மூவுடல் மற்றும் மூவிஞ்ஞான தத்துவங்கள்.

Leave a Comment
வேதம் கூறும் இந்த தத்துவங்களில் மூவுடல் தத்துவங்களைப் பற்றி பல பெரியவர்கள் ஏற்கனவே மிக அழகாக விளக்கி உள்ளார்கள்.

மூவிஞ்ஞானத் தத்துவத்திற்கு அவ்வளவாக கிடைக்கவில்லை.

இருந்தாலும் இந்தக் காலத்தில் மெக்காலே கல்வி முறையில் உள்ள சில குறைபாடுகளால், அவ்வழி வந்த நமது அடுத்த தலைமுறை, அந்த தத்துவங்களை புரிந்துகொள்ள  சிரமப்படுகிறது. 

இந்த இடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையை களைய இந்த கட்டுரை எழுதப்படுகிறது.


ஸத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷி அவர்களின் விளக்கங்களும்
கண்ணோட்டங்களும்...

உண்மையில் ஒரு ஜீவனிடம் 3 விதமான உடல் அமைவுகள் உள்ளன. 

1. ஸ்தூல சரீரம் 
[ = பரு உடல், புலன் அறி அமைவு, gross body
2. சூக்ஷ்ம சரீரம் 
[ = அரு உடல் , அறிவு அறி அமைவு, subtle body
3. காரண சரீரம் 
[ = கரு உடல் , அஹங்காரம் அறி அமைவு, causal body



[ உடல் என்றாலே உடனே எலும்பு தசை ரத்தம் தோல் வடிவம் என்று என்ன வேண்டியதில்லை. 

உடல் என்றால் - ஒரு குறிப்பிட்ட தன்மைகளுடனும் குணங்களுடனும் செயல்பாட்டுடனும் இருக்கும் ஒரு கட்டமைப்பு. தான் செய்யவேண்டிய காரியங்களை செய்ய தனக்குள் போதுமான ஏற்பாடுகளையும், நிர்வாஹங்களையும் உடைய அமைப்பு. 

உதாஹரனமாக, Hardware, software, application,... போன்றவைகள் உடல். ]



இந்த மூன்று அமைவுகளையும் தெளிவாக பார்க்கவைக்க விஞ்ஞான தொழில்நுட்ப முறைகள் உள்ளன. நாம் பார்க்க வைக்கிறோம், யாரையும் பார்க்கவைக்க தயாராகவே இருக்கிறோம். 
சிருஷ்டியிலும், இதே 3 விதமான அமைவுகள் இருக்கின்றன. 




 

3. ஸ்தூல உலகம் [ = பரு உலகம், புலன் அறி அமைவு ]
2. சூக்ஷ்ம உலகம் [ = அரு உலகம், அறிவு அறி அமைவு ]
1. காரண உலகம் [ = கரு உலகம், அஹங்காரம் அறி அமைவு ]

உண்மையில் சிருஷ்டியில் உள்ளதே ஜீவனுக்கு வந்துள்ளன. சிருஷ்டியில் உள்ளது மட்டுமே ஜீவனுக்கு வர முடியும். சிருஷ்டியில் ஏற்கனவே இல்லாத ஒன்று ஜீவனுக்கு வர முடியாது. 
ஏனெனில் சட்டியில்இருப்பதுதான் அகப்பையில் வரும். சட்டியில் இல்லாதது அகப்பையில் வர முடியாது. 

சிருஷ்டியின் ஒவ்வொரு அமைவின் துளி பகுதிகள் சேர்ந்து ஒரு ஜீவனை அமைக்கின்றன, 

சிருஷ்டியின் ஒவ்வொரு அமைவினையும் இயக்கும் நியதிகள்  ஜீவனின் ஒவ்வொரு அமைவையும் இயக்குகின்றன. 




ஒவ்வொரு அமைவின் ஆதாரப் பொருளும் வேறு வேறு. அதனால்....
ஒவ்வொரு அமைவின் பணிகளும் வேறு வேறு. அதனால்....
ஒவ்வொரு அமைவின் குணங்களும் வேறு வேறு. அதனால்....
ஒவ்வொரு அமைவின் நியதிகளும் வேறு வேறு. அதாவது....
ஒவ்வொரு அமைவின் விஞ்ஞானங்களும் வேறு வேறு. 

