கொடுக்கப்பட்டுள்ள ‘ஒரு கட்டமைப்பு’ என்ன பலனைத் தர முடியும் என்பதை அதன் உரிமையாளரின் விருப்பங்களோ, திறமைகளோ, முயற்சிகளோ
அல்லது விஞ்ஞானிகளின் திறமைகளோ முடிவுசெய்வதில்லை. ஆனால்...
‘அந்த கட்டமைப்பே’ முடிவுசெய்கிறது. உதாரணமாக...
டி.வி. மற்றும் ஃபேன் - இவற்றில் எது படத்தைக் காட்டவேண்டும், எது காற்றைத்
தரவேண்டும் என்றோ, அல்லது அவை மாவு அரைக்க வேண்டுமா, துணி துவைக்கவேண்டுமா,.... என்றோ
அதன் உரிமையாளர் முடிவு செய்யமுடியாது.
அதேபோல்தான் ஒருவனின் வாழ்க்கைக் கட்டமைப்பும்கூட... அதன் உரிமையாளனுக்கு
என்ன பலனைத் தர முடியும்- என்பதை அந்த வாழ்க்கைக்
கட்டமைப்பே முடிவு செய்கிறது. அதன் உரிமையாளர் முடிவு செய்ய முடியாது!
ஒருவனின் வாழ்க்கைக் கட்டமைப்பு அவனது இப்பிறவி வாழ்க்கையில் என்ன பலனைக்கொடுக்க
முடியும் என்பதை அவனது ஜாதகம் ஏற்கனவே சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதை மட்டுமே
ஒருவனால் அடைய முடிந்துள்ளது, அது விஞ்ஞானியானாலும் சரி, உலக மஹா பணக்காரன்
ஆனாலும் சரி, நல்லவன் ஆனாலும் சரி, கெட்டவன் ஆனாலும் சரி, யாராய் ஆனாலும் சரி,...
ஒருவனது விதி அனுமதிக்காததை யாருமே அடைந்ததும் இல்லை; ஒருவனது விதி கொடுக்க வைத்திருப்பதிடம்
இருந்து யாருமே பெறாமல் தப்பித்ததும்
இல்லை....
உண்மையை சொன்னால், சுருங்கச் சொன்னால்.... 'அவரவரும் தனது வாழ்க்கை லட்சியத்தை முடிவு செய்யவேண்டும்' என்பது அறிவுப்பூர்வமான சிந்தனா முறை இல்லை. ஏனெனில் வாழ்க்கை தனது லட்சியத்தை முடிவு செய்துகொண்டுதான் பயணத்தை துவக்கி உள்ளது. அதை நோக்கிதான் சென்றுகொண்டு இருக்கிறது. அதனை மாற்ற முடியாது. அதனை அறிவதுதான் அறிவுப்பூர்வமான வாழ்வியல்! அறிவுப்பூர்வமான சிந்தனா முறை!

வெளிநாட்டுக்காரர்கள் கண்டுபிடிக்காததால் இதெல்லாம் உண்மை இல்லை என்பது
இல்லை.
இது விஞ்ஞானபூர்வமான உண்மை ! நம் நாட்டு விஞ்ஞானிகள் பல ஆயிரம்
ஆண்டுகளுக்குமுன்பே நிரூபித்து உள்ளார்கள்.
இதை நாமும் நிரூபித்துள்ளோம்.
உலகில் யாருக்கும் நிரூபிக்க தயாராகவே இருக்கிறோம்!
- பிரத்யக் விஞ்ஞானி
ஸ்ரீ ஐஸ்வர்ய மஹரிஷி ரிஷிகுடில்,
கோவை- 90 42 500 500, 90 42 600 600, 90 42 800 800
0 comments:
Post a Comment