எண்ணெய்க் குளியல் - எல்லோருக்குமே அவசியம்...

Leave a Comment





எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு ஆகிவிட்டது.


இது பயனற்ற சம்பிரதாய பழக்கமல்ல; 

நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்களை பார்ப்போம் 

இரைப்பு,இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், நீங்கும்.

முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.

ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும்.

தலை,முழங்கால்கள் உறுதியடையும்.

முடி கறுத்து வளரும்.

தலைவலி ,பல்வலி நீங்கும்.

தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,

உடல் பலமாகும்,சோம்பல் நீங்கும்,

நல்ல குரல் வளம் உண்டாகும்.

சுவையின்மை நீங்கும்.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:

நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் தேய்க்கும்பொழுது , எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.

காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்;

அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும். 

ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி நல்லெண்ணெய் தேவைப்படும்.

எண்ணெய்க் குளியலன்று செய்ய வேண்டியவை:

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.

அதிகாலையிலேயே(6.30 மணிக்குள்)குளித்து முடித்துவிட வேண்டும்.

வாரமிருமுறை அதாவது, 

"ஆண்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,"

"பெண்கள்,செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிப்பது "சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

எண்ணெய்க் குளியலன்று செய்யக்கூடாதவை:

பகலில் தூங்கக் கூடாது.

அதிக வெயிலில் அலையக்கூடாது.

குளிர்ந்த உணவுகள்,பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது
.

உடல்பயிற்சி செய்யக்கூடாது.

உடலுறவு கொள்ளக் கூடாது
.

சேவிங் செய்யக்கூடாது.

நண்டு,கோழி,மீன்,செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

"ஆரோக்யமாய் வாழ ஆயில் பாத் எடுங்கள்"

அன்புள்ள இடத்தில் எல்லாம் இருக்கும்!

Leave a Comment
ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் வீட்டிற்குள் வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறினாள்.

அதற்கு அம்மூவரும் 'வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா' என்று கேட்கிடார்கள்.
அதற்கு அவள் 'அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்' என்று பதிலளித்தாள் .

அப்பொழுது அவர்கள் 'அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம்' என்று கூறிவிட்டார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறினாள். 

அதற்கு அவளது கணவன் 'நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா- என்று சொன்னார். 

அவளும் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைததாள்..
அதற்கு அவர்கள் 'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது' என்று கூறிவிட்டார்கள்.

'ஏன் அப்படி' என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து 'இவர் செல்வம்' என்றும், மற்றொருவரை காண்பித்து 'இவர் வெற்றி' என்றும் 'நான் அன்பு' என்றும் கூறி, 'உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல்' என்றும் அவளிடம் கூறினார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறினாள்..

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்யமாக இருக்கிறது!'. என்று கூறிவிட்டு, 'நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார்' என்று தன் மனைவியிடம் கூறினார்.

அதை கேட்ட அவருடைய மனைவி , 'ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது?' என்று கேட்டாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், 'ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா?' என்று அவள் தன் கருத்தை கூறினாள்..

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்தனர். 

பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்றார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து 'உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன்' என்றாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்லப் புறப்பட்டார்.  அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும்கூட செல்லத் துவங்கினர்!

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் 'ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? 'என்று ஆச்சர்யப்பட்டு கேட்டாள். 

அதற்கு மற்ற இருவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், 'நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். அன்பு எங்களுக்கும் பிடித்ததே. எங்கு அன்பு இருக்கிறதோ அங்குதான் எங்களுக்கும் இருப்பதில் ப்ரியம்!' என்று  செல்வம், வெற்றி இருவரும் பதிலளித்தார்களே பார்க்கலாம்! 

அன்புதானே நம்மையும் யாரையும் அதிக சந்தோஷப்பட வைக்கும்!

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க

Leave a Comment
கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?


குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

பத்து கட்டளைகள்:

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!

ஆணும் பெண்ணும் சுகமாக இணைந்து வாழ...

Leave a Comment
ஆணும் பெண்ணும் சமம் அல்ல...


பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!

உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது!
(அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும்
அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)

மொழி;
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக் கற்றுக்கொள்ள
முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண் குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS);
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்து கொள்ள முடியாது.

