பாலக்காடு குத்தாம்புள்ளியில் சுலப நாடி சிகிச்சை!

Leave a Comment
அக்குபஞ்சர் எனப்படும்
சுலப நாடி சிகிச்சை!
எல்லா நோய்களுக்கும் - எல்லா வயதினருக்கும்!
மருந்தும் இல்லை & பக்கவிளைவும் இல்லை!
செலவு, சிரமம் குறைவு. பக்கவிளைவு என புதிய நோய்களும் இல்லை. உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை இதன் துணையுடன் பாதுகாக்கலாமே!
சர்க்கரை நோய், மாரடைப்பு, ரத்த அழுத்தம் [ உயர் & தாழ் ], மூட்டுவலிகள், தூக்கமின்மை, மனக் கவலை, வயிற்றுக் கோளாறுகள், அல்சர் பிரச்சினைகள், தோல் நோய்கள், பெண்களின் மாதப் பிரச்சினைகள், கற்பப்பை கட்டிகள், பலவித கட்டிகள், பலவித வழிகள்,  குறட்டை, முடி உதிருதல், நுரையீரல் பிரச்சினைகள், இருதயப் பிரச்சினைகள், கிட்னி பிரச்சினைகள், ரத்தம் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள், கண் நோய்கள், காய்ச்சல், அனைத்து தலைவலிகள், பக்கவாதம்,.... போன்ற பல சிறிய & பெரிய நோய்களும் இந்த முறையில் சுலபமாகவே தீருகின்றன! சிறுவர் முதல் பெரியவர் வரை!

சிகிச்சை நேரம் :
திங்கள் - வெள்ளி: பகல் மணி 11 - 2 வரை
நேரில் - முன்பதிவு - அவசியம்! 

நோய்கள் உண்மையில் முதலில் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம்,... போன்ற உள் உறுப்புகளில் ஏற்படுகின்றன. பிறகு அது மேலும் அதிகமாகும்போது, தம்மை சீர் செய்துகொள்ளும் முயற்சியில், அவை, ஜுரம், தலைவலி, சர்க்கரை, ரத்த அழுத்தம், நீரிழிவு,... போன்று பல அறிகுறிகளைக் [Symptoms] காட்டுகிறன்றன. 
இந்த அறிகுறிகளை நிறுத்துவதால் உண்மையில் நோய் [disease] நீங்குவதில்லை, ஆனால், நோய் நீங்கியதாக நாம் நினைத்துக்கொண்டு விட்டு விடுகிறோம். ஆனால், உள்ளுக்குள் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. பிறகு மீண்டும் அதே பாதிப்புகளையோ வேறு பாதிப்புகளையோ பெரியதாக ஏற்படுத்துகிறது.
இந்தக் குறை இன்றி, நோயை அதன் மூலத்திலேயே குணப்படுத்துகிறது - இந்த அக்குபங்க்சர் எனப்படும் நாடி சிகிச்சை. இதன் மூலம் எந்த நோயையும் குணப்படுத்தலாம்.

வேதாந்த ஶாஸ்த்ரி ஸத்குரு ஸ்ரீ நாடிவைத்யர் ஐஶ்வர்யமஹரிஷி
யோகீந்த்ரபாரதி M.D. (Acu)., 

ஸத்குருஸ்ரீ அவர்களின் மற்ற காரியங்கள்:


ஜோதிட ஆலோசனை [ ஞாயிறு 11 – 1 மட்டும் ], பூஜை பயிற்சிகள், சுலோகப் பயிற்சிகள், சம்ஸ்க்ருத வகுப்புகள், பகவத் கீதை, வேத ஞான உபதேசங்கள், தியானப் பயிற்சிகள், ப்ராணாயாம பயிற்சிகள், யோகாசன பயிற்சிகள், பால விஞ்ஞான வித்யா, பால சம்ஸ்கார வித்யா,...                        


☝  இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala

ரிஷி வேத விஜ்ஞானம் - வகுப்புத் துவக்கம்!

Leave a Comment
ஸ்ரீகுருஜீ அவர்களின் ரிஷி வேத விஜ்ஞானம் நிலை 1   வகுப்பு  துவங்குகிறது.




