ஹிந்து மத சீர்திருத்தவாதிகளே வாழ்க வளர்க .... உங்களால்தான் ஹிந்து மதத்தை அழிக்க முடியும்...

Leave a Comment


ஓ , பாரதத் தாயே
மெக்காலேயின் விஷம்
குருடாக்கி வருகிறதே
உன் குழந்தைகளை....

உனது பேரறிவுக் குழந்தைகளின் மூலம்
அன்று நீ வளர்த்துக் காத்த பண்பாடு
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளை
கட்டிக் காத்த வாழ்க்கை நெறிகள்....
ஆயிரம் ஆயிரம் அனுபவக் களஞ்சியங்கள்
ஆயிரம் ஆயிரம் காலத்துப் பயிர்கள்...

அவைகளை முதலில்
அன்னியப் பன்றிகள் தோண்டி அழித்தன
இன்று மிச்சம் மீதி இருப்பவைகளை
காக்கவேண்டிய வேலிகளே அழிக்கின்றன...

நீ காத்த நெறி முறைகள்
காலத்தை வென்ற அமுதம்
சாக்கடையில் வாழும் கொசுக்களுக்கு
அதன் அருமை புரிவதில்லை....

கோவில் பலியை தெய்வத்திற்கான
தியாகமாக பார்க்க வேண்டிய வம்சம்
அவைகளை உணவுக்காக என்று
கீழாகப் பேசுகின்றன.....

யார் பேசுவது ? அன்னியன் அல்ல தாயே !
மெக்காலேயின் விஷம் குடித்த உனது குழந்தைகள்!
நீ காத்த நெறிமுறைகளை கற்க
அவற்றின் ஆழ்ந்த காரணம் கற்க
அவற்றின் உட்பொருளைக் கற்க
அவற்றின் நியாயத்தைக் கற்க
அவற்றின் அவசியத்தைக் கற்க
உலகிற்கே அவைதரும் நன்மைகளைக் கற்க
உன் குழந்தைகளுக்கு நேரம் இல்லை
அவர்கள் ரொம்ப பிஸியாகி விட்டார்கள்

அவர்கள் தங்கள் வாழ்க்கையை
ஏற்கனவே தியாகம் செய்து விட்டார்கள்

திருடன் மெக்காலேவுக்கு குழந்தை பெற்று
சொத்தை விற்றேனும் குழந்தைகளுக்கு
அவன் கல்வியை சொல்லித்தந்து 
அவன் புகழை சொல்லித்தந்து
அவன் போலவே சிந்திக்க கற்றுத்தந்து
தன் பண்பாட்டை கைவிடவைத்து
குடும்பத்தை கைவிடவைத்து
உறவுகளை கைவிடவைத்து
தெய்வங்களை கைவிட வைத்து
மானத்தைக் கைவிடவைத்து
தன் நிம்மதியையும் கைவிடவைத்து
திருட்டுத் தந்தை மெக்காலேவுக்கு
அங்கு சென்றோ இங்கிருந்துகொண்டோ
சேவைசெய்து அவனை மகிழச்செய்ய
அவனைப் போல் நடிக்க வைத்து
அவனைப் போல் சிந்திக்க வைத்து
நன்றிக் கடன் அடைக்கத்துடிக்கும்
பெற்றோர்களாய்...
தலைவர்களாய்...
மேதைகளாய்....
இன்று உன் சந்ததிகள்....

பாரதத் தாயே நீ
அனுபவத்தில் சிறந்தவள்தான்
அறிவில் சிறந்தவள்தான்
அன்பில் சிறந்தவள்தான்
செயல்களில் சிறந்தவள்தான்
ஆனால்,....

நீ காத்த நெறிமுறைகளை கற்க
அவற்றின் காரணங்களைக் கற்க
அவற்றின் உட்பொருளைக் கற்க
அவைதரும் நன்மைகளைக் கற்க
அவற்றின் அவசியத்தைக் கற்க
உன் குழந்தைகளுக்கு நேரம் இல்லை
அவர்கள் ரொம்ப பிஸியாகி விட்டார்கள்

நீ கொடுத்த குருகுலங்கள்....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை
நீ பெற்று வளர்த்த குருபரம்பரை....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை
நீ கொடுத்த போதனைகள்.....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை
நீ ஏற்படுத்திய சடங்குகள்.....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை
நீ தந்த வழிபாட்டு முறை.....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை 
நீ கற்றுத்தந்த மனிதப் பண்புகள்...
அவர்களுக்கு இன்று தேவை இல்லை 
நீ வளர்த்த பண்பாடு.....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை


ஏனென்றால் அவர்களுக்கு இன்று
எல்லாம் தெரியும்
‘அவைகள் எல்லாம் மூடப் பழக்கம்’ என்றும்
'பணம்தான் வாழ்க்கையில் நல்லப் பழக்கம்' என்றும்
திருட வந்த அறிவாளி மெக்காலே 
அவைகளைப் பற்றி
உனக்கும் முன்பே சொல்லித்தந்துவிட்டான்....
குழந்தைப் பருவத்திலேயே....
இருபது வருடங்கள் தினசரி 
திணித்துத் திணித்து.... 