வாகனம் ஓட்டுதல்;
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,
தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த
கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்” ஆகும்.

உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம்
செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).

பொய்ப்பேச்சு;
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும் கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள். )  காரணம், பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.

இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில்
தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின்
மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது….  யாராவது ஒருவரிடம் தமது முழுப் பிரச்சனைகளையும் வாய்மூலமாக
சொல்வதனூடாக திருப்தியடைந்து கொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள்:
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்
பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை:
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்…
அவர்களால், அவர்களின் வேலையில் கவனம்
செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவனம் செலுத்த முடியாது.

உரையாடல்;
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமப் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய் என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில் வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.

நடவடிக்கை;
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள்.
ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!

ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில்
ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான இந்த சிருஷ்டி-இயல் காரணங்களை புரிந்துகொண்டு இசைவினக்கத்துடன் வாழ்வோமே...

ஜோதிடம் - விதியை அறிந்து மதியுடன் வாழ...

Leave a Comment
பஞ்ச பாண்டவர்களில் இளையவரான சகாதேவன் ஜோதிட புலமையால் மஹாபாரத போரின் விளைவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்திருந்தார்.


ஜோதிட பயன்பாடு:--

உலக கடமைகளை ஆற்றுபவர்கள், குடும்பத்தைப் பராமரிப்பவர்கள், செல்வத்தை ஈட்டுபவர்கள், வாழ்க்கையை சமநிலையுடன் செயல்படுத்த விரும்புபவர்கள், மற்றும் ஆரோக்கியமான வாழ்வில் ஈடுபட நினைப்பவர்களும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்தில் தகுதி வாய்ந்த ஜோதிடர்களை ஆலோசிப்பதால் எவ்வித தீங்கும் இல்லை. நன்மையே.

திருமண பொருத்தம், திருமணத்திற்கு உகந்த காலம், வர்த்தக முதலீட்டின் தன்மை, தொழிலைத் தேர்ந்தெடுப்பது, குழந்தையின் எதிர்கால செயல் நாட்டத்தை அறிவது, இல்லறம் துறவறம் இவற்றைக் கடைப்பிடிப்பதற்கான காலகட்டங்கள், மற்றும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அறிவதற்கும் ஜோதிடம் பலவகையில் பயன்படுகிறது.

விதியின் படி எவ்வளவு சிரமத்தை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ, எந்தவிதத்தில் அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதனை ஜாதகத்தில் பார்க்க முடியும்.

அதனை அறிந்து அதற்க்கு உரிய சிரமத்தை வழிபாட்டில் அதற்குப் பொருத்தமான விதத்தில் நாமே எடுத்துக்கொண்டால் அது அந்த அளவிற்கு லோக வாழ்க்கையில் வரும் சிரமங்களைக் குறைத்துவிடுகிறது. இதற்குப் பெயர்தான் பரிகாரம். இந்த பொருத்தமான பரிகாரத்தை அறிந்து செய்து சிரமத்திலிருந்து விடுபடவும் ஜோதிடம் பயன்படுகிறது.

ஒவ்வொருவரின் வாழ்விலும் விதியிலும் சில விஷயங்கள் சாதகமாகவும், சில விஷயங்கள் பாதகமாகவும் இருக்கின்றன. அவைகளை அறிந்துகொண்டு சாதகமான விஷயங்களைப் பிடித்துக்கொண்டும், பாதகமானவிஷயங்களைளிருந்து விலகிக்கொள்ளவும் ஜோதிடம் பயன்படுகிறது.


கர்தம முனிவருக்கு பிரம்மா உபதேசித்த போது, அவர் தனது மகள்களை குணம் மற்றும் விருப்பத்திற்கு தகுந்தவாறு உரிய மணமகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் (ஸ்ரீமத் பாகவதம் 3.24.15).
அதாவது, திருமண வாழ்க்கைக்கு தம்பதிகளின் குணம் போன்ற பொருத்தங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அப்படி குணம் போன்ற பொருத்தங்களைக் கண்டுபிடிக்க ஜோதிடம் பயன்படுகிறது. 