3. ஸ்தூல விஞ்ஞானம் [ = பரு உலகம், பரு உடல் நியதிகள் ]
2. சூக்ஷ்ம விஞ்ஞானம் [ = அரு உலகம், அரு உடல் நியதிகள் ]
1. காரண விஞ்ஞானம் [ = கரு உலகம், கரு உடல் நியதிகள் ]

நம் நாட்டில் இந்த மூன்று விஞ்ஞானங்களும் நன்கு ஆராயப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு, போதிக்கப்பட்டு வந்துள்ளன நெடுங்காலமாக. [ இன்றும் போதிக்கப்பட்டு வருகிறன்றன. ]




இந்த நாட்டு முன்னோர் தமக்கென்றே ஏற்படுத்தி பயன்படுத்திய தொழில் நுட்ப வார்த்தைகளில், உரிய விஞ்ஞான பாஷையில்  இவற்றை மிகவும் ஆராய்ந்து விளக்கியுள்ளனர்.

அதனால் அவர்கள் பயன்படுத்தி வந்துள்ள தொழில் நுட்ப மொழி இயல்புகளை நாம் கற்றால் அவை மானுட வாழ்வுக்கு மிகவும் அவசியமானதும், மிகவும் உதவுவதுமான மிக அறிய பொக்கிஷங்களை நமக்கு அள்ளித் தருகின்றன. 

அவைகளையே உலக நாடுகளின் தொழில் நுட்ப மொழி இயல்புகளுடன் பார்த்தால்....

1. அவற்றின் உண்மையான பொருள் புரிவதில்லை. 

2. தவறான பொருள்கோளால், பல விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. 

3. வெறும் நம்பிக்கைகளாக காட்சிதருகின்றன. 

4. மூட நம்பிக்கைகளாக காட்சிதருகின்றன. 

5. தனிநபருக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயன் தராத விஷயங்களாகவும், சுமையாகவும், தொல்லைகளை செய்வதாகவும் காட்சிதருகின்றன. 


அதுமட்டுமல்ல,....



மேலும் அவற்றில் கூறப்பட்டுள்ளவைகளில், ஒவ்வொரு நிலையையும் வாழ்ந்து பார்த்தவர்களுக்கே, அது கூறும் அடுத்தடுத்த நிலைகள் புரிவதாகவும் இருக்கின்றன.

உண்மை இப்படி இருக்கும் காரணத்தால், இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து இவைகளை ஓரளவு பண்பாட்டில் கடைபிடித்து வாழ்பவர்களுக்கே, இதன் பற்றாக்குறைகளால், அவைகள் முழுவதும் பொருள் புரியாமல் கிடக்கும் நிலையில், வியாபாரத்திற்கும், சுற்றுலாவிற்கும் சிலகாலங்கள் வந்த உலக நாட்டு விஞ்ஞானிகளுக்கு இவைகள் புரிய வாய்ப்பே இல்லை.

ஆனால் அந்த வெளிநாட்டு விஞ்ஞானிகள் இவற்றைப் பற்றி என்ன கற்பனை செய்துகொண்டார்களோ, கூறினார்களோ, அவைகளே நம்முடைய பாடத்திட்டத்தில் சொல்லப்படுகின்றன. நிறைகளாகவோ, குறைகளாகவோ.

நிறை மற்றும் குறை விளக்கங்கள் இரண்டுமே அறியாமையில் பிறந்த உளறல்களே. சரியான பொருள் அற்றவைகள். 




இது இப்படி இருக்கட்டும்.

அந்த மேற்கத்திய நாட்டு விஞ்ஞானிகள் [ 3. ஸ்தூல விஞ்ஞானம் = ] பரு விஞ்ஞானத்தை மட்டுமே அறிந்தவர்கள். மற்றதைப்பற்றி [ = 2. சூக்ஷ்ம விஞ்ஞானம் & 1. காரண விஞ்ஞானம் - பற்றி ] துளியும் தெரியாதவர்கள்,.... அதனால்....

சூக்ஷ்ம & காரண விஞ்ஞானங்களைப் பற்றி நன்கு தெரிந்த நம் முன்னோர்களின் பேச்சுக்களையும், நூல்களையும், வெறும் நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள்,..., கற்கால மனிதனின் பயங்கள், கற்பனைகள், உளறல்கள்,... என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் முத்திரை குத்திவிட்டார்கள் - சிறுவயதிலேயே பள்ளி கல்லூரிகளில் வைத்து. 

அந்த வயதில் எதை சொன்னாலும் குழந்தை மனதில் பசுமரத்தாணிபோல் பதியும் என்பதால், பொதுவாகவே பள்ளி, கல்லூரி படித்த அனைவருக்கும் உள்ளூர மனதில் அந்தக் கருத்துக்களே உள்ளன. அந்தக் கருத்துக்களின் அடிப்படியிலேயே உலகமும் வாழ்க்கையும் புரிந்துகொள்ளப்பட்டு, புரியவைக்கப்பட்டு, அதற்கேற்பவே சிந்திக்கும் முடிவெடுக்கும் பழக்கங்கள் வந்துள்ளன. அது தவறான நிலைப்பாடு.

