எல்லோரும் அறிவாளிகள்தான்
எல்லோரும் விஞ்ஞானிகள்தான்
மனிதனால் அறியமுடியாத
மனித அறிவு எல்லைக்கு அப்பாற்பட்ட
பல உண்மைகளும் கூட படைப்பில்
இருக்கவே செய்கின்றன
அவைகளை அறியவே
உள்ளுக்குள் தாகம் எழுகிறது
அவைகளை அறிந்தால் அவன்
இன்னும் பல சாதனைகளைச் செய்யமுடியும்
சரியான இடங்களில்
சரியான முடிவினை எடுக்க முடியும்
அவைகளை அறியத்தான் அவன்
பலரை நாடிச் செல்கிறான்
உண்மைகளுக்கு பதிலாக
கிடைத்ததோ அறிவுரைகள்; ஏனெனில்
அவர்களும் அவ்வாறே
தாகத்தில் தவிப்பவர்களே
அந்த தாகத்தை ....
வேதங்களால் தீர்க முடியும்
வேதங்களால் நிச்சயம் தீர்க முடியும்
வேதங்களால் மட்டுமே தீர்க முடியும்
அதனை நம்மால் நிரூபிக்கவும் முடியும்
தேடுவதை நிறுத்த வேண்டாம்
தேடுமிடத்தை மாற்றுங்கள்
வேதங்களில் தேடுங்கள்
ஒரு குருவின் துணையுடன் மட்டும்!
ஒரு பிறவி என்பது
சில காலமே
அது வித வித முயற்சிகளிலேயே
விரயமாக வேண்டாமே
மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களில்
வேதங்களின் துணையை ஏற்றால்
மனித சக்திக்கு உட்பட்ட விஷயங்களில்
அதிக சாதனைகளை செய்ய முடியுமே!
0 comments:
Post a Comment