புத்தாண்டைக் கொண்டாடும்போது…

Leave a Comment
புத்தாண்டைக் கொண்டாடும்போது கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள்:
 
குளித்துவிட்டு முடிந்த வரை புதிய உடை அல்லது மனதிற்கு பிடித்த தூய உடை உடுத்தவும். பிறகு சூரிய வந்தனம் செய்யவும்.

சூரிய வந்தனம் எப்படி செய்வது?
பூஜைக்கு உரிய பித்தளை சொம்பில், அல்லது உள்ளங்கையில் குழிவு ஏற்படுத்திக்கொண்டு, தண்ணீரை பிடித்துக்கொள்ளவும். சூரியன் கண்ணில் படும் இடத்திற்கு வந்து, [ அப்படி வாய்ப்பு இல்லை என்றால் வசதியான இருக்குமிடத்திலிருந்து, ] கிழக்கு நோக்கி நின்று இந்த சுலோகத்தை சொல்லி நீரை அவரை நோக்கி, அதாவது கிழக்கு நோக்கி, அவருக்கு அற்பணம் செய்யும் பாவனையுடன் பூமியில் விடவும்.  கடைசி சில துளி நீரை தலையில் தெளித்துக்கொள்ளவும்.
அவ்வளவுதான்.
 
சுலோகம்: சூரிய வந்தனம்
சூரியன் நீயே தந்தையர் தந்தை       
        சூரியன் நீயே உலகின் தந்தை
சூரியன் நீயென் வாழ்வைத் தந்தாய் 
        சூரியன் நீயென் உயிராய் நின்றாய்

நீ தந்தவற்றை உனக்கே தந்தேன்
        நன்றிகள் அனைத்தையும் உனக்கே சொன்னேன்
அறம் பொருள் இன்பம் வீடனைத்தையும்
        அடையும் திறன்களை அளித்திடுவாயே!  

பிறகு,
வீட்டில் இருக்கும் பெரியோர்களிடம் நமஸ்காரம் செய்து பாத பூஜை செய்து கொள்ளவும்.

பாத பூஜை செய்ய தெரியாத, அல்லது வாய்ப்பில்லாத பக்ஷத்தில் சில பூக்களை பாதங்களில் போட்டு நமஸ்கரித்து ஆசி பெறவும்.

ஆசி பெறுவோர் சொல்லவேண்டிய சுலோகம்: மூத்தோர்கு நமஸ்காரம்
 [மூத்தோரின் ஆசிகள் என்றும் நன்மைசெய்ய , நன்மைகள் வளர காக்க.. ]

ஈஶ நீயேதான் மூத்தோரின் அறிவாக
                அவர்தம் எண்ணம்-சொல்-செயல்களில் பலமாக
அவர்தம் நல் நெறி ரூபத்திலும் எனக்கு
                ஐஶ்வர்யம் ஶுபம் அடைக்கலம் ஆஶியுமே
 

ஆசி தருவோர் சொல்லவேண்டிய சுலோகம்: இளையோர்க்கு ஆசிகள்
 [ இளையோர்க்கு செய்யும் ஆசிகள் நல்வாழ்வைத் தந்து அவர்களைப் பாதுகாக்க ]

ஈஶ நீயேதான் இளையோரின் அறிவாக
                அவர்தம் எண்ணம்-சொல்-செயல்களில் பலமாக
எங்கள் நல் நெறி ரூபத்திலும் அவர்க்கு
                ஐஶ்வர்யம் ஶுபம் அடைக்கலம் ஆஶியுமே  


அதன் பிறகு வீட்டு வழிபடும், ஆலய வழிபாடும் செய்யவும்.

அன்றைய நாள் அதிக ஓய்வில் இருக்கவும், வழிபாட்டில் நேரம் செலவிடவும் முயற்சிக்கவும்.
அவசியம் குடும்பத்துடன் ஒரு இனிப்பு பதார்த்தம் சாப்பிடுவது நல்லது.
வீட்டிலேயே செய்வது இன்னமும் சிறப்பு. அன்பர்கள், நண்பர்களுக்கும் விநியோகம் செய்வது நல்லது.
சக்திக்கு ஏற்ப தேவைப்படுவோருக்கு ஏதாவது தானம் செய்வது நல்லது.
குறிப்பாக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மற்றும் அன்பர் நண்பர்களின் குழந்தைகளுக்கு பிரசாதம் விநியோகித்து, தன தானம் செய்து, இனிப்பு அளித்து, உணவு அளித்து,  சந்தோஷப்படுத்துவதும் நல்லது.
சர்ச்சைக்குள்ள விஷயங்களை அன்று பேசாமல் ஒத்தி வைப்பது நல்லது தொழிலிலும் சரி முக்கியமாக வீட்டிலும் சரி.
குழந்தைகளை அன்று அடிப்பதை கண்டிப்பதை தவிர்க்கவும். பெரியோர்களிடம் கோபப்படுவதையும் தவிர்க்கவும். தம்பதிகள் மனஸ்தாபம் தரும் விஷயங்களை தவிர்க்கவும். 

வாய்ப்பு இருந்தால், அருகில் உள்ள வேத பாடசாலை குருநாதர்களை சந்தித்து, அர்ச்சகர்கள் புரோகிதர்களை சந்தித்து, சாது சன்யாசிகளை சந்தித்து ஆசி பெறுவது நல்லது. அப்படி ஆசி பெரும் பக்ஷத்தில் இயன்ற தக்ஷிணை அளிப்பது மிகவும் நல்லது. 

 
அன்று மாலையும் வீட்டில் வழிபாடு செய்து பெரியவர்களின் ஆசி பெறுவது நல்லது.   


சித்திரை 1 புத்தாண்டு பிறப்பின் சிறப்பு என்னவோ?

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/04/1.html

0 comments:

Post a Comment