும் சாப்பிட்டாங்க. இந்தக் காலத்துல நீ வேணும்னா கம்ப்யூட்டர் சிப்ஸை வாங்கி சாப்பிடேன்.

குருஜீ, நீங்க இன்னும் மாடர்னா ஆகலை . இன்னும் காட்டுமிராண்டிகளின் உகத்திலேயே இருக்கீங்க. நீங்கல்லாம் என்னைக்குத்தான் திருந்துவீன்களோ.
“அறிவுகெட்ட பிசாசுகளே, உங்களுக்கெல்லாம் குழந்தை ஒரு கேடு. நல்லவேளை உங்களுக்கு குழந்தை பிறக்கலை. பொறந்திருந்தா அவனை நோயாளியாக்கி சித்திரவதை பண்ணி கொலையே பண்ணியிருப்பீங்க. உங்க கிட்ட ஒரு ஜீவன் மனுஷனா பொறந்து கஷ்டப் படறதுக்கு ஒரு நாய்க்கு பொறந்து ஆரோக்கியமா இருந்துட்டு போகலாம். சோம்பேறிப் பசங்களா. தன்னை ஆரோக்கியமா வெச்சுக்க முயற்சி செய்ய முடியாத குத்துக் கல்லுகளுக்கு குழந்தை ஒரு கேடா? என்னத்தடா நீங்கல்லாம் காலேஜில போயி படிச்சிங்க. குப்பையை. அந்தப் பசங்களும் உங்க வாழ்க்கையில மண்ணை வாரிப் போட்டுட்டாங்க.
நீங்க பதிலுக்கு மண்ணை வாரிப்போட ஒரு குழந்தைவேற கேட்குது உனக்கு. படுபாவிப் பசங்களா.
இப்படி சோம்பேறியா ஆக்கறதுக்காடா உங்க அப்பனும் ஆத்தாவும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி லக்ஷ லக்ஷமா செலவு செஞ்சி படிக்க வெச்சாங்க. படிச்சவன்கர பேர்ல வம்சத்தோட ஆரோக்கியத்தியே அழிக்கிரீங்களே. நீங்கல்லாம் நல்லாருப்பீங்களா டா லூசுப் பசங்களா....”

குருஜீ முதலில நாகரீகத்தை கத்துகீங்க. அது தான் நாட்டுக்கு நல்லது.

நாகரீகம்னா என்னப்பா முதல்ல அத சொல்லு?

நாகரீகம்னா - அழகா டீசண்டா ட்ரஸ் பண்ணனும், ஷூ போடணும் , டை கட்டனும், அழகா டீசண்டா பேசணும். அழகா டீசண்டா வண்டி வெச்சுக்கணும். அழகா டீசண்டா வீடு வெச்சுக்கனும்.

அது சரி , அப்போ உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் எல்லாம்....
அதைத் தவிர உடம்பு மனசுல்லாம் எவ்ளோ வேன்ம்னாலும் குப்பையா இருக்கலாம் , நோய் பிடிச்சு இருக்கலாம் . ஏன்னா அதுதான் வெளியில தெரியாதே. அசிங்கம் ஏதும் வெளியில தெரியாம இருக்கலாம். தப்பில்ல. உள்ள இருக்குற உடம்பும் மனசும் எவ்வளவு குப்பையா இருந்தாலும் தப்பில்ல. ஏன்னா அதான் வெளியில தெரியாதே. இதுக்கு பேருதான் நாகரீகம் . அதனாலதான் நம்ம நாட்டு நீதி மன்றம் கூட பாருங்க நிரூபிக்க முடியிற மாதிரி குற்றம் செஞ்சாதான் குற்றம்ங்குது. நிரூபிக்க முடியாத மாதிரி செஞ்சா குற்றம் இல்லைங்குது. இதையெல்லாம் நீங்க என்னைக்குதான் புரிஞ்சிக்குவீங்களோ.
உங்களை பார்க்க வந்தது முதலில் எங்க தப்புன்னு சொல்லிக்கொண்டே, தனது டையை டீசன்ட்டாக சரிசெய்துகொண்டு, டீசண்டாக ஷூவைப் போட்டுக்கொண்டு, டீசன்ட்டான காரில் ஏறிக்கொண்டு, டீசன்ட்டான ரோட்டில் டிரைவ் செய்தார்கள் டீசன்டான டாக்டரைப் பார்க்க....
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டீஈஈஸன்ட்டான கபில்!














கதை: நல்லவர்கள்‬ ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

Leave a Comment
நல்லவர்கள்‬ ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

கெட்டவர்கள்‬ ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்?


போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இக் கதை. 



*சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். 

அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.


வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும்  பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்துகொண்டன. 


அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தனது இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் குணமுடையவனாக அவனிருந்தான். அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.


இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்துவிட்டது. கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்
மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். 


சிரித்துக்கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான். போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். 


வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத  செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். 


இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி. இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். 


உடல்ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன் வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. 


உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான். அனைத்தையும் பொருமையுடன் கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். 


இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய். நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது. என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன், மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும். வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும். அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு
புதையலாக கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.


நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.


தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான். ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை
எனப்படுவது. அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

முற்பிறவி மறு பிறவிகள் உண்மையே. இந்த வினைப் பயன்கள் எல்லாம் மற்ற பிறவிகளில்தான் பலனைத் தரும்! 

தமிழன் என்றால் அதன் பொருள் பாரதியே, ஹிந்துவே...

Leave a Comment
உண்மையில் தமிழன் என்றால் அதன் பொருள் பாரதியே, ஹிந்துவே...

தமிழன், மலையாளி, குஜராத்தி,.. போன்ற வார்த்தைகள் நமது வம்சமான பாரதி வம்சத்திலிருந்து நம்மைப் பிரித்துப் பார்ப்பதற்காக கிடையாது. 

செட்டியார் என்றால், வெள்ளாளர் என்றால், ஐயர் என்றால், ஐயங்கார் என்றால், வண்ணார் என்றால், வன்னியர் என்றால், முதலியார் என்றால், நாடார் என்றால், .... இவர்களெல்லாம் தமிழர்களா இல்லையா

ஆமாம் என்றால் தமிழர்களும் பாரதிகள்தான் அல்லது ஹிந்துஸ்தானிதான் அல்லது ஹிந்துதான். 


தமிழர் என்று ஒரு இனம் ஒட்டுமொத்த பாரத இனத்துடன் இனைந்து இல்லாமல் வாழ்ந்ததற்கான சரித்திரமே கிடையாது. 
ancient india map
Bharat India before arrival of British
வெள்ளையன் நம் நாட்டில் நிலையாக இருந்து நம்மிடம் இருந்து நிலையாக நிரந்தரமாக திருடி வாழ செய்த பலவித சதிகளுள் பலமான ஒன்று நம்மை பிரித்து நமக்குள் சண்டை மூட்டி வைப்பது. 


அதற்காக, நாம் மொழியால் வேறுபட்டவர்கள், அதனால் வேறு வேறு;
நாம் ஜாதியால் வேறுபட்டவர்கள், அதனால் வேறு வேறு;  
நாம் உணவால் வேறுபட்டவர்கள், அதனால் வேறு வேறு;  
நாம் உடையால் வேறுபட்டவர்கள், அதனால் வேறு வேறு;  
நாம் தட்பவெப்பத்தால்  வேறுபட்டவர்கள், அதனால் வேறு வேறு;....  
என்று பொய்களை பொய்யாக ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களுடன் அவன் காலத்தில் பள்ளிக்கூடங்களில் திணித்தான். அதே பாடத்திட்டம் இன்றும் தொடருவது வேதனையே. இது அறிவு உள்ள பாராளுமன்றத்திற்கோ , நேர்மையுள்ள நீதிமன்றத்திற்கோ அழகு இல்லை. 

மிகப்பெரிய பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்தாலும், வித விதமான தட்பவப்பத்திற்கு இடையில் வாழ்ந்தாலும்... நாம் மிக அறிவுப்பூர்வமான , பவித்ரமான ஒரே வாழ்க்கை லட்சியத்தை உடையவர்கள்,....
அதற்காக வாழ்வை அர்ப்பணித்து ஒரு திசையில் செல்லும் தேசத்தை உடையவர்கள்
அதற்கு ஏற்பவே நமது மொழி , பண்பாடு , கருத்துக்கள் , விருப்பு வெறுப்புக்கள் , படைப்புக்கள் , சாதனைகள் , கல்வி , அரசியல், ஆட்சிமுறை , ராஜ்ய பாலனம் , ராஜ்ய யுத்தங்கள் , ராஜ்ய  நீதிகள் ,  குடும்ப அமைப்பு, குடும்ப நீதிகள் , தனிநபர் வாழ்க்கை அமைப்பு , தனிநபர் நீதி நெறிகள் ,.... என்று அனைத்தையும் அந்த ஒரு குற்றமற்ற வாழ்க்கை லட்சியத்திற்கேற்ப வடிவமைத்துக்கொண்டவர்கள். இதையே நமது சரித்திர ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. 

