கூப்பிட என்ன தயக்கமோ...

Leave a Comment

நல்வாழ்க்கைக்கு - மொழியின் அவசியம்

Leave a Comment

இன்றைய  பெற்றோர்களிடம் தன் குழந்தைகளுக்கு அறிவியலும் கணிதமும் நன்றாக வந்தால் போதும் மொழி பாடங்கள் அவசியம் இல்லை ; என்ற கருத்து பரவலாக இருக்கிறது.   




படிப்பு, பணம் மட்டுமே இவனுக்கு வாழ்க்கையாக இருக்க வேண்டும் , இவன் நாளை திருமணம் செய்துகொள்ளவும் கூடாது, யாருடனும் குடும்பம் நடத்தவும் கூடாது,......... என்ற நிலை இருக்கும் என்றால்தான் இந்த கருத்து சரி.


ஒருவேளை, அவர்கள் குடும்பம் நடத்த வேண்டும் என்றால், கம்ப்யூட்டர், வாஷிங்மெஷின், கிரைண்டர், கார், மொபைல்,........... இவைகளுடன் மட்டுமே- மனிதர்கள் இல்லாமல் - வாழவேண்டும் என்று பெற்றோர் முடிவு செய்தாலும் கூட இந்த கருத்து  சரியே. 

ஆனால், இப்படி வளர்ந்த குழந்தைக்கு பெண் கேட்பதோ , மாப்பிள்ளை தேடுவதோ, நியாயம் இல்லை, பாபச் செயல் ஆகிவிடும். 

ஏனென்றால் வளர்ந்த பிறகு தனது மன உணர்ச்சிகளை மொழி மூலம் வெளிப்படுத்தத் தெரியாதவன்,  மற்றவரின் மொழி மூலம் அவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளத் தெரியாதவன், .... இவர்கள் குடும்பம் நடத்தினால் , அவர்களுடன் மெஷின்களைத் தவிர மனிதர்கள் யாரும் வாழமுடியாது. 

இவனுக்கு குடும்பம் என்று ஒன்று அமைந்துவிட்டால், இவனால் மற்றவர்கள் மனதில் நொந்து வேக வேண்டி இருக்கும், தற்கொலை செய்துகொள்ள வேண்டியிருக்கும். மற்றவர்களால் இவனும் கூட மனதில் நொந்து வேக வேண்டிதான் இருக்கும், தற்கொலை செய்துகொள்ள வேண்டியிருக்கும்.

தன் குழந்தைக்கு எது முக்கியம் என்று பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும் - முதலில். 

பணம் இருந்து மொழி இல்லாதவன் - நடைப் பிணம் ஆகிறான். அவனுடன் வாழ யாருக்கும் பிடிப்பதில்லை. 

நல் மொழி இருந்து  , ஒருவேளை பணம் குறைவாக இருந்தாலும் - உணர்ச்சி அறிந்தவன் ஆகிறான். அவனுடன் வாழ யாருக்குமே பிடிக்கும். 

நல் வாழ்க்கையே முக்கியம்  & லட்சியம் - அறிவாளிகளுக்கு.
அதற்கு படிப்பையும்  பணத்தையும் முடிந்தவரை சாதனமாக்குவர். . 

படிப்பும் பணமுமே முக்கியம் & லட்சியம் - மூடர்களுக்கு.
அதற்கு நல் வாழ்க்கையை முடிந்தவரை அடமானம் வைப்பர். . 

எதைத் தேர்ந்தெடுத்தாலும் தவறு இல்லை - தன் வாழ்க்கைக்கு. 

ஆனால் தன் குழந்தையின் பண வாழ்க்கைக்காக - மண வாழ்க்கையை நரகமாக்க கருணை உள்ளம் உள்ளோர் விரும்ப மாட்டார்கள். 

மொழி அறிவு அவசியம் - உணர்ச்சிகளைப் பகிர, மற்றவர்களைப் புரிந்துகொள்ள, மற்றவர்கள் சொல்ல வருவதை சரியாக புரிந்துகொள்ள.

இன்றைய குழந்தைகள் மிகுந்த அறிவு உள்ளவர்கள், குற்றம் அற்ற இளம் குழந்தைகள், நன்கு சம்பாதிப்பவர்கள், ஆனால் மொழிவளம் இல்லாததால்,... மனக் கசப்புகளும், விவாஹரத்துக்களும், தற்கொலைகளும்,... என்று அவஸ்தைப் பட காரணம் இதுவே. 

குழந்தையைப் பெற்றோம். பதட்டம் இன்றி காரணங்களையும் - காரியங்களையும் - விளைவுகளையும் ஆராய்வோம். நல்வாழ்வை அளிப்போம். 

நினைவில் வையுங்கள்: 

நல்வாழ்வுக்கு மொழி முக்கியப்பாடம்!