விதி இல்லை, மறு பிறவி இல்லை,...

Leave a Comment
உலகிலேயே மிகுந்த சித்திரவதை செய்து கொடுமை செய்து நிறைய கொலைகளை செய்தது ஹிட்லர்.... என்று நினைத்துக்கொண்டு இருப்போம்.
யாருக்காவது அவரை விஞ்ச முடியவில்லையே என்று வருத்தம் இருந்தால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழி...
யாரையாவது ஒருவனை மிகுந்த சித்திரவதை செய்து ஹிட்லரை விட கொடிய முறையில் அழிக்க விரும்பினால் அதற்கு சிறந்த வழி....
....அவனை உடல்-கொலை செய்வது அல்ல, ஆனால்,
....அவனை அறிவுக் கொலை செய்வது!
....அதற்கு அவனை முதலில் முட்டாளாக்க வேண்டும்!
....அதற்கு அவனை உண்மையை பார்க்க விடக்கூடாது!
....அதற்கு முக்கியமாக அவனை தனது விதியைப் பற்றிய உண்மையை பார்க்க விடக்கூடாது!
....அதற்கு சிறந்த வழி அவனிடம் விதி என்பதெல்லாம் பொய், விதி என்று எதுவுமே கிடையாது என்று நம்பவைக்க வேண்டும்!
....அதை நம்பவைக்க முதலில் ‘முன்பிறவி மறுபிறவி என்பதெல்லாம் கிடையாது, அதெல்லாம் உன்னை திருத்துவதற்காக முன் காலத்தில் சொல்லப்பட்டவை, ஆனால் அவைகள் உண்மை இல்லை’ என்று அவனை நம்பவைக்க வேண்டும்!
....இதுபோதும்! நிச்சயமாக அவன் மிருகத்தைவிட கேவலமாக கிறுக்குத்தனமாக வாழ்ந்து, சொல்ல முடியாத அளவு மன வேதனைகளை அனுபவித்து, தன்னை சார்ந்தோரையும் அனுபவிக்க வைத்து  அழித்து, முடிவில் தன்னையும் அழித்துக்கொள்வான்!
....பிறகு என்ன? வெற்றி உங்களுக்குத்தான்!
யாராவது ஒருவனை அல்லது ஒரு சிலரை அழிக்க, நண்பனாக இருந்து, அறிவுரை சொல்லி இதை சாதிக்கலாம்!
ஒருவேளை, ஒரு குடும்பத்தை இப்படி சித்திரவதை செய்து அழித்துப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் இருந்தால், ஒரு கல்யாணம் செய்துகொண்டு இந்த அறிவுரையை வாழ்க்கைத் துணைக்கும், பிறக்கும் குழந்தை, பேரக்குழந்தை,...களுக்கும் சொல்லித்தரலாம்,...
ஒருவேளை, ஒரு பெரிய சமூகத்தையே அழிக்க நினைத்தால், மன்றம், கட்சி, இயக்கம்,... என்று ஏதாவது துவக்கி இப்படி சொற்பொழிவு செய்து நம்பவைக்கலாம்...
ஒருவேளை, ஒரு நாட்டையே இப்படி சித்திரவதை செய்து, கொடுமை செய்து அழிக்க நினைத்தால்.... அதற்கு ஒரு ஆன்மீக குருவாக ஆகி போதனை செய்யலாம்...
உலகம் முழுவதிலும் இருந்தும் அதற்கு சீடர்கள் குவிவார்கள், பணம் குவியும், புகழ் குவியும், பட்டங்கள் குவியும்,...
சொல்லப்போனால் உலகையே அழிக்கலாம், வேறு என்ன வேண்டுமோ உங்களுக்கு....?  

 




0 comments:

Post a Comment