ஸத்புத்ர பாக்யம்

Leave a Comment
குழந்தை வளர்ப்பு ஒரு பாக்கியம்

 


குழந்தை பாக்கியம் என்பது உண்மையில் இறைவனால் தரப்பட்ட ஒரு பாக்கியம். அதனை கவனமாக சரியாக கையாளும் அளவிற்கு புண்ணியம்.

அதில் தவறுகள் நடக்குமாயின் அது மற்ற பிறவிகளில் புத்ர தோஷத்தை கொண்டுவருகிறது.

முக்கியமாக அதில் கவனிக்க வேண்டியவைகள்:

கருத்தரிக்கும்போது இருக்கும் மனநிலை குழந்தையின் அஹங்காரம் [தனது தனித்தன்மை] என்னஅல்லது , வாழ்க்கை லக்ஷ்யம் என்ன ... போன்றவைகளை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வஹிக்கிறது. 

கருத்தரித்ததிலிருந்து மூன்றரை மாதம் வரை  அந்தக் குழந்தையின் சித்தம் [நினைவுக் கலன்] என்ன அல்லது அவனது முன்பிறவி ஸம்ஸ்காரங்களிளிருந்து எதை எதை எல்லாம் இப்பிறவியில் நினைவுக்குக் கொண்டுவந்து பயன்படுத்துவது என்பதை முடிவு செய்யும் காலம். அதனைத் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை  வைத்து கவனித்து தேர்ந்தெடுக்கிறான்.

மூன்றரை மாதத்திலிருந்து பிறக்கும் காலம் வரை  அந்தக் குழந்தையின் புத்தி [அறிவு] பலம் அதாவது அது எப்படி அந்த புத்தி விஷயங்களை பார்க்க முடியும் புரிந்துகொள்ள முடியும் என்பதை முடிவு செய்யும் காலம். அதனைத் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை  வைத்து கவனித்து தேர்ந்தெடுக்கிறான்.

பிறந்ததிலிருந்து மூன்றரை வருடம் வரை  அந்தக் குழந்தையின் மனம் [கற்பனா சக்தி மற்றும் விருப்பு வெறுப்புக்கள்] என்ன அல்லது அவனது முன்பிறவி புண்ணிய-பாபக் கணக்குகளிலிருந்துகளிலிருந்து எதை எதை எல்லாம் இப்பிறவியில்  கொண்டுவந்து பயன்படுத்துவது என்பதை முடிவு செய்யும் காலம். அதனைத் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை  வைத்து கவனித்து தேர்ந்தெடுக்கிறான்.

 சத்புத்ர பாக்யம் பெற இந்த சூழ்நிலைகளை ஆரோக்யமாகவும் தெய்வீக விஷயங்களுடனும் , நல் உபதேஷங்களுடனும் , சத்சங்கங்களுடனும் , நல்ல பேச்சு, நல்ல நடிக்கைகளுடனும், சாது தரிசனங்களுடனும்,... என்று வைத்துக்கொண்டால் சுலபமாக முடியும்.

பகவான் வியாசருடன் சம்பந்தத்திற்கு வந்த பெண்கள் தங்கள் மன நிலைக்கு ஏற்ற குழந்தைகளை அடைந்தது,
தாயார் காந்தாரி அடைந்த சிறு பொறாமை மகன் துரியோதனனுக்கு வந்தது,
அபிமன்யு தாயார் கேட்ட கதை மூலம் தனது திறமையை முடிவு செய்தது,....
 போன்றவைகளை ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடியும் .

அதுமட்டுமல்ல , பிறப்பின் கதையிலிருந்து தெரிந்தவர்களின் வாழ்வில் இதனைப் பொருத்திப் பார்த்தால் பொருந்துவதைப் பார்க்கமுடியும்.


இத்தனை விஷையங்களையும் கவனித்து குழந்தையை பெறுவதும் , வளர்ப்பதும் கடினம்தான், சந்தேகமே இல்லை. அதேசமயம் இந்தக் கஷ்டம் 40 பாய்ண்ட்என்றால் , இதை கவனிக்காமலும்குழந்தையைவளர்க்கமுடியும்.

ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்தபிறகு நமக்கு 400 பாய்ண்ட் கஷ்டத்தைக் கொடுப்பான்!

வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் என்கிறார்கள்.
இளைதாய முள் மரம் கொள்க - என்கிறார்கள்,
அதே போல துரியோதனனால் பெற்றோருக்கு கடைசியாக கிடைத்த நன்மை என்ன என்பதும் அனைவரும் அறிந்ததே.