ஸம்ஸ்க்ருதம் 2 நாளில் - எழுத & படிக்க

Leave a Comment



                                                                          
ஸம்ஸ்க்ருதம் 2 நாளில் - எழுத & படிக்க சனி & ஞாயிறு இரண்டு நாட்களில் . 

ஸம்ஸ்க்ருதத்தில் குறைந்தபக்ஷம் எழுதப் படிக்கவாவது தெரிந்து இருப்பது அவசியமாக இருக்கிறது, நல்லதும் கூட. குடும்பத்திலும்கூட அனைவரும் தெரிந்து வைத்திருப்பது நல்லதே.ஸம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுதவைப்பதிலும், சரியான உச்சரிப்புடன் படிக்கவைப்பதும், சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமான காரியமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசுபவர்களுக்கு.  ஆனால்     ஸ்ரீ குரு யோகீந்த்ர பாரதி அவர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வைக் கண்டுள்ளார்.  பல மாதங்கள் முயற்சி எடுத்தால் வரக்கூடிய இந்த அடிப்படைப் பயிற்சியை இரண்டே நாட்களில் கற்றுக்கொடுத்து விடுகிறார், அந்தப் பலனையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
வெரும் இரண்டே நாட்களில் எழுதவும் படிக்கவும் முடியுமாறு ஒரு புதியமுறை பாடத்திட்டத்ததை வடிவமைத்து நடத்தி வருகிறார்.
பலர் அப்படிக் கற்று பலன் அடைந்துள்ளனர்.
இந்த வகுப்பினை முடிப்பவர்களால் ஹிந்தி, மராட்டி போன்ற மொழிகளையும்  கூட சுலபமாக எழுதவும் படிக்கவும் முடியும்.
சுக்லாம்பரதரம்......, சாந்தாகாரம்...., ஸர்வமங்கள மாங்கல்யே.... போன்ற 14 முக்கிய சுலோகங்கள் ஸம்ஸ்க்ருத்த்தில் தரப்படும். 2ஆவது நாள் அவைகளை நிச்சயமாக படிக்க முடியும். 

பிறகு ஹிந்தி, மராட்டி மொழிகளை புஸ்தகம் மூலமாக தாங்களே சுலபமாகக் கற்க முடியும்.
ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி, மராட்டி போன்ற மொழியில் எழுதி இருப்பதைப் பார்த்தால் இனி தடுமாறி நிற்கும் நிலை இருக்காது.
இரண்டே நாளில் ஒரு இயலாமையைத் துரத்தலாமே....
வாழ்வில் என்று வேண்டுமானாலும் அது உதவுமே....
ஆன்மீகம், வேதம், சாஸ்திர நூல்கள், ஜோதிடம், நியூமராலஜி, வாஸ்து, ரெய்கி, ப்ராணிக் ஹீலிங், பிரமிட் சிகிச்சை, வர்மக் கலை, ஹோமியோபதி, ஸித்தா, ஆயுர்வேதம், கைரேகை, ஊடகம், இலக்கியம், தமிழ், ஆங்கிலம், வடமாநில பிஸினஸ், சிற்பக் கலை, ஓவியக் கலை, டி.டி.பி., டைப்ரைடிங், புஸ்தக வியாபாரம், எழுத்து, வங்கி, ... போன்ற  துறையிலோ விஷயங்களிலோ இருப்பவர்களுக்கு மிகவும் பயன் தரும் பாடத்திட்டம்.
எளிய தங்குமிடம் அளிக்கப்படும், தேவைக்கு முன்பே தெரிவிக்கவும். தாங்களே வேண்டுமானாலும் வேறு ஏற்பாடு செய்துகொள்ளலாம்.          
சனி – மதியம் & இரவு, ஞாயிறு – காலை & மதியம் உணவு அளிக்கப்படும்.
நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள், ஸுலப ஸம்ஸ்க்ருதம் –                 பாடத் திட்ட புஸ்தகம்,... தேவையான மெட்டீரியல்கள் கொடுக்கப்படும்.
தங்குமிடம், உணவு, மெட்டீரியல்கள், வகுப்புகள்,.... அனைத்திற்கும் கட்டணம் ரூ 5000/- மட்டும்.
ஏற்பாடுகள் செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு அவசியம்.
வகுப்புக் கால அட்டவணை
நாள்1: சனிக்கிழமை
காலை    9.30             தேனீர்
10.00 – 11.45      துவக்கம் & வகுப்பு 1
பகல்      11:45 – 12:00      தேனீர்
மதியம்    12.00 – 1.30      வகுப்பு 2
1:30 – 3:00       உணவும் ஓய்வும்
3:00 – 4:30       வகுப்பு 3
மாலை    4:30 – 5:00       தேனீர்
5:00 – 6:00       வகுப்பு 4
6:45             தேனீர்
7:00 – 8:30       வகுப்பு 5
இரவு      8:30             உணவு
10:00            இருளும் துயிலும்
வகுப்புக் கால அட்டவணை
நாள்2: ஞாயிற்றுக்கிழமை
காலை    6:00             தேனீர்
7:00 – 8:30       வகுப்பு 1
8:30 – 9:30       சிற்றுண்டி
10.00 – 11.30      வகுப்பு 2
பகல்      11:30 – 12:00      தேனீர்
மதியம்    12.00 – 1.30      வகுப்பு 3
1:30             உணவும் ஓய்வும்
3:00 – 4:30       வகுப்பு 4
மாலை    4:30 – 4:45       தேனீர்
           4:45 – 5:30       நிறைவு

0 comments:

Post a Comment