ஒரு குழந்தைக்கு - இரண்டாவது தாய் - ஆசிரியர் ! இரண்டாவது தந்தை - பள்ளி நிர்வாகம் !!

Leave a Comment
மதிப்பிற்குரிய ஆசிரியர்களே , பள்ளிக்கூடங்களே...!




மாணவர்கள் செய்யாத தவறுக்கு மாணவர்களை தண்டித்து விட வேண்டாம்.

[ உண்மையில் தவறு எங்கே இருக்கிறது என்பதை பொறுமையாகவே கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு நேரம் செலவிடுவது தவறல்ல! ]

பள்ளிக்கு தாமதமாக வந்தது, கட்டணத்தை இன்னமும் கட்டாதது, யூனிபார்ம் அழுக்காக இருப்பது,... போன்ற பெற்றோரின் தவறுகளுக்கும் மாணவர்களை தண்டித்துவிடவேண்டாம்.

[ அதற்கு சிரமம் பார்க்காமல் - பெற்றோர்களைத்தான் கண்டிக்கவேண்டும். ]

சில நேரங்களில் குழந்தைகள் தவறுகளை செய்யும்போது, மற்றவர்கள் மத்தியில் அவமதிக்க வேண்டாம்.

[அந்த சூழ்நிலையில் , அந்த தவறினை செய்யாமல் எப்படி நடந்துகொள்வது, என்பதை கற்றுத்தரவேண்டும். ]

ஒரு குழந்தையின் இயலாமையை, குற்றம் என்ற கணக்கில் வைத்து கையாண்டுவிடவேண்டாம்.

[ அது தாழ்வு மனப்பான்மையை உண்டுபண்ணும். ஆனால், தெரிந்து செய்யும், அலட்சியத்தால் செய்யும், கவனக் குறைவால் செய்யும் தவறுகளிலிருந்து வெளிவர உதவலாம். ]

அப்படி, கூடாத தீர்வுகளை கையில் எடுக்கும்போது, நம்மை எதிர்த்து வெற்றிபெற முடியாது என்பதால் அவர்கள் அப்போதைக்கு தாங்கிக்கொண்டு இருப்பார்கள்.

ஆனால், இது ஏன் இப்படியெல்லாம் தவறு நடக்கிறது, இதிலிருந்து நான் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி என்று மனது தீர்வினைத் தேடத்துவங்கும்.

நேர்மையாகத் தீர்க்க முடியாததால், குறுக்குவழியினை கண்டுபிடிக்கத் துவங்கும்.

இந்த சூழ்நிலையை அதிகம் சந்தித்தவர்கள்தான் எதிர் காலத்தில், சமூகத்தை எதிரியாகப் பார்க்கிறார்கள், அதன் விளைவு - சமூக குற்றங்களை பலமாக செய்கிறார்கள்.

அன்று அவனை ஊரே திட்டி என்ன பயன்? நாடே  திட்டி என்ன பயன்?

அதே சமயம், சரியான தீர்வுகளை கையில் எடுக்கும்போது, அவற்றை அனுபவித்த மாணவர்கள் நாளை - நல்ல பெற்றோர்கள், நல்ல குடிமக்கள், நல்ல ஊழியர்கள், நல்ல தொழிலாளிகள், நல்ல முதலாளிகள், நல்ல தலைவர்கள்... 

ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் - நாளைய சமுதாயத்தையும் , நாளைய தலைவர்களின் தகுதிகளையும் வடிவமைக்கும் சிற்பிகள்....


ஒரு குழந்தைக்கு  இரண்டாவது தாய்  - ஆசிரியர்கள் !

 ஒரு குழந்தைக்கு  இரண்டாவது தந்தை - பள்ளி நிர்வாகம் !!

ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் செலவு செய்யாமலே - நாட்டுக்கு ஒரு மிகப் பெரிய நன்மை செய்யமுடியும்... விசேஷ செலவு செய்யாமலேயே...

0 comments:

Post a Comment