உங்களுக்கு தெரியும் - ஒருவருக்கு செய்யும் உதவிகளில் சிறந்தது - இந்தக் கல்வியை கொடுப்பது என்று - அவர்கள் அறிவுப்பூர்வமான நல் வாழ்க்கையை வாழ.  

உங்களுக்கு சிறந்த புண்ணியங்களை சம்பாதிக்க, இந்த வேதகல்வியை உங்கள் உறவினர்கள்நண்பர்கள் ,தெரிந்தவர்களுக்கு  சொல்லி உதவலாமே!

ரிஷிகுடில்: கோவை  - தீத்திப்பாளையத்தில் 
ரிஷிகுடீ: பாலக்காடு - குத்தாம்புள்ளியில் 

வாரத்தில் ஆறு நாட்கள் மட்டும்

மொத்தம் 16 வகுப்புகள், 3 வாரங்களில்

2:1:2017 திங்கள் முதல் துவங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு:
ரிஷிகுடில் 
9042600600,  90 42 800 800 ,  90 42 500 500   ஓம்.
ரிஷிகுடீ: 88 25 13 14 16 , 
Google: RishiKudil













பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க....

Leave a Comment
 

தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானிமுன் வந்தது. ஒரு ஞானியின்  

சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், எனக்கு நிம்மதி என்றது எலி.

ஞானி பிறகுஎலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானிமுன் நின்றது.

பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று கேட்டார்.

என்னை எப்போதுமே நாய் துரத்துகிறது. என்னை நாயாக கொஞ்சம் மாற்றிவிடுங்களேன், உதவியாக இருக்கும் என்றது பூனை.

பிறகு பூனையை, நாயாக மாற்றினார் அந்த ஞானி.

சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது.

இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்ஞானி.

புலியை பார்த்து விட்டேன் ஒருநாள், அதிலிருந்து புளியை நினைத்து நினைத்து பயம் என்னை எப்போதும் வாட்டி எடுக்கிறது.
தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். 

ஞானி, நாயை புலியாக மாற்றினார்.

சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்றது புலி.

இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்ஞானி.

இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி.

பிறகு புலியை வேடனாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான்.

இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி.

எனக்கு எதிரியான தொல்லை செய்யும் மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான்.

உடனே இடைமறித்த ஞானி, "ஓ சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன?
உன் பயம் உன்னை விட்டு போகாது.
உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது.
நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு" - என்று கூறி, சுண்டேளியாகவே மீண்டும் ஆக்கிவிட்டார் அந்த ஞானி!


தர்மர் யுதிஷ்டிரரிடம் யக்ஷனின் 120ஆவது கேள்வி: 'உலகில் அதிசயமானது எது?'?

Leave a Comment

தர்மர் யுதிஷ்டிரரிடம் யக்ஷனின் 120ஆவது கேள்வி:

உலகில் அதிசயமானது எது?

யுதிஷ்டிரரின் பதில்:

தினமுமே கணக்கிலடங்காத ஜீவர்கள் இறந்து யம லோகம் செல்கிறார்கள்.
அதை எல்லாம் பார்த்தும் கூட, இன்னமும் போகாமல் மீதி இருப்பவர்கள், தாங்கள் இங்கே நிலையாகவே வாழப்போவதாக நினைத்துக்கொண்டே வாழ்க்கையை திட்டமிடுகிறார்கள்! இதைவிட உலகில் வேறு அதிசயம் எதுவுமே இல்லை.  


ஜனவரி 1ல் பிராமணனுக்கு பாபம் !

Leave a Comment


ஜனவரி 1ஐ

புத்தாண்டு பிறப்பாக
ஒரு பிராமணன்கொண்டாடினால்...

குழந்தைகளுக்கு சொல்லித்தந்தால்...

அவனுக்கு
ப்ரம்ம ஹத்தி
தோஷம் வரும்!

ஏன் அப்படி?

வேதப்பண்பாட்டை
கடைபிடிக்க- காக்க -வளர்க்க வேண்டியவன்
வேதப்பண்பாட்டை
அழிக்கும் செயலை செய்தால்

பாபமும் அதிகமே!

நவீன கல்வி கவனம்!

Leave a Comment



ஒருவன் நல்வாழ்க்கை வாழ
பணக்கல்வி, பள்ளிக்கல்வி
இரண்டுமே வேண்டும்.