ஆனால் வெள்ளையன் ஆளும் போது -  நம்மிடத்தில் மேல் கீழ் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து , நமது முன்னோர்களின் மேல்பெரியவர்களின் மேல் மதிப்பைக் குறைத்து வெறுப்பை ஏற்படுத்தி , நமது பண்பாட்டுப் பிணைப்புகளை வீண் என்றும் தொல்லை என்றும் பார்க்க வைத்து, நம்மை சுய நிம்மதி இல்லாதவர்களாக , சுய பலம் இல்லாதவர்களாக , சுய புத்தி இல்லாதவர்களாக ஆக்கி - முதுகெலும்பு இல்லாமல் , தன்மானம் இல்லாமல், சுய கெளரவம் இல்லாமல் , தங்கள் வம்சத்தை நாட்டை தாழ்வாக நினைத்து வெள்ளையர்களை அந்நியர்களை பெரியவர்களாக மதித்து , அவர்களை சார்ந்து வாழ்வதில் நாட்டம் உள்ளவர்களாக , அவர்களுக்கு அடிமை வாழ்வு வாழ்வதில் பெருமை உள்ளவர்களாக ஆக்குவதற்காக - நமக்கு அதற்கேற்ற கல்வியை திட்டமிட்டு கண்டுபிடித்துக் கொடுத்தான். 

அதனைப் படித்தால் நாம் அப்படி ஆகவேண்டும். அந்த வலைக்குள் இருப்பதை பெருமையாக நினைக்கவேண்டும், அதிலிருந்து வெளிவர ஆசைப்படக்கூடாது , அதனை விட்டு வெளிவரவும் முடியக்கூடாது என்பதற்கு ஏற்ப பாடங்களை நயவஞ்சகமாக வடிவமைத்து நமது குழந்தைகளுக்கு கொடுத்தான். 

இந்த சதிவலைக்குள் மாறிய அப்பாவிகளுள் ஒருவர்தான் ஈ.வே.ரா. எனப்படும் ராமசாமி. வெள்ளையனின் இந்த சதிகளை அவர் உண்மை என நம்பினார். அதனை பிரச்சாரம் செய்தார். 

அவர் உண்மையில் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்லவராக இருந்தார். மற்றவர்களின் மேல் கருணை உள்ளவராக இருந்தார். 
ஆனால் ஈ.வே.ரா.வின் நம்பிக்கைகள் அனைத்தும் வெள்ளையனின் சதிக்குள் சிக்கி இருந்தது. அதனால் தமிழர்கள் தனி இனம் என்று பேசத்துவங்கினார். பாரத வம்சத்திற்கு 'கேன்சர்' கட்டியாக வெள்ளையன் ஈ.வே.ராமசாமியை ஆக்கிவிட்டான்.
அவர் நல்லவராகவும் கருணை உள்ளவராகவும் இருந்ததால் அவரது பேச்சுக்களை மக்கள் நம்பினார்கள். 
ஜெயித்தது ஈ.வே.ரா. இல்லை. வெள்ளையன். 


'தமிழ் பண்பாடு மிக உயர்ந்தது' என்றார் ஈ.வே.ரா. மேலும்,  'தமிழர்கள் மிகச்சிறந்த அறிவாளிகள்' என்றார். 
ஆனால் கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்றார் ஈ.வே.ரா.
அறிஞர்களுக்கும் ஆராய்சியாலர்க்ளுக்கும் ஈ.வே.ரா. பற்றி பதில் கிடைக்காமல் புதிராகவே இருக்கும் புதிர் கேள்விகள் ஏராளம். அவற்றில் சில புதிர்கள்....

அப்படி என்றால் ....
திருக்குறளின் துவக்கத்திலேயே கடவுள் வாழ்த்து பாடிய திருவள்ளுவர் காட்டு மிராண்டியா

