ஒரு ஞானியின் தியானம்
கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானிமுன் வந்தது.
சுண்டெலியை பார்த்து ஞானி, 'உனக்கு என்ன வேண்டும்' என்று
கேட்டார்.
'பூனையை கண்டு எனக்கு பயமாய்
இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், எனக்கு நிம்மதி' என்றது எலி.
ஞானி பிறகு எலியை பூனையாக மாற்றினார்.
இரண்டு நாட்கள் கழித்து
மீண்டும் அப்பூனை வந்தது, ஞானிமுன் நின்றது.
பூனையை கண்ட ஞானி, 'இப்போது என்ன பிரச்சனை'
என்று கேட்டார்.
'என்னை எப்போதுமே நாய்
துரத்துகிறது. என்னை நாயாக கொஞ்சம் மாற்றிவிடுங்களேன், உதவியாக இருக்கும்' என்றது
பூனை.
பிறகு பூனையை, நாயாக மாற்றினார் அந்த ஞானி.
சில நாட்கள் கழித்து அந்த
நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது.
'இப்போது உனக்கு என்ன
வேண்டும்' என்று கேட்டார் ஞானி.
'புலியை பார்த்து விட்டேன்
ஒருநாள், அதிலிருந்து புலியை நினைத்து நினைத்து பயம் என்னை எப்போதும் வாட்டி
எடுக்கிறது.
தயவு செய்து என்னை புலியாக
மாற்றிவிடுங்கள்' என்றது நாய்.
ஞானி, நாயை புலியாக மாற்றினார்.
சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்றது புலி.
'இப்போது உனக்கு என்ன
வேண்டும்' என்று கேட்டார் ஞானி.
'இந்தக் காட்டில் வேடன்
என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுங்கள்' என்றது புலி.
பிறகு புலியை வேடனாக
மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான்.
'இப்போது உனக்கு என்ன
வேண்டும்' என்று கேட்டார் ஞானி.
'எனக்கு எதிரியான தொல்லை
செய்யும் மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது...' என்று சொல்ல ஆரம்பித்தான்.
உடனே இடைமறித்த ஞானி, 'சுண்டெலியே உன்னை எதுவாக
மாற்றினால் என்ன?
உன் பயம் உன்னை விட்டு
போகாது.
உனக்கு சுண்டெலியின்
இதயம்தான் இருக்கிறது.
நீ சுண்டெலியாக
இருக்கத்தான் லாயக்கு' என்று கூறி, சுண்டெலியாகவே மீண்டும் ஆக்கிவிட்டார் அந்த ஞானி.
0 comments:
Post a Comment