பணம்தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைப்பவரை அவருக்குத் தேவையான பணத்தினை எல்லாம் மூட்டை
கட்டி, பணத்துடன் அவரை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.பிறகு என்ன? அவருக்கும் நிம்மதி! குடும்பத்திற்கும் நிம்மதி!
ஒரு கல் இரண்டு மாங்காய்....!
உலகம் நன்றாக இருக்க.....
பணம்தான் வாழ்க்கையில் முக்கியம்
என்று நினைப்பவர்களை எல்லாம்
சேர்க்க வேண்டும்.
அவர்களுக்குத் தேவையான
பணத்தினை எல்லாம்
அவரவர்களுக்கும் தேவையான அளவு
தனித் தனியாக மூட்டை கட்டி,
விண்வெளி ஆராய்ச்சிக்கு
திரும்பி வராமல் செல்லும் ராக்கட்டில்
அவர்களுடன்பணத்துடன் ஏற்றி
அனுப்பிவிட வேண்டும்.
கவனம்: ஒரு ராக்கட்டில்
ஒருவருக்கு மேல்
இருக்கக் கூடாது.
அவர்களுக்கும் பணம் கிடைத்தது
விண்வெளி ஆராய்ச்சிக்கும் ஆள்
கிடைத்தது!
நாடும் நிம்மதியாக இருக்கும்!
ஒரு கல் பல மாங்காய்....!
ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்தது......
பண வளர்ச்சி
முக்கியமாகக் கருதப்படும் அளவு
மனிதப்
பண்புகள்
முக்கியத்துவத்தை இழக்கிறது.
மனிதப் பண்புகள்
முக்கியத்துவத்தை இழக்கும் அளவு
மனிதன்
மிருகமாகிறான்.
மனிதன்
மிருகமாகும் அளவு
குடும்பம்
சிதைகிறது.
குடும்பம்
சிதையும் அளவு
சந்ததிகள்
நாசமார்கத்தில்
செல்கிறார்கள்....
0 comments:
Post a Comment