ஓ கருணைத் தாயே
அவர்கள் இன்று உன் குழந்தைகள் இல்லை
அவர்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்
‘மெக்காலேயின் குழந்தைகள்’ என்று...

நீ அவர்களைக் காக்க
துரத்தித் துரத்தி ஓடி ஓடிக்
கிழிந்த துணிகளுடன் கண்ணீருடன்
உன் குழந்தைகள் என்று நினைத்துக்கொண்டு
காக்கப் போகிறேன் என்று சொல்லி
'குழந்தையே நான் சொல்வதைக் 
கொஞ்சம் கேள், இது உனக்கு நல்லது' 
என்று சொல்லி கெஞ்சிக்கொண்டு 
நம்பிக்கையுடன் நீ
அவர்களின் பின்னால்
ஓடுவதைப் பார்த்தால்...
எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

ஓ தாயே, சொன்னால் கேள்...
அவர்கள் இன்று
சீர்திருத்த வாதிகள் ஆகிவிட்டார்கள்....
நீயோ பழமைவாதியாகவே இருக்கிறாய்

திருட வந்த மெக்காலேயின் 
சதிச் சிந்தனைகளைத் தான் அவர்கள்
தங்களது முன்னோர் தந்த  புகழ் மிகு  பண்பாடு
என்று பெருமையாகப் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்...
என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை....

மேலும் அவர்களால்... 
சமூக சீர்திருத்தம் என்ற பெயரில்
நீ காத்த மாணிக்கங்கள் இன்று வீசப்படுகின்றன
வெறும் கற்களாக திட்டித் திட்டிக் குப்பைகளில்...

அவைகளின் பொருள் மட்டும் புரிந்துவிட்டால்...
உயிரையும் கொடுத்தும் காப்பவர்கள்தான் அவர்கள்
அந்தப் பரம்பரையில்தானே பிறந்தவர்கள்
அந்த ரத்தம்தானே ஓடுகிறது உடலில்....

ஆனால் அவைகளை அவர்கள்
புரிந்துகொள்ள மாட்டார்கள், ஏனென்றால்,
அவர்களுக்கு அதன் விளக்கங்களைக்
கேட்க நேரம் இல்லை, ஏனென்றால்....
அவர்கள் ரொம்ப பிஸியாகி விட்டார்கள்

மெக்காலேவுக்கு குழந்தை பெற்று
அவனுக்கு அடிமையாக அனுப்பிவைப்பதில்
அதை எல்லோரிடமும் பெருமையாக பீற்றிக்கொள்வதில்
அதில் சந்தோஷப்படுவதில்...

அவர்கள் தங்களின் குழந்தைகளை...
அதற்கு ஏற்ப பக்குவப்படுத்தவேண்டும்
குரு குலத்தை மறக்கவைக்கவேண்டும்
குருவை மறக்கவைக்கவேண்டும்
உறவுகளை மறக்கவைக்கவேண்டும்
குடும்பத்தை மறக்கவைக்கவேண்டும்
தெய்வத்தை  மறக்கவைக்கவேண்டும்
மனைவியை மறக்கவைக்கவேண்டும்
குழந்தைகளை மறக்கவைக்கவேண்டும்
தனது உணவை மறக்கவைக்கவேண்டும்
தனது உறக்கத்தை மறக்கவைக்கவேண்டும்
தனது நிம்மதியை மறக்கவைக்கவேண்டும்
தனது கௌரவத்தை மறக்கவைக்கவேண்டும்
தனது மானத்தை மறக்கவைக்கவேண்டும்
தனது நிம்மதியை மறக்கவைக்கவேண்டும்
இப்படி அதற்காக செய்யவேண்டிய கடமைகள்
தினசரி அவர்களுக்கு ஏராளம் ஏராளம்!

குலம் காத்த கருணைத் தாயே
உன் கதறலைக் கேட்க அவர்களுக்கு நேரம் இல்லை
இப்போதெல்லாம் அவர்கள் ரொம்ப பிஸி
நீயோ இன்னமும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்!

உன் குழந்தைகள் எல்லாம்
திருவள்ளுவராய் இருக்க வேண்டும்
என்று நினைக்கிறாய்... சொன்னால் கேள்...
அதெல்லாம் அவர்களுக்கு பிடிக்காது

பாசத்தினால் வரும் உன் 
கண்ணீர்த் துளிகளை என்னால்...
பார்த்துக்கொண்டும் இருக்க முடியவில்லை
உன்னை விட்டும் செல்ல முடியவில்லை...

பொறுமையுடன் எனைக் காத்த
கருணைத் தாயே 
எனக்கு என் பரிதாப நிலை.... 
இது என் பாபத்தாலா புண்ணியத்தாலா... 
எனக்குத் தெரியவில்லை....

தாயே இது உன் 
சீர்திருத்தக் குழந்தை எழுதிய 
தேன் கவிதை 
நீயே மெச்சிக்கொள் 
நீயே பொறுமையாக இரு....
அவர்கள் மீண்டும் வரும்வரை....
கண்ணீருடன்...



