பஞ்ச பாண்டவர்களில் இளையவரான சகாதேவன் ஜோதிட புலமையால் மஹாபாரத போரின் விளைவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்திருந்தார்.
ஜோதிட பயன்பாடு:--
உலக கடமைகளை ஆற்றுபவர்கள், குடும்பத்தைப் பராமரிப்பவர்கள், செல்வத்தை ஈட்டுபவர்கள், வாழ்க்கையை சமநிலையுடன் செயல்படுத்த விரும்புபவர்கள், மற்றும் ஆரோக்கியமான வாழ்வில் ஈடுபட நினைப்பவர்களும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்தில் தகுதி வாய்ந்த ஜோதிடர்களை ஆலோசிப்பதால் எவ்வித தீங்கும் இல்லை. நன்மையே.
திருமண பொருத்தம், திருமணத்திற்கு உகந்த காலம், வர்த்தக முதலீட்டின் தன்மை, தொழிலைத் தேர்ந்தெடுப்பது, குழந்தையின் எதிர்கால செயல் நாட்டத்தை அறிவது, இல்லறம் துறவறம் இவற்றைக் கடைப்பிடிப்பதற்கான காலகட்டங்கள், மற்றும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அறிவதற்கும் ஜோதிடம் பலவகையில் பயன்படுகிறது.
விதியின் படி எவ்வளவு சிரமத்தை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ, எந்தவிதத்தில் அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதனை ஜாதகத்தில் பார்க்க முடியும்.
அதனை அறிந்து அதற்க்கு உரிய சிரமத்தை வழிபாட்டில் அதற்குப் பொருத்தமான விதத்தில் நாமே எடுத்துக்கொண்டால் அது அந்த அளவிற்கு லோக வாழ்க்கையில் வரும் சிரமங்களைக் குறைத்துவிடுகிறது. இதற்குப் பெயர்தான் பரிகாரம். இந்த பொருத்தமான பரிகாரத்தை அறிந்து செய்து சிரமத்திலிருந்து விடுபடவும் ஜோதிடம் பயன்படுகிறது.
ஒவ்வொருவரின் வாழ்விலும் விதியிலும் சில விஷயங்கள் சாதகமாகவும், சில விஷயங்கள் பாதகமாகவும் இருக்கின்றன. அவைகளை அறிந்துகொண்டு சாதகமான விஷயங்களைப் பிடித்துக்கொண்டும், பாதகமானவிஷயங்களைளிருந்து விலகிக்கொள்ளவும் ஜோதிடம் பயன்படுகிறது.
கர்தம முனிவருக்கு பிரம்மா உபதேசித்த போது, அவர் தனது மகள்களை குணம் மற்றும் விருப்பத்திற்கு தகுந்தவாறு உரிய மணமகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் (ஸ்ரீமத் பாகவதம் 3.24.15).
அதாவது, திருமண வாழ்க்கைக்கு தம்பதிகளின் குணம் போன்ற பொருத்தங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அப்படி குணம் போன்ற பொருத்தங்களைக் கண்டுபிடிக்க ஜோதிடம் பயன்படுகிறது.

0 comments:
Post a Comment