உடலைப் பேணுவோம் உள்ளத்தைப் பேணுவோம் ... ஏன்?

Leave a Comment
உடலைப் பேணுவோம்
உள்ளத்தைப் பேணுவோம் ... ஏன்?

நமக்கு இரண்டு உடல்கள்

இருக்கின்றன.

ஒன்று பரு உடல்

அல்லது ஸ்தூல உடல்,

இன்னொன்று அரு உடல்
அல்லது சூக்ஷ்ம உடல்.


சுருக்கமாக பேச்சில் இவைகளை

முறையே உடல் என்றும்
உள்ளம் என்றும் கூறுகிறோம்.

இரண்டுமே
வேலை செய்யும் கட்டமைப்புகள்.

இரண்டுமே
அவைகளுக்கு என்று உள்ள

நியதிகளின் படி இயங்குகின்றன.


இரண்டுமே
தான் இயங்கத்தேவையான

சக்தியை
வெளி உலகிலிருந்து
அவை அவைகளின் உணவிலிருந்து

பெறுகின்றன.

ஸ்தூல உடலுக்கு உணவு -

காய்கனிகள் கீரைகள், ...
சூக்ஷ்ம உடலுக்கு உணவு -
பேச்சுகள், எழுத்துக்கள். ...

ஸ்தூல உடலும் தனக்கு கிடைத்த

உணவுக்கு ஏற்ப ஆரோக்யமாக பலமாக

இருக்கிறது. அவ்வாறே...
சூக்ஷ்ம உடலும் கூட தனக்கு கிடைத்த

உணவுக்கு ஏற்ப ஆரோக்யமாக பலமாக

இருக்கிறது.

காய்கனிகள் கீரைகளில் இருந்து
பிரித்து எடுக்கப்பட்ட சத்துக்களே
ஸ்தூல உடலுக்கு சக்தியைத் தருவது.

பேச்சுகள், எழுத்துக்களில் இருந்து
பிரித்து எடுக்கப்பட்ட பொருளே
சூக்ஷ்ம உடலுக்கு சக்தியைத் தருவது.

கிடைத்த உணவிலிருந்து சக்தியை

பிரித்து எடுக்க, அதனை ஜீரணிக்க,

தன்மயமாக்க கட்டமைப்பு உள்ளது -

அந்த உடலுக்குள்ளேயே.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

கெட்டுப்போன உணவு -
தான் கட்டமைக்கும் உடலையும்

கேட்டதாகவேதான்
கட்டமைக்க முடியும்.
பலமற்ற கல் சிமென்டால்

கட்டப்பட்ட கட்டிடம்
பலமின்றிதானே இருக்கமுடியும்.
அவ்வாறேதான்.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

உணவு மேலும் கெடக் கெட
உடலும் மேலும் கெடுகிறது.
தானும் கெட்டு....
தான் அழுகி நாறி

மற்றவர்களின் உடல்களையும்

கெடுக்கிறது.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

அழுகி நாறும் உடல்களுக்கு அருகில்

இருக்கும்போது நல்ல உடல்களும்கூட

அங்கிருந்து வரும் கண்ணுக்குத்

தெரியாத நுண் உயிர் அமைப்புகளால்
பாதிப்பை அடைகின்றன.
தானும் கெடத் துவங்குகின்றன.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

அழுகி  நாற்றமடிக்கத் துவங்கிய

உடலுக்கு தான் நாறும் அளவுக்கு

பாதிக்கப்பட்டு இருப்பது தெரிவதில்லை.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

ஆனாலும் கூட உடல்
மேக்-அப் பொருட்களாலும்,
வாசனை

திரவியங்களாலும் போர்த்தப்பட்டு

உண்மை நிலவரம் மறைக்கப்படுகிறது.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

எனினும் உண்மை நிலவரம்

மறைக்கப்பட்டுதான் உள்ளதே தவிர

மாற்றப்படவில்லை.

மறைக்கப்பட்டதே தீர்வு இல்லை,
மாற்றப்படுவதுதான் தீர்வு.
வேறு வழியே இல்லை.

இருவித உணவுகள் கட்டமைக்கும்

இருவித உடல்களிலும் இதே விதிதான்!

உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
உண்மை நிலை இதுதான்

இரு உடல்களையும் பயன்படுத்தும்

எஜமானன் நீ.
இரண்டுக்கும் தகுதி உள்ள
நல்ல உணவே கிடைக்குமாறு

பார்த்துக்கொள்வது
எஜமானன் ஆன உனது கடமை!

அது உனக்குத் தெரிந்தே இருக்கும்.

ஏனென்றால் ஆடு மாடு, மீன், முதலை

.... ஏன் நாய்கூட 'இது தன் தகுதிக்கு

பொருந்தும் உணவா' என்று
சோதித்தே சாப்பிடுகிறது.
அதனால் உனக்கும் தெரிந்தே இருக்கும்.

ஆனாலும் கூட குழந்தைப் பருவத்தில்,

விபரமரியாப் பருவத்தில் எது உனக்குத்

உள்ள தகுதி உணவு என்று

தேர்ந்தெடுத்து
ஊட்டியதும் கற்றுத் தந்ததும்

பெற்றோர்களே- மாதா பிதாவே

அது பாக்கியத்தின் படியே
அமையமுடியும்.
நாம் என்ன செய்ய முடியும்?

அன்று சாப்பிட்டதற்கு ஏற்பதானே

இன்று உடல் வேலையை

செய்யமுடியும்.
வேறு வழியே இல்லை. .... ஆனாலும் கூட...

உடலின் அதாவது ஸ்தூல உடலின்

குறைபாட்டையும்,
நாக்கின் தேர்ந்தெடுக்கும்
சுவை காணும் கட்டமைப்பின்
குறைபாட்டையும் சீர் செய்ய
ஒரு நல்ல வைத்தியரிடம்
பொருத்தமான மருந்து இருக்கிறது.


அதேபோல ......

உள்ளத்தின் அதாவது சூக்ஷ்ம உடலின்

குறைபாட்டையும்,
மனதின் தேர்ந்தெடுக்கும்
பொருள் காணும் கட்டமைப்பின்
குறைபாட்டையும் சீர் செய்ய
ஒரு நல்ல குருநாதரிடம்
பொருத்தமான உபதேசம் இருக்கிறது.

அவரும் கோட்டை விட்டால்
என்ன செய்வது?
வேறு வழியே இல்லை -

தெய்வம்தான் ஒரே கதி.

ஒரூவனுக்கு மாதா பிதா குரு

மூன்றுமே நன்கு அமைந்துவிட்டால்...

அதற்கு மேல் என்ன பாக்கியம்

வேண்டுமோ?
அப்படிக் கிடைத்தால்

அது தெய்வமே கிடைத்தது போல!

இப்போதும் கூட ...
குறை ஒன்றும் இல்லை.
நீங்களே தெய்வமாக முடியும்!
அது....
நல்ல தகுதி கண்டு தரும் மாதாவாக
நல்ல தகுதி கண்டு தரும் பிதாவாக
நல்ல தகுதி கண்டு தரும் குருவாக
வாழ்வதன் மூலம்

இது மிகப் பெரிய குறுக்கு வழி!

உடல் கோவில் ஆகும் பொழுதில்
உள்ளம் கற்பக்ருகம் ஆகும் பொழுதில்....

இரண்டையும் ஆளும் -
நீ தெய்வம் ஆவாயே !

0 comments:

Post a Comment