ஸ்ரீ த்ரௌபதியஷ்டோத்தரசத நாமாவளி

Leave a Comment
ஸ்ரீ த்ரௌபதியஷ்டோத்தரசத நாமாவளி

ஓம் த்ரௌபத்யை நம :
ஓம் க்ருஷ்ண வர்ணாயை நம :
ஓம் க்ருஷ்ண ஸஹோதர்யை நம :
ஓம் க்ருஷ்ண வம்சாயை நம :
ஓம் கர்ண ஸோதர ஜாயயாயை நம :
ஓம் சந்திர வம்ச சமுத்பவாயை நம :
ஓம் கஜ வாஹனாயை நம :
ஓம் கஜா ரூடாயை நம :
ஓம் சந்திர வம்சாயை நம :
ஓம் சண்ட வாத்ய ப்ரியாயை நம :
ஓம் சந்தனாலங்கார தராயை நம :
ஓம் கந்த மால்ய விபூஷிதாயை நம :
ஓம் கந்த திலக தராயை நம :
ஓம் வரா ரோஹாயை நம :
ஓம் ராஜ்ஜியை நம :
ஓம் ராஜ்ய வம்சாயை நம :
ஓம் ரத்ன ஸிமஹாஸனாயை நம :
ஓம் ரத்ன குண்டல தராயை நம :
ஓம் ரக்த மாலய சோபிதாயை நம :
ஓம் ரக்த வஸ்திர தராயை நம :
ஓம் ரத்ன கிரீட தராயை நம :
ஓம் ரத்னாலங்கார தராயை நம :
ஓம் தர்ம பத்ன்யை நம :
ஓம் தர்ம ப்ரியாயை நம :
ஓம் தர்ம வாசின்யை நம :
ஓம் தர்ம ஜாயாயை நம :
ஓம் தர்ம சிலாயை நம :
ஓம் தர்ம ஸஹிதாயை நம :
ஓம் சுஸ்தனாயை நம :
ஓம் சுயௌவனாயை நம :
ஓம் சௌந்தர்யஸரீராயை நம :
ஓம் பக்தி கம்யாயை நம :
ஓம் பக்தி வச்யாயை நம :
ஓம் பக்தி ப்ரியாயை நம :
ஓம் அக்னி சமுத்பவாயை நம :
ஓம் தவன சம்பவாயை நம :
ஓம் யாதவ ஸோதர்யை நம :
ஓம் நளின தராயை நம :
ஓம் பத்ம ஹஸ்தாயை நம :
ஓம் ஹஸ்தினாபுரபட்ட மஹிஷ்யை நம :
ஓம் விசாலக்ஷ்யை நம :
ஓம் ஹரிணிரூபாயை நம :
ஓம் விசால நேத்ராயை நம :
ஓம் விஜய ஜயாயை நம :
ஓம் விசால நேத்ராயை நம :
ஓம் ரத்னஸாரஸந தராயை நம :
ஓம் முராரி ச்மரணாயை நம :
ஓம் சுவக்த்ராயை நம :
ஓம் சுலோசனாயை நம :
ஓம் சுந்தர்யை நம :
ஓம் மதுவாதின்யை நம :
ஓம் மங்கள ப்ரதாயை நம :
ஓம் மயூர ப்ரியாயை நம :
ஓம் பீம ஜயாயை நம :
ஓம் பீம ப்ரியாயை நம :
ஓம் பீம பார்யாயை நம :
ஓம் அச்யுத பகின்யை நம :
ஓம் அர்ஜுன ஸஹிதாயை நம :
ஓம் அபிமன்யு மாத்தரே நம :
ஓம் க்ருஷ்ண பக்தாயை நம :
ஓம் க்ருஷ்ண ஸ்மரணாயை நம :
ஓம் சுகாப்ஜ கராயை நம :
ஓம் கௌரவ குல நாசின்யை நம :
ஓம் துர்யோதன நாசின்யை நம :
ஓம் சுக ஹஸ்தாயை நம :
ஓம் கமல தாரின்யை நம :
ஓம் பங்கஜாஸன ஸம்ஸ்திதாயை நம :
ஓம் சுரோஜ ஹார தாரின்யை நம :
ஓம் நகுல சஹ வாசிண்யை நம :
ஓம் விலாசின்யை நம :
ஓம் நகுல ப்ரியாயை நம :
ஓம் கமல ஹஸ்தாயை நம :
ஓம் ஸஹாதேவ பார்யாயை நம :
ஓம் ஸஹாதேவ தயிதாயை நம :
ஓம் ஸஹாதேவ பத்ன்யை நம :
ஓம் துஷ்ட த்விமன ஸஹோதர்யை நம :
ஓம் அம்புஜலோசனாயை நம :
ஓம் கந்தர்யை நம :
ஓம் விசாலாக்ஷ்யை நம :
ஓம் சந்திர பிம்பாங்கவனாயை நம :
ஓம் ரதி ரூப தாரிண்யை நம :
ஓம் உடுராஜ பிம்பாங்கவனாயை நம :
ஓம் ரக்த வஸ்திர தராயை நம :
ஓம் சௌந்தர்யை நம :
ஓம் ராஜ்ஞாயை நம : 
ஓம் ஹோமாபரண பூஷிதாயை நம :
ஓம் ஹேமவபுஷே நம :
ஓம் சுவர்ண மால்யாலங்கரதாயை நம :
ஓம் ரக்த ரக்ஷிண்யை நம :
ஓம் பக்த ப்ரியாயை நம :
ஓம் க்ராம நிவாசின்யை நம :
ஓம் க்ராம ரக்ஷிண்யை நம :
ஓம் அதுலாயை நம :
ஓம் பக்தானாம் ஸேவிதாயை நம :
ஓம் க்ருஷ்ண கேசாயை நம :
ஓம் மனக்லேச ஹாரிண்யை நம :
ஓம் ஸர்வ துக்க விநாசின்யை நம :
ஓம் அக்னி புத்ரியை நம :
ஓம் குமுத ப்ரியாயை நம :
ஓம் த்ரௌபதாம்பிகாயை நம :
ஓம் மல்லிகா ப்ரியாயை நம :
ஓம் ஞான ப்ரதாயின்யை நம :
ஓம் வைராக்ய தாத்ரியை நம :
ஓம் மோக்ஷ காரிண்யை நம :
ஓம் பதிவ்ரதாயை நம :
ஓம் த்ரௌபத்யை நம :

