பார்மிசை
ஏதொரு நூல் இதுபோலே.....
- தமிழ் மொழித் திலகம் மஹாகவி
சுப்ரமணிய பாரதி
உபநிட நூல் என்பவைகள் பாரதத்தின் பெருமைகளான ரிக், யஜூர், ஸாம, அதர்வண - வேதங்களின் ஞானப் பகுதிகள்.அவைகளின் கருத்துக்களின் அடிப்படையிலான ஆன்மீகப் பயிற்சிகள் கிடைத்தால் மக்கள் தங்கள்
வாழ்க்கையை அருள் நெறியிலும் பொருள் நெறியிலும் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும்
ஆனந்தமாகவும் பூரணமாகவும் நடத்த முடியும்.
ஆன்மீகம் என்பது குடும்பவாழ்விலிருந்து
அப்பாற்பட்டது என்று இல்லாமல்,
குடும்பம் - தொழில் -
சூழ்நிலைகளை கையாளும் ஆளுமைத்தன்மை - மன அமைதி,... ஆகிய
அனைத்து களங்களிலுமே, அவைகளை வெற்றிகரமாக நடத்த உதவும் ஆன்மீக
அணுகு முறைகளை வேதம் கொடுக்கிறது.
விதியினாலும் மதியினாலும் வரும் சிரமங்களை
வெகுவாகக் குறைத்துக்கொண்டும்,
சௌகர்யங்களை
அதிகமாக்கிக்கொண்டும் நிம்மதியாக நம் விருப்பப்படி வாழ்வதற்கான சாதனங்களும் நம்
வேதங்களில் சொல்லப்பட்டு உள்ளன.
வாழ்வில் வருகின்ற சூழ்நிலைகள் மதி & விதி இரண்டாலுமே வருகின்றன. அதனால் அவைகளை கையாளும்போதுகூட - நம்
முயற்சிகள் & தெய்வ சக்திகள் இரண்டின் துணையுடனும் கையாள்வதே
சிறப்பு.
நம் சக்தியால் அன்றி, விதியின் சக்தியால் வந்த மற்றும் வரும் விஷயங்களை, நம் முயற்சிகளால் மட்டுமே கையாள்வது என்பது மிகவும் சிரமமே.
அதனால் அவைகளைக் கொடுத்தவனின் உதவியுடனேயே
அவைகளை கையாள்வதே புத்திசாலித்தனமான அணுகுமுறை ஆகமுடியும், அதற்கு வழிகள் இருக்கின்றன, அவைகளை வேதங்கள்
விரிவாகவும் விஞ்ஞானப் பூர்வமாகவும்,
அனைத்து
சந்தேகங்களுக்கும் பதில்களை அளித்தும் பேசுகின்றன.
அவைகளில் முக்கியமானவைகளை மக்களிடம் சேர்பிக்க 'ரிஷி வேத ஞான யோக பீடம்' என்ற இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீகுரு யோகீந்த்ர பாரதி அவர்களின் சீடர்களால்,
ஆன்மீகத்துறையில் மிகவும் அனுபவம் உள்ளவர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த 'ரிஷி வேத ஞான யோக பீடம்' என்ற அமைப்பானது அபரிமிதமான பயனைத் தரும் இந்த
பாடத்திட்டங்களை நடத்தித் தருவதை பெருமையாகவும் பாக்யமாகவும் நினைக்கிறது.
அவரது இந்த பாடங்கள் வேதங்களின் உபாஸனா காண்டத்தின்
தியான & வழிபாட்டு நுணுக்கங்களை மையமாகக் கொண்டவைகள்.
கற்கவும் பயிற்சி செய்யவும் மிகவும் சுலபமாவைகள். நம்மிடம் குறைந்த நேரமே
கேட்பவைகள் அதேசமயம் அதிக பலன்களை தருபவைகள்.
இவற்றின் துணையுடன் அருளாதாரம் பொருளாதாரம்
இரண்டையும் பெருக்கி, நாம் நமது அருள் வாழ்கை &
பொருள் வாழ்க்கை இரண்டிலுமே சுலபமாக உயர்ந்த சாதனைகளை செய்ய முடியும். ஆனந்தமாக
வாழமுடியும்.
வாழ்க்கையில் பல வித நெருக்கடிகளில் உதவக்கூடியதும், பல வித மன பலஹீனங்களை நீங்கக்கூடியதும், தன்நம்பிக்கையை அதிகரிக்கக்கூடியதும், ஆல்ஃபா நிலையை பலப்படுத்தி புத்துணர்ச்சி
பெறச்செய்யக்கூடியதும், ப்ராணிக் பாடியை
பவர்ஃபுல் ஆக்கக்கூடியதும், பாஸிட்டிவ் வைப்ரேஷன்ஸை
அதிகரிக்கக்கூடியதும், சூழ்நிலைகளை தன்
வசப்படுத்தி ஜெயமடைய செய்யக்கூடியதும், செய்வினை வாஸ்து பிரச்சனைகளால் பாதிக்கப்படாமல்
இருக்கச் செய்யக்கூடியதும், செல்வ வளத்தைப் பெருக்கக்கூடியதும்,
இறை ஆற்றலை பெருக்கக்கூடியதும், வாழ்வில்
எப்பொழுதும் ஆனந்த அலை நிலைத்து இருக்கச் செய்யக்கூடியதும் ஆன பயிற்சி முறைகள்
வேதங்களில் குவிந்து கிடக்கின்றன. அவைகளின் திரிபுகள் உலகில் பல பெரியவர்களால்
சொல்லித் தரப்படுகின்றன. அவற்றின் திரிபுகளே இவ்வளவு நன்மைகளைத்தர முடியும்
என்றால் மூலத்தைக் கற்றவர்கள் நிச்சயமாய் மிகநல்ல பலன்களைத் தர முடியும். அதனால்
அவைகளை வேத ஞானத்தில் சிரந்த ஸ்ரீகுரு அவர்களின் துனையுடன் அவைகளை சமுதாய
நலனுக்காக வழங்கவேண்டும் என்று 'ரிஷி வேத ஞான யோக பீடம்'-ஆனது ஸ்ரீகுரு அவர்களின் ஆசிகளுடன் வகுப்புகளை திட்டமிட்டு எடுத்து நடத்தி வருகிறது.
ஸ்ரீகுரு அவர்களின் தெய்வீக அருள் சக்தி
பலன்களைப் பெற்று வாழ்வில் உயரவும், ரிஷி வேத ஞான யோக பீடதின்
நற்கார்யங்களில் உதவவும் தொடர்பு கொள்ளவும்.
0 comments:
Post a Comment