சித்தர் நாராயணப் பிராந்தரின் வாழ்வில்....

Leave a Comment
மிகவும் எளிமையான ஒருவர் குளக்கரையில் படுத்திருந்தார். அதிகாலைப் பொழுதில் எழுந்தார். அருகில் இருந்த குன்றின் அடிவாரத்துக்குச் சென்றார். அருகில் ஒரு பெரிய உருண்டைக்கல் இருந்தது. அந்தக் கல்லை மலை உச்சியை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார். அது அவ்வளவு சுலபமாக இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு தன் பலம் முழுவதையும் செலுத்தி, ஒரு வழியாக, உச்சிக்கு கொண்டுபோய் நிறுத்தினார்.


அடுத்து ஓர் ஆச்சரியம் நடைபெற்றது. அந்த மனிதர் கஷ்ட்டப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு சென்ற அந்தக் கல்லை மேலிருந்து கீழே உருட்டி சிரித்தபடி அவரும் கீழே ஓடிவந்தார். இதை வேடிக்கை பார்த்த மக்களுக்கு எதற்காக அந்தக் கல்லை உருட்டிவிட்டார் என்பது புரியவில்லை.

இதே காரியத்தை அவர் தினசரி செய்து வந்தார். அதனால் மக்கள் அவரைப் 'பிராந்தன்' என்று அழைத்தனர். பிராந்தன் என்றால் மலையாளத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அர்த்தம். எனவே நாராயணன் என்று பெயர் கொண்ட அவரை 'நாராயணப் பிராந்தர்' என்றே அழைத்தனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் தனது இத்தகைய செயலுக்கான காரணம் பற்றி குறிப்பிடும்போது, "வாழ்க்கையில் ஒரு மனிதன் உயர்வது என்பது சிரமமான காரியம். ஆனால் கீழே வழுக்கி வீழ்வது என்பது மிகவும் சுலபமானது" என்று தெரிவித்தார்.

இவர்தான் 18 சித்தர்களின் ஒருவரான நாராயணப் பிராந்தர் என்று அழைக்கப்படுகிறார் .

0 comments:

Post a Comment