நீ பிறந்த பின் நாங்கள் அழிந்து வருகிறோம்....

Leave a Comment
ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் !

உன்னிடம் நீதி இருக்கும் என்ற நினைவில்தான் உனக்கு
வரியினைக் கட்டுகிறேன்

உனக்கு அறிவு இருக்கும் என்ற நினைவில்தான் உன்
தீர்ப்புகளை மதிக்கிறேன்

எனக்கு ஒரு சந்தேகம், அதனைக் கொஞ்சம் தீர்த்து வை












நீ...

மதச்சார்பு அற்ற நாடு இது
என்று சட்டம் போட்டாய்,  இருக்கட்டும்...

முஸ்லீமின் மசூதி வருமானம் மசூதிக்கு
அது அவர்களின் பண்பாட்டைப் பாதுகாக்க

கிருஸ்தவர்களின் சர்ச் வருமானம் சர்ச்சுக்கு
அது அவர்களின் பண்பாட்டைப் பாதுகாக்க

என்றால்....

ஹிந்துக்களின் கோவில் வருமானம் கோவிலுக்கு
அது அவர்களின் பண்பாட்டைப் பாதுகாக்க
என்றுதானே இருக்கவேண்டும்.... ஆனால் இல்லையே...

அதேபோல...

முஸ்லீம்களின் மசூதி நிர்வாகத்தில் அரசு தலையிடாது
அது அவர்களின் மத சுதந்திரம்

கிருஸ்தவர்களின் சர்ச் நிர்வாகத்தில் அரசு தலையிடாது
அது அவர்களின் மத சுதந்திரம்

என்றால்....

ஹிந்துக்களின் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடாது
அது அவர்களின் மத சுதந்திரம்
என்றுதானே இருக்கவேண்டும்....ஆனால் இல்லையே...



ஓ நீதி மன்றமே...
நீ பிறப்பதற்கு முன்பே
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாய் 
நீதி உள்ள நாடு தானே இது...

ஓ நீதி மன்றமே...
நீ பிறப்பதற்கு முன்பே
துரத்தப்பட்டு வந்தோருக்கெல்லாம்
அடைக்கலம் தந்த நாடுதானே இது...

வால்மீகி, வியாசன், விசுவாமித்திரன், திருவள்ளுவன்,...
என்று உனக்கும் புரியாத நீதிகளையும்
பேசியவர்களின் நாடுதானே இது

உயர்வுகளும் உறவுகளும் உயிரும் போனாலும்
நீதி தவறமாட்டேன்...
என்று வாழ்ந்த அரிச்சந்திரன், விதுரன், சங்கரன், விதுரன், புத்தன், கோவிந்தசிம்மன்,கட்டபொம்மன்,... என்று லக்ஷம் லக்ஷமாக
வாழ்ந்தவர்களின் நாடுதானே இது

யாருக்கு நல்வழி காட்ட இவர்கள் வாழ்வையும் உயிரையும்
தியாகம் செய்து வாழ்ந்தார்கள்
எந்தப் பண்பாட்டைப் பாதுகாக்க இவர்கள் வாழ்வையும் உயிரையும்
தியாகம் செய்து வாழ்ந்தார்கள்

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
உலகை அழிக்க நாங்கள் ஆசைப்படவில்லை ஆனால்
அவர்களின் குழந்தைகள் நாங்கள்
அவர்கள் கொடுத்த பண்பாட்டை வாழ்ந்து பார்க்க
எங்களுக்கு ஆசை கூடாதா
 அவர்கள் கொடுத்த பண்பாட்டை என் குழந்தைக்குத் தர
எங்களுக்கு ஆசை கூடாதா
அவர்கள் கொடுத்த பண்பாட்டை பாதுகாக்க
எங்களுக்கு ஆசை கூடாதா
அவர்கள் இதற்காகவே எங்களுக்குக் கொடுத்த மண்ணில் 
எங்களுக்கு இந்த உரிமை இல்லையா...
நாங்கள் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்...
உன் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடவில்லையே 
உனக்கு சம்பளம் தானே கொடுத்தோம்...

