பீ. கே. என்று ஒரு ஹிந்தி திரைப்படம் பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.
அதில் எல்லா மதங்களையும் கிழி கிழி என்று கிழித்து விட்டதாக கூறுகிறார்கள். இன்னமும் நான் அந்தப் படத்தை பார்க்க முடியவில்லை.
அதில் எல்லா மதங்களையும் கிழி கிழி என்று கிழித்து விட்டதாக கூறுகிறார்கள். இன்னமும் நான் அந்தப் படத்தை பார்க்க முடியவில்லை.
ஆனாலும் காதில் கேட்கப்பட்ட சந்தேகங்களை ஆராய வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
உண்மை என்னவென்றால் வேதம் பேசிய விஷயங்களை கிழிக்க உலகத்தில் யாரும் கிடையாது. ஏனென்றால், அங்கே வேதம் பேசும் விஷயங்களில் தவறு கிடையாது. அஞ்ஞானிகள் தப்பு தப்பாக பேசிவிட்டு தான் மிகவும் சரியாகப் பேசிவிட்டதாக நினைத்துக்கொள்ளலாம்.
ஒருவேளை ஒருவிஷயம் சரியாக நியாயமாக நன்மைதருவதாக இருந்து அதனை சரியாக புரிந்துகொள்ளாமல் விமர்சனம் செய்து அதனை பயன்படுத்துபவரையும் குழப்பிக் கைவிடவைத்தால் அது சாதனை கிடையாது. வேதனை.
அதே போல எல்லா விஷயத்தையும் ஒரு நிமிடத்தில் விளக்கவும் முடியாது. உதாஹரனமாக ஒரு எம்.எஸ்.சி. கணித பேராசிரியர் 'நீளமாக ஒரு வரி' எழுதி '= ௦' என்று முடிக்கிறார். ஒரு எல்.கே.ஜி. குழந்தை கேட்கிறாள் அது எப்படி சமம் ஆக முடியும்?' என்று. அவளுக்கு புரியவைப்பது கடினம் .
அவளே 15 ஆண்டுகள் கணிதம் படித்தால் சொல்லப்போகிறாள் - 'ஆகா மிக அருமை' என்று.
அவளே 15 ஆண்டுகள் கணிதம் படித்தால் சொல்லப்போகிறாள் - 'ஆகா மிக அருமை' என்று.
வேறு வழி இல்லை `ஒன்று அவள், இவரோ ஒரு புரபசர், இவர் சொல்வது சரியாக இருக்க வேண்டும் அல்லது, என்று ஏற்க வேண்டும்.. சரியாக இருக்கவாய்ப்பு இருக்கிறது, அதனால் என்னால் மறுக்க முடியாது இப்போதைக்கு.' என்று சொல்ல முடியவேண்டும். அல்லது அவள் சில ஆண்டுகள் பொருத்து இருக்க வேண்டும்.
ஓ.கே. அதிலிருந்து ஒரு சந்தேஹம் கேட்டார்கள். நம்மைப் படைத்த கடவுளைத்தான் நாம் வழிபடனுமே தவிர, நாம் படைத்த கடவுளை நாம் ஏன் வழிபடவேண்டும் என்று.
இங்கே 1.நான் வழிபடும் கடவுள் ஆனவர், 'என்னைப் படைத்தவர் இல்லை' - என்பதை இவர் - இந்த டைரக்டர் எப்படி கண்டுபிடித்தாரோ.
2. இவர் சொல்லும் - நம்மைப் படைத்த கடவுள் என்று சொல்வதே உண்மையில் இவர் படைத்த கடவுளைத்தான். ஏனென்றால் , உலகைப் படைத்த கடவுள் , உலகைப்படைப்பதை இவர் பார்த்து வந்தாரா என்ன?
3. அப்படி அந்த கடவுள் உலகைப் படைத்ததை இவர் பார்த்திருந்தாலும் கூட அவரை நான் வழிபடனுமா வேண்டாமா என்பதை பேச இவர் யாரோ?
4. அதே போல நான் படைத்த கடவுளை நான் வழிபட்டால் கூட அதை குறை சொல்ல இவர் யாரோ? அதில் இவருக்கு என்ன பிரச்சனையோ?
நான் ஒரு கடவுளைக் கண்டுபிடித்து அல்லது உருவாக்கி , 'அந்தக் கடவுள் என்னிடம் உன்னைக் கொலை செய்ய சொல்லியது, திட்டச்சொல்லியது, திருத்தச் சொல்லியது ,....' என்றால் நீர் அதை விமர்சிப்பது நியாயம்.
அதே போல அடுத்து "கடவுள் என்ன இதை அதை எல்லாம் கேட்டாரா ?" என்றகேள்வி.
1. என்னப்பா, ஒரு கடவுள், அதை எல்லாம், போயும் போயும் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தால், அவர் எப்படியப்பா கடவுள் ஆகமுடியும்?
2. அடுத்து, அவர் கேட்காமல் நான் ஏன் கொடுக்கக் கூடாதோ?
3. அடுத்து, அப்படியே கேட்கவேண்டிய தேவை இருந்தால் கூட , ஒரு குழந்தை எனக்கு சோறு போடு அம்மா என்று கதறி அழுது ரெகளை செய்தால் தான் போடணுமா என்ன?
4. அதேபோல , அநேகமாக இந்த டைரக்டர், இவருடையஅம்மா கேட்டுக் கேட்டுதான் எதையும் செய்வர் போலத் தெரிகிறது. தயார் இவரிடம் , ' 'கொஞ்சம் சோறு போடுப்பா', 'என்னை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டு போப்பா', 'கொஞ்சம் மாத்திரையை எடுத்துக்கொடுப்பா' , 'உடுத்த நல்ல துணி இல்லை, கொம்சம் வாங்கி கொடுப்பா' .... என்றெல்லாம் அழுது புலம்பி ரெகளை செய்தால்தான் வாங்கித்தருவார் போல இருக்கிறது.
5. பரவா இல்லை, ஆனால் அதுதான் நாகரீகம் என்று அவர் எனக்கு சொல்லத் தேவை இல்லை. அது நாகரீகம் என்று அவருக்குத் தோன்றினால் , தாராளமாக அவர் கடைபிடிக்கலாம். நன்றி உணர்ச்சியை கேட்காமல் காட்டுவது சிலருக்கு நாகரீகம்!
0 comments:
Post a Comment