கோவில் பலியை தெய்வத்திற்கான
தியாகமாக பார்க்க வேண்டிய வம்சம்
அவைகளை உணவுக்காக என்று
கீழாகப் பேசுகின்றன.....

யார் பேசுவது ? அன்னியன் அல்ல தாயே !
மெக்காலேயின் விஷம் குடித்த உனது குழந்தைகள்!

__________________________________________________________
__________________________________________________________



பாரதப் பண்பாட்டை குறை சொல்லும் சகோதர பாரதிகளே
அன்புடன் அழைக்கிறேன் கற்க வாருங்கள்.....
ஆணவம் தடுத்தால் வாதத்திற்கு வாருங்கள் 
உங்களை நேர்மையுடன் அழைக்கிறேன்

ஒருவரி பதிலில் விளக்க முடியாது இவைகளை
சூரியனை சுற்றிவரும் கோள்கள் எத்தனை? 
ஒன்பது.
என்பதனைப் போல...
அதையும் ஒன்பது என்று படித்து, 
நம்பி, பரீட்சை எழுதி, பாஸ் செய்து, 
சம்பலம்வாங்கி, ஏப்பம் விட்டு, 
மண்டையைப் போட்டு சென்றுவிட்டவர்கள்.... 
ஆயிரம் ஆயிரம் பேர்!
இன்று அதே புத்தகம் சொல்கிறது 
ஒன்பது இல்லை எட்டு என்று! 

ஆனால் பாரதப் பண்பாட்டின் பேச்சு
அப்படி இல்லை. 

அவைகள்....
சத்தியமும் நேர்மையும் அதன் கண்கள்
பணிவு அதன் காதுகள்....
தியாகம் அதன் கால்கள்....
கருணை அதன் கைகள்....
அன்பு அதன் ஹ்ருதயம்
மனிதனால் அடைய முடியாத 
ஆழ்ந்த விஞ்ஞானம் அதன் ரத்தம் 
நீண்ட மானுட சரித்திர அனுபவம் 
அதன் எலும்புக் கூடு 
வேதம் அதன் தாய்
இறைவன் அதன் தந்தை....

நிச்சயம் அவை நன்மையைத் தருபவைகள்
உலக மனித வர்கத்திற்கும்
உலக உயிர்களுக்கும்...
இனி வரும் எந்த யுகத்திற்கும்....

ஒரு கல்லில் இரண்டு அல்ல
பல ஆயிரம் மாங்காய்களை தருபவைகள்
ஒருவரி பதிலில் 
கற்க முடியாது அவைகளை

ஏனென்றால் 
அவைகள் ....
தம்மால் தவறு நடப்பதை 
விரும்பாதவைகள்....

இந்தப் பண்பாட்டில் பிறந்து விட்டு
பண்பாடு போட்ட பாதுகாப்பில் 
சுகமாக வளர்ந்துவிட்டு....
பண்பாட்டை கற்காமல் 
அதன் முதுகில் குத்த வேண்டாம்...
அது அழகல்ல 
நம் வம்சத்தின் நேர்மைக்கு...

நீ பாரதப் பண்பாட்டின் நிழலிலேயே பிறந்து 
அதன் நிழலிலேயே பாதுகாப்பாய் 
வாழும் அப்பாவிக் குழந்தை....
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்
மடையர்களுக்கு!
நிழலின் அருமை நிழலிலேயே தெரியும்
அறிவாளிகளுக்கு!

பண்பாட்டில் ஒரு விஷயம் நல்லதாக இருந்து
உண்மை தெரியாமல் குறை சொல்லிவிட்டால்
அதனை பலர் நம்பிவிட்டால் 
அது மஹா பாபம்....

நமது முன்னோரின் தியாகத்தில் வளர்ந்த 
ஆயிரம் காலத்துப் பயிர் அவை.
அவை சுலபமாகப் புரிவதில்லை. ஏனென்றால் 
மேலோட்டமான சிந்தனைகளால் 
வரவில்லை அந்தத் தீர்வுகள்....

நாம் கவனமாக இருக்கவேண்டும். 
நமக்கு சிறுவயதிலேயே மெக்காலே 
பச்சைக் கண்ணாடி போட்டுவிட்டான்,
பார்ப்பதெல்லாம் பச்சையாகத்தான் தெரியும். 

இதற்கு இடையில்தான் நாம்
உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்.... 
அதற்கு அந்தக் கண்ணாடியை நீக்கிக்கொண்ட 
ஒரு குருவின் துணை வேண்டும்.... 

அதனால் கிடைத்த ஏமாளிகளிடம்
எதை வேண்டுமானாலும் பேசவேண்டாம்....
கெஞ்சிக்கேட்கிறேன் தாயின் சார்பாக 
உன்னை பெற்ற மனம் நோக வேண்டாம்...

வேறு வழி இல்லை. 
ஆணவம் நீங்கித் தாயைக் காப்போம்.... 

ஓம்.

0 comments:

Post a Comment