நாங்கள் எங்கு போய் இவைகளை
பூர்த்தி செய்துகொள்ளவேண்டும்?
அமெரிக்காவிலா, ஜெர்மனிலா,
ரோமாபுரியிலா, அராபியாவிலா,
ஜப்பானிலா, நடுக்கடலிலா,...

ஓ மதிப்புக்குரிய உச்சநீதிமன்றமே 
என்ன குற்றம் கண்டாய் எங்கள் முன்னோரின் பண்பாட்டில்
நீ குற்றம் என்று சொல்லும் நடத்தையில் 
குற்றம் இல்லாத தன்மையை நாங்கள் நிரூபித்து விட்டால்
நீ என்ன தண்டனையை ஏற்பாய்...

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
எங்களுக்கும் தெரியும், 
உனக்கும் தெரியும்...
எங்கள் வரியில் வாழ்பவன் நீ என்று...

எங்களுக்காக எங்களுக்கு உதவுவதற்காக
உன்னை வைத்திருக்கிறோம் என்று....

ஆயிரம் ஆயிரம் தலை முறைகளாக
பண்பாட்டுடன் வாழ்ந்த நாடு இது...


நற்குடும்பங்களை நடத்தி..
நன் நுண் நீதிகளைப் பேசி...
நல் அரசுகளை நடத்தி...
தானங்களை செய்து...
கல்வியில் உயர்ந்து...
தருமப்படி வாழ்ந்து....
தெய்வம் போற்றி...
நூல் பல இயற்றி....
கலை பல செய்து...
விஞ்ஞானம் கண்டு ...
மெய்ஞானம் கண்டு....
தியாகங்களைசெய்து...
சந்ததிகளுக்கு நல்வாழ்வு தந்து....
பல நூறுதொல்லைகளிலிருந்து பாதுகாத்துக்கொண்டு...

அன்னியத்திருடர்கள் கொலை பல செய்தபோதும்...
கொள்ளையடித்துச் சென்றபோதும்...
பஞ்சங்களைப் பார்த்தபோதும்....
வருமைகளில் வீழ்ந்த போதும்....

ஆயிரம் ஆயிரம் தலை முறைகளாக
பண்பாட்டுடன் வாழ்ந்த நாடு இது...

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் !
நீ பிறந்த பின் இந்த சிறப்புகள் எல்லாம்
அழிந்து வருகின்றன
எங்கள் திறமைகள் எல்லாம்
அழிந்து வருகின்றன
எங்கள் பாதுகாப்புகள் எல்லாம்
அழிந்து வருகின்றன
ஏன் இதெல்லாம்....

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் !
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் !

உன்னிடம் நீதி இருக்கும் என்ற நினைவில்தான் உனக்கு

வரியினைக் கட்டுகிறேன்!

உனக்கு அறிவு இருக்கும் என்ற நினைவில்தான் உன்

தீர்ப்புகளை மதிக்கிறேன்!

'உன்னை எதிர்த்துப் பேசுவது குற்றம்' 

என்றுகூட உனக்கு மதிப்பினைக் 
கொடுத்து வைத்திருக்கிறேன்...

எனக்கு ஒரு சந்தேகம், அதனைக் கொஞ்சம் தீர்த்து வை


இந்தக் கேடுகளின் காரணம் நாங்கள் என்றால்....

எங்களின் தவறுகளைச் சொல்
நாங்கள் எங்களை சீர் செய்துகொள்கிறோம்...


இந்தக் கேடுகளின் காரணம் நீ என்றால்....

உன் தவறுகளைக் கண்டு பிடி
நீ உன்னை சீர்செய்துகொள்
உன்னால் முடியாது என்றால்
முடியாது என்பதையாவது சொல்லிவிடு
நேர்மையாக... தயவுசெய்து....
நாங்கள் அழிவதற்குள்....


ஆயிரம் ஆயிரம் தலை முறைகளாக
பண்பாட்டுடன் வாழ்ந்த நாடு இது...

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
நீ பிறந்த பின் நாங்கள் அழிந்து வருகிறோம்....





0 comments:

Post a Comment