நாநாவித பரிமள பத்ரபுஷ்பானி ஸமர்ப்பயாமி

காக்கும் மூளையை காப்பது எப்படி?

Leave a Comment


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது

ஞானியே முயற்சித்தாலும் எலி எலி தான்!

Leave a Comment
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானிமுன் வந்தது.

சுண்டெலியை பார்த்து ஞானி, 'உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார்.

'பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், எனக்கு நிம்மதி' என்றது எலி.  

ஞானி பிறகு எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது, ஞானிமுன் நின்றது.

பூனையை கண்ட ஞானி, 'இப்போது என்ன பிரச்சனை' என்று கேட்டார்.  

'என்னை எப்போதுமே நாய் துரத்துகிறது. என்னை நாயாக கொஞ்சம் மாற்றிவிடுங்களேன், உதவியாக இருக்கும்' என்றது பூனை.

பிறகு பூனையை, நாயாக மாற்றினார் அந்த ஞானி.

சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது.

'இப்போது உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார் ஞானி.

'புலியை பார்த்து விட்டேன் ஒருநாள், அதிலிருந்து புலியை நினைத்து நினைத்து பயம் என்னை எப்போதும் வாட்டி எடுக்கிறது.
தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள்' என்றது நாய். 

ஞானி, நாயை புலியாக மாற்றினார்.

சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்றது புலி.

'இப்போது உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார் ஞானி.

'இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுங்கள்' என்றது புலி.

பிறகு புலியை வேடனாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான்.

'இப்போது உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார் ஞானி.

'எனக்கு எதிரியான தொல்லை செய்யும் மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது...' என்று சொல்ல ஆரம்பித்தான்.
உடனே இடைமறித்த ஞானி, 'சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன?
உன் பயம் உன்னை விட்டு போகாது.
உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது.
நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு' என்று கூறி, சுண்டெலியாகவே மீண்டும் ஆக்கிவிட்டார் அந்த ஞானி.