ஆன்மீகத்தில் அறிய உண்மைகளைக் கண்டு பிடித்து இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து காட்டிய திருமூலர் காட்டுமிராண்டியா
இப்போது நம் கண்முன் கருணைக்கடலாக வாழ்ந்து கடவுளைக் காட்டிய வள்ளலார் காட்டுமிராண்டியா
ஈ.வே.ரா.வை விட தமிழில் சிறந்த  புலவர்களாக இருந்து மிகச்சிறந்த நூல்களை எழுதிய நாயன்மார்கள் , ஆழ்வார்கள் எல்லோரும் காட்டுமிராண்டியா?
சுதந்திரப் போராட்டத்தில் மிகப் பெரும் எழுச்சிப் பாடல்களை பாடி ஊக்கம் தந்த சுப்ரமணிய பாரதியார் காட்டுமிராண்டியா
சுதந்திரப் போராட்டத்தில் மிகப் பெரும் தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் என்ன  காட்டுமிராண்டியா?
மிகப் பெரும் இன்னல்களைத் தாங்கிக்கொண்டு தீரத்துடனும் வீரத்துடனும் பக்தியுடனும் சுதந்திரத்திற்கு போராடி உயிர்தந்த முத்துராமலிங்கத்தேவர் காட்டுமிராண்டியா
இளம் பருவத்தில் ராஜகுருநாதர்களிடம் வேதம் படித்து அரசியல் படித்து வேத மந்திரங்கள் முழங்க அக்கினிக்கு முன் சத்தியம் செய்து பட்டாபிஷேகம் செய்து , வேத முறைப்படி ஆட்சி செய்த சேர சோழ பாண்டிய மன்னர்கள் எல்லோரும் காட்டுமிராண்டகளா
தஞ்சை பெரியகொவிலைக் கட்டிய பக்தன் ராஜராஜசோழன் காட்டுமிராண்டியா
சுவாமிக்கு அபிஷேகம் செய்ய கங்கை சென்று தண்ணீர் கொண்டுவந்த கங்கைகொண்டசோழன் என்ன காட்டுமிராண்டியா
இவர்கள் எல்லோரும் காட்டுமிராண்டி, ஆனால்,  ஈ.வே.ரா.மட்டும் பெரிய அறிவாளியா
ஈ.வே.ரா.வின் அப்பா, தாத்தா,அவருக்கு தாத்தாஅவருக்கு தாத்தாஅவருக்கு தாத்தாஅவருக்கு தாத்தா, ... எல்லோரும் கடவுள் நம்பிக்கையுடன்தானே வாழ்ந்தார்கள் ? அவர்களும் அப்படியென்றால் காட்டுமிராண்டிகள்தானே
கழுதைக்கு பிறந்தது கழுதையாகத்தானே இருக்க முடியும் ? காட்டுமிராண்டிக்குப் பிறந்த ஒருவனும் காட்டுமிராண்டியாகத்தானே இருக்கவேண்டும்
தனது அப்பா, தாத்தா,அவருக்கு தாத்தாஅவருக்கு தாத்தாஅவருக்கு தாத்தாஅவருக்கு தாத்தா, ... எல்லோரும் கடவுள் நம்பிக்கையுடன் வாழ்ந்தது தவறு, என்று பேசிய ஈவேரா நேர்மையானவர் என்றால் , அந்த வீட்டின் சோற்றினை தின்று வாழ்ந்திருக்கவாவது கூடாது. 
அந்த வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். ஒரு நேர்மையாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் ஏன் வெளியேறவில்லைஅதற்கும் மேல் அவர் பல கோடி மதிப்புள்ள முன்னோர்களின் சொத்தினைப் பெற்றும் வாழ்ந்துள்ளார். வேறு ஒரு கொள்கைக்காக சேர்க்கப்பட்ட சொத்தினை இவர் ஏன் தொடர்ந்து உரிமைகொண்டாடினர், அந்தக் கருத்துக்கு எதிரான கொள்கைக்காக பயன்படுத்தினார்? தனக்கு சம்பாதிக்க கை கால் இருக்கும் பொழுது இவர் ஏன் அவர்களின் சொத்தினை அனுபவித்து வாழ்ந்தார்?...  போன்ற ஆயிரக் கணக்கான கேள்விகள் இன்னமும் அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பதில் இன்றி புரியாததாகவே இருக்கிறது. 

கடவுளை நம்புபவர்கள் காட்டுமிராண்டிகள் என்றால் தனது அந்த காட்டுமிராண்டி முன்னோர்களின் வீட்டில் சாப்பிட்டு வளர்ந்ததுடன், அவர்களின் சொத்தினை வைத்துக்கொண்டு -  அவர்களின் வாழ்க்கை முறைக்கு எதிராக பேசுவது - எப்படி நேர்மையாக இருக்கமுடியும் என்ற கேள்விகளுக்கும் , நேர்மையாக  ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு இன்னமும் புரியாமலேயே இருக்கிறது. 

அதே போல , கடவுளைப் பற்றி பேசிய முஸ்லீம்களையோ, கிருஸ்தவர்கலையோ ஈ.வே.ரா. அவர்கள் ஒருபோதுமே குறை பேசியதே இல்லை. இதுவும் ஏன் என்பது இன்னமும் ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத ரகசியமாகவே இருக்கிறது. 

முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவப் பெண் வைப்புக்கள் ஈ.வே.ரா.வுக்கு இருந்திருக்கலாம் என்றும் , முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்களிடமிருந்து மிகப் பெரிய நிதியை நன்கொடையாக , சட்டத்திற்குப் புறம்பான முறைகளில் பெற்றிருக்கலாம் என்றும் மக்களிடம் பரவலாக சந்தேகங்கள் உலவி வருகின்றன. ஆனால் அவைகள் எதற்கும் இதுவரை ஆதாரம் கிடைக்கவில்லை. 

இந்த விஷயங்களை ஏன் ஈ.வே.ரா. அவர்கள் ரகசியமாகவே வைத்துக்கொண்டார் என்பதும், அவை ரகசியமாக இருக்க என்ன செய்தார் என்ற ஆராய்சிகளும் கூட சமூக விஞ்ஞானத்தில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்ற கருத்தும் உள்ளது. 

அதே சமயம் , இந்த ஒருவரின் வார்த்தைக்கு ஏற்ப , இந்த நீண்ட பாரம்பரியம் உள்ள தமிழ் பேசும் சமுதாயம் இவளவு தூரம் நம்பி சென்றது எப்படி, ஏன் என்பதும், இன்றுவரை உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

ஈவேரா ஒருவரின் கருத்தின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிக்கூட கல்வி  நூல்கள் அச்சாகிவிட்டன. 

அதையே உண்மை என்று நம்பி புதிய தலை முறை கவிஞர்களும் எழுத்தாளர்களும் சொற்பொழிவாளர்களும் உருவாகி விட்டார்கள். 

ஒரு பொய்த் தலைமை இந்த அளவிற்கு எப்படி ஒரு சமுதாயத்தையே பொய்ப் பாதையில் செல்லவைக்க முடிந்தது என்பதும்  இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

இந்தக் கல்வியே உண்மை என்று பள்ளிகளில் குழந்தைப் பருவத்திலேயே திணிக்கப்பட்டு இருந்தாலும் கூட , எந்த ஆதாரங்களும் இல்லாவிட்டாலும் கூட பல இளைஞர்கள்  , இவர்களது பேச்சுக்களை வைத்தே இந்த வாதங்களில் எங்கோ தவறு நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். இது எப்படி முடிகிறது தமிழகத்தில் என்பதும்   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

மேலும், ஏதோ ஒரு சக்தி தமிழக மக்களை  இந்த புனைக் கதைகளிலிருந்து மீட்டு வருகிறது. அவர்களால் தேசமே ஒரு குடும்பம் என்ற உணர்வை விட முடியவில்லை. ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக தமது புனித ஸ்தலங்கள் என்று நாடுமுழுவதும் தீர்த்தயாத்திரை செய்து , நாட்டின் எல்லா மூலை முடுக்குகளுடனும் வாழ்ந்து பழகி, பக்தியுடன் பார்த்து , புகழ்ந்து பேசி , அவைகளை தமது வாழ்வின் ஒரு அங்கமாகவே பார்த்து வரும் மனப்பான்மையை தமிழக மக்களால்  கைவிட முடியவில்லை. அதனால் நாட்டில் எங்கே எந்தப் பகுதிக்கு , அல்லது எந்த மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றாலும் ஒரு உடலைப் போல எழுந்து நிற்கிறார்கள். இது எப்படி முடிகிறது - தமிழகத்தில் -என்பதும்   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

அதேபோல ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்காகவே வாழுகிறேன் என்பவர்கள் கூட , ஆங்கில மோகத்துடன் வாழ்வதை பெருமையாகக் கொண்டு , அதேசமையம், தமிழில் சமஸ்க்ருதம் கூடாது என்று பேசிக்கொண்டு இருந்தாலும் கூட , தங்களது தங்களது குருநாதரான ஈவேராவின் ராமசாமி என்ற சம்ஸ்க்ருத வார்த்தையை இன்னமும் தமிழ்ப் பெயராக மாறாதது ஏன் என்பதும்   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

அது மட்டுமல்ல வீரமணி என்பதில் வீர என்பதும் மணி என்பதும் சமஸ்கிருத வேர் பகுதிகளே. அதே போல கருணாநிதி என்பதில் கருணா என்பதும் நிதி என்பதும் சமஸ்கிருத வேர் பகுதிகளே. இவர்கள் தமது சம்ஸ்க்ருத வார்த்தைப் பெயர்களை இன்னமும் தமிழ்ப் பெயராக மாறாதது ஏன் என்பதும்   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

அதே போல திராவிட என்ற வார்த்தையும் கூட சமஸ்கிருத சொல்லே. இவர்கள் தமது அமைப்புகள் கட்சிகளுக்கு உள்ள பெயரில்  சம்ஸ்க்ருத வார்த்தைப் பகுதிகளை இன்னமும் தமிழில் மாற்றாதது ஏன் என்பதும்   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