உண்மையில் இந்த மூன்று விஞ்ஞானங்களையும் அறிந்தால் மட்டுமே, உலகை, தன்னை, கடவுளை சரியாகப் புரிந்துகொள்ள முடியும், நிம்மதியாக வாழவும் முடியும். 

 
இன்றைய ஒரு துர்பாக்கியம், நம் நாட்டை சேர்ந்த பெரியவர்களும், ஆன்மிக சொற்பொழிவாளர்களும், பல நூல் ஆசிரியர்களும், நல்லவர்களும்கூட...

1. இந்த வெள்ளையன் ஏற்படுத்திய மெக்காலே கல்வியின் வழி கற்றவர்களே.

2. நமது பாரம்பர்ய 'மூவிஞ்ஞானம்' என்ன சொல்கிறது என்பதை கற்காதவர்களே.  

'மூவிருப்பு, மூவுடல், மூவிதி, மூவிஞானம்' இவை பற்றி தெரியாததால், இவை சம்பந்தப்பட்ட விஷயங்களை, இவர்களும் சேர்ந்து 'ஹிந்துக்களின் நம்பிக்கைகள்' - என்று கூறிவிடுகிறார்கள்.

இவர்கள் நம்முடைய தத்துவங்களை வாழ்வில் விட்டுக்கொடுக்க முடியாமல் இருப்பதை மேலோட்டமாகப் புரிந்துகொள்கிறார்கள். அது இல்லாவிட்டால் உலகிற்கு பேரழிவு என்பதையும் உணர்கிறார்கள். அதனால்...

'வெள்ளையர் கொடுத்தது விஞ்ஞானம், நம்முடையது மெய்ஞானம். வாழ்க்கைக்கு இரண்டுமே தேவை.' என்று ஒரு 'சப்பைக்கட்டு சமாதானம்' செய்து கணக்கை முடித்துவிடுகின்றனர் - 'இதுவும் விஞ்ஞானம்தான் - எப்படி' என்பதை இன்னமும் அவர்களுக்கு யாரும் தெளிவாக கற்றுக்கொடுக்காததால்!

இந்த சப்பைக்கட்டு பேச்சு ஓரளவு தற்காலிக நன்மைகளை செய்கிறது. ஆனாலும், இந்த சமாதானக் கருத்தின் துணையுடன் உலகையோ, தன்னையோ, கடவுளையோ முழுமையாகவோ சரியாகவோ புரிந்துகொள்ளவும் முடியாது, நிம்மதியாக வாழவும் முடியாது. 


ஏனெனில்,...

மனித மனம் எப்போதுமே உண்மைக் காரணங்களை தேடுவது. இந்த மூவிஞான கோட்பாடு மனதிற்கு தெரியாவிட்டால், நடப்புக்களின் காரணம் தெரியாது. மனம் நிலைகொள்ளாது, பயப்படும், அலைபாயும், ஆதரவு அடைக்கலம் தேடும், தன்னை அனாதையாகவே உணரும்.


இதற்கான தீர்வு [ = இந்த மூவிஞான ஞானம் ] கிடைக்காவிட்டால், தன்னை சமாதானப்படுத்த குற்றங்களில் நுழையும். இதுதான் மனவியலின் மூல தத்துவம்.ஒரு துர்பாக்கியம், உலகில் எந்த மனோவியல் நிபுணரும் இந்த அடிப்படை பிரச்சினையையே புரிந்துகொள்ளவில்லை!


அரு மற்றும் கரு [ = 2. சூக்ஷம & 1. காரண ] விஞ்ஞானங்களையும் அவைகள் வேலை செய்யும் நியதிகள் போன்றவைகளையும் கணித மற்றும் விஞ்ஞான சமன்பாடுகளுடன் மிகத் தெளிவாக கண்டறிந்து, புரிந்துகொண்டு, புரியவைத்துக்கொண்டு வாழ்ந்துவருகிறார் நிகழ்கால விஞ்ஞானி சத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷி அவர்கள்.




‘இந்த மூவிஞ்ஞான அமைவை உலகில் யாருக்கு வேண்டுமானாலும், எந்த நாஸ்திகருக்கு வேண்டுமானாலும் சரி, எந்த விஞ்ஞானிகளுக்கு வேண்டுமானாலும் சரி,.... நான் நிரூபிக்கத் தயார்’ என்கிறார் ஸத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷி அவர்கள்.....
 


அவரது இந்த மூவிஞ்ஞான உபதேஷங்களை எளிய பாடத் திட்டமாக வடிவமைத்து நடத்தி வருகிறார்.  சுலபமாக புரியும் விதத்தில் உள்ளவைகள். அவற்றைக் கற்ற பல ஆயிரம் பேர்கள் மிகவும் புண்ணியசாலிகள். ஆனந்த வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். 

  












 
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/1.html

0 comments:

Post a Comment