சித்தர் நாராயணப் பிராந்தரின் வாழ்வில்....

Leave a Comment
மிகவும் எளிமையான ஒருவர் குளக்கரையில் படுத்திருந்தார். அதிகாலைப் பொழுதில் எழுந்தார். அருகில் இருந்த குன்றின் அடிவாரத்துக்குச் சென்றார். அருகில் ஒரு பெரிய உருண்டைக்கல் இருந்தது. அந்தக் கல்லை மலை உச்சியை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார். அது அவ்வளவு சுலபமாக இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு தன் பலம் முழுவதையும் செலுத்தி, ஒரு வழியாக, உச்சிக்கு கொண்டுபோய் நிறுத்தினார்.


அடுத்து ஓர் ஆச்சரியம் நடைபெற்றது. அந்த மனிதர் கஷ்ட்டப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு சென்ற அந்தக் கல்லை மேலிருந்து கீழே உருட்டி சிரித்தபடி அவரும் கீழே ஓடிவந்தார். இதை வேடிக்கை பார்த்த மக்களுக்கு எதற்காக அந்தக் கல்லை உருட்டிவிட்டார் என்பது புரியவில்லை.

இதே காரியத்தை அவர் தினசரி செய்து வந்தார். அதனால் மக்கள் அவரைப் 'பிராந்தன்' என்று அழைத்தனர். பிராந்தன் என்றால் மலையாளத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அர்த்தம். எனவே நாராயணன் என்று பெயர் கொண்ட அவரை 'நாராயணப் பிராந்தர்' என்றே அழைத்தனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் தனது இத்தகைய செயலுக்கான காரணம் பற்றி குறிப்பிடும்போது, "வாழ்க்கையில் ஒரு மனிதன் உயர்வது என்பது சிரமமான காரியம். ஆனால் கீழே வழுக்கி வீழ்வது என்பது மிகவும் சுலபமானது" என்று தெரிவித்தார்.

இவர்தான் 18 சித்தர்களின் ஒருவரான நாராயணப் பிராந்தர் என்று அழைக்கப்படுகிறார் .

பசு கோமியத்தில் உள்ள சத்துகள்:

Leave a Comment





















1. Nitrogen N2 ,NH2 - இரத்தத்தை சுத்திகரிக்கும், இரத்ததில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். சிருநீரகங்களுக்கு வலு சேர்க்கும்.

2. Sulphur S - பெருகுடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

3. Ammonia NH3 - பித்தம் கபம் வாயுவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

4. Copper Cu - சத்தற்ற கொழுப்பை நீக்கும்.

5. Iron Fe - சிவப்பு அணுக்களை அதிகரித்து ஹீமோக்லோபினை சீரான அளவில் வைத்திருக்கும்.

6. Urea CO(NH2)2 - இரத்தத்தில் நச்சு தன்மையை போக்கி சிருநீரகத்தில் கல்லடைப்பு வராமல் தடுக்கிறது.

7. Uric Acid C5H4N4O3 - இருதய வீக்கத்தை குணப்படுத்துகிறது.

8. Phosphate P - சிறுநீரக கல்லை அகற்றுகிறது.

9. Sodium Na - இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

10. Potassium K - செல்களை உயிரூட்டி உற்சாகமாக வைக்கிறது.

11. Manganese Mn - கிருமி பரவுவதை தடுக்கிறது

12. Carbolic Acid HCOOH - கிருமி நாசினி

13. Calcium Ca - எழும்பை வலுபடுத்தும்.

14. Salt NaCl - நெஞ்செருச்சலை தடுக்கிறது

15. Vitamins A,B,C,D,E

16. Other Minerals - எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

17. Lactose C6H12O6 - உடல் வலிமையை அதிகரிக்கிறது.

18. Enzymes - ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

19. Water (H2O)

20. Hipuric Acid CgNgNox - சிறுநீரில் உள்ள விஷ கிருமியை அகற்றுகிறது

21. Creatinin C4HgN2O2 - வாயுவை கட்டுபடுத்துகிறது

22. Aurum Hydroxide AuOH - நோய் தடுப்பானாக செயல்படுகிறது.

சாணக்கியன் சொல் .....