பள்ளிக்கூடங்கள்
பணக்கல்வியை மட்டுமே தருகின்றன.

நற்பண்புகளை
அவைகள்...  நம்புவதும் இல்லை,
கடைபிடிப்பதும் இல்லை.

எந்த ஒழுக்கமும் இல்லாத ஒருவர்,
தன் குடும்பத்தில் அனைவரின் வாழ்க்கையையும்
சீரழிக்கும் ஒருவர்...
'நல்லாசிரியர்' விருது வாங்கமுடியும்!
கல்வித்துறை அதிகாரியாக இருக்க முடியும்!
பாடப் புத்தகத்தையும் எழுத முடியும்!


பள்ளிகல்லூரிகளைப் பொருத்தவரை
நம்மிடம் நற் பண்புகள்
இல்லை என்றாலும் கவலை இல்லை.
இருந்தாலும் அதற்கு மதிப்பு இல்லை!
'நற்பண்புகள் அவசியம்' என்று
பரீக்ஷையில் எழுதத் தெரிந்து இருந்தால் போதும்.

நம்குழந்தைகள் குடும்ப வாழ்வில்
வாழ்ந்தாலும் அழிந்தாலும்
அவர்களுக்கு கவலையும் இல்லை.
ஆனால் கம்பெனிகளுக்கும்
முதலாளிகளுக்கும் நல்ல திறமையான
அடிமையாக இருக்கவேண்டும்.

பள்ளிகல்லூரிகள்
குழந்தைக்குக் கொடுப்பது மார்க்,
அவர்களுக்கு வேண்டியது நம் பணம்,
அவ்வளவுதான்.


ஆனால், நமக்குத் தேவை
நம் குழந்தைகளின் நல்ல குடும்ப வாழ்க்கை.

ஒருவனின் நற்குனத்திற்கு
பள்ளியில் மார்க் இல்லை,
கல்லூரியில் மார்க் இல்லை,
அரசிடம் மார்க் இல்லை,
கம்பெனிகளில் மார்க் இல்லை,
ஏன்,...
உச்ச நீதி மன்றத்திடமும் மார்க் இல்லை!

குழந்தை நல்ல மார்க் வாங்குவான்!
நல்ல சம்பளம் வாங்குவான்!

ஆனால்,
நற்குணம் இல்லை என்றால்
அவன் அமைக்கும் குடும்பம் உருப்படாது!
உண்மையில் அவனும் உருப்பட மாட்டான்! 


ஆக,
அரசின் அளவுகோலை மட்டும் வைத்துக்கொண்டு
சந்ததிகளுக்கு நல்வாழ்வை
நிச்சயம் தரமுடியாது!!

பணக்கல்வியைக் கொடுக்க
எவ்வளவு சிரமங்களை ஏற்கிறோமோ,
அறிவும் விவரமும் உள்ள பெற்றோர்கள் என்றால்...
அதே அளவுக்கு பண்புக்கல்வியையும் கொடுக்க
சிரமங்களை ஏற்கத் தயாராகவேண்டும் -


உண்மையில்
குழந்தைகளின் முழுமையானநல்வாழ்வில்
நாட்டம் இருப்பதால்.

கடவுளை அடைய வேதமும் கீதையும் கூறும் குறுக்கு வழி......

Leave a Comment
கடவுள் கொடுத்த நபர்களையும்சூழ்நிலைகளையும் ஏற்பவன்அங்கீகரிப்பவன்ஏற்றுக்கொள்பவன், புரிந்துகொள்பவன், மதிப்பவன், அந்த நினைவுடன் சூழ்நிலைகளை கையாளுபவன் - சரியான பக்குவத்தினை அடைகிறான்.

பிறகு அவற்றை கொடுத்தவனை புரிந்துகொள்ளும் திறமையை அடைகிறான். பிறகு ஞானத்தை அடைகிறான். பிறகு அவற்றை கொடுத்த அவரையே கடவுளையே அடைகிறான். 

அதனை ரிக்வேதம் தெளிவாகவே கூறுகிறது. அதனை மேலும் அழகாக ஸ்ரீ கிருஷ்ணர் புரியவைக்கிறார்.... பகவத் கீதையில்.....

வேறு என்ன குறுக்கு வழி வேண்டுமோ - கடவுளை அடைய