உலகில் சிறந்த நமது பாரம்பரிய கல்வி!

Leave a Comment
நமது பாரம்பரிய கல்விமுறை மிகவும் ஆழமானது, பரந்தது, கற்றவனுக்கு மிகச்சிறந்த பயனைத் தருவது, கற்றவர் மூலம் சமூகத்திற்கும் மிகச்சிறந்த பயனைத் தருவது.

இந்தக் கல்வி நூல்கள் அனைத்தையுமே கற்கவேண்டும் என்பது இல்லை, தனக்குக் விருப்பமான, கற்க வாய்ப்பு அமையும் ஏதாவது ஒன்றை, அல்லது சிலவற்றைக் கற்றாலே போதும். அந்த நூலைக் கற்றவனை அவைகள் உலகில் எதற்கும் அஞ்சாத சிங்கமாக்கிக் காட்டிவிடும். நிச்சயமாக அவனுக்கு ஆனந்த வாழ்வை அளிக்கும். நிச்சயமாக அவன்மூலம் சமூகத்திற்கு கேடு அற்ற நன்மைகளை ஏற்படுத்தும். 



இந்தக் கல்விமுறைகள்தான் நம் நாட்டில் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக இருந்துவந்தது. இதன் துணையுடன்தான் நமது பரத தேசம் மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து , மிகச்சிறந்த சாதனைகளை செய்து காட்டியுள்ளது. பாரதம் அன்று செய்த சாதனைகளில், அனுபவித்த வாழ்க்கை சுகங்களில் ஒட்டுமொத்த உலகமும் இன்றுவரை சேர்ந்து இத்துணை அறிவியல் வசதிகளுடனும் கூட 1%ஐ கூட சாதிக்கவும் இல்லை, அனுபவிக்கவும் இல்லை என்பதுதான் உண்மை.

வெளிநாடுகளிலிருந்து இங்கு கொள்ளையடிக்க வந்தவர்கள் நிரந்தரமாக இங்கிருந்து கொல்லையடித்துக்கொண்டே இருக்க வேறு வேறு யோசனைகளை செய்து பார்த்தார்கள். அதில் ஒன்று, கல்வி முறையை மாற்றி நம்மை அவர்களுக்கு சேவைசெய்யும் அடிமைகளாக மனதில் நுழைந்து மாற்றுவதற்கு ஏற்ப புதிய கல்வி முறையை ஏற்படுத்துவது.

அதனை பிரிட்டிஷ் செய்து பார்த்தது. அவர்களது கணக்குப்படி, பாரதத்தில் இந்தக் கல்வி தொடர்ந்து இருந்தால் சுமார் 2000ஆவது ஆண்டில் அனைவரும் அவர்களை உயர்த்திப் பார்த்து, தமது நாட்டை தாழ்வாகப் பார்த்து, சுயதொழில்களை கேவலமாகப் பார்த்து, அந்நியர்களை சார்ந்து வாழ்வதில் பெருமை உடையவர்களாகி, பிறருக்கு செவைசெய்வதில், குறிப்பாக அந்நிய நாடுகளுக்கு பணிசெய்வதை பெருமையாக நினைப்பவர்கள் ஆகவேண்டும் - என்பது அவர்கள் இலக்கு.

அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறவேண்டி வரும் என்று நினைக்காத போது செய்த கல்வித்திட்டம். நல்லவேளை அவர்கள் இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்ததாலும், நேதாஜீ சுபாஷ் சந்திரபோஸின் பலமான போராட்டத்தாலும் இந்த நாட்டை விட்டு அவர்கள் வெளியேறி ஆகவேண்டும் என்ற நெருக்கடி வரவே வெளியேறினார்கள்.

இல்லையேல், இதுவரை நாம் கற்ற கல்விமுறையினால் பிரிட்டிஷார்கள் நம் நாட்டிலிருந்து மிகச்சிறந்த அறுவடையை பார்த்திருப்பார்கள். நம் மக்கள் அவர்களுக்கு சேவை செயவதை பெரிய பாக்கியமாக நினைத்து முட்டாள்களாக இன்றும் வாழ வேண்டிய நிலை வந்திருக்கும்.

இன்று நம்மிடம், நமது பாரம்பரிய கல்விமுறை இல்லை என்றாலும், மீண்டும் அவைகளை புணரமைப்பதுதான் நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது. ஏன், உலகிற்கே நாம் செய்யும் ஒரு சிறந்த கொடை. அதை செய்யவேண்டியது நமது கடமையும்கூட.

உலக மனித சமுதாயங்களெல்லாம் உலகத்தைப்பற்றிய வாழ்வைப் பற்றிய உண்மை தெரியாமல், தம்மையும் பிறரையும் அழித்து வாழும்போது, தம்மையும் சார்ந்தோரையும், உலகையும் கூட சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் எப்படி சந்தோஷமாக ஆனந்தமாக வைத்துக்கொள்வது என்பதை சொல்லித்தரும் நமது கல்வி உலகிற்கே அவசியமானதே.

அதை கற்று, பலன் பெற்று, பாதுகாத்து உலகிற்கு கொடுக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நமது ஆழமான & பரந்து விரிந்து கிடக்கும், அனுபவ ரத்தினங்கள் குவிந்து கிடக்கும் - நமது கல்வியைப் பற்றிய ஒரு சிறந்த பார்வை, ஒரு சுருக்கமான அறிமுகம் இந்த தளத்தில் உங்களுக்கு கிடைக்கிறது.  

வாழ்க்கையில் அதையாவது நாம் ஒரு முறை படித்து வைக்கவேண்டும். சந்ததிகளுக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவேண்டும்.


http://hinduonline.co/HinduReligion/AllAboutHinduism2.html 



Visit: 
இன்றைய கல்வித்திட்டத்தில் இருக்கும் குற்றங்கள்.

-----------------------------------------------------
tags: education, research on education, is there mistakes in education, mistakes prove the education is in wrong way, indian education, education in tamilnadu, students, schools,
 

0 comments:

Post a Comment