யோகம் தியானம் போன்ற தவப் பயிற்சிகளை செய்ய பொருத்தமான நேரம் என்ன?
காலை மணி 4க்கு மேல் என்று பொதுவாக சொல்லப்படுகிறது - இரவு 9மணிக்கு
தூங்கப் போனால் மட்டும். அது சிறப்பான நேரம்தான். ஆனால் இன்று பலவித காரணங்களால்
துங்கும் நேரம் தாமதமாக ஆவதால் முதலில் அதை சரி செய்ய முடியுமா என்று பார்க்க
வேண்டும். அத சரி செய்ய முடியாவிட்டால் - பயிற்சிகள்தான் முக்கியம் என்பவர்கள்
கட்டாயம் வாழ்க்கை முறையை மாற்றியாவது தூங்கும் நேரத்தை மாற்ற வேண்டும். பிறகு
அதுகாலைப் பயிற்சிகளை செய்யலாம்.
அப்படி முதியாத பக்ஷத்தில் தூங்கப் போன நேரத்தில் இருந்து 8மணி நேரம்
கழித்து எழுந்து பயிற்சி செய்தால் மிக நன்றாக பயிற்சியும், பலன்களும் கைகூடும்.
அதிகாலை போன்ற மற்ற சூழ்நிலைகளை உண்டுபண்ண முடிந்தவரை முயற்சிக்கலாம்.
மற்றவர்களுடன் பேசாமல் இருப்பது, போன் பேசாமல் இருப்பது, மற்ற வேலைகள் குறுக்கே
வராமல் தள்ளிவைப்பது, டி.வி., நியூஸ் பேப்பர் போன்ற விஷயங்களில் மனம் நுழையாமல்
பார்த்துக்கொள்வது, நமது பயிற்சியால் வீட்டில் மற்றவர்கள் அவர்களுக்கு கஷ்டம்
என்று உணராமல் இருப்பது,......... போன்றவற்றை
உறுதி செய்ய முடிந்தால் மற்ற பகல் போன்ற நேரங்களிலும் செய்யலாம்.
ஆனால் போதிய தூக்கம் இன்றி செய்வது நெகடிவ் ரிசல்ட்டை அதிகமாக
கொடுக்கிறது - கவனம்!
முடிந்தவரை வேதம் அறிந்த ஒருவரிடம் செய்யப் போகும் பயிற்சிகளை சொல்லி ,
‘இவற்றை நான் செய்யலாமா’ என்று கேட்டு, அவர் கருத்துக்களுக்கு ஏற்ப செய்வது
பாதுகாப்பானது.
ஒருவேளை அவர் செய்ய அனுமதிக்க வில்லை என்றால் அதை ஏற்கலாம். அதில் திருப்தி இல்லை என்றால், அதேபோல வேறு ஒரு வேதமறிந்தவரை மீண்டும் கேட்கலாம். அதுதான் நல்லது.
ஏனென்றால் இது சாலையில் டிரைவிங் போன்று , விபத்துக்களுக்கு வாய்ப்பு உள்ளது.
செய்யாததால் வரும் நஷ்ட்டத்தை விட தவறான பயிற்சிகளும் கண்ணோட்டங்களும் மிகப்பெரிய நஷ்டங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
அதனால் கவனமாக இருப்பதே நல்லது.
0 comments:
Post a Comment