அதே போல தன்னை தமிழ் மொழிக் காவலன் என்று சொல்லிகொள்ளும் ஒருவர் தனது ஒரு குழந்தைக்கு சம்ஸ்க்ருத எழுத்தின் துணை இல்லாமல் எழுதவே முடியாத ஸ்டாலின் என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதும்    இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

அதே போல அவர் 'ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளை கற்கவோ பேசவோ வேண்டாம்' என மக்களை ஊக்விக்கும் அதே நேரத்தில் தனது குழந்தைகள் பேரக்குழந்தைகளை தேசிய மொழியாக இருக்கும் ஹிந்தியை கறக்கச் செய்து ஹிந்தியில் தேர்ச்சியுள்ளவர்களாக ஆக்கியிருப்பதும்   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் எல்லாம் ஒன்று கூடி உலகில் ஏதாவது ஒரு தீவினை விலைக்கு வாங்கி அதைத் தமது தனி நாடாக அறிவிக்காமல் , கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் நாட்டில் - ஒரு வம்சம் தமிழ்ப் பேசிய ஒரு காரணத்தை வைத்து - தமிழர்களை கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக ஆக்கி , தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் பெற வேண்டும் - என்ற நெடுக்கு வழியையே - குறுக்கு வழி என்று நம்பியது ஏன் என்பதும்  -   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

கடவுளை நான் பார்த்துள்ளேன் - உனக்கும் காட்டுவேன் என்று சொல்லுபவர்களிடம் இவர்கள் எப்போதுமே செல்லாமல் , அவர்களிடம் அவர்களது வாதத்தை  சோதிக்காமல் , அப்பாவி மக்களிடம் மட்டுமே சென்று வாதம் செய்துள்ளது ஏன் - என்பதும்   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

இவை எல்லாம் நாஸ்திகர்கள் என்று கூறிக்கொண்டு, சமூக சீர்திருத்தம் செய்வதாய் கூறிக்கொண்டு இருப்பவர்களின் நிலை பற்றிய ஆராய்ச்சிகள். 

அதே போல ஆஸ்திகர்களும் கூட நாஸ்திகர்கள் தனித் தமிழ்நாடு பெற வேண்டும் என்பதற்காக புனைக்கப்பட்ட இந்த கதைகளை உண்மை என்று நம்புவது எப்படி என்பதும்    இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

ஏனென்றால்

பாரத சரித்திரத்தில் எந்த மாநிலத்திலும் ஆன்மிகம் என்பது சமஸ்க்ருதத்தை சுற்றியே என்றுமே சென்றுள்ளது. இன்னொன்று, இந்த மாநில அமைப்பே தொன்று தொட்டு வருவதில்லை. அரசாங்கம் வரி வரவு செலவு மற்றும் நிர்வாக வசதிக்காக பிரித்துக்கொண்டு உள்ள ஒரு அமைப்பை எப்படி இவர்கள் இனப் பிரிவின் அடையாளங்கள் என்று நம்பினார்கள் என்பதும்    இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 


அதே போல நாங்கள் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்வோம் என்று கூறும்போது அர்ச்சனை என்பதே தமிழ் வார்த்தை இல்லை. 

அதே போல திருமந்திரம் என்ற பதத்தில் மந்திரம் என்பது சம்ஸ்க்ருதம்

அதே போல சைவ சித்தாந்தம் என்ற பதத்தில் சைவ என்பதும் சம்ஸ்க்ருதம் , சித்தாந்தம் என்பதும் சம்ஸ்க்ருதம். 

அதே போல அதே போல தூய தமிழ் நெறி வழிபாட்டாளர்கள் பயன் படுத்தும் சிவன், கணபதி, பார்வதி, சக்தி, ருத்ராக்ஷம், உத்திராட்சம், விபூதி, குங்குமம், சாமி , அர்சச்சனை, அபிஷேகம், கற்பூரம், அர்ப்பணம், அன்னம், திரவியம், ஆகுதி, திதி, மாதம், வருடம், புதன் , சனி, அமாவாசை, பௌர்ணமி, தீர்த்தம், பிரசாதம் , விரதம், மாங்கல்யம், சிரசு, பாதம், இருதயம், இதயம், நகம்,  பூசை, ஆரத்தி, தக்ஷிணை, குரு, ஆச்சாரியன், ஆசிரியன்,  கும்பாபிஷேகம் , கும்பாபிடேகம்,... போன்ற வார்த்தைகள் எல்லாம் சம்ஸ்க்ருத வார்த்தைகள் அல்லது சம்ஸ்க்ருத வார்த்தைகளின் திரிபுகளே. ஏன் இவர்கள் இப்படிக் குழப்பத்தில் இருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் சம்ஸ்கிருதத்தை பிடிக்கிறார்களா விடுகிறார்களா என்பதும்    இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

