சாஸ்த்ரம் சொல்வது....

Leave a Comment

நினைக்குமளவு நன்மையே. நமது சாஸ்த்ரம் சொல்வது....


தனது ஸ்வதர்மத்தை ஸ்ரத்தையுடன் மனமுவந்து செய்பவன் உயருகிறான்.


பஞ்சமஹா யஜ்ஞங்களும் ஸ்வதர்மங்கள்.


அவற்றில், ரிஷி & ப்ரம்ம யஜ்ஞங்கள் மிகச்சிறந்த ஞான மோக்ஷ சாதனங்கள்


ஞானத்தையும் மோக்ஷத்தையும் ஸாத்யமாகக் கொண்டு வாழ்வதே பொருள் உள்ள நல் வாழ்வைத் தருவது.


அதனால், ரிஷி & ப்ரம்ம யஜ்ஞங்களை ஒருவன் தனது குடும்பப் பணிகளைப் போன்றும், தான் தனது உணவை உண்பதைப் போன்றும் ஸ்வதர்மமாகவே, தனது அவசியக் கடமையாகவே, தாழ்த்திப் பார்க்காது,  சிரத்தையுடன் ஆற்ற வேண்டும்.


இதில் எவ்வளவு அதிகம் காரியம், என்பதை விட, எவ்வளவு அதிகம் புரிதலுடன், மன நிலையுடன் என்பதே மிகவும் முக்கியமானது.


இறைவன் கொடுத்த வாழ்க்கை, இறைவன் எடுக்கப்போகும் வாழ்க்கை.


சிந்திப்போம் செயல்படுவோம். கிடைத்த வாழ்வை பொருளுள்ளதாக ஆக்குவோம்.


ஆசிகள் என்றும்.
ஓம்.

ஸ்ரீ குருவின் ஆசிகள்

Leave a Comment

ஸ்ரீ குரு மகாராஜ் அவர்களுடன் இன்று 18-7-2018 மாலை 6 மணி மிகவும் முக்கியமான நாளாக நேரமாக அமைந்தது.


நாடி வந்தவர்களுக்கு உதவும் பல்வேறு விதமான மந்திர தந்திர பூஜை விதிகளை உபதேசம் செய்து அருளினார்.


பலவித நெருக்கடிகளில், குடும்பப் பிரச்சினைகளில், தொழில் பிரச்சினைகளில், நோய் நொடிகளில், பல வித தகராறுகளில், பலவித ஏமாற்றங்களில், பலவித சவால்களில்,.... என்று பலவித சூழ்நிலைத் தொல்லைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளத் தேவையான, வழி முறைகள் பற்றி சொல்லிக்கொடுத்து,...


அவைகளை பிறருக்கு கொடுக்கத் தேவையான விதிமுறைகளையும், உரிய தீக்ஷையையும் கொடுத்து அருளினார்.


அவைகளை பயன்படுத்தத் தேவையான தவங்களை போதித்து, அவைகளை கடைபிடிக்க உத்தரவு கொடுத்தார்.


ஏற்கனவே நேரமில்லாத, ஓய்வு இல்லாத நிலையிலும், சம்பிரதாயதாய பாரம்பரியத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு தவமாக இருப்பதால் இதனைக் கடைபிடிப்பது ஒரு பாக்கியம் என்பதையும் நினைக்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது.


இந்தத் தவங்களின் பலன்கள், ஒத்துழைப்பாக இருக்கும் மாணவர்கள் அனைவரின் வாழ்விலும் நலன்களையும், வளங்களையும் ஏற்படுத்த

ஆசிகளும்

பிரார்த்தனைகளும்.


ஓம் தத் ஸத்.