Leave a Comment
அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்:::!

ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,
வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை. 

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

நீ பிறந்த பின் நாங்கள் அழிந்து வருகிறோம்....

Leave a Comment
ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் !

உன்னிடம் நீதி இருக்கும் என்ற நினைவில்தான் உனக்கு
வரியினைக் கட்டுகிறேன்

உனக்கு அறிவு இருக்கும் என்ற நினைவில்தான் உன்
தீர்ப்புகளை மதிக்கிறேன்

எனக்கு ஒரு சந்தேகம், அதனைக் கொஞ்சம் தீர்த்து வை












நீ...

மதச்சார்பு அற்ற நாடு இது
என்று சட்டம் போட்டாய்,  இருக்கட்டும்...

முஸ்லீமின் மசூதி வருமானம் மசூதிக்கு
அது அவர்களின் பண்பாட்டைப் பாதுகாக்க

கிருஸ்தவர்களின் சர்ச் வருமானம் சர்ச்சுக்கு
அது அவர்களின் பண்பாட்டைப் பாதுகாக்க

என்றால்....

ஹிந்துக்களின் கோவில் வருமானம் கோவிலுக்கு
அது அவர்களின் பண்பாட்டைப் பாதுகாக்க
என்றுதானே இருக்கவேண்டும்.... ஆனால் இல்லையே...

அதேபோல...

முஸ்லீம்களின் மசூதி நிர்வாகத்தில் அரசு தலையிடாது
அது அவர்களின் மத சுதந்திரம்

கிருஸ்தவர்களின் சர்ச் நிர்வாகத்தில் அரசு தலையிடாது
அது அவர்களின் மத சுதந்திரம்

என்றால்....

ஹிந்துக்களின் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடாது
அது அவர்களின் மத சுதந்திரம்
என்றுதானே இருக்கவேண்டும்....ஆனால் இல்லையே...



ஓ நீதி மன்றமே...
நீ பிறப்பதற்கு முன்பே
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாய் 
நீதி உள்ள நாடு தானே இது...

ஓ நீதி மன்றமே...
நீ பிறப்பதற்கு முன்பே
துரத்தப்பட்டு வந்தோருக்கெல்லாம்
அடைக்கலம் தந்த நாடுதானே இது...

வால்மீகி, வியாசன், விசுவாமித்திரன், திருவள்ளுவன்,...
என்று உனக்கும் புரியாத நீதிகளையும்
பேசியவர்களின் நாடுதானே இது

உயர்வுகளும் உறவுகளும் உயிரும் போனாலும்
நீதி தவறமாட்டேன்...
என்று வாழ்ந்த அரிச்சந்திரன், விதுரன், சங்கரன், விதுரன், புத்தன், கோவிந்தசிம்மன்,கட்டபொம்மன்,... என்று லக்ஷம் லக்ஷமாக
வாழ்ந்தவர்களின் நாடுதானே இது

யாருக்கு நல்வழி காட்ட இவர்கள் வாழ்வையும் உயிரையும்
தியாகம் செய்து வாழ்ந்தார்கள்
எந்தப் பண்பாட்டைப் பாதுகாக்க இவர்கள் வாழ்வையும் உயிரையும்
தியாகம் செய்து வாழ்ந்தார்கள்

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
உலகை அழிக்க நாங்கள் ஆசைப்படவில்லை ஆனால்
அவர்களின் குழந்தைகள் நாங்கள்
அவர்கள் கொடுத்த பண்பாட்டை வாழ்ந்து பார்க்க
எங்களுக்கு ஆசை கூடாதா
 அவர்கள் கொடுத்த பண்பாட்டை என் குழந்தைக்குத் தர
எங்களுக்கு ஆசை கூடாதா
அவர்கள் கொடுத்த பண்பாட்டை பாதுகாக்க
எங்களுக்கு ஆசை கூடாதா
அவர்கள் இதற்காகவே எங்களுக்குக் கொடுத்த மண்ணில் 
எங்களுக்கு இந்த உரிமை இல்லையா...
நாங்கள் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்...
உன் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடவில்லையே 
உனக்கு சம்பளம் தானே கொடுத்தோம்...