அதே போல தமிழ் வருடங்கள் 60இல் எதற்குமே தமிழ் வார்த்தை பெயர் இல்லை, அனைத்துமே சமஸ்க்ருத வார்த்தைகள்தான். அதைவிட சுவையான செய்தி கிழமைகள் 7இல் புதன் , சனி இரண்டுக்குமே தமிழில் பெயர்கள் என்றுமே இருந்ததில்லை. அவைகள் சம்ஸ்க்ருத வார்த்தைகள்தான் . எவ்வளவு காலமாக தமிழில் ஏழு கிழமைகள் பழக்கத்தில் இருக்கிறதோ அவ்வளவு காலமாக தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்து வந்துள்ளது! இதுவும் நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

அதே போல தென்மதுரையை தலைநகராகக் கொண்ட கடல் கொண்ட குமரிக் கண்டம்.  முதல் தமிழ்ச் சங்கம் கொண்ட குமரி நாடு, தமிழ்மட்டுமே உலகில் இருந்த நாடு என்றெல்லாம் சொல்லும்போது, மதுரை என்பதே மது என்ற சம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு, சங்கம் என்பதே சம்ஸ்க்ருத வார்த்தை குமரி என்பதே சம்ஸ்க்ருத வார்த்தை, கண்டம் என்பதும் சம்ஸ்க்ருத வார்த்தையே.  இவைகள் எப்படி அங்கு வந்தன என்பதும்    இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

அதே போல கடல் கொண்ட தமிழ் பேசும் பாரதீயர் வாழ்விலும் சரி பிற்கால தமிழ் பேசுவோர் வாழ்விலும் சரி, வேதம் கற்காத ஒரு தமிழ்க் கவிஞனையோ, வேதம் கற்காத ஒரு தமிழ் மன்னனையோ காட்ட இயலவில்லை. அதே போல சமஸ்க்ருத வார்த்தை ஒன்றுமே இல்லாத ஒரு தமிழ் நூல் என்றும் ஈ.வே.ரா.வுக்கு முன் எந்தக்காலத்திலும் காட்டமுடியவில்லை. இது எப்படி - என்பதும்....   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும் ஆஸ்திகர்களும் சரி, நாஸ்தீகர்களும் சரி, இந்த ஒரு இடம் வரும்போது உண்மையை வெளியில் சொல்ல பயப்படுவது ஏன் - என்பதும்   இன்றுவரை நேர்மையான உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

இப்போதும் நாம் ஒரு சோதனை செய்து பார்க்கலாம் , ஒரு சரியான பட்டிக்காட்டிற்கு , குக்கிராமத்திற்கு செல்லுங்கள், அங்கே அந்த ஊரில் ஒரு வயதானவரிடம் சென்று அவரது மாமனார் முஸ்லீமா கிருஸ்தவரா என்று கேளுங்கள். அந்த கிராம வாசி கூறுகிறார் 'இல்லீங்க அவரும் தமிழர்தானுங்க' என்று.

அப்படி என்றால் என்ன புரிகிறது. மக்கள் 'ஹிந்து' என்ற பொருளில் தான் 'தமிழர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்கள். 

இதை உள்ளூர் அரசியல் வாதிகள், தமிழன் என்றால் இந்தியன் கிடையாது, ஹிந்து கிடையாது என்று தவறாக பயன்படுத்தி மக்களைக் குழப்புகிறார்கள். வரும்தலைமுறையும் இதனையே உண்மை என்று நம்பிக்கொள்கிறார்கள். 

இது நமது எதிர்கால சமூக வாழ்க்கை பாதுகாப்பிற்கு நல்லது கிடையாது. அதனால் அறிவும் விழிப்பும் உள்ள சமூக ஆர்வலர்கள், இனி பாரதி , ஹிந்துஸ்தானி , ஹிந்து என்று சொல்வதும், பேசுவதும், எழுதுவதும், சொல்லித்தருவதுமே பொருத்தாமாக இருக்கும். நம் சந்ததிகளுக்கு நன்மையைத் தருவதாக இருக்கும் என்றும் இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவு. 

தமிழன் தமிழன் என நாம் நம்மைப் பிரித்துப் பார்த்தது போதும். இனி பாரதி என ஹிந்து என ஒன்று படுவோம். இதுவே தமிழன் தமிழனாக வழி. 

வேலி இருக்கும் வரைதான் வயல். வேலி இல்லாவிட்டால் புறம்போக்கு. 


