இந்த
தினத்தை ஏன் புத்தாண்டின் துவக்கமாகக் கொண்டாடுகிறோம்?
சூரியன்
தனது ஒரு சுற்றை முடித்து மீண்டும் துவக்கப் புள்ளிக்கு வருகிறான்
உண்மையில்
சூரியன் சுற்றுவதே இல்லையே பூமிதானே சுற்றுகிறது?
ஆகட்டும்,
பூமி தனது ஒரு சுற்றை முடித்து மீண்டும் துவக்கப் புள்ளிக்கு வருகிறது என்றும்
கொள்ளலாம்.
அங்கு
உண்மையில் பூமி சுற்றுகிறதா சூரியன் சுற்றுகிறதா என்பதே கேள்வி இல்லை. நாம் பார்க்கும்
காட்சி என்ன என்பதை வைத்து ‘தோற்ற குண அறிவியல்’ விஞ்ஞானப்படி ஜோதிடமானது பலன்களைக்
கூறகிறது, அவ்வளவுதான்.
அதன்படி,
சூரியன் எனும் கிரகம் ‘ஆத்ம காரக வல்லமை’ எனும் குணம். அதாவது ஒவ்வொரு தனிநபரின்
தனித்தன்மைகள் என்ன என்பதை, நிறை குறைகள் என்ன என்பதை, திறமை இயலாமைகள் என்ன
என்பதை அவரவர் ஜாதகத்தில் இருக்கும் சூரியன் தெரிவிக்கிறான்.
அந்த
சூரியன் அவரவரின் ஜாதகத்திலும் கொண்ட இடம் சென்ற இடம் இவைகளுக்கு ஏற்ப பலன்களை
தருகிறான்.
எது
எந்த பலனாக இருந்தாலும், சூரியன் இந்த சித்திரை 1ஆம் நாள் ஆகாசத்தில் ‘மேஷம்’ என்ற
எல்லைக்குள் செல்கிறான். மொத்தம் 360டிகிரியில் மேஷத்தின் எல்லை 30டிகிரி. இந்த
எல்லைக்கு உட்பட்ட பகுதியை ஒரு ராசி என்கிறோம். இந்த ராசில் எல்லைக்குள் சூரியன்
ஒருமாத காலம் பயணம் செய்கிறார்.
இப்படி
மொத்தம் உள்ள 12 ராசிகளில், ஒவ்வொரு ராசிவழியாகவும் எந்த கிரகமும் பயணம்
செய்யும்போது சில விசேஷ குணங்களை அடைகிறது, அதனால் அதற்கு ஏற்ற பலன்களை
ஜாதகருக்கும் ஏற்படுத்துகிறது.
அவ்வாறே
சூரியனும்.
மேஷ
ராசி [ Aries ] என்பது சூரியனுக்கு மிகுந்த சௌகர்யத்தையும் வல்லமையையும் கொடுக்கும் ராசி.
இங்கு பயணம் செய்யும் சமயத்தில் சூரியன் பலம் பெறுகிறான், அல்லது சந்தோஷமாக
இருக்கிறான். அதாவது இந்த ஜீவனின் ஆத்மா மிகுந்த பலம் பெறுகிறான். இந்த நேரத்தில்
இந்த ஜீவன் தனது மனதை எப்படிப்பட்ட விருப்பங்களால் நிறைக்கிறானோ, அல்லது
பிரார்த்தனைகளால் நிறைக்கிறானோ, அவைகள் பலம் பெறுகின்றன.
விதியினால்
வரும் சௌகர்யங்களை அதிகரிக்கவோ, சிரமங்களை குறைக்கவோ இந்த தின விருப்பங்கள்,
அல்லது பிரார்த்தனைகளுக்கு உண்டு.
அதனால்
இந்த தினத்தை கொண்டாடுவதும், இந்த புத்தாண்டு தினத்தில் வழிபாடு செய்வதும் முக்கியத்துவம்
பெறுகின்றன.
அப்படி
என்றால் விருப்பப்பட்டால் போதுமே, ஏன் வழிபாடு செய்யவேண்டும்?
தவறே
இல்லை. ஆனாலும், சாதாரண விருப்பங்களைக் காட்டிலும் பிரார்த்தையில் வைக்கப்படும்
விருப்பங்கள் பலமானவைகலாக உருவெடுக்கின்றன. அதற்கு மேலும் அவைகள் தெய்வ சக்திகளால்
ஆசீர்வதிக்கப்டுகின்றன. அதனால் பலனும் அதிகம்.
0 comments:
Post a Comment