நாங்கள் எங்கு போய் இவைகளை
பூர்த்தி செய்துகொள்ளவேண்டும்?
அமெரிக்காவிலா, ஜெர்மனிலா,
ரோமாபுரியிலா, அராபியாவிலா,
ஜப்பானிலா, நடுக்கடலிலா,...

ஓ மதிப்புக்குரிய உச்சநீதிமன்றமே 
என்ன குற்றம் கண்டாய் எங்கள் முன்னோரின் பண்பாட்டில்
நீ குற்றம் என்று சொல்லும் நடத்தையில் 
குற்றம் இல்லாத தன்மையை நாங்கள் நிரூபித்து விட்டால்
நீ என்ன தண்டனையை ஏற்பாய்...

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
எங்களுக்கும் தெரியும், 
உனக்கும் தெரியும்...
எங்கள் வரியில் வாழ்பவன் நீ என்று...

எங்களுக்காக எங்களுக்கு உதவுவதற்காக
உன்னை வைத்திருக்கிறோம் என்று....

ஆயிரம் ஆயிரம் தலை முறைகளாக
பண்பாட்டுடன் வாழ்ந்த நாடு இது...


நற்குடும்பங்களை நடத்தி..
நன் நுண் நீதிகளைப் பேசி...
நல் அரசுகளை நடத்தி...
தானங்களை செய்து...
கல்வியில் உயர்ந்து...
தருமப்படி வாழ்ந்து....
தெய்வம் போற்றி...
நூல் பல இயற்றி....
கலை பல செய்து...
விஞ்ஞானம் கண்டு ...
மெய்ஞானம் கண்டு....
தியாகங்களைசெய்து...
சந்ததிகளுக்கு நல்வாழ்வு தந்து....
பல நூறுதொல்லைகளிலிருந்து பாதுகாத்துக்கொண்டு...

அன்னியத்திருடர்கள் கொலை பல செய்தபோதும்...
கொள்ளையடித்துச் சென்றபோதும்...
பஞ்சங்களைப் பார்த்தபோதும்....
வருமைகளில் வீழ்ந்த போதும்....

ஆயிரம் ஆயிரம் தலை முறைகளாக
பண்பாட்டுடன் வாழ்ந்த நாடு இது...

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் !
நீ பிறந்த பின் இந்த சிறப்புகள் எல்லாம்
அழிந்து வருகின்றன
எங்கள் திறமைகள் எல்லாம்
அழிந்து வருகின்றன
எங்கள் பாதுகாப்புகள் எல்லாம்
அழிந்து வருகின்றன
ஏன் இதெல்லாம்....

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் !
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் !

உன்னிடம் நீதி இருக்கும் என்ற நினைவில்தான் உனக்கு

வரியினைக் கட்டுகிறேன்!

உனக்கு அறிவு இருக்கும் என்ற நினைவில்தான் உன்

தீர்ப்புகளை மதிக்கிறேன்!

'உன்னை எதிர்த்துப் பேசுவது குற்றம்' 

என்றுகூட உனக்கு மதிப்பினைக் 
கொடுத்து வைத்திருக்கிறேன்...

எனக்கு ஒரு சந்தேகம், அதனைக் கொஞ்சம் தீர்த்து வை


இந்தக் கேடுகளின் காரணம் நாங்கள் என்றால்....

எங்களின் தவறுகளைச் சொல்
நாங்கள் எங்களை சீர் செய்துகொள்கிறோம்...


இந்தக் கேடுகளின் காரணம் நீ என்றால்....

உன் தவறுகளைக் கண்டு பிடி
நீ உன்னை சீர்செய்துகொள்
உன்னால் முடியாது என்றால்
முடியாது என்பதையாவது சொல்லிவிடு
நேர்மையாக... தயவுசெய்து....
நாங்கள் அழிவதற்குள்....


ஆயிரம் ஆயிரம் தலை முறைகளாக
பண்பாட்டுடன் வாழ்ந்த நாடு இது...

ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே
நீ பிறந்த பின் நாங்கள் அழிந்து வருகிறோம்....