பிரித்துப் பிரித்துப் பேசினோம். நம் குழந்தைகளின் மனம் இன்று புறம்போக்கு ஆகிவிட்டது. வெளிநாடுகள் இன்று அவர்களின் மனதிலிருந்து நெல்லை நீக்கி முல்லை வளர்க்கின்றன. 


ஒன்றுபடுவோம் - பாதுகாப்பாய் வாழுவோம் !




----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்மையையும் உண்மையையும் பேசுவதாக நினைத்துக்கொண்டு அறியாமையில்தான் தமிழன் தன்னைப் பிரித்துப் பார்க்கிறான் என்பதற்கு, தமிழனின் ஒவ்வொரு தமிழ்க் கட்டுரையுமே சான்று! உதாரணத்துக்கு,  எனக்குக் கிடைத்த ஒரு கட்டுரையை  அப்படியே இங்கு சமர்ப்பிக்கிறேன். அவரது கட்டுரையில் அவர் கவனிக்கத் தவறியதால் சிந்தனைத் தவறு நடக்கும் இடங்களை மட்டும் நிறம் மாற்றம் செய்து காட்டியுள்ளேன். 
--------------------------------------------
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.....
( இதை படிக்க 5'து நிமிடம் ஒதுக்குங்கள் )
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்,
என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.
இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.
இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான் நாவலன்தீவு" என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம்.
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".
ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !!
பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது!
தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில் "கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் [ பெரு+அதிகார+அம்]  "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .
இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன்" அகத்தியம்,தொல்காப்பியம்,பூத-புராணம்,மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .
இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. 
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!
இந்திய அரசு வெளிக்கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
வரலாற்று தேடல் தொடரும்....!! 
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே ! 
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே ! 
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! 
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் ! 
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .நன்றி

---------------------------------------

அவரது கட்டுரையில் என்னால் சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டவைகள் சம்ஸ்க்ருத வார்த்தைகள். அவரால் தவிக்க இயலாத சமஸ்க்ருத வார்த்தைகள் நமது குமரிக்கண்ட வாழ்க்கையிலிருந்தே வருகின்றன.  

எது முதலில் தோன்றியது  - என்ற சண்டை இனி வேண்டாம். அது தேவை இல்லாதது. 

ஒரு உண்மை.....
இது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் உண்மை!

சமஸ்க்ருத வார்த்தையே இல்லாத தமிழ் நூலை நாம் பார்க்க முடியவில்லை. 
சமஸ்க்ருத வேத நூல்களை படிக்காத தமிழ் புலவர்களை நாம் காட்ட முடிவதில்லை. 
சமஸ்க்ருத வேதம் படிக்காத தமிழ் மன்னர்களை நாம் காட்ட முடிவதில்லை. 

சமஸ்க்ருதத்தால் தமிழன் வீழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லை.

சமஸ்க்ருதம் இன்றி தமிழன் வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லை. 

ஆராய்ச்சிக்காக கொஞ்சம் சமஸ்க்ருதம் கற்றாலே இந்த உண்மையை பார்க்க முடியும். 
இதனை அவமானமாகவும் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை. நம் முன்னோர் சென்ற பாதை. நமக்கும் நன்மையைத் தரும் பாதை. 
சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழுக்குள் உயர்வுதாழ்வு பார்க்க வேண்டாம். இரண்டும் இணைந்துதான் வளர்ந்துள்ளன. இரண்டும் இணைந்துதான் நம்மை வளர்த்துள்ளன. 
ஒன்றுக்கொன்றும் உதவியே வந்துள்ளன. 

அவைகளுக்குள் வாழ்க்கை லக்ஷியத்திலோ கொள்கைகளிலோ முரண்பாடுகள் இல்லை. 
நாமாக பிரித்து வைக்கவேண்டிய அவசியமும் இல்லை. 

'இரட்டைத் தாய் மொழியர் நாம்என்று பெருமையுடன் சொல்லுவோம். 

நமக்கு தமிழ் ஒரு தாய் , நமக்கு சமஸ்க்ருதம் இன்னொரு தாய். 

இரு தாய் இருந்ததால் நாம் இன்னும் இன்னும் பாதுகாப்பாக வளர்ந்துள்ளோம் 

அதே பாதுகாப்பினை நமது சந்ததிகளுக்கும் கொடுப்போம்! 









___________________________________________________________________


நன்றிகள்: 
http://www.karikkuruvi.com/2014/03/blog-post_18.html

http://www.tamilhindu.com/2009/11/periyar_marubakkam_part20/

http://www.tamilhindu.com/2009/08/subbu-column-28/

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